ஆனி மாதத்தில் பிறந்தவர்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 5:01 PM | Best Blogger Tips
தமிழ் மாதப் பலன்கள்
ஆனி மாதத்தில் பிறந்தவர்கள்


சூரியன் தனது சுழற்சிக் காலத்தில் மிதுன ராசியில் சஞ்சரிக்கும் காலம் ஆனி மாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ராசி புதனுக்கு ஆட்சி வீடு ஆகும். பஞ்ச தத்துவங்களில் ஒன்றான காற் றை இந்த ராசி பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இத னால், புதனுக்கேயுரிய பிரத்தியேக குணங்களான நடுநிலை தவறாமை, நுண்ணறிவு, உதவும் மனப்பான்மை, யுக்தி, சாதுர்யம், எதை யும் கற்றுக்கொள்வதில் ஆர்வம், வேகமாகச் செயற்பட்டு காரியங் களை முடிக்க முனைதல், தந்தி ரம், நகைச்சுவை உணர்வு, கேளிக்கை, கிண்டல் முதலிய வற்றில் எல்லையில்லாத ஆர் வம், கதைகளில் ஈர்ப்பு போன் றவை இந்த மாதத்தில் தோன்றி யவர்களிடத்தில் அதிகமாகக் காணப்படும்.

உருவ அமைப்பு:

மெலிந்த, உயரமான உடலமைப்பு, நீள்முகம், விரிந்த, அகன்ற நெற்றி, நீள்புருவம், குறுகுறுக்கும் பார்வை ஆகிய வற்றுக்குச் சொந்தக்காரர்கள். அகன்ற வாயும் மேல் உதடு தடித்தும் குவிந்தும் காணப்படும் செவிகள் விரிந்து இருக்கும். தோள்கள் தடித்திருக்கும். வேக மான நடைப்பாங்குடைய வர்.

குணம்:

நிரந்தரக் கொள்கைகள் இவர்களிடம் காணப்படாது. அடிக்கடி தாம் எடுக்கும் முடிவு களை மாற்றிக்கொண்டே இருப்பர். செயலில் ஈடு படும்போது மற்றொன்றாக முடியும். இவரிடத்தில் பழகாதவர்கள் இவரைப் பற்றிப் புரிந்துகொள்வது அசாத்தியமான காரியம். நெருங்கிப் பழகுபவர் களும் இவரைத் தவறாகவே புரிந்துகொள்வர். வெகு சீக்கிரமாகக் கிரகிக்கும் தன்மையுடையவர்.

அதுபோலவே வெகு சீக்கிரத்தில் மனதை மாற்றிக்கொள்ளவும் இவர்களால் முடியும். அவசர காரர்கள் என்றாலும் தந்திரசாலிகள். உள்ளத்தில் இருப்பதை வெளிப்படுத்த மாட்டார்கள். பிறர் உள் ளத்தைச் சோதித்துப் பார்ப்பவர். அவசரத்தால் ஆகாது என்று தெரிந்தவுடன் கொள்கையை மாற் றிக்கொள்வர். வைகாசியில் தோன்றியவர்களைப் போல் இவர் பொறுமைசாலிகளல்லர்.

துயரத்தை வரவேற்கவும், கஷ்டத்தைத் தாங்க வும் மாட்டார்கள். இத்தகைய சந்தர்ப்பங்கள் வாழ்க்கையில் நேரிடும்போது மெல்ல நழுவிக் கொள்வர். சரீரப்பிராசையால் எதையும் செய்யத் துணியார். ஆனால் காரியங்களை வெகு சுலப மாக்கிக்கொள்வர். ஆரம்பித்த காரியங்களில் தலை யிடுவர். இவருக்குத் தெரியாத விஷயங்கள் எவை என்ற கேள்விக்கு உறுதியாக ஒன்றையும் இவரை குறிப்பிடவும் முடியாதாம்.

மேதாவிகளைப் போல் பிறர் புலனுக் குத் தோற்றமளித்திடுவர். இவர் கற்றுத் தோற்றது பல. இவர் ஆலோசனை களைக் கேட்டறிந்து செயலில் ஈடு படலாம்.
ஆனால் இவரை சகாயத் திற்கு மட்டும் அழைக்கலாகாது. சகாயத்திற்கு அழைத்தவர் களுக்கு அபாயம் நேரிடுவது போல் தெரிந்தால் இடையில் இவர்கள் சொல்லாமல் நழுவி விடுவார்கள்.

