சூரியன் துலா ராசியில் சஞ்சரிக்கும்போது துலா மாதமென்றும், ஐப்பசி
மாதமென்றும் அழைக் கின்றோம். சித்திரை மாதத்தில் சூரியன் உச்சமென் றும்,
ஐப்பசி மாதத்தில் நீசம் என்றும் சோதிட சாஸ் திரம் கூறுகின்றது. பூமத்திய
ரேகைக்கு வடக்கே உள்ள பிரதேசங்களில் சித்திரை மாதத்தில் சூரியனு டைய
வெப்பம் அதிகமாகவும், ஐப்பசி மாதத்தில் வெப்பம் தணிந்தும் காணப்படுவதே
இதற்கு ஆதா ரம். துலா ராசியில் சுக்கிரன் ஆட்சி. மேஷ ராசியில் நீசமடையும்
சனிபகவானுக்குத் துலா ராசி உச்ச வீடு. இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு
சூரியனு டைய ஆதிக்கம் குறைந்தும் சுக்கிரன், சனி இவர் களுடைய ஆதிக்கம்
நிறைந்தும் காணப்படும்.
உருவ அமைப்பு
கவர்ச்சிகரமான தோற்றமுடையவர். நடுத்தர உயரமானவர். உருண்டையான தலையும்,
விரிந்த நெற்றியும், வளைந்த புருவமும், பளபளப்பான தலைமுடியும் இவருடைய அழகை
மிகைப்படுத் திடும். கனிந்த பார்வையும், எடுப்பான நாசியும், மலர்ந்த
முகமும், முகத்திற்கேற்ற உதடுகளும் யாவரையும் கவர்ந்திடச் செய்யும். கைகள்,
கால் கள், விரல்கள், இடை முதலிய ஒவ்வொரு அங்க மும் இவர்களது
உயரத்திற்கேற்ப வார்ப்படம் வார் த்ததுபோல் பொருத்தமாக அமையும். வேகமாக
நடந்தாலும் மெதுவாக நடந்தாலும் அளந்து வைப் பதுபோல் இருக்கும். இவர்கள் உடை
அலங்காரப் பிரியர்கள். உயர்தர ஆடை ஆபரணங்களைக் கால நேரங்களுக்கு
அனுசரணையாக உடுத்துவதில் இவருக்கு நிகர் இவரே.
குணாதிசயங்கள்
சுக்கிரன் வழங்கும் குணங்கள் என்னவென் றால், எல்லாவற்றிலும்
பற்றுடையவர்களாக இருத் தலே ஆகும். பந்துக்களிடம் என்றும் மாறாத அன்பு
செலுத்துபவர். செய்த உபகாரத்தை மறக்காதவர். மற்றவர் தம்மைக் கைவிட்டாலும்
இவர் அவர் களைக் கைவிடார். வாழ்க்கைக்குத் தேவைப்படும் சகல வஸ்துக்களையும்
சேகரித்து வைப்பதையே நோக்கமாகக் கொண்டவர். பெண்களிடத்தில் நய மாகப் பேசி
அவர்களுடைய அன்பிற்குப் பாத்திர மாவர். இளமை மாறினாலும் இவருக்கு முதிர்வு
தட்டாது. மற்றவர்களைத் தம்முடைய சிறந்த பாவங்களாலும், பாவனைகளாலும் அரிய
குணாதிசயங்களாலும் வாக்கு சாதுர் யத்தினாலும், மேலான தம்மு டைய வசீகரத்
தோற்றத்தினா லும் எளிதில் வசியமாக்கிக் கொள்வர். விளக்கொளி யைக் கண்டதும்
ஈசல் நெருங்குவதைப்போல் தூரச் செல்பவர்களும் புதிதாக அறிமுகமானவர்களும்
இவரைக் கண்டவுடன் அருகாமையில் வந்து ஓரிரு வார்த்தைகளைப் பேசி, இவர்கள்
வாயால் ஓரி ரண்டு வார்த்தைகளைச் சொல்லக் கேட்டு ரசித்த பிறகு நகர்ந்து
செல்வர். மற்றவர்கள் இன்புறுவ தைக் கண்டு இவர் இன்புற்றுப் புளகாங்கித
மடைவர்.
