மாங்கல்ய பாக்கியம், கணவன் வழி உறவுகள்
திருமணமான பெண்கள் தீர்க்க சுமங்கலியாக வாழ்வதையும், புகுந்த வீட்டில் கணவர் வழி உறவினர்களிடம் சுமூகமாக இருப்பதையும் விரும்புவார்கள் பெண்கள் ஜாதகத்தில் 8ம் இடமானது ஆயுள் ஆரோக்கியத்தை குறிப்பதுடன் மாங்கல்ய பாக்கியத்தையும் பற்றித் தெளிவாக அறிந்து கொள்ள உதவுகிறது. 8ம் வீட்டில் சுபக்கிரகங்கள் அமையப் பெற்று 8ம் அதிபதியும் பலமாக சுப பார்வையுடன் அமைந்திருந்தால், நல்ல ஆரோக்கியம், கணவருக்கு நீண்ட ஆயுள் உண்டாகி நல்ல மாங்கல்ய பாக்கியமும் உண்டாகும்.
கணவன் வழி உறவுகள்
கணவர் வழி உறவுகளைப் பற்றி பார்க்கின்ற போது 7க்கு 2ம் இடமான 8ம் இடம் பலமாக அமைந்து சுபகிரகங்கள் அதில் அமைந்து சுபகிரகங்களின் பார்வையும் இருந்தால் கணவர் வழி உறவுகளிடையே ஒந்றுமை சிறப்பாக இருக்கும். அதுவே 8ம் வீட்டில் பாவகிரகங்கள் அமையப் பெற்றால் கணவர் வழி உறவுகளிடையே ஒற்றுமை குறைவும், அனுசரித்துச் செல்ல முடியாத நிலையும் உண்டாகும். குறிப்பாக சனி, ராகு போன்ற கொடிய பாவகிரகங்கள் அமைந்து அதன் தசாபுக்திகள் நடைபெற்றால் கணவர் வழி உறவுகளிடையே பிரிவினையைக் கொடுக்கும்.