இவர் காரியவாதிகளல்லர். இலட்சியவாதிகளும் அல்லர். சம யோசித சூழ்நிலைக்கேற்ற வாறு கருத்தை மாற்றிக் கொள் வர். தம்மைப் பாதிக்காமலிருக் கும் காரியங்களிலும் அதிகப் பொறுப்பு ஏற்படாமலிருக்கும் துறைகளிலும் இவர் தைரியமாக தோன்றிடுவர்.

கடன் வாங்குவதென்றால் இவ ருக்குப் பயம். கடன் வாங்கி னாலும் கூடிய சீக்கிரத்தில் திருப்பிக் கொடுத்திடுவர். இல்லாமலிருந்தாலும் அதிகப் பிரயாசைக்குள்ளாகமாட்டார்.
பழகாதவர்களிடத்திலும் இவர் நீண்டநாள் பழகியவர் போல் பழகுவர். மூளைதான் இவருக்கு மூலதனம். இதைக்கொண்டு வியாபாரமோ, தொழிலகங்களோ நிறுவினால் நிர்மூலமாகி, வேறு தொழிலில் ஈடுபடவேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும்.

புத்தகங்களில் அதிக ஈடுபாடுள்ளவர்கள். தர்க் கத்திலே தாம் தோல்வியுற நேர்ந்தாலும் குதர்க்கம் பேசுவதில் வித்தகர். வாதிகளிடத்தில் விதண்டா வாதியுமாவர். ஒரே கல்லில் இரண்டு கனிகளை அடையும் சாதுர்யமுடையவராக இருப்பார்.

நோயும் குணமாவதும்:

சிறு வயதில் தொண்டையில் ரணம் உடைய வர்களாக விளங்குவர். இதற்குக் காரணம் குளிர் பானங்கள், ஐஸ்கிரீம் போன்றவற்றை உட்கொள் வதே. இதனால் இருமல், சளி, தொண்டையில் சதை வளருதல் போன்ற உபாதைகள் ஏற்படும்.

இதனால் அறுவைச் சிகிச்சை செய்து கொள் ளவும் நேரிடும். கூடாத பொருட்களை அறவே நீக் குவது சாலச் சிறந்தது. வயது வளர வளர, இந்த மாதத்தில் தோன்றியவர்கள் ஆழ்ந்த யோசனை யில் ஈடுபடுவதால் நரம்புத் தளர்ச்சி போன்ற பிணி களுக்கு இடந்தர நேரிடும்.

கூடுமானவரையில் குடிப்பதற்கு வெந்நீரை உபயோகிப்பது நலம். உணவும் சூடு குறையாமல் இருப்பது மிகவும் நல்லது. தனித்திருக்கும்போது ஏதாவதொரு சிறு பணியில் ஈடுபடுவது சிறந்தது. குளிர்ந்த தண்ணீரில் நீராடுவது கூடாது. வெந்நீரும் நன்கு கலந்து, சற்று ஆறிய நீரே உகந்தது.

இரும்புச் சத்து அதிகமுள்ள காய்கறிகளையும் வஸ்துக்களையும் உட்கொள்வது மிகவும் சிறந்தது. மேலே கூறிய இம்முறைகளை இவர் கையாண்டு வருவாராயின் என்னென்றும் நோயற்று நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கலாம்.

நிறை குறைகள்:

கஷ்டப்பட்டு முன்னுக்கு வரக்கூடிய ஆற்றல் மிக்கவர். எதையும் கூர்ந்து நோக்கும் ஆராய்ச்சித் திறனுடையவர். எக்காரியத்திலும் நல்லது கெட்டது என இரண்டையும் அலசிப் பார்த்துப் பிறகு செயலில் ஈடுபடுவர்.

