தோஷம்

மணக்கால் அய்யம்பேட்டை | 4:36 PM | Best Blogger Tips

களத்திர தோஷம் ..



லக்னதிற்கு 7 வது இடம் களத்திர ஸ்தானம் எனப்படும். இவ்வாறு 7 ஆம் இடத்தில் சூரியன் , செவ்வாய் , சனி , சுக்கிரன் , ராகு , கேது இருந்தாலும் 7 ஆம் அதிபதி பலம் குன்றி இருந்தாலும் களத்திர தோஷமாகும்.இதற்கு தகுந்த பரிகாரம் செய்வதால் திருமண தாமதம் மற்றும் இந்த கிரகங்கள் செய்ய கூடிய தீய பலனை குறைய செய்யும் 

மாங்கல்ய தோஷம்



லக்னத்துக்கு 8 மிடம் மாங்கல்ய ஸ்தானம் ஆகும் .இதில் கிரகங்கள் இல்லாமல் இருப்பது மிகவும் நல்லதாகும் ...சுப கிரகங்கள் இடம் பெற்றாலும் கூட குறைந்த அளவில் தோஷத்தை ஏற்படுத்தும் .ஆனால் பாவ கிரகங்கள் இடம் பெற்றால் மாங்கல்ய தோஷம் உண்டாகும் .இதனால் திருமணம் தாமதமாகும் மற்றும் திருமணம் நடந்த பிறகு பாதிப்பு உண்டாக்கும் .தகுந்த பரிகாரம் மற்றும் கோவில் வழிபாடுகள் செய்து கொள்வது மிகவும் நல்லது .