இன்றைய பல் மருத்துவ டிப்ஸ்... பல்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:44 PM | Best Blogger Tips
தனது 8 வயது மகளை அழைத்து வந்து, டாக்டர் என் மகளுக்கு பல் எடுப்பாக உள்ளது இதற்கு கிளிப் பொருத்துங்கள் என்றார்.கிளிப் போட இன்னும் வயது இருக்கிறது பிறகு போடலாம் என்றேன் .இல்லை டாக்டர் சின்ன வயசிலே கிளிப் போடனும்னு எல்லோரும் சொன்னாங்க அதான் ஸ்கூல் ஆரம்பிப்பதற்கு முன்னால் போடலாம்னு அழைத்து வந்தேன் என்றார்.

கிளிப் எந்த வயதில் போடலாம்.

கிளிப் போட சரியான வயது 13.இந்த வயதில் தான் எல்லா பால் பற்களும் விழுந்து பெர்மனெண்ட் பற்கள் முளைத்து இருக்கும்.

8 வயது பிள்ளைகளுக்கு மேல் 4 முன் பற்களும் கீழே முன் 4 பற்களும் முளைத்து இருக்கும்.அந்த பற்கள் எடுப்பாக இருந்து கிளிப் போட்டு நெருக்கும் போது அதற்கு பின்னர் முளைக்க கூடிய முக்கியமான கோரைப்பல் முளைப்பதற்கு இடம் கிடைக்காது அதனால் கோரை பற்கள் முளைக்காமல் போய் விடும்.அதனால் தான் எல்லா பால் பற்களும் விழுந்து பெர்மனெண்ட் பற்கள் முளைத்த பிறகு கிளிப் போடுவது நல்லது.

கை சூப்பும் பழக்கம் உடைவர்கள், நாக்கால் பல்லை நென்டுபவர்களுக்கு Habit breaking appliance அந்த கால கட்டத்தில் இருக்கும் பிள்ளைகளுக்கு பொருத்தலாம்.

சிலர் 21 வயது உடையவர்கள் கல்யாணத்துக்கு 3 மாதம் முன்னர் வந்து எடுப்ப்பான பற்களை சரி செய்ய சொல்லுவர்.அதுவும் முடியாத காரியம், தூக்கி இருக்கும் பற்களை உள்ளே தள்ளுவதற்கு ஒன்றில் இருந்து ஒன்றரை ஆண்டு ஆகும்.

சரியான வயதில் கிளிப் பொருத்தி அழகாக புன்னகையுங்கள்.
via  Ilayaraja Dentist