தமிழ் இலக்கியத்தில் சித்தர்களின் மாபெரும் பங்கு Whare are you going to Tamil ILAKKIYAM !

மணக்கால் அய்யம்பேட்டை | 4:52 PM | Best Blogger Tips
Picture
                                            தமிழ் இலக்கியம் பலவகைப்படும். அவை, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு, ஐம்பெருங்காப்பியம், தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தம் என விரிவடைந்து இலக்கிய வகையின் எண்ணிக்கை நீண்டு கொண்டே போகும்.  இலக்கியம் கலை என்னும் கோட்பாட்டினை உள்ளடக்கியது. தமிழ்ப் புலமை மிக்கோர் நெஞ்சில் இடம் புகுந்த கலை, வடிவ நிலையை அடைந்து கைத்தொழில் கைவினைத் திறத்தினால் உருவாகும் கட்டிடக் கலை போன்ற பயன் கலைகளும், புலன்களுக்கும் மனத்திற்கும் இன்பத்தைத் தருகின்ற சிற்பம், ஓவியம் போன்ற இன்பக் கலைகளும், மாந்தர் தம் உள்ளங்களில் சுவையுணர்வை எழுப்பி அழகையும் இன்பத்தையும் ஊட்டுகின்ற இசை, நாட்டியம், நாடகம், கூத்து என்னும் (Fine Arts, Performing Arts) நுண்கலைகளும், அறிவுக்கும் வாழ்க்கை நலத்துக்கும் தேவையாயிருக்கின்ற மருத்துவம், வானவியல் போன்ற (Science) அறிவியல் கலைகளும், வாழ்வியல் உண்மைகளை மொழிச் சுவை கலந்து படைக்கும் படைப்புகளாக–இலக்கியக் கலைகளாகப் படைக்கப்பட்டுள்ளன.
                     
                                                               சித்தர் இலக்கியம் தமிழில் வழங்கி வரும் மருத்துவ நூல் ஆசிரியர் பெயர்கள் அனைத்தும் சித்தர்கள் பெயராலேயே வழங்கப்படுகின்றன. அகத்தியர்12000; திருமூலர்8000; போகர்7000; மச்சமுனி800; சட்டமுனி3000; கொங்கணர்3000; கோரக்கர் சந்திரரேகை என்றே குறிப்பிடப்படுகின்றன. இப்பெயர்கள் அனைத்தும் சித்தர் பெயராகவே இருப்பதனால், மருத்துவ இலக்கியம் அனைத்தும் ‘சித்தர் இலக்கியம்’ என்னும் பொதுப்பெயரால் வழங்கப்படுகின்றன.

தமிழ் மொழி வரலாறு

Picture
தமிழ்த் தாய் வாழ்த்து
நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமென திகழ்பரத கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல்திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற,
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்து துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள் முன்னிருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாள முந்துளுவும்
உன்னுதரத்தே யுதித்தே யொன்றுபல வாயிடினும்
ஆரியம்போ லுலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!
                                      -மனோன்மணீயம் பெ. சுந்தரம் பிள்ளை

தமிழ் இந்திய மொழிகளில் மிக நீண்ட இலக்கிய இலக்கண மரபுகளைக் கொண்டது. தமிழ் இலக்கியங்களில் சில இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை. கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழ் ஆக்கங்கள் கி.மு 300-ம் ஆண்டைச் சேர்ந்த பிராமி எழுத்துக்களில் எழுதப்பெற்றவைகளாகும்.இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ 100,000 கல்வெட்டு, தொல்லெழுத்துப் பதிவுகளில் 55,000 க்கும் அதிகமானவை தமிழில் உள்ளன. பனையோலைகளில் எழுதப்பட்டு அல்லது வாய்மொழி மூலம் வழிவழியாக பாதுகாக்கப்பட்டுவந்ததால் இது மிகப் பழைய ஆக்கங்களின் காலங்களைக் கணிப்பது மிகவும் கடினமாக உள்ளது. எனினும் மொழியியல் உட் சான்றுகள், மிகப் பழைய ஆக்கங்கள் கிமு 2 ஆம் நூற்றாண்டுக்கும்இ கிபி 3 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் காட்டுகின்றன. இன்று கிடைக்கக்கூடிய மிகப் பழைய ஆக்கம் தொல்காப்பியம் ஆகும். இது பண்டைக்காலத் தமிழின் இலக்கணத்தை விளக்கும் ஒரு நூலாகும். இதன் சில பகுதிகள் கிமு 200 அளவில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகின்றது. 2005ல் அகழ்ந்தெடுக்கப்பட்ட சான்றுகள், தமிழ் எழுத்து மொழியை கிமு 500 அளவுக்கு முன் தள்ளியுள்ளன.பண்டைத் தமிழில் எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க காப்பியம்இ கி.பி 200 - 300 காலப்பகுதியைச் சேர்ந்த சிலப்பதிகாரம் ஆகும்.

