சூரியன் தனுசு ராசியில் சஞ் சரிக்கும் காலத்தை மார்கழி மாதம் என்று அழைக்
கின்றோம். இந்த ராசியா னது குரு தேவரின் ஆட்சி வீடுகளில் ஒன்றாகும். சூரிய
னுக்கு இது நட்பு ராசியாகும். பஞ்ச தத்துவங்களில் தீ அல்லது அனலை இந்த ராசி
குறிக்கின்றது.
தோற்றம் : உயரமான
தோற்றமுடையவர். நீண்ட, வளைந்த கை, கால்கள் உடையவர். சிறுவய தில் மெலிந்த
சரீரமுடையவராகவும், வயது வளர வளர தடித்த சரீரமுடையவராகவும் விளங்குவர்.
அகன்று விரிந்த, உயர்ந்த நெற்றி யுடையவர். வளைந்த, மிருதுவான புருவமு
டையவர். அகன்ற வாயுடையவர். பொருத் தமான உதடுகள் அமைந்திருக்கும். கண்கள்
அகன்று பளபளப்பாகத் தோற்றமளிக்கும் புஜங்கள் சரிந்து காணப்படும். எடுப்பா ன
பற்களும், புன்சிரிப்பான முகத் தோற்றமும் உடையவர். உரத்த குர லும் சாய்ந்த
நடையும் உடையவர்.
குணபாவங்கள்
மார்கழி
மாதத்தில் தோன்றி யவர்கள் சுயேச்சையை விரும் புபவர், வெள்ளை உள்ளம்
படைத்தவர். பிறர் உள்ளத்தில் உள்ளதை எளிதில் கிரகிக்கும் சக்தியுடையவர்.
பிறர் செய்யும் குற்றம் குறைகளை அச்சமின்றி எடுத்துரைப்பர். யாவருக்கும்
நன்மையே செய்ய வேண்டுமென்ற கருத்துடையவர். குற்றவாளிக ளைக் கண்டிக்கவும்,
சமயம் வரும்போது தண்டிக் கவும் தயங்கார். மற்றவர்கள் தம்மைப்பற்றி என்ன
நினைப்பார்கள் என்பதைப் பற்றிச் சற்றும் யோசிக் காதவர். இவருடன் நட்பு
கொள்வது அசாத்தியம். நட்பு ஏற்பட்டபின் இவர் உயிரையும் தியாகம்
செய்திடுவர். சுறுசுறுப்புடையவர். எதையும் ஊடு ருவிக் கண்காணிப்பதில்
சமர்த்தர். உதார குணமு டையவர். ஆனால், முன்கோபி. நியாயத்திற்கும்,
நேர்மைக்கும் கட்டுப்பட்டவர். தம்மைப் போலவே பிறரிடமிருந்தும்
எதிர்பார்ப்பவர். இவர் எடுத்த காரியத்தை முடிக்காமல் உறங்கார். சுய தொழிலதி
பர்கள் இவரை நம்பி இவருடைய கண்காணிப்பில் ஒப்படைத்தால் தொழில்
அபிவிருத்தியடையும்.
வழி தவறி நடப்பவர்களிடத்தில் இவர் உறவு
கொள்ளார். இளம் வயதிலேயே உலக அனுபவங் களைப் பெறுவதோடு உயர்ந்த தத்துவ
ஞானத்தை யும் அடைந்திடுவர். கீழோராயினும் உயர்ந்த பண்பு இருக்குமாயின்
அவரிடத்தில் சரிசமமாகப் பழகுவர். சதாகாலமும் அரிய நூல்களைப் படிப் பதில்
பெரும் பகுதியைச் செலவிடுவர். சீற்றம் ஏற்படினும், வெகு சீக்கிரத்தில்
தணியும்.
பிடிவாத குணமுடையவர். பரந்த நோக்கமுடையவரென்றாலும் சுயநல
முடையவர். அவசரத்தில் எதையும் செய்யத் துணிந்திடுவர், பின் வருந் துவர்.
எட்டாத விஷயங்களைப் பற்றி மனக்கோட்டை கட்டிடுவர். உயர்ந்த அபிலாஷைகள் நிறைய
வே உண்டு. ஆனால், வாழ்க்கை யில் நிறைவேறுவது ஒன்றி ரண்டு மட்டுமேயாகும்.
நோயும் - தீரும் வகையும்
இம்மாதத்தில்
பிறந் தவர்கள் விளையாட்டுப் பந்தயங்களில் தீவிரமாக ஈடுபடுவர். இதனால் சரீர
உறுப்புகளுக்கு அதிக உழைப்பு ஏற்படும். மே லும் வெயில் நேரங் களில் இவர்
விளை யாட்டுப் பந்தயங்களில் ஈடுபடுவதால் தாகம் தணிவதற்குப் பானங் களை
அருந்துவர். இத னால் சளி கட்டுவதும், மூச்சுத் திணறுவதும், சுவாச
கோளாறுகளும் ஏற்படும். சிலர் முரட்டுத்தனமாக விளையாடுவதால் கை, கால்கள்
முறிவதும், இரத் தக்காயங்களும் ஏற்படும். இத்தகைய விபத்துக்கள் இளம் வயதில்
ஏற்படக்கூடியவை. வயது முதிர்ந் ததும், சத்துள்ள உணவுகளை உட்கொள்ளாமை யால்
சீழ் பிடிப்பு, முடக்குவாதம் போன்ற அசதி களும் ஏற்படும். இந்த மாதத்தில்
பிறந்தவர்களு க்கு நீண்ட நேர ஓய்வும், சத்தான உணவும் சிறந்த
பரிகாரங்களாகும். மாலை நேரத்தில் உலாவி வரு வது இவருடைய ஆரோக்கியத்தைச்
செழிப்ப டையச் செய்யும். களைப்பு ஏற்படும் போது நீர் அருந்துவதோ, குளிர்ந்த
பானங்களை அருந் துவதோ, ஐஸ் க்ரீம் போன்ற குளிர்ச்சியான வஸ்துக்களை
உட்கொள்வதோ ஆகாது. இவற்றைத் தவிர்த்தால் ஆரோக்கியம் நல்லபடி விளங்கும்.
