சூரியன் கடக ராசியில் சஞ்சரிப்பதை ஆடி மாதமென்று அழைக்கின்றோம். இந்த ராசி
சந்திர னுக்கு ஆட்சி வீடும், குருவுக்கு உச்ச வீடும், செவ் வாய்க்கு நீச
வீடுமாகும். பஞ்ச தத்துவங்களில், இந்த மாதம் நீரைக் குறிக்கின்றது.
சந்திரனின் அம் சங்களாகிய சாந்தம், அமைதி, பொறுமை காக்கும் தன்மை, கலை
ஆர்வம், எல்லாவற்றிலும் பற்று டைமை, சங்கீதம், நடனம், நாடகத்துறைகளில் பிரி
யம், மேலோரிடத்தில் மரியாதை, கடவுள் பக்தி, நேர்மை முதலியவை இந்த
மாதத்தில் தோன்றிய வர்களிடத்தில் சிறந்து விளங்கும்.
தோற்றம்
நடுத்தர உயரமுடைய இவரது இடைக்கு மேற் புறம் பருத்தும் கால்கள் சிறுத்தும்
காணப்படும். உருண்டு, திரண்ட அங்க அமைப்புடையவர். தலை மேற்புறம் நீண்டு
இருக்கும். உரோமங்கள் நீண்டும் அடர்த்தி குறைந்தும் காணப்படும். சிறிய
கழுத்தும் கூரிய மூக்கும் புருவங்கள் உயர்ந்தும் கண்கள் நீர்படிந்தும்
காணப்படும். சுறு சுறுப்பான தோற்றமுடையவர். நீண்ட நேரம் ஓரிடத்தில்
தங்குவது அரிது.
குணங்கள்
இந்த ராசி சந்திரனுடையது. சந்தி ரன் எவ்வளவு துரிதமாக மாறு தலடைகிறதோ, அதே
ரீதியில் ஆடி மாதத்தில் பிறந்த வர்கள் தம்முடைய செயலி லும் நடையிலும் மனோ
பாவத்திலும் கொள்கையி லும் கருத்துகளிலும் பிறர் புலனுக்குத் தோற்ற
மளித்திடுவர். `முந்திரிக் கொட்டைகள்' என்று மற்றவர்களால் அழைக்
கப்பெறுவர்.
கடகம் அல்லது நண்டு என்று, இந்த ராசி வடிவத்தைக் கொண்டு காரணப் பெயர்
வைத்திருப்ப தால், நண்டின் சுபாவ மும் இவரது சுபாவ மும் ஒத்ததெனக் கூற
லாம். நண்டு இரை தேட வெளியே பர பரப்புடன் ஓடி உலா வும். இருக்கும் இடம்
தெரியாம லும் பதுங்கியிருக் கும். ஆனால், மற்ற வரது பார்வை தன் மீது
படுமிடத்து `விர்'ரென ஓடி ஒளிந்துகொள்ளும். ஆடியில் பிறந்தவர்களும் தங்கள்
காரியங்களில் ஈடுபடும்போது மற்றவர் எதிரே வந்தால் சட் டென்று
மறைந்துகொள்வர். பயந்த சுபாவமுடைய வர். யார் என்ன நினைத்துக்கொள்வார்களோ
என்ற அச்சம் இவரை விட்டு நீங்குவது வாழ்நாளில் அரிது.
பிடிவாத குணமுடையவர். தான் தோல்வியுற் றாலும் தனது வாதத்தை விட்டுக்கொடுக்க
மாட் டார். கவனமின்மை, உதாசீனம் போன்ற குணங்க ளால் எதையும்
பொருட்படுத்தமாட்டார். முக்கிய மான விடயங்களை உடனே மறந்துவிடுவார். இவர்
சரிவர விளங்கிக்கொண்டவை கொஞ்சம் தான் என்றாலும் ஆயுள் வரை மறக்கமாட்டார்.
எவ் வளவு நுணுக்கமான விடயமாயிருந்தாலும் இவரது கவனத்திலிருந்து மாறாது.
நடந்த விடயங்கள் பற்றி அடிக்கடி பிரலாபிப்பார். குறுக்குப் புத்தியுடைய
வர். எதிலும் ஆழ்ந்த கருத்தும் கற்பனையும் உடை யவர். இரக்க குணமுடையவர்.
குடும்பத்தில் மிகுந்த அக்கறையிருந்தாலும் சுய நலப் பேர்வழி.