நீதிநூல் காலம். தமிழ் இலக்கியத்தில் கி.பி. 100 இருந்து கி.பி. 500 வரையிலான காலப்பகுதி நீதிநூல் காலம் எனப்படுகிறது. இந்தக் காலப் பகுதியை சங்கம் மருவிய காலம் என்றும் வகைப்படுத்துவர். இந்த காலப்பகுதில் இயற்றப்பட்ட பதினெண்கீழ்க்கணக்கு என்ற 18 நூல்களின் தொகுப்பில் 12 நீதிநூல்கள் (மு. வரதராசன்). சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவை இயற்றப்பட்டது இக்காலத்திலேயே.திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, சிறுபஞ்சமூலம், திரிகடுகம், ஏலாதி, இனியவை நாற்பது, ஆசாரக்கோவை, முதுமொழிக்காஞ்சி, இன்னா நாற்பது,.

தமிழ் மறுமலர்ச்சிக் காலம் வெளி ஆக்கிரமிப்புக்களாலும் காலனித்துவ ஆதிக்கத்தாலும் தமிழ் தேங்கி கிடந்த நிலையில் இருந்து மீண்டு தமிழின் தொன்மையையும், தொடர்ச்சியையும், சிறப்பையும் தமிழர்கள் தாம் அறிந்தும் பிறரும் அறியக்கூடியவாறு நிலைநிறுத்த தொடங்கிய காலப்பகுதி தமிழ் மறுமலர்ச்சி காலம் ஆகும். "கி.பி. 1887 முதல் தமிழின் மறுமலர்ச்சி காலம் முதல் தமிழின் மறுமலர்ச்சி காலம் எனலாம். இவ்வாண்டில் இருந்துதான் கல்வெட்டுக்களின் அறிக்கைகள் வெளிவரத்தொடங்கின. தமிழின் தலையெழுத்தும் மாறத் தொடங்கியது. தமிழின் தொன்மை வெளியுலகத்துக்கு தெரிய ஆரம்பித்தது. பண்டைத் தமிழரின் நாகரிகத்தை உலகம் அறிய முற்பட்டது."இந்த மறுமலர்ச்சிக்கு மேலைநாடுகளில் இருந்து சமயம் பரப்ப வந்த மேலைநாட்டு அறிஞர்களின் ஆய்வுகளும் உதவியது. குறிப்பாக வீரமாமுனிவர் 1856-இல் எழுதிய 'திராவிடமொழிகள் ஒப்பிலக்கணம்' (The Comparative Grammar of the Dravidian Languages) ஆய்வு தமிழின் தனித்துவ பண்பை நிறுவ உதவியது.18 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் தமிழறிஞர்கள் சங்க ஏடுகளை தேடிப் பெற்று அச்சுப் பதிப்புச் செய்து பொது மக்களுக்கு எடுத்து செல்லும் பணியையும் செய்தனர். இந்த பணியை செய்தவர்களில் உ. வே. சாமிநாதையர், சி. வை. தாமோதரம்பிள்ளை, ஆறுமுக நாவலர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

லீலாதிலகம், 14 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், கேரளத்தில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் ஓர் இலக்கண நூல். இந்நூலில் படி ஒன்று 1908 இல் கண்டுபிடிக்கப்பட்டது[1]. இந்நூல் கேரளத்தில் பாட்டு மரபுக்கும், மணிப்பிரவாளத்துக்கும் இடையிலுள்ள தொடர்புகளை வரையறுப்பதுடன், இசைவாகக் கலக்கக்கூடிய உள்ளூர் மற்றும் சமசுக்கிருதச் சொல் வகைகளைப் பற்றியும் எடுத்துரைக்கின்றது. இம்மணிப்பிரவாளப் பாடல்களில் சமசுக்கிருத இலக்கணமே பின்பற்றப்படவேண்டும் என்றும் இந்நூல் குறிப்பிடுகின்றது. இது, சேரநாட்டுத் தமிழில் மணிப்பிரவாளம் மூலம் சமசுக்கிருதம் எவ்வாறு படிப்படியாக ஆதிக்கம் செலுத்தியது என்பதை விளக்குகிறது. இது போன்றே கேரளத்தில் மணிப்பிரவாள நடையில் எழுதப்பெற்று, இன்றும் கிடைக்கக்கூடிய மிகப் பழம்பெரும் நூல் வைசிக தந்திரம் என்பதாகும்.

மொழியியலாளர் தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் மொழியை மூன்று காலப்பகுதிகளாக வகைப்படுத்தியுள்ளனர். இவைஇ பண்டைக்காலம் (கிமு 200 தொடக்கம் கிபி 700 வரை)இ மத்திய காலம் (கிபி 700 தொடக்கம் கிபி 1500 வரை)இ நவீன காலம் (கிபி 1500 தொடக்கம் இன்று வரை) என்பனவாகும். மத்திய காலத்தில் பெருமளவு வடமொழிச் சொற்கள் தமிழில் கலந்துவிட்டன. பிற்காலத்தில் பரிதிமால் கலைஞர்இ மறைமலை அடிகள் முதலான தூய்மை வாதிகள் இவை தமிழிலிருந்து நீக்கப்பட உழைத்தனர். இவ்வியக்கம்இ தனித்தமிழ் இயக்கம் என அழைக்கப்பட்டது. இதன் விளைவாக முறையான ஆவணங்களிலும்இ மேடைப் பேச்சுகளிலும்இ அறிவியல் எழுத்துக்களிலும் சமஸ்கிருதக் கலப்பில்லாத தமிழ் பயன்பட வழியேற்பட்டது. கிபி 800 க்கும் 1000 இடைப்பட காலப்பகுதியில்இ மலையாளம் ஒரு தனி மொழியாக உருவானதாக நம்பப்படுகின்றது.

