திருமண பொருத்தம் - பாகம் 6

மணக்கால் அய்யம்பேட்டை | 4:10 PM | Best Blogger Tips

வேதை பொருத்தம்
வேதை என்பது பாதிப்பு எனப் பொருள்படும். குறிப்பிட்ட நட்சத்திரங்கள் ஒன்றுக்கொன்று பாதிப்பை ஏற்படுத்தும்.

அஸ்வினி - கேட்டை
பரணி - அனுஷம்
கார்த்திகை - விசாகம்
ரோகிணி - சுவாதி
திருவாதிரைக்கு - திருவோணம்
புனர்பூசம் - உத்திராடம்
பூசத்திற்கு - பூராடம்
ஆயில்யம் - மூலம்
மகம் - ரேவதி
பூரம் - உத்திரட்டாதி
அஸ்தம் - சதயம்
உத்திரம் - பூரட்டாதி

இவை ஒன்றுக்கொன்று வேதையாகும். மிருக சீரிஷம், சித்திரை, அவிட்டம் இவை ஒன்றுக்கொன்று வேதை, வேதையானால் பொருந்தாது. திருமணம் செய்யக்கூடாது. ஆயில்யம், விசாகம், கேட்டை, மூலம் இந்த 4 லும் ஆண் நட்சத்திரமானால் திருமணத்தில் தோஷம் இல்லை. பெண் நட்சத்திரமானால் தோஷம் உண்டு.

பெண் நட்சத்திரம் மூலமானால் மாமனாருக்கு தோஷம். ஆயில்யம், மாமியாருக்கும், கேட்டை, மூத்த மைத்துனருக்கும், விசாகம், இளைய மைத்துனருக்கும் தோஷமாகும்.

பொதுவாக ஜென்ம ராசிக்கு 8வது ராசியில் சந்திரன் வந்தால் அது சந்திராஷ்டமம் இதில் எந்த சுபகாரியங்களையும் செய்ய கூடாது.

நட்சத்திரத்தில் பொருத்தத்தில் விதி விலக்குகள்

ராசி பொருத்தம், அல்லது ராசி அதிபதி பொருத்தம் இருந்தால் ஸ்திர தீர்க்க பொருத்தம் இல்லாமல் இருந்தாலும் தவறில்லை.

ஆண், பெண் இருவரும் ஏகராசி அல்லது சம சப்தம் ராசிகளில், இருந்தால் ராசி அதிபதி பொருத்தம் இல்லையென்றாலும் தவறில்லை.

பெண்ணின் ராசி ஒற்றை படை ராசியாக அமைந்து அதற்கு 6 அல்லது 8ம் ராசியாக ஆணின் ராசி அமைவது நல்லது.

பெண் ஆண் இருவருக்கும் ஒரே திசை, புக்தி நடக்கக் கூடாது. அது தசா சந்தியாகும். தவிர்ப்பது. மிகவும் நல்லது. திருமணம் செய்தே ஆக வேண்டும் என்றால் 3 வருட இடைவெளி இருக்க வேண்டும்.

பொதுவாக ஜனன லக்னம், ராசி அல்லது சுக்கிரனுக்கு 2, 4, 7, 8, 12ம் வீடுகளில் அசுப கிரகங்கள் இருப்பது, தோஷமாகும். குறிப்பாக செவ்வாய் இருப்பதை செவ்வாய் தோஷ அமைப்பு என்கிறோம்.

ஆண், பெண் இருவருக்கும் 1, 7, 2, 8 போன்ற இடங்களில் ராகு கேது அமைவதும் எல்லா கிரகங்களும், ராகு கேது பிடிக்குள் இருப்பதும் சர்பதோஷ அமைப்பாகும்.

செவ்வாய் தோஷம், ராகு கேது தோஷம் அமையப் பெற்றவருக்கும் அதே போல தோஷங்கள் உள்ள வரையே திருமணம் செய்ய வேண்டும்.

பொதுவாக ஒருவருக்கு லக்னத்திற்குள் 2, 7 மற்றும் 11ம் வீடுகளில் உள்ள கிரகங்களின் திசை புக்தி 7ம் வீட்டு நட்சத்திர அதிபதியின் திசை புக்தி காலம் 7ம் வீட்டை பார்க்கும் கிரகங்களின் திசை புக்தி காலம், சுக்கிரன் நின்ற வீட்டதிபதியின் திசை புக்தி காலம் போன்றவற்றில் திருமணம் நடைபெறும்.

கோட்சார ரீதியாக ஜெனன ராசிக்கு 2, 5, 7, 9, 11ம் வீடுகளில் குரு சஞ்சரிக்கும் காலத்திலும் திருமணம் நடைபெறும்.