மாசி மாதத்தில் பிறந்தவர்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 5:10 PM | Best Blogger Tips
தமிழ் மாதப் பலன்கள்
மாசி மாதத்தில் பிறந்தவர்கள்

சூரியன் கும்பராசியில் சஞ்சரிக்கும்போது மாசி மாதமென்று அழைக்கின்றோம். இந்த ராசியானது சனிக்கு ஆட்சி வீடும், சூரியனுக்குப் பகைவீடும் ஆகும். பஞ்ச தத்துவங்களில் காற்றைக் குறிக்கும் ராசியாகும். தோற்றம் : மாசி மாதத்தில் பிறந்தவர்களில் ஒரு சிலர் நெட்டையாகவும், ஒரு சிலர் குட்டையாகவும் தோற்றமளித்திடுவர். தலை சிறியதாகவும், மேற் பாகம் குவிந்தும், தாடைகள் உள்ளடங்கியும் காணப்படும். நெற்றியின் நடுப்பாகம் உட்புறம் சாய்ந்திருக்கும். புருவங்கள் அழகாகவும், வளைந் தும் காணப்படும். வாய் அழுத்தமாக மூடப்பட் டிருக்கும். மூக்கு அகன்று விரிந்திருக்கும். கழுத்து சிறியதாகவும், உறுதியாகவும் காணப்படும். பற்கள் அழகு வாய்ந்தவை. ஆனால் உறுதியற்றதாக இருக் கும். புஜங்கள் சதுரமாகவும், உறுதி வாய்ந்தனவாக வும், நுனியில் கூர்மையாகவும் இருக்கும். பாதம் நீண்டும் மெலிந்தும் காணப்படும். பேச்சில் சரள மான போக்கும், அழுத்தம் திருத்தமான குரலும் தொனிக்கும். புன்சிரிப்பான முகத்தோற்றம் உடை யவர். அசைந்தாடிக் கொண்டே நடந்து செல்வர். சாதாரணமாகவும், விசேஷ நிகழ்ச்சிகளிலும் இவர் உடுத்தும் உடைகள் வினோதமாக விளங்கும். தரிக் கும் உடைகள் அளவுக்கு மீறியும் அல்லது பற்றும் பற்றாமலும் காணப்படும். நவநாகரீக முறைக்கு முரண்பட்டதாக இவருடைய உடை தோற்றமளித் திடும்.

குணபாவங்கள்

இவருக்கு ஸ்திரமான விருப்பு வெறுப்புகள் உண்டு. உறவினர்களிடத்திலும், நட்புக்குப் பாத்திர மானவர்களிடத்திலும் ஒரு சிலரிடத்தில் தான் இவர் நெருங்கிப் பழகுவர். இவருடைய அன்புக்குப் பாத் திரமானவர்கள் எதை செய்தாலும், எதைச் சொன் னாலும் தாங்கிக் கொள்வர். பிறரை லேசில் விடார். சிலர் இவர்களை கிறுக்குப் பேர்வழி என்றும் அழை ப்பதுண்டு. அறிமுகமாகாதவர்களிடத்தில் இவர்கள் நடந்துக் கொள்ளும் முறை சந்தேகத்திற்கு இடந் தரும். பேசுவது ஒன்றும், நடப்பது வேறொன்றுமாக இவருடைய செயல் இருக்கும். ஆத்ம பலமும், மனோதிடமும் உடையவராதலால், பிரபலமான காரியங்களைத் திடசங்கற்பத்துடன் செய்து முடிப் பர். பல்லாயிரக்கணக்கான ஜனங்களை இவரு டைய ஆக்ஞையின் கீழ் ஒன்றுபடும்படியாகச் செய் திடுவர். வெகு சீக்கிரத்தில் மன எழுச்சி அடைவர். குடும்ப விவகாரங்களில் பற்றற்றவராக விளங்கு வர். ஒரு சிலர் குடும்பத்திலிருந்து தனித்தும் வாழ் வர். விரக்தி மனோபாவமும், தியாக உணர்ச் சியும் இவருடைய இயற்கைச் சுபாவங் களாகும். புரட்சிகரமான செயல்களுக் கும், தீர்மானங்களுக்கும் இவர் ஆதாரமாக விளங் கக்கூடியவர். எத்தகைய உயர்ந்த அந்தஸ்து, பதவி, சேவை, தலைமை ஸ்தானம் வகிக்கக்கூடிய வாய்ப் பிருந்தும் புறக்கணித்து வெளியேறுவர். இவரு டைய திட்டங்களுக்கும், செய்கைகளுக்கும் தடை விதிக்க எவராலும் இயலாது. முரட்டுப் பிடிவாதமு டையவரென்றால் மிகையாகாது.
இவரை ஏமாற்றுவது அசாத்தியம். பொறுமை சாலிகள். மற்றவர்களைப் பற்றிக் கவலை கொள் ளார். வாழ்க்கையிலும் பிறர்நலத்தில் இவர் குறுக்கி டார். உயர்ந்த பண்பு உடையவர். நம்பிக்கைக்குப் பாத்திரமானவர். மனதை ஒரே நிலையில் கட்டுப்ப டுத்தக் கூடிய நிலையுடையவர். எளியவர். அன்பு உடையவர், சாந்தமானவர். அமைதியான தோற்ற முடையவர். தத்துவ ஆராய்ச்சியிலும், விஞ்ஞான ஆராய்ச்சியிலும் கருத்துடையவர். பழைய சம்பிர தாயங்கள் இவருக்குப் பிடிக்காது.