         மொழிக்குடும்பம்:தமிழ் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழியாகும். இக் குடும்பத்தில் இருளா முயமையனi பேட்டா குறும்பா ளூழடயபய மற்றும் லுநசரமரடய என்னும் மொழிகள் அடங்கும். தமிழ் மொழிக் குடும்பம் தமிழ்-மலையாளம் மொழிகளின் ஒரு துணைக் குடும்பமாகும். தமிழ்-மலையாளம் மொழிகள் தமிழ்-குடகு மொழிக் குடும்பத்தின் துணைப் பிரிவாகவும் தமிழ்-குடகு மொழிக் குடும்பம் தமிழ்-கன்னடம் மொழிக் குடும்பத்தின் துணைப் பிரிவாகவும் உள்ளன. தமிழ்-கன்னடம் மொழிக் குடும்பம் திராவிட மொழிக் குடும்பத்தின் துணைப் பிரிவுகளுள் ஒன்றான தென் திராவிட மொழிக் குடும்பத்தின் உட் பிரிவுகளுள் ஒன்றாகும்.தமிழ் நாட்டை எல்லையாகக் கொண்டுள்ள கேரள மாநில மக்களால் பேசப்படும் மலையாளம் சொற்கள் வசன அமைப்பு ஆகிய அம்சங்களில் தமிழை நெருக்கமாக ஒத்துள்ள ஒரு மொழியாகும்.

        தமிழ் பேசப்படும் இடங்கள்:தமிழ் தென் இந்திய மாநிலமான தமிழ் நாட்டின் பெரும்பான்மையினரதும் இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் வாழும் மக்களதும் முதன் மொழியாகும். தமிழ் மேற்படி நாடுகளின் பிற பகுதிகளிலும் குறிப்பாக இந்திய மாநிலங்களான கர்நாடகம் கேரளம் மற்றும் மகாராஷ்டிரத்திலும் இலங்கையில் கொழும்பு மற்றும் மத்திய மலை நாட்டுப் பகுதிகளிலும் வழங்கி வருகின்றது.தமிழ் மக்கள் 19 ஆம் நூற்றாண்டிலும் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் ஒப்பந்தக் கூலிகளாகவும் கீழ்நிலை அரசப் பணியாளர்களாகவும் இந்தியா இலங்கை போன்ற நாடுகளிலிருந்து பிரித்தானியப் பேரரசின் பல பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டனர். அவ்வாறு அவர்கள் சென்ற இடங்களில் தமிழ் பேசும் சமுதாயங்கள் உருவாகின. இவர்களின் வழிவந்தவர்கள் இன்று சிங்கப்பூர் மலேசியா மொரீஷியஸ் போன்ற நாடுகளில் குறிப்பிடத்தக்க குடித்தொகை கொண்டவர்களாக வாழ்ந்து வருகின்றார்கள். தென்னாபிரிக்கா குயானா பிஜி சுரினாம் மற்றும் ட்ரினிடாட் டொபாகோ போன்ற நாடுகளிலும் பலர் பூர்வீகத் தமிழராக இருந்தும் அந் நாடுகளில் தமிழ் மொழியை அவர்கள் பேசுவதில்லை.மிக அண்மைக்காலங்களில் பெரும்பாலும் இலங்கையின் இன முரண்பாடுகள் காரணமாக அகதிகளாக அங்கிருந்து இடம் பெயர்ந்தவர்களும் ஓரளவு பொருளாதாரக் காரணங்களுக்காக இடம் பெயர்ந்தவர்களுமாக பல தமிழர்கள் ஆஸ்திரேலியா நியூசிலாந்து கனடா ஐக்கிய அமெரிக்கா மற்றும் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளிலும் வாழ்ந்து வருகின்றார்கள். தற்போது இவர்களில் பழைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் தமிழ் மொழியை ஒரு உயிர்ப்புள்ள மொழியாக வழங்கி வந்த போதிலும் இளைய தலைமுறையினர் பலர் தமிழ் மொழியைப் பயன்படுத்த இயலாதவர்களாகவும் ஆர்வமற்றவர்களாகவும் வளர்ந்து வருவதை கவனிக்க முடிகின்றது. புலம் பெயர்ந்த தமிழர்களின் பெரு முயற்சியினால் தற்போது ஆஸ்திரேலியா கனடா இங்கிலாந்து போன்ற நாடுகளில் தமிழ்மொழி இரண்டாம் மொழியாக பாடசாலைகளில் கற்பிக்கப்படுகின்றது.

         ஆட்சி மொழி அங்கீகாரம்:தமிழ் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் ஆட்சி மொழியாக உள்ளதுடன் இந்திய அரசியலமைப்பின் கீழ் தேசிய மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ள 22 மொழிகளுள் ஒன்றாகவும் உள்ளது. இலங்கையிலும் தமிழ் மூன்று ஆட்சி மொழிகளுள் ஒன்றாக அங்கீகாரம் பெற்றுள்ளது. சிங்கப்பூர் நாட்டிலும் தேசிய மொழிகளுள் ஒன்றாகத் தமிழ் இடம் பெற்றுள்ளதுடன் தென்னாபிரிக்காவிலும் தமிழுக்கு அரசியலமைப்பு அங்கீகாரம் உள்ளது.அத்துடன் இந்தியாவிலும் வெளி நாடுகளிலும் உள்ள பல தமிழ் அமைப்புக்களினதும் அறிஞர்களினதும் குறிப்பாக பர்க்லேயிலுள்ள கலிபோர்னியாப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவரான ஜார்ஜ் எல் ஹார்ட் போன்றவர்களுடையதும் முயற்சிகளைத் தொடர்ந்து 2004 ஆம் ஆண்டில் இந்திய அரசினால் தமிழ் ஒரு செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அங்கீகாரம் பெற்றுள்ள முதல் இந்திய மொழி தமிழாகும். இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளினதும் கூட்டுக் கூட்டமொன்றின்போது 2004 ஜூன் 6 ஆம் நாள் இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களால் இவ்வறிவிப்பு வெளியிடப்பட்டது.