சீர்திருத்தக்கொள்கைக ளுக்கு ஆதரவாக இவரது பேச்சு இருக்கும். ஆனால்
சம்பிரதாயப் பழக்கங்களையே கைக் கொள்வார். பெரும்புகழைத் தேடவேண்டும்
என்பது, இவரது வாழ்நாள் இலட்சியமாக இருக் கும். ஆனால், பெரும்
பணக்காரனாகவோ, பதவி களை அடையும் எண்ணமோ கிஞ்சித்தும் இருக் காது. சிக்கனமாக
இருப்பதை விரும்புவார். ஆனால் இவர் கைவைக்கும் காரியங்களில், இரு மடங்கு
செலவினங்கள் வந்து இவரது கன வைக் கலைத்துவிடும். தாராள மனப்பான்
மையிருந்தாலும் கை சற்று அழுத்தம்.
நேரந் தவறினா லும் சுவை யான, போஷா க்கான உணவு வகைகளையும் இனிப்பு வகைக
ளையும் ஒரு கை பார்ப்பார். கடன் பட்டேனும் வசதி யை உயர்த்திக் கொள் வர்.
இவர் பயன்படுத் தும் பொருட்களை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருப்பார்.
சந்தர்ப்பத்திற்கேற்ப சமாளிக்கும் திறமையும் தெளிவும் இவருக்குக் கை
கொடுக்கும். மற்றவர்களின் எண்ணவோட்டத்தை சீக்கிரமாகக் கிரகித்துக்கொள்வார்.
இவரை நன்கறிந் தவர்கள் இவரிடத்தில் பழகும்போது மிகக் கவன மாகவே
நடந்துகொள்வர்.
சின்னச் சின்ன நோய்களுக்கெல்லாம் பயந்து நடுங்குவார். தேவைக்கு அதிகமாகவே
நோய்க ளைப் பற்றி கரிசனங்கொள்வார். நோய் இல்லாவிட் டாலும் ஏதோ ஒன்று
பற்றியிருப்பதாகப் பாவித்திடு வார்.
இக்கட்டான சூழலில் அதைவிட்டுத் தப்பிக்க நினைக்க மாட்டார். அதேசமயம்,
இவருக்கு வாக் குறுதி அளித்தவர்கள் அதை நிறைவேற்ற வேண்டி நச்சரித்திடுவார்.
அடிமை வாழ்க்கையை ஒரு நாளும் விரும்ப மாட்டார். எந்தத் தொழில் செய் தாலும்
சுயமாகச் செய்வதுதான் நன்மை தரும் என்று தீவிரமாக நம்புவார். யாருடனும்
கூட்டுச் சேர்ந்திட மறுத்திடுவார். சுயேச்சை விரும்பி.
நோயும் சிகிச்சையும்
ஆடியில் பிறந்தவர்களுக்கு அலைச்சல் மிகும். எந்நேரமும் பயணத்திலேயே
பொழுதைக் கழிக்க வேண்டியிருக்கும். இடத்திற்கு ஏற்ப எது கிடைத் தாலும்
உணவாக உட்கொள்வதால் அஜீரணக் கோளாறுகள், தலைவலை, நெஞ்சுவலி போன்றன ஏற்படும்.
எண்ணெய் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவு வகைகளை கூடியவரை தவிர்த்தல் நன்மை
தரும். உரிய வேளைகளில் போஷாக்கு நிறைந்த ஆகாரத்தை உட்கொள்வது சுகம் தரும்.
அடிக்கடி ஏற்படும் மலச்சிக்கலாலும் கண்பார்வைக் கோ ளாறு, நீர் கசிதல்
போன்றவையாலும் தாளமுடியாத தலைவலி ஏற்படும் வாய்ப்புண்டு. மலச்சிக்கல்
இல்லாவிட்டால் உடலில் நோய்கள் தோன்ற மாட்டா. கீரை வகைகள், பழவகைகள்,
பச்சைக் காய்கறிகள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளவும். நல்லெண்ணெய்
வைத்துத் தலை முழுகுதல் கூடுதல் பயன் தரும்.