இனிப்புப்
பண்டங் களையும் கிழங்கு வகைகளையும் அதிகம் சேர்ப்பது ஆகாது. உடற்பிணியை
விட இவருக்கு மனோவியாதியும், பெண்களால் ஓயாத சங்கடங் களுமே அதிகம்
பாதிக்கும்.
குறையும் - நிறையும்
பொறுமை
என்பது இவரிடத்தில் காண்பதரிது. தாராளமாகச் செலவு புரிவர். ஒரே இடத்தில்
தங்கி யிருப்பது இவரால் இயலாத காரியம். அடி வாங் குவதும், பிறருக்கு
வழங்குவதும் இவருக்குத் துச்ச மான காரியமாகும். எதேச்சாதிகாரமுடையவர்.
குற்றவாளிகளைத் தண்டித்திடுவர். பணிந்தவர் களை மன்னிக்கும் சுபாவமுடையவர்.
விரிந்த அறி வுடையவர். பிறருக்கு அறிவு புகட்டுவதில் சங்கோ ஜமின்றி
ஈடுபடுவர். பிறர் இவரைப் பற்றி ஏசுவ தையும், பேசுவதையும் கண்டஞ்சார். அயல்
தேச யாத்திரையில் பிரியமுடையவர். உயர்தரப் பொருட்களை விரும்பி
அடைந்திடுவர்.
வாழ்க்கைத் துணை
சித்திரை,
ஆனி, ஆவணி, பங்குனி மாதங்க ளில் பிறந்தவர்கள் கூட்டாளியாகவோ, வாழ்க் கைத்
துணையாகவோ அமைந்தால் வாழ்க்கையில் ஒற்றுமையும், அமைதியும் நிலவிடும். ஆனால்
வைகாசி, ஆடி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் தோன்றியவர்கள் அமைந்தால்
கஷ்டமும், வீண் சங்கடங்களும் உண்டாகும்.
தொழில்
வேட்டையாடுவதில்
பிரியமுடையவர். சமூக வட்டாரத்தில் இவருக்குத் தெரியாத பிரமுகர்கள் இருக்க
முடியாது. நேர்முகமான எதிரிகளும் கிடை யாது. தத்துவ சாஸ்திரங்களைக்
கற்றுணர்ந்த மேதா வியாகவும், சோதிட சாஸ்திரத்தைக் கற்றறிந்தவரா கவும்,
நடக்கவிருப்பதை முன்கூட்டியே சொல்லக் கூடிய ஞானமுடையவராகவும் இருப்பர். அரச
சேவையில் பெரும்பதவி வகிக்கக்கூடிய வல்லமை யுடையவராகவும், கலை
நுணுக்கமறிந்தவராகவும் விளங்குவர். தம் பெயரால் தர்ம ஸ்தாபனங்களை
ஆரம்பிக்கவேண்டும் என்ற பேராவலுடையவர் வாழ்நாளில் என்றேனும் ஒருநாள்
இத்தகைய காரி யத்தில் தயங்காமல் ஈடுபடுவர்.
இவர்கள் பெரும்பாலும்
சமயநெறி போதகரா கவும், அறிவு புகட்டும் பேராசிரியராகவும், விஞ் ஞான
ஆராய்ச்சி நிபுணராகவும், பதிப்பாசிரியராக வும், பத்திரிகை ஆசிரியராகவும்,
புத்தக வியாபாரி யாகவும் விளங்குவர். வெல்லம், சர்க்கரை, பழ வகைகள், உலோகச்
சாமான்கள் போன்ற வணிகத் துறையில் இவர் ஈடுபட்டு நல்ல லாபத்தை அடைந்
திடுவர்.
சிறுவயதில் இவருக்குத் தண்ணீர் கண்டமும், நடுவயதில் வாகன
கண்டமும் ஏற்படும். வாகனங் களை வேகமாக ஓட்டக்கூடிய ஆற்றலுடையவர். உயிரைத்
துச்சமாக மதிப்பவராகையால் பாதுகாப் புப் படைகளில் துணிகரமாகப்
பணியாற்றுவர்.
நீண்ட ஆயுள் உடையவராகையால் இறுதிக் காலம் வரை
பிறருடைய உதவியின்றித் தாமே உழைத்து ஊதியம் பெற்று அதைக் கொண்டு வாழ்
நாளைக் கழித்திடுவர்.
கடவுள் பக்தியுடையவர். பெரிய மனிதர்களி டத்திலும், மகான்களிடத்திலும்,
மதகுருக்களிடத்தி லும் மரியாதை செலுத்துபவர். இவருடைய முன் னோர்களும்
இவருடைய புதல்வர்களும் உயர்ந்த அந்தஸ்தில் விளங்குவர். இறுதிக் காலத்தில்
எவ் விதக் கவலையுமின்றி ஆத்ம விசாரமுடையவராய் ஞானத்தெளிவு பெற்று உலக
பந்தத்திலிருந்து விடு படுவர்.
அதிர்ஷ்ட எண்
இம்மாதத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட எண் 3 ஆகும்.
நலந்தரும் நிறம்
மஞ்சள், பொன்னிறம் நலந்தரும் நிறங்களாம்.
Via Pookal
Kp