          பேச்சுத்தமிழ் - உரைநடைத்தமிழ் வேறுபாடுகள்:தமிழ் அதன் பல் வேறுபட்ட வட்டார வழக்குகளுக்கு மேலாக இலக்கியங்களில் பயன்படும் முறையான செந்தமிழுக்கும் கொடுந்தமிழ் என வழங்கப்படும் பேச்சுத் தமிழுக்கும் இடையே தெளிவான இருவடிவத் தன்மை (னபைடழளளயை) காணப்படுகின்றது. இங்கே கொடுந்தமிழ் என்பது அனைத்து வட்டாரப் பேச்சுத் தமிழ் வழக்குகளையும் பொதுவாகக் குறிக்கும் ஒரு சொற் பயன்பாடு ஆகும். இந்த இருவடிவத் தன்மை பண்டைக் காலம் முதலே தமிழில் இருந்து வருவதை கோயில் கல்வெட்டுக்களிற் காணப்படும் தமிழ் சமகால இலக்கியத் தமிழினின்றும் குறிப்பிடத் தக்க அளவு வேறுபட்டுக் காணப்படுவதினின்றும் அறிந்துகொள்ள முடியும். இவ்வாறு செந்தமிழ் எந்த வட்டார மொழி வழக்கையும் சாராது இருப்பதனால் எழுத்துத் தமிழ் தமிழ் வழங்கும் பல்வேறு பகுதிகளிலும் ஒன்றாகவே இருப்பதைக் காணலாம்.தற்காலத்தில் எழுதுவதற்கும் மேடைப் பேச்சுக்கும் செந்தமிழே பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றது. எடுத்துக்காட்டாக செந்தமிழ் பாட நூல்களுக்குரிய மொழியாகவும் பெருமளவுக்கு இலக்கிய மொழியாகவும் மேடைப் பேச்சுகளுக்கும் விவாதங்களுக்கும் உரிய மொழியாகவும் விளங்கிவருகிறது. அண்மைக் காலங்களில் மரபு வழியில் செந்தமிழுக்குரிய துறைகளாக இருந்து வந்த பகுதிகளிலும் கொடுந்தமிழ்ப் பயன்பாடு அதிகரித்து வருவதைக் காணமுடிகின்றது. பெரும்பாலான தற்காலத் திரைப்படங்கள் மேடை நாடகம் மற்றும் தொலைக் காட்சி வானொலி முதலியவற்றில் இடம்பெறும் மக்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் பலவற்றிலும் கொடுந்தமிழ் பயன்படுத்தப்படுவதைக் காணலாம். பல அரசியல் வாதிகளும் மக்களுக்கு நெருக்கமாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் நோக்கில் தங்கள் மேடைப் பேச்சுக்களிலும் கொடுந்தமிழைப் பயன்படுத்தி வருகின்றனர்.செந்தமிழுக்கான இலக்கண விதிகள் இறைவனால் உருவாக்கப் பட்டதாக நம்பப்படுவதால் செந்தமிழே சரியான மொழியாகக் கருதப்பட்டது. இதனால் பேச்சுத் தமிழ் வழக்குகளுக்குச் சிறப்புக் கிடைக்கவில்லை. பல ஐரோப்பிய மொழிகளில் காணப்படுவதற்கு மாறாக தமிழில் அதன் வரலாற்றின் பெரும் பகுதியிலும் ஒரு பொதுவான பேச்சுமொழி இருந்ததில்லை. தற்காலத்தில் அதிகரித்த கொடுந்தமிழ்ப் பயன்பாடு அதிகாரபூர்வமற்ற முறையில் பொதுப் பேச்சுத் தமிழ் வழக்குகள் தோன்றுவதற்குக் காரணமாகவுள்ளது. இந்தியாவில் பொதுக் கொடுந்தமிழ் 'படித்தபிராமணரல்லாதவர்'களின் பேச்சுவழக்கை அடிப்படையாகக் கொண்டுள்ளது. எனினும் குறிப்பிடத் தக்க அளவுக்கு தஞ்சாவூர் மற்றும் மதுரைப் பேச்சு வழக்குகளில் செல்வாக்கு உள்ளது. இலங்கையில் அதிக மக்கள் தொகையைக்கொண்ட யாழ்ப்பாணப் பேச்சு வழக்கையே பெரும்பாலான வெளியார் இலங்கைத் தமிழ்ப் பேச்சு வழக்காக இனங்கண்டு கொள்கின்றனர். ஆனால் மட்டக்களப்பு பேச்சு வழக்கு யாழ்ப்பாண பேச்சு வழக்கிலும் பெரிதும் வேறுபட்டது.