கலையார்வம் உடையவர். சங்கீதப் பிரியர். எதையும் விஞ்ஞான ரீதியில் ஆராய்ச்சி செய்து விளக்கம் காண்பவர். எதையும் ஆழ்ந்து நோக்கும் தன்மை உடையவர். மற்றவர்களை இன்புறச் செய் வதில் அலாதி பிரியமுடையவர். தம்முடைய இனத்தைச் சார்ந்தவரையும் உயர்த்திட அக்கறை யுடன் பாடுபடுவர். தீர ஆலோசித்து எந்தக் காரியத் திலும் ஈடுபடுவர். இவருக்கு ஞாபக சக்தி அதிகம். இத்தகையோர் தம்முடைய காதல் விவகாரங்களில் ஆரம்பம் முதல் இறுதிவரை ஒரே நெறியுடன் இருந் திடுவர்.
கற்றறிந்தவற்றை மனதில் பதிய வைத் துத் தக்க தருணத்தில் பயன்படுத்திடு வர். பொருள் சேர்ப்பதில் கருத்துடைய வராயினும் உலோபிகளல்லர்.
இவர் ஆவணியில் பிறந்தவர் களிடத்தில் தொடர்பு கொண்டாராயின் இவருடைய முழுத் திறமையும் சோபித்திடுவதோடு செயலிலும் பரிண மித்திடும். இவருடைய உயர்ந்த பண்பும் சீரிய நோக்கங்களும் சமுதாய நலனுக்கு பயன்படும் என்பது தெளிவு.

நோயும் தீரும் வகையும்

மாசி மாதத்தில் பிறந்தவர்கள் மிகவும் உணர்ச்சி வேகம் உடையவர். பிறர் தம்மை இழிவு படுத் துவதால் மனவாட்டம் கொள்வர். இதுமட்டுமல்ல, தம்மைப் பற்றிப் பிறர் என்ன நினைப்பார்களோ என்ற சிந்தனையில் ஓயாமல் ஈடுபடுவர். இவருக்கு உடம்புக்கு எவ்விதக் கோளாறும் எளிதில் ஏற் படாது என்பது உறுதி. இழிச்சொல் தாளாமையால் ஓயாக் கவலைக்கு உள்ளாகி மனநோய்க்கு இடம் அளித்திடுவர். மேலும், பிறர் தம்மை அவமதிப் பதாலும், தக்கபடி மரியாதை செலுத்தாததாலும் சோர்வு அடைந்திடுவர். இதனால், நாளடைவில் இரத்தக் கொதிப்பு ஏற்படும். இரத்த ஓட்டத்தில் ஏற் றத் தாழ்வுகள் தோன்றிடும். நரம்புத் தளர்ச்சியும் உண்டாகும். இத்தகையோர் பிறர் சொல்லுக்குச் செவி சாய்க்காமல் இருப்பது சிறந்த பரிகாரமாகும். மேலும், நல்ல வெளிப்புறக் காட்சிகளைக் காலை நேரத்திலும், மாலைநேரத்திலும் இவர் கண்டு களிப் பெய்துவதால் அவ்வப்போது இவருக்கு ஏற்படக் கூடிய அதிர்ச்சிகளில் இருந்து விடுவித்துக் கொள்ள நல்ல வழி ஏற்படும். மனத்தூய்மையும், அமைதி யும் உண்டாகும்.
பெரும்பாலும் இரத்த பரிசுத்தம் கெடுவதாலும், இரத்த ஓட்டத்தில் ஏற்றத் தாழ்வுகள் ஏற்படுவதா லும் இவருக்கு உடல் அசதி தோன்றிடும்.