குறையும் நிறையும்
முன்னேற்றப் பாதையில் இவர் முன்னணியில் இருப்பார். கூச்ச சுபாவமுடையவர்
என்றா லும் தேவையானபோது கூட் டங்களில் பங்கேற்பார். புதிதாக எதையும்
படைப்பதைவிட, ஏற் கனவே படைக்கப்பட்டதை மென்மேலும் வளர்த்தெடுப்ப தில்
இவருக்கு நிகர் இவரே தான். நட்டம் ஏற்படும் வாய்ப்பு உண்டெனில் தலைவைத்தும்
படுக்கமாட்டார். தன்னிடமுள்ள வளங்களையே பெரிதாக நினைத்திடுவார். எளிதில்
இவ ரை ஏமாற்ற முடியாது. ஆனால், இவராகவே ஏமாறக்கூடிய நிகழ்ச்சிகள்
வாழ்க்கையில் அடிக்கடி தோன்றும். அவ்வா றான சூழலில்கூட, விரைவாக
ஏமாற்றத்திலிருந்து மீண்டு வரு வார். அமைதியை விரும்புவார். பிறருடைய
கஷ்டத்தை கிஞ்சித்தும் எண்ணிப்பார்க்க மாட்டார். பொறுப்புகளை ஏற்பதற்குத்
தயங்குவர். பண விவ காரங்களிலும் அப்படியே. இவரிடத்திலிருந்து அனுகூலங்களைப்
பெறுவது மிகக் கடினம். வந்த வர்களை சாக்குப்போக்குச் சொல்லி அனுப்பி விடு
வார். உறவினர்கள் மீது அதிக பற்றற்றவர். ஆனா லும் மிக நெருங்கிய உறவினர்கள்
இவரை நேசித் திடுவர். எளிதில் வராது கோபம். வந்தால் கண் மூடித்தனமாக
எதையும் செய்திடுவார். அது குறித்துப் பிறகு வருந்துவர். நிலையற்ற மனம்
உள்ளவர். வளர்ச்சிக்குரிய காரியங்களையும் பத் திரப்படுத்தக்கூடிய சேமிப்பு
விவகாரங்களையும் இவரிடத்தில் ஒப்படைப்பது சிறந்ததாகும்.
வாழ்க்கைத் துணை
கார்த்திகை, பங்குனி மாதங்களில் பிறந்தவர் களை வாழ்க்கைத் துணையாக
வரித்துக்கொண் டால், அமைதியான வாழ்க்கை கைகூடும். தை, மாசி மாதங்களில்
பிறந்தவர்களை நண்பராகவோ, துணையாகவோ கொண்டால் மனக்கசப்பே மிஞ்சும்.
தொழில்
ஓரிடத்தில் தங்கிச் செய்யும் தொழில்கள் இவ ருக்குச் சரிப்படாது.
சுற்றுப்பிரயாணத்தில் ஈடுபடும் பணிகள் இவருக்கு உகந்தவை. நீரேந்துப்
பிரதேசங் களில் இவர் பணியாற்ற நேரிடும். லாபம் இல்லை என்றெண்ணும்
காரியங்களில் இவர் கலந்து கொள்ளமாட்டார். மக்கள் நெரிசலாகப் புழங்கும்
இடங்கள், இவர் தொழில் செய்ய உகந்தவை. உணவுச்சாலைகள், கலையகங்கள்,
நெசவாலைகள், எண்ணெய் தொடர்பான தொழிற்சாலைகள், கடலி லிருந்து எடுக்கப்படும்
பொருட்களை வாங்கும் விற்கும் வியாபாரத் தலங்கள், குடிபான வகைக ளைத்
தயாரிக்கும் நிலையங்கள், காகிதம் தொடர் பான தொழில்கள் இவருக்கு நல்லாதாயம்
சம்பா தித்துத் தரும். படம் வரைதல், நிழல் உருவங்கள் தயாரித்தல், வர்ணக்
கலவை வேலைகள் போன்ற னவும் பெயர் வாங்கித் தரும். அச்சுத்தொழில் உறுதுணை யாக
அமையும். பெரிய மூல தனம் இல்லாமல் உடனுக்கு டன் விற்றுத் தீர்க்கும்
பொருட் களை வாங்குதல், விற்றல், பருவத்திற்கேற்ற பொருட் களை விற்று குறுகிய
காலத் தில் பெரிய லாபத்தைத் தரும் தொழில்களில் ஈடுபடுவர். எந் தச்
சூழலிலும் வளைந்து கொடுத்து தம்மைக் காப்பாற் றிக்கொள்வதில் ஜித்தர்கள்.
அதிர்ஷ்ட எண்கள்:
ஆடி மாதத்தில் பிறந்தவர் களுக்கு அதிர்ஷ்ட எண் 2, 7.
அதிர்ஷ்ட நிறம்:
வெண்மை நன்மை.
Via Pookal
Kp