`பார்த்தால் பசி தீரும்' என்பதற்கிணங்க இவ ரைப் பார்த்துக்கொண்டிருந்தாலோ
அல்லது இவர் களிடத்தில் பேசிக்கொண்டிருந்தாலோ பொழுது சாய்வதும் தெரியாதாம்!
பசி எடுப்பதும் தெரியா தாம்! தனிமை இவருக்குப் பிடிக்காத விஷயம்.
ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்கள் சனி வழங்கக் கூடிய அம்சங்களுக்குப்
பெரும்பாலும் பாத்திரக் காரர்களாக விளங்குவர். பொறுமைசாலிகள். ஆனால், தம்மை
உதாசீனப்படுத்துபவர்களைக் கண்ணெடுத்தும் பாரார். அவர்கள் சொல்வதைச்
செவிகொடுத்துக் கேளார். ஆகையால், இவர்கள் மகா கர்விகள் என்றும் ஒரு சிலர்
கருதக்கூடும். பிறர் இவரைப் பற்றி என்ன நினைப்பார்கள் என் பதைப் பற்றி
இவர் சிறிதும் கவலைகொள்ளார். பிடிவாதக் கொள்கை உடையவர். ஆனால், நியா
யத்திற்கும், நீதிக்கும், நேர்மைக்கும் விரோதமாக எந்தக் காரியத்தையும்
செய்யத் துணியமாட்டார். குற்றம் புரிந்தவர்களைக் கண்டிக்காமலும், தண்டிக்
காமலும் விடுவது இவருக்குப் பிடிக்காத விஷயம். இவருடைய முடிவும்,
தீர்ப்பும் பாரபட்சமற்றதாக விளங்கும். தண்டிக்க வேண்டிய விவகாரங்களில் இவர்
நடுநாயகமாக விளங்குவர். மத்தியஸ்தம் விரும்பும் இரு தரத்தார்களும் இவரை
நாடி, இவர் சொல்லும் தீர்ப்பை ஆதரித்து, அங்கீகரித்திடுவர். பிறருக்காக
சரீரப் பிரயாசையை சுயநலம் பாராது ஏற்பர். உழைப்பினால் வரும் ஊதியத்தையே
பெரி தெனக் கருதிடுவர். பொதுநல சேவையில் சுய நலம் கருதாது பாடுபடுவர்.
கல்வி சிறிதெனினும் அறிவிற் சிறந்தவர். விரி ந்த அனுபவமுடையவர். இதனால்
இவர் சாமர்த்தி யமாக வாழ்க்கையை நடத்திக்கொள்வர். அதிக பொறுப்பைத் தாமாகவே
ஏற்றுக்கொள்வர். நடு வயதில் அடிமைத்தனம் நீங்கி வறுமை அகன்று
சுதந்திரமேற்படும். ஆனால், இறுதியில் தூய்மை யும், அமைதியும் ஆனந்தமும்
இவருக்குண்டாகும் என்பதில் ஐயமில்லை.
சூரியன் இங்கு நீசம் அடைவதால், ஐப்பசி மாதத்தில் தோன்றியவர்கள் ஆத்மபலம்
குன்றி யவர்கள் என்று கூறலாம். சிறிய விவகாரமாக இருந்தபோதிலும் சுயமாகத்
தலையிடமாட்டார் கள். பலருடைய ஆலோசனைகளைக் கேட்டும், மற்றவர்களுடைய ஆதரவைக்
கொண்டும் உதவி யைக் கொண்டும் எதையும் ஆரம்பிப்பார்கள். சிறு வயதில்
தகப்பனாருடைய ஆதரவு குறையும். தகப் பனாருக்கும் ஆதரவு குறையும்.