தமிழ் எழுத்துமுறை ஒலிப்பியல் அடிப்படையிலானது குறுக்கம் அளபெடை மற்றும் புணர்ச்சி நெறிகளுக்கு உட்பட்டே எழுத்துக்கள் ஒலிக்கப்படுகின்றன. தற்போதைய அரிச்சுவடி அசோக மன்னர் காலத்துப் பிராமி அரிச்சுவடியிலிருந்து வளர்ந்தது. பிராமியின் தென்கிளையிலிருந்து கிரந்த அரிச்சுவடி உருவானது. அக்காலத்தில் தமிழும் சமஸ்கிருதமும் கிரந்த எழுத்துக்களைக் கொண்டே எழுதப்பெற்றன.எழுத்து முறை வளர்ந்து கொண்டிருக்கையில் சமஸ்கிருதத்திலிருந்து பல சொற்கள் தமிழில் பயன்படுத்தப்படலாயின. அவற்றை எழுதும் பொருட்டுச் சில கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்தினர். இவ்வெழுத்துக்களைப் பயன்படுத்துவதற்கு மாறாகத் தொல்காப்பியம் கூறியபடி அச்சொற்களைத் தமிழ்படுத்த வேண்டும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.ஆறாம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் "வெட்டெழுத்து" முறை உருவானது. இது ஓலைச்சுவடிகளிலும் கல்லிலும் செதுக்குவதற்கேற்ப இருந்தது. இவ்வெழுத்துக்களை "வட்டெழுத்து" என்றும் வழங்குவர்.ஆறாம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் "வெட்டெழுத்து" முறை உருவானது. இது ஓலைச்சுவடிகளிலும் கல்லிலும் செதுக்குவதற்கேற்ப இருந்தது. இவ்வெழுத்துக்களை "வட்டெழுத்து" என்றும் வழங்குவர். எழுத்துச்சீர்திருத்தம்வீரமாமுனிவரின் அறிவுரைப்படி இரட்டைக் கொம்பு போன்ற மாற்றங்கள் தமிழ் எழுத்துக்களில் செய்யப்பட்டன. 1975-ல் எம். ஜி. இராமச்சந்திரன் ஆட்சியில் அச்சில் ஏற்றுவதை எளிமைப்படுத்தும் வகையில் பெரியாரால் பரிந்துரைக்கப்பட்ட சில மாற்றங்கள் ஏற்கப்பட்டன. எதிர்காலத்தில் உகரம்இ ஊகாரம் ஏறிய மெய்யெழுத்துக்களில் மாற்றங்கள் வரக்கூடும். உதாரணம்: ஜ- ஜு – ஜூஇ ஸ-ஸு-ஸூ போன்று க – கு- க ூ இ ச-சு -சூ என்று உகரத்திற்கும் ஊகாரத்திற்கும் பொதுவான அழனகைநைச வரக்கூடும் என்று எதிர் பார்க்கலாம்.

  • எண் ஒலிப்பு ஒன்றிலிருந்து பிரமகற்பம் எனும் முக்கோடி வரை இருக்கும் அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது.
எண் ஒலிப்புச் சொல்
1 ஒன்று (ஏகம்)
10 பத்து (தசம்)
100 நூறு (சதம்)1000 ஆயிரம்(சகசிரம்)10,000 பதினாயிரம்(ஆயுதம்)
1,00,000 நூறாயிரம்(லட்சம் - நியுதம்)
10,00,000 பத்து நூறாயிரம்(பிரயுதம்)
1,00,00,000 கோடி
10,00,00,000 அற்புதம்
1,00,00,00,000 நிகற்புதம்
10,00,00,00,000 கும்பம்
1,00,00,00,00,000 கணம்10,00,00,00,00,000 கற்பம்1,00,00,00,00,00,000 நிகற்பம்10,00,00,00,00,00,000 பதுமம்
1,00,00,00,00,00,00,000 சங்கம்10,00,00,00,00,00,00,000 வெள்ளம்(சமுத்திரம்)
1,00,00,00,00,00,00,00,000 அந்நியம்
10,00,00,00,00,00,00,00,000 மத்தியம்(அர்த்தம்)
1,00,00,00,00,00,00,00,00,000 பரார்த்தம்
10,00,00,00,00,00,00,00,00,000 பூரியம்1,00,00,00,00,00,00,00,00,00,000 பிரமகற்பம் (கோடிக்கோடி-முக்கோடி)

சங்க இலக்கியத்தில் சித்தர்கள்.

Picture
                          சித்தர் என்னும் சொல்லுக்கு உரிய விளக்கம், சித்தர்கள் எனப்படுவோர் யாவர்? .சித்தர்கள் என்றால் வீடுபேறு அடைந்தவர்கள் எனப்பொருள் கொள்வர் சிலர், ஒரு செயல் நிறைவேறிவிட்டதா என வினவுவார் காய சித்தி ஆயிற்றா என வினவுவது வழக்கம், சாயுச்சிய நிலை அடையப்பெற்றவரே சித்தர் என்பர்.  அட்டமா சித்தி முதலிய யோகசித்தி பெற்றவர்களையும் சித்தர்கள் என்று அழைப்பர்.சிலர் சித்துக்கும் சித்தத்ததுக்கும் தொடர்பு காட்டிச் சித்தத் தெளிவுடையாரே சித்தர் என விளக்கம் அளிப்பர்.மரணத்தை வெல்வது சித்தர் பண்பாடு.  ஒரு பொருளை இன்னொரு பொருளாக மாற்றுவதும், உறுமாறுவதும் சித்தர் சாதனையில் முக்கியமானவையாகும்.சித்தர்கள் தங்கள் சாதனையை காய சாதனை (தேகத்தை மேம்படுத்துவது) என்றனர்.அதன் முலம் காயசித்தி (தேகத்தை பூரணத்துவம் அடையச் செய்வது) பெறுவது அவர்கள் நோக்கம்.  

