திருமண பொருத்தம் - பாகம் 5

மணக்கால் அய்யம்பேட்டை | 4:09 PM | Best Blogger Tips

வசியப் பொருத்தம்

வசியப் பொருத்தம் மூலம் தம்பதிகளுக்குள் உள்ள பரஸ்பர அன்பையும் நெருக்கத்தையும் அறியலாம்.

ராசிகள் - வசிய ராசிகள்

மேஷம் - சிம்மம், விருச்சிகம்
ரிஷபம் - கடகம், துலாம்
மிதுனம் - கன்னி
கடகம் - விருச்சிகம், தனுசு
சிம்மம் - துலாம்
கன்னி - ரிஷபம், மீனம்
துலாம் - மகரம்
விருச்சிகம் - கடகம், கன்னி
தனுசு - மீனம்
மகரம் - மேஷம், கும்பம்
கும்பம் - மீனம்
மீனம் - மகரம்

பெண் ராசிக்கு ஆண் ராசி வசியமாக வந்தால் உத்தமம். ஆண் ராசிக்கு பெண் ராசி வசிய ராசியாக வந்தால் மத்திமம்.


ரஜ்ஜீ பொருத்தம்

பத்து விதமான பொருத்தங்களில் ரஜ்ஜீ பொருத்தம் சிறப்புடையதாகக் கருதப்படுகிறது. இந்த பொருத்தம் மனைவி, கணவனுடன் நீண்ட காலம் சந்தோஷமாக வாழும் பாக்கியத்தை வழங்குகிறது. நட்சத்திர மண்டலத்தை ஒரு மனிதனாக உருவகப்படுத்திக் கொண்டு அவன் பாதத்தில் அஸ்வினி நட்சத்திரத்தையும், தொடையில் பரணி, வயிற்றில் கார்த்திகை, கழுத்தில் ரோகிணி, தலையில் மிருக சீரிஷம் என நட்சத்தரிங்களை ஏறு முகமாக வரிசைப்படுத்திக் கொள்ள வேண்டும். மேல் நோக்கி செல்பவைகளை ஆரோகணம் என்றும், கீழ் நோக்கி வருபவை அவரோகணம் என்றும் கூறப்படும்.

அஸ்வினி, ஆயில்யம், மகம், கேட்டை, மூலம், ரேவதி இந்த 6ம் பாத ரஜ்ஜீவில் ஒரே ரஜ்ஜீவாகும்.

பரணி, பூசம், பூரம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி இந்த 6ம் தொடை ரஜ்ஜீவில் ஒரே ரஜ்ஜீவாகும்.

விசாகம், கிருத்திகை, உத்திராடம், புனர்பூசம், உத்திரம், பூரட்டாதி இந்த 6ம் வயிறு ரஜ்ஜீவில் ஒரே ரஜ்ஜீவாகும்.

சதயம், அஸ்தம், சுவாதி, ரோகிணி, திருவோணம், திருவாதிரை, இந்த 6ம் கழுத்து ரஜ்ஜீவில் ஒரே ரஜ்ஜீவாகும்.

மிருக சீரிஷம், சித்திரை, அவிட்டம் இந்த 3ம் சிரசு ரஜ்ஜீவில் ஒரே ரஜ்ஜீவாகும்.
சிரசு ரஜ்ஜீவில் கூடினால் கணவன் மரணம்.

கழுத்தில் கூடினால் பெண் மரணம், வயிறு கூடினால் சந்ததியில்லை. தொடை ரஜ்ஜீவானால் தன விரயம். பாத ரஜ்ஜீ என்றால் பல இடங்களில் சுற்றி திரியக் கூடிய சூழ்நிலை ஏற்படும். ஆகையால் ஒரே ரஜ்ஜீவானால் ஆகாது.