முன்னோர் தேடி வைத்த பொருள் இருந்தாலும் அவற்றின் மூலம் அதிக லாபத்தை
எதிர்பார்க்க இயலாது. ஆத்ம சக்தியும், மனோதிடமும் குன்றிய போது உற்சாகம்
ஏற்படுவதற்கு பொடி, புகை யிலை போன்ற லாகிரி வஸ்துகளையும், கொப்பி, டீ போன்ற
பானங்களையும், ஒரு சிலர் மது பானங் களையும் அடிக்கடி உபயோகப்படுத்துவர்.
திரேகத் திற்குப் புஷ்டியளிக்கும் எத்தகைய உணவுப் பொ ருளாக இருந்தாலும்
ருசி பார்க்காமல் இருக்க மாட் டார்கள். புலால் உண்பதிலும் பிரியமுடையவர்.
வேடிக்கை, விளையாட்டுப் பந்தயங்களிலும், வினோதக் கண்காட்சிகளிலும் அதிக
ஓய்வு நேரத் தைச் செலவிடுவர். தோட்ட வேலைகளிலும், வீட்டுவேலைகளிலும் அதிக
கவனத்தைச் செலுத்தி டுவர். தாமே செயலில் ஈடுபடுவர். முன்னேற்ற
விவகாரங்களிலும், பொது விவகாரங்களிலும், சுப காரிய பிரயத்தனங்களிலும்
இவரும் இவர் குடும் பத்தினரும் ஒத்துப்போகமாட்டார்கள். எல்லாவற் றையும்
தாமே கவனிக்க வேண்டிய நிர்ப்பந்தம் வரும். அனுபவம் நல்ல பாடம் கற்பித்த
போதி லும், விடாமல் உடன் பிறந்தவர்களையும் குடும்பத் தில் பெரியவர்களையும்
தம்முடன் ஒத்துழைக்கு மாறு அழைத்திடுவர். ஒத்துழைக்காததைக் கண்டு
அலுத்துச் சலித்துக்கொள்வர்.
சிறிய விஷயங்களை இவர் ஒரு பொருட்டாகக் கருதமாட்டார். பெருந்தன்மையும்
மன்னிக்கும் கண்ணியமும் இவரிடத்தில் உண்டு. ஒரு பொரு ளுக்கும் மற்றொரு
பொருளுக்கும் உள்ள வேறு பாடுகளை நொடிப்பொழுதில் கண்டுபிடிக்கும் உள்
ளுணர்வுடையவர். அந்தரங்கமான பக்தியுடை யவர். ஆன்மீகத் துறையில் கருத்தை
நிலைநிறுத்தி டுவர். மற்றவர்கள் புறக்கண்ணால் பார்க்க முடி யாத
பொருட்களையும் தத்துவங்களையும் அகக் கண்ணால் காணும் அற்புத சக்தி
வாய்ந்தவர்.
இவர்கள் கலா ரசிகர்கள். இசை ஞானமுடை யவர்கள். உருக்கமாகப் பாடுவதில்
அலாதியான ஆனந்தக் களிப்படைந்திடுவர். சந்தர்ப்ப சூழ்நி லையை நன்குணர்ந்து,
தக்கபடி பயன்படுத்திகொள்வர்.
பிணியும் பரிகாரமும்
சிறுநீர்த் தொகுதியிலும், இன உறுப்புகளிலும் வலி, இடுப்புலி, அடிவயிற்று
உபாதை, பெண்களா யிருந்தால் சூதக காலங்களில் கர்ப்பநோய் போன்ற அசதிகள்
தோன்றி நோய்வாய்ப்படுவர். ஜீரண கோசத்திலும் அடிக்கடி கோளாறுகள் தோன்றிடும்.
பிணிகள் ஏற்பட்டாலும் உடனுக்குடன் குணமேற் படுவதே இவருடைய வாழ்க்கையின்
அதிசயம். ஆகாரப் பொருட்களில் மறைந்து கிடப்பதைப் பய னுறத் தேடிக்கொள்வர்.
சாதகமும் பாதகமும்
இவர் பிறர் காரியங்களில் தலையிடார். ஆனால், வந்த வம்பு வழக்குகளை விடார்.
