கிரகங்களில் சனி கிரகம் மட்டுமே ஒரு ராசியில் 2 1/2 வருடம்
இருக்கும்.இதனால் ஒரு ராசி சக்ரத்தை சுற்றி வர 30 வருடம் ஆகும்.பொதுவாக
கோட்சாரத்தில் அதாவது ராசியில் இருந்து சனி 3 , 6 , 11 இடங்களுக்கு வரும்
பொது நல்ல பலன்கள் தரும்.கோட்சாரத்தில் 12 , 1 , 2 வரும் காலத்தை தான்
ஏழரை சனி என்கிறோம் .இந்த 7 1/2 வருடங்களில் சனி ஒரு மனிதனின் வாழ்வில்
பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் .குடும்பம் என்றால் என்ன ? மனைவி
என்றால் என்ன? குழந்தைகள் என்றால் என்ன ? என்ற வாழ்க்கை தத்துவத்தை நன்கு
புரிந்து கொள்கிறான் . பணத்தின் அருமையும் மற்றவர்களோடு எப்படி பழக
வேண்டும் என்ற உண்மையும் புரிய வைத்து அவனது வாழ்கையை சனி பகவான்
செம்மைப்படுத்துகிறார் . இந்த அனுபவங்களை பயன்படுத்தி வாழ்கையில் வெற்றி
பெற உதவுகிறார் . எனவே ஏழரை சனி நடை பெற்றால் நாம் வருத்தபடவேன்டியது இல்லை .