                    ஓம் என்ற பிரணவ ஒலி உலகத்தின் முல ஒலி ஆகும்.  அ. உ. ம். முன்றும் சேர்ந்து ஓம் என்பர். 
அ. சூரியன், உ. சந்திரன், ம். அக்கினி ஒளிமயமான அ நாதம், உ விந்து, ம் கலை, நாத விந்து கலைகளின் தொகுப்பே ஓம் என்றும் கூறுவர். 
அ. கிரியா சக்தி (பிராமி),
உ. இச்சா சக்தி (வைணவி),
ம்.ஞானசக்தி (ரௌத்ரி)
என்பது சித்தர் கருத்து.சீக்கிரமே தருமம் செய்  கொஞ்சம் திருப்பணிகளும் செய்.என்றார் சித்தர்.அறப்பணியும், இறைபணியும் இறந்தும் இறவாப் பெரு வாழ்வளிக்கும்.உன்னிடம் இல்லை என்று கேட்டு நிற்கும் எளியோரிடம் இருந்தும் இல்லை என்று சொல்லாதே.  நாளை வா என்று தள்ளாதே.  இருந்தால் அப்போதே கொடுத்துதவு.நலிவுற்றவரை நசித்து வாழ என்னாதே.  வஞ்சனை செய்ய முயலாதே.  உன்னைத்தஞ்சமென்று வந்தடைந்தவரையே கெடுப்பதற்கு துணியாதே.  உன் கண்ணில் பட்டதையும், காதில் விழுந்ததையும் உண்மை என்று கொள்ளாதே.கற்புறைப் பெண்டிர் மீது காமசிந்தை வையாதே.  கட்டியவளே என்றாலும் உற்றது சொல்லாதே.  பிள்ளைகளுக்கு அளவுக்கு மீறி இடம் கொடுத்து அவர்களுடைய அலட்சியத்துக்கு உள்ளாகாதே.  கொலை, களவு, பொய் விலக்கு, தன்னை வியந்து கொள்கிறவனும் வலுச் சண்டைக்கு நிற்கிறவனும் காணாமல் போவான்.சிந்தித்தால் தெளிவு வரும்.  சித்தர்களது பாடல்களைப் படித்தால் சிந்தனையும், தெளிவும் சேர்ந்து வரும்.மனிதர்களுக்கு ஐம்புலன்களால் அறியப்படும் அறிவு ஐந்தும், ஆத்மா ஒன்றுமாக ஆறறிவு.  மிருகங்களுக்கு நான்கு அறிவுகளும், சீவனுமாக ஐந்து.பறவைகளுக்கு அறிவு முன்றே.  மார்பினால் நகரும் பிராணிகளுக்கு இரண்டு அறிவு.  தாவரங்களுக்கு அறிவு ஒன்று என்று ஆராய்ந்து பின் மனித உடலின் சிறப்பை நன்கு உணர்ந்து அதை உலகுக்கு எடுத்துக் காட்டியவர்கள் சித்தர்களே!.எப்பொருள் வடிவும் ஓம் ஆகும்.
  'சிந்தையிலே களங்க மற்றார் சித்தன் ஆவான்"         (அகத்தியர் நூறு 50)  'சிந்தை தெளிந் திருப்பவன் ஆர் அவனே சித்தன்"    (வான்மீகர் சூத்திர ஞானம் 2)             செகமெலாம் சிவமென்றே அறிந்தோன் சித்தன் திறந்துமனத்தெளிவாகிச் சேர்ந்தோன் சித்தன்"          (வான்மீகர் சூத்திர ஞானம் 3)