அதிகக் கஷ்டத்தை ஏற்கத் தயங்குவர். பொறுப் பை ஏற்பதென்றால் இவருக்கு வேம்பு. ஆனால் எதையும் ஏற்றுக்கொண்ட பிறகு முழு முயற்சியு டன் சாதித்து முடித்திடுவர். இவர் தனக்கெனப் பாடுபடாவிட்டாலும் பிறருக்காக ஈடுபடும் விவ காரங்களில் மிகவும் உற்சாகம் கொண்டவர். இவ ருக்கென சில கொள்கைகளை வகுத்துக்கொள்வர். தம்முடைய அபிப்பிராயத்தைத் துச்சமென மதிப் பவர்களிடத்தில் இவர் உறவு கொள்ளார். கடுகடுப் பானவர். பிறர் மனதைப் புண்படுத்தும்படி பேசுவதென்றால் சந்தர்ப்பத்தை நழுவவி டார். ஏழை எளியவர்களுக்கு உபகாரி. ஆனால் பணக்காரர் என்றால் இவர் எதிரி யாகவே பாவிப்பார். கேளிக்கை வினோ தங்களில் இவருக்கு மிக்க ஆர்வமுண்டு.
விளையாட்டுப் பந்தயங்களிலும் கலந்து கொள்வர். சண்டை சச்ச ரவுகளில் இவர் மறைந்து கொள் வர். அதிகச் சிரமம் இல்லாமல் அரிய, பெரிய காரியங்களைப் பிறர் வியக்கும் வண்ணம் சாதிக்கும் திறமையுடையவர் தந்திரமாகச் சாதிக்கக் கூடி ய காரியங்களில் விடாக் கண்டர்கள். தரகு, மத்தி யஸ்தம் செய்யும் துறை களில் இவர்களைக் கருவியாகப் பயன்படுத் தினால் காரிய வெ ற் றியும் கைமேற் பலனும் கிட்டிடும்.

துணை:

ஐப்பசி, மாசி மாதத்தில் தோன்றிய பெண்மணி களை வாழ்க்கைத் துணவியாக ஏற்கவும் தொழி லில் கூட்டாளிகளாகச் சேர்த்துக்கொள்ளவும் உகந் தது. கார்த்திகை, தை மாதத்தில் பிறந்தவர்களுடன் சேர்ந்தால் விரோதமும், வஞ்சகமும், ஏமாற்றமும் ஏற்படும்.

தொழில்:

ஒரே இடத்தில் நிரந்தரமாக இருக்கக் கூடியவர் களல்லர். நிரந்தரமாக உட்கார்ந்து செய்யக்கூடிய கடினமான வேலைகளுக்கு இவர் தகுதியுடையவ ரல்லர். சதா காலமும் சுற்றுப் பிரயாணம் செய்யும் காரியங்களிலும் பிறர் செய்த காரியங்களை மேற் பார்வை செய்யும் விவகாரங்களிலும் கணக்குக ளைப் பரிசோதித்தல், தொழில் ஸ்தாபனங்களுக்கு முக்கியப் பிரதிநிதிகளாக வேலை பார்த்தல், தக ராறுகளை மத்தியஸ்தம் செய்தல், தரகு பேசுதல், மொழி பெயர்த்தல் போன்ற காரியங்களில் இவர் சிறந்த திறமைசாலிகளாக விளங்குவர்.

அதிக சரீர உழைப்பின்றி மூளையின் உதவி யைக் கொண்டு புத்திகூர்மையாலும் வாக்கு சாதுர் யத்தாலும் சாதிக்கக்கூடிய செயல்களில் இவர் திற மை சோபிக்கும். சட்ட நுணுக்கங்களை ஆராய்வதி லும் புள்ளிவிவரங்களைச் சேகரிப்பதிலும் பிறர் குற்றங்களை வேவு பார்ப்பதிலும் இவருக்கு நிகர் இவரேதான். ஆனால் இவரைப் பிறர் கட்டுப்படுத் துவதோ, அடிமையாக்கிக் கொள்வதோ முடியாத காரியம். சுயேச்சை விரும்பிகள்.

இவருடைய விருப்பத்திற்கு விட்டுக் கொடுத் தால்தான் இவரால் காரியத்தைச் சாதிக்க முடியும். இல்லையேல் ஆரம்பித்தவை முடிவு பெறாமலே யே நிற்கும். இவர்கள் நல்ல நடிகருமாவார்.

அதிர்ஷ்டமான எண்கள்:

இம்மாதத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட எண் 6 ஆகும்.

அதிர்ஷ்ட நிறம்:

இவருக்குப் பச்சை நிறம் நன்மை பயக்கும்.