குறிப் பிட்ட காரியங்களை குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடிக்கும்
ஆற்றலுடையவர். அதேபோல், பிறரிடத் தில் இவர் ஒப்படைத்த காரியங்களை இவர்
கருதி யபடி செய்து முடிக்காவிட்டால் சீறி விழுவர். கை நிறையப் பணமும்,
தேவைக்கேற்பப் பொருள் வச தியும் இவருக்கு அமையாவிட்டால் சோர்ந்துவிடு வர்.
உல்லாச நிகழ்ச்சிகள் இவரை உற்சாகப்படுத் திடும்.
செயலினால் அன்றி சொல்லால் இவரை வச மாக்குவது கடினம். எவ்விதக் கடின வேலைகளை
யும் நொடிப்பொழுதில் செய்து முடிக்கும் சாமர்த்தி யம் உடையவர். ஆனால்,
மனம் மாறினால் சத்தி யாக்கிரகம் செய்து, எந்த வேலையிலும் ஈடுபடா மல்
மௌனத்தைச் சாதித்திடுவர். நேர்மையான வர். ஆதலால், நேர்மையற்ற செயல்களும்
நேர் மையற்றவர்களின் உறவும் இவருக்குப் பிடிக்கா தவை. ஆனால், எந்த
விவகாரங்களுக்கும் இவர் வளைந்துகொடுப்பர். நியாயமும், மத்தியஸ்தமும்
இவருடைய இயற்கையான பொக்கிஷங்கள் ஆகும்.
வாழ்க்கைத் துணை
சித்திரை, வைகாசி, ஆனி, மாசி மாதங்களில் தோன்றியவர்கள் வாழ்க்கைத்
துணையாகவோ, நண்பராகவோ அமைந்தால் வாழ்க்கையில் அமை தியும், சுகமும்
கிட்டிடும். செல்வமும் செழிக்கும். புரட்டாசி, மார்கழி, பங்குனி ஆகிய
மாதங்களில் பிறந்தவர்கள் துணையாக அமைந்தால் கஷ்டமும் நஷ்டமுமே ஏற்படும்.
தொழில்
லாபம் சிறிதாக இருந்தாலும் போதுமென்ற கொள்கை உடையவர். ஆகையால், அதிக நஷ்டம்
விளையக்கூடிய தொழில்களிலும் ஹேஸ்ய விவகாரங்களிலும் வியாபாரத்திலும் இவர்
தலையிடமாட்டார். திரைப்படத் தொழில்களை நிர்வகிப்பதிலும், கலைக்கூடங்களை
அமைப்பதி லும் நடனம், நாடகம் போன்ற நிகழ்ச்சிகளை ஏற்ப டுத்தித் தருவதிலும்
எதிர்பாரா வகையில் நல்ல வருமானத்தை அடைந்திடுவர். வழக்கறிஞர்களாக வும்
சட்டதிட்டங்களை நிலைநாட்டும் நோக்கம் கொண்டவர்களாகவும் விளங்குவர்.
மற்றவர்களுக்கு நீதி புகட்ட வேண்டுமென்ற கருத்துடையவர்களே அன்றித் தமக்காக
நியாயத் தைக் கோரி நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்நோக்க மாட்டார்கள்.
`நெற்றிக்கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே' என்று தயக்கமின்றி உள்ளதை
உள்ளபடியே எடுத்துக் கூறக்கூடிய ஆற்றல் உடை யவர் என்றால், அது
இவருக்குத்தான் பொருந்தும்.
தயாரித்த பண்டங்கள் எதுவாயினும் சிறந்த விற்பனையாளராக விளங்குவர். அரசாங்க
சேவை, உணவுப்பண்ட வினியோகம், கலை நிகழ்ச்சிகள் போன்ற துறைகளில் இவர் தொழில்
புரிந்திடுவர்.
அதிர்ஷ்ட எண்
ஐப்பசியில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட எண் 9 ஆகும்
நலந்தரும் நிறம்
இவருக்கு வெண்மை நிறம் நன்மை பயக்கும்.
Via Pookal
Kp