                   சித்தர்களின் இயல்பு
சித்தர்கள் எல்லாச் சமயங்களுக்கும் பொதுவான அடிப்படை நெறிகளையே எடுத்துக்கூறியுள்ளனர். சாத்திரக் குப்பையிலும் கோத்திரச் சண்டையிலம் ஈடுபடாமல், மக்களை நன்னெறிப்படுத்த முயன்ற வடநாட்டு நவநாத சித்தர்கள் போலத் தமிழகச் சித்தர்களும் சீர்திருத்தத் கருத்தக்களை வலியுறுத்தி மக்களுக்கு நல்வழி காட்டியுள்ளனர். இராமலிங்க அடிகாளர் தெவித்துள்ள மரணமிலாப் பெருவாழ்வு சித்தர்கள் கூறிய நெறியேயாகும். 'கூற்றம் குதித்தலும் கைகூடும்" (269) என்னும் வள்ளுவர் கருத்தினை வாழ்க்கையில் நிலைநிறுத்திக் காட்டியவர்கள் இச்சித்தர்கள், இவர்கள் ஊழையும் வெல்லலாம் என்பதற்கான வழி முறைகளைத் தம் பாடல்களின் இயம்பியுள்ளனர்.வைத்தியம், இரசவாதம், ஞானம் மந்திரம் முதலியவை பற்றி எல்லாம் நூல்கள் எழுதியுள்ளனர்.  மேலும் வானநூல், கணிதம் முதலியவை பற்றிய புலமையையும் இவர்தம் நூல்களில் காணமுடிகிறது. சித்தர் பாடல்கள் பொதுமக்களும் பாடும் வண்ணம் எளிமையான நடையில் அமைந்தவை. எனினும்அய கருத்துக்கள் அடங்கியவை . கல்லாதவர், கற்றவர் இரு சாராருமே கேட்டு மகிழும் வகையில் அப்பாடல்கள் விளங்குகின்றன.  கடவுளரும் சித்தராகக் கருதப்பட்டனர். அவர்தம் செயல்களும் சித்துக்களாக மதிக்கப்பட்டன. பழினியிலுள்ள முருகன் கோயில் சித்தன் வாழ்வு என அழைக்கப்பெற்றது. எல்லா ஆற்றலும் பெற்றிருப்பவன் ஆதலின் முருகனுக்குச் சித்தன் என்னும் பெயரும் உண்டு. சிவபெருமான் செய்த அருஞ்செயல்களைத் திருவிளையாடற் புராணம் சித்துக்களாகக் குறிப்பிடும். மக்களால் சித்தர்களும் கடவுளராகப் போற்றப்பட்டனர். மூச்சினை யடக்கி யோக ஆற்றலினால் உடலில் உள்ள மூலதாரம், கொப்பூழ், இதயம், இரைப்பையின் நடு, கழுத்து, தலைமுடி என்ற இவ் ஆறு இடங்களிலும் மனத்தை முறையாக நாட்டிக் குண்டலியை எழுப்பிப் பலபல அனுபவமும் வெற்றியும் கண்டு. அப்பாலிலுள்ள  எல்லாம் ஆன பொருளில் நிலைத்துச் சித்தி பெறுபவரே சித்தர் என்ற வழக்கம் பரவுயுள்ளது எனப் பன்மொழிப்புலவர் தெ.பொ. மீனாட்சி சுத்தரனார் கலைக்களஞ்சியத்தில் குறிப்பிட்டுள்ளனர்.ஆகம மாகிய இந்த மனித உடம்பிலே தெய்வப் பக்தி கொண்டு இதனுள் அருட்சக்தியை வளர்த்து ஆன்ம பணாமத்தில் மக்களிடையே வானவர்களாகவும், மனித தெய்வங்களாகவும் உலவி அருவாழ்வு வாழ்ந்து அருளை வழங்கி வருகின்ற பெயோர்களே மகான்களே சித்தர்கள், என்று மீ.ப. சோமசுந்தரனார் தம் சித்தர் இலக்கியம் என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார் (பகுதி 1 பக்கம் 14) இறையடியார்களுள் பக்தர், பகவர், முனிவர், சித்தர் எனப் பல வகையினர் இருந்தனர் என்பர், பெரியாழ்வார்  தம் பாசுரத்தில் 
              
மாங்காய்ப் பால்உண்டு மலைமேல் இருப்போருக்குத்
              
              
தேங்காய்ப்ப தால் ஏதுக்கடி-குதம்பாய்

               தேங்காய்ப்பால் ஏதுக்கடி.                 ஞானப் பாலுண்டு தலை உச்சியலே சிந்தனை கூடி நிலைத்து நிற்கும் ஞானிகளுக்கு உலக இச்சையாகிய பிற இன்பங்கள் வேண்டியதில்லை எனக் குதம்பைச் சித்தன் விளக்கம் அளிக்கிறார்.மாங்காய் என்பது பிரமம், பால் என்பது அதன் அனுபவம், அதாவத ஞானப்பால், தேங்காய்ப்பால் உலக இச்சை, மலை என்பது மேலான சமாதி, இவ்வாறு உள்ளுறைப் பொருள் அமைத்துப் பாடும் பாடல்களைப் பிறிது மொழிதலணி என்று கூறுவர், சித்தர்கள் தம் கொள்கைகளை மறைவாக வைத்துக் கொள்ள குழுஉக் குறியினைப் படைத்துக் கொண்டனர்.  திருமந்திரத்திலுள்ள சூனிய சம்பாடணை (உரையாடல்) இதற்குச் சயான சான்றாகும். அவர்களின் மருத்துவ நூல்களும் இவ்வாறு குழுஉக் குறிகளைப் பயன்படுத்தியுள்ளன. சித்தர் இலக்கியம் சீர்திருத்தம் பேசினாலும் நாத்திகத்தன்மை யுடையதன்று சித்தர்கள் இறைப்பற்று மிகவும் உடையவர்கள். தஹ்நெறி, அட்டாங்கயோகம் முதலியவை கடினமாகத் தோன்றினாலும் அவர்கள் எடுத்துரைக்கும் நெறி சிறந்ததாகும். சயை, கியை, யோகம், ஞானம் என்னும் நான்கு நெறியினையும் சித்தர்கள் பின்பற்றியுள்ளனர். சமயப்பொது நோக்கு, சாதி வேறுபாடின்மை. மூடப் பழக்க வழக்கங்களைச் சாடுதல் முதலானவை அவர்தம் பாடல்களில் காணப்பெறும் சீர்திருத்தங்களாகும். மனிதனுக்கு அவனது உடம்பைக் கொண்டு செய்ய வேண்டிய ஞானச் செயலைக் கற்பிக்கும் அனுபவப் பேரறிவுப் பெருநூல் சித்தர் இலக்கியம் எனச் சிறப்பித்துப் பாராட்டுவர் மீ.ப. சோமு. மேலும் அவ்விலக்கியங்கள் அறக்கருத்துக்களை வலியுறுத்தும் என்றும் மனமாசின்றிக் காக்கவும் தீமைகளை நீக்கி நன்மைகைளைச் செய்யவும் பல அறச் செய்திகளைக் கூறுகின்றன என்றும்  மனிதனை மனிதனாக்குவதற்கு வேண்டிய மனப் பயிற்சி தந்து அவனை மனிதனாக்கிப் பின் வானவராக உயர்த்தும்உயய நோக்கங்கள் கொண்டவை என்றும் விளக்கியுரைத்துள்ளார்.சித்தர்கள் வெளியில் சென்று கோயில் வழிபாடு செய்ய விரும்புவதில்லை. புறச் சடங்குகளையும் அவர்கள் ஏற்பதில்லை. மனக் கோயில் வழிபாடே அவர்கட்கு முதன்மையானதாகும். யோகமுறை மூச்சடக்கிப் பயிற்சி செய்தல் ஆகியவற்றையே அவர்தம் நூல்கள் வித்துரைக்கின்றன. மன்பதைக்கு வேண்டிய சீர்திருத்தக் கருத்துக்களும் அவர்களுடைய பாடல்களில் மிகுதியாக உள்ளன.