குறையும் நிறையும்

உணர்ச்சி வேகமுடையவர். இருப்பினும் மகிழ்ச்சிகரமாகக் காரியத்தைச் சாதிப்பர். பிடிக்காத வர்களை வெறுப்பதுடன் அவருடைய வாடை படா மல் ஒதுக்கிடுவர். எந்தச் செய்கையில் ஈடுபடுவதா யினும் லாபக் கண்ணோட்டத்துடன் விளங்குவர். ஆதாயமில்லாமல் எந்தக் காரியத்திலும் பிரவேசிக் கமாட்டார். பிறர் நலனுக்காகப் பாடுபடும் தருணத் தில் உயிரையும் தியாகம் செய்யத் துணிந்திடுவர். பயந்த சுபாவமுடையவராயினும் வெளிப்புறத் தோற்றத்திற்கு வீரியவாதியாக விளங்குவர். மற்ற வர்களைத் தம்வசப்படுத்துவதில் சாமர்த்தியம் உடையவர். சுயநலவாதிகள், நேர்மையற்றவர் களைக் கண்டிக்கும் விவகாரங்களில் இவர் விட்டுக் கொடுப்பவரல்லர்.

வாழ்க்கைத் துணைவி

ஆனி, ஆவணி, ஐப்பசி, தை, மாசி மாதங்களில் பிறந்தவர்கள் வாழ்க்கைத் துணைவியா கவோ, கூட்டாளியாகவோ அமைவாரா யின் ஒற்றுமையும், சுமுகமான வாழ்க்கையும், முன்னேற்ற மும் ஏற்படும். ஆடி, புரட்டாசி, சித்திரை, கார்த்திகை மாதங்களில் பிறந் தவர்களுடன் தொடர்பு ஏற்படுமாயின் வாழ்க்கையில் பல இடையூறுகள் தோன்றிடும். கஷ்டமும், நஷ்டமும், வீண்வம்பு, வழக்குகளும் இடை யிடையே தோன்றிக் கவலை மிகுந்தவராக இவர் காணப்படுவர்.

தொழில்

மாசி மாதத்தில் பிறந்தவர்கள், தை மாதத்தில் பிறந்தவர்களைப் போலவே கடமை உணர்ச்சி மிகுந்த வர். கஷ்டமான வேலைகளைப் பொறுப்புடன் ஏற்றுத் திறமையுடன் சாதித்திடுவர். நீண்ட நேரம் சரீரப்பிர யாசை அளிக்கக்கூடிய கஷ்டமான வேலைகளே இவருக்கு இயற்கையாக அமையும். ஆனால், தை மாதத்தில் பிறந் தவர்களைப் போல ஓடி அலைந்து திரிந்து பணிபுரியும் வாய்ப்பு இவருக்கு ஏற்படாது.

நிலையாக நிரந்தரமாக ஒரே இடத்தில் செய்யக்கூடிய தொழில்கள் இவருக்கு அமையும். எந்திரத்தொழிற்சாலை, பல விலையுயர்ந்த பொருட்களைத் தேக்கி வைக்கக் கூடிய கிடங் குகள், இரும்பு, எஃகு உருக்காலை, பாத்திரத் தொழிற்சாலை, கனிமப்பொருட்கள் எடுக் கும் சோதனைக் கூடங்கள், புதைபொருள் ஆராய்ச்சி போன்ற துறைகளில் இவர் செயலாற்றுவர்.

இந்திர ஜாலவித்தைகளும் இவருடைய பொழுதுபோக்குச் சாதனங்களாகும். விஞ்ஞான ஆராய்ச்சி, மின்சார இலாகா போன்றவையும் இவர் களுக்குத் தொழில் சாதனங்களாகும். பாதுகாப்புப் படையில் சேர்ந்தும் தியாக உணர்ச்சியுடன் செய லாற்றி நல்ல, புகழையும் நன்மதிப்பையும் பெறு வர்.
இவர் எத்தகைய உயர்ந்த நிலையையும் சுய முயற்சியினால் அடையினும் மேலதிகாரிகளிடத் தில் இவருக்கு மனக் கசப்பு ஏற்படுமாயின் இவ ருடைய அந்தஸ்தை துச்சமாக மதித்து வேலையை ராஜினாமாச் செய்திடுவர்.

உழைப்பு மிகுந்தும், ஊதியம் குறைந்தும், பொறுப்பு உயர்ந்தும் இருக்கக்கூடிய ஸ்தானங்கள் இவருக்கு மிகவும் பொருத்தமானவை என்றால் மிகையாகாது.
மருத்துவ நிபுணராகவும், சட்டவாளராகவும் நடிப்புக் கலையில் தேர்ந்தவராகவும்,பொது சேவை யில் அக்கறை உடையவராகவும் இவர் விளங்குவர்.

அதிர்ஷ்ட எண்

இவருக்கு அதிர்ஷ்ட எண் 8 ஆகும்.

நலந்தரும் நிறம்

இவருக்கு நீலமும், கருப்பும் நலந் தரும் நிறமாகும்.