                    
 மணிமேகலைத் தொடர்களும் சில சித்துக்களைத் தெவிக்கின்றன. சித்தர்களின் வகையினர், தாயுமானவர், பாம்பாட்டி சித்தர், இராமலிங்க அடிகள் முதலானோர் பாடல்களில் காணப்பெறும் சித்து விளையாடல்கள் பற்றிய செய்திகள், சித்தர் பாடல்கள்வழி அறியப்பெறும் சீர்திருத்தங்கள், சித்தர் பாடல்களில் அமைந்துள்ள யாப்பு வகைகள் முதலானவை பற்றிய செய்திகள் இப்பாடத்தில் விளக்கப்படுகின்றன.  சித்தர் என்னும் சொல் தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள் ஆகியவற்றில் பேசப் பெறாவிடினும், அவரைப்பற்றிய குறிப்புக்கள் இலை மறை காய்போல அவற்றில் காணப்படுகின்றன.தாயுமானவர், பாம்பாட்டிச் சித்தர், இராமலிங்க அடிகள் முதலானோர் தத்தம் பாடல்களில் சித்து விளையாடல்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர்.தாயுமானவர் மதயானையை அடக்குதல், கரடி புலிகளின் வாயைக் கட்டுதல், சிங்கத்தை முதுகின் மேல் ஏற்றுதல், பாம்பைப் பிடித்தாட்டுதல், ஐந்து உலோகப் பொருள்களையும் விலையுயர்ந்த பொருளாக மாற்றுதல் பிறர் கண்ணிற் படாமல் உலாவுதல், தேவரை அடிமை கொள்ளல், எப்பொழுதும் இளமையோடிருத்தல், பிறர் உடலிற் புகுதல், நீர்மேல் நடத்தல், நெருப்பில் அமர்தல், முதலிய சித்துக்களைத் தம் பாடலில் (தேசோ மயானந்தம் 8) குறிப்பிடுகின்றனர்.

தமிழ்ப்பெயர்கள்: மாதங்களுக்கும்,நட்சத்திரங்களுக்கும்.

Picture
தமிழ்ப்பெயர்கள்: 12 மாதங்களுக்கும்,27 நட்சத்திரங்களுக்கும்
1.சித்திரை =மேழம்
2.வைகாசி =விடை
3.ஆனி =ஆடவை
4.ஆடி =கடகம்
5.ஆவணி =மடங்கல்
6.புரட்டாசி =கன்னி
7.ஐப்பசி =துலை
8.கார்த்திகை =நளி
9.மார்கழி =சிலை
10.தை =சுறவம்
11.மாசி =கும்பம்
12.பங்குனி =மீனம்
1.அசுபதி - புரவி
2.பரணி - அடுப்பு
3.கார்த்திகை = ஆரல்
4.ரோகிணி = சகடு
5.மிருகசீரிடம்=மான்றலை
6.திருவாதிரை=மூதிரை
7.புனர்பூசம் =கழை
8.பூசம் =கொடிறு
9.ஆயில்யம் =அரவு
10.மகம் =கொடுநுகம்
11.பூரம் =கணை
12.உத்திரம் =உத்தரம்
13.அஸ்தம் =கை
14.சித்திரை =அனுபை
15.சுவாதி =விளக்கு
16.விசாகம் =முறம்
17.அனுஷம்=பனை
18.கேட்டை=துலங்கொலி
19.மூலம் =குருகு
20.பூராடம் =முற்குலம்
21.உத்திராடம்=கடைக்குலம்
22.திருவோணம்=முக்கோல்
23.அவிட்டம் =காக்கை
24.சதயம் =செக்கு
25.பூரட்டாதி =நாழி
26.உத்திரட்டாதி=முரசு
27.ரேவதி =தோணி
இவையனைத்தும் சித்தர்களால் உருவாக்கப்பட்ட பரிபாஷைச் சொற்களாகும்.