ஆவணி மாதத்தில் பிறந்தவர்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 5:03 PM | Best Blogger Tips
தமிழ் மாதப் பலன்கள்
ஆவணி மாதத்தில் பிறந்தவர்கள்



ஆதித்தவனின் ஆட்சிமனையாகிய சிம்மராசி யில் சூரியன் சஞ்சாரம் செய்யும்போது ஆவணி மாதமென்று அழைக்கின்றோம். நவக்கிரகங்களுள் தலைவராய் விளங்கும் சூரிய பகவான், எல்லா ஜீவராசிகட்கும் ஜீவாதார சக்தியை அளிக்கும் மூலக்கடவுள் என்றால் மிகையாகாது. உயிரினங் கள் தோன்றி மறையும் வரை சகல உறுப்புகளும் இமை கொட்டாது இயங்கும். ஜீவசக்தியை வழங் கும் இதய பாகத்தை ஆட்சிபுரிவது சூரியன். வான மண்டலத்தில் இதய பாகமாகிய சிம்மராசியை சர்வாதிகாரத்துடன் ஆட்சி புரியும் சூரிய பகவான், இங்கு வெகு கம்பீரமாய் பவனி வரும் சிறந்த மாதம் ஆவணி மாதமாகும்.

சூரியனைப் போலவே ஆவணி மாதத்தில் தோன்றியவர்கள் தம்முடைய இயக்கத்திற்குத் தலைவராகவே விளங்குவர். ஆத்மபலம் நிறைந் தவர். ஆக்கும் சக்தி வாய்ந்தவர். சிம்மமானது ரிஷ பத்தைப் போலவே ஸ்திர ராசிகளில் ஒன்றானது. ஆகையால், வைகாசி மாதத்தில் பிறந்தவர்களுடை ய கொள்கைகளும் இவருடைய கொள்கைகளும் ஏறத்தாழ ஒரே நிலையை உடையனவாகும். இவர் எதையும் பற்றுவதில் நிதானம், பற்றியதை விடுவ திலு ம், விட்டுக் கொடுப்பதிலும் நிதானந்தான். அனல், மணல், காற்று, புனல், ஆகாயம் என்ற பஞ்சபூதத் தத்துவங்களில் அகண்ட வான மண்டலத்தை ஆகா யமென்ற ஆதாரத்துவமாகக் கொண்ட பன்னிரு ராசிகளில் மேஷம் அனலாகவும், ரிஷபம் மணலா கவும், மிதுனம் காற்றாகவும், கடகம் புனலாகவும் விளங்குகின்றன. மீண்டும் சிம்மமானது அனலாக வும், கன்னி மணலாகவும், துலாம் காற்றாகவும், விருச்சிகம் புனலாகவும் மற்ற நான்கு ராசிகளும் இதே போன்று அனல், மணல், காற்று, புனல் என்ற தத்துவங்களை வியாபகமாகக் கொண்டுள்ளன வென்பது சோதிட தத்துவம். ஆகாயம் என்பது காயமானது. எங்கும் வியாபகமானது. மற்ற நான்கு காயங்களையும் தன்னுள் அடக்கியது. காயமான வற்றையும் அடக்கியாள்வது ஆகாயம். ஆகாய மில்லையேல் காற்று இல்லை, அனலில்லை, மண லில்லை, புனலுக்கும் இடமில்லை, அனல் தத்துவத் தைக் குறிப்பிடும் மேஷ ராசிக்குப்பின் அல்லது சித்திரை மாதத்திற்கடுத்தபடி சிம்மராசியும் - ஆவ ணி மாதமுமாகும். ஆகையால், வைகாசியில் தோன்றியவர்கள் ஸ்திரமாதத்தில் தோன்றியவர்கள் என்றபோதிலும், ஸ்திர மாதங்களில் மற்றொன்றாகி ய ஆவணி மாதத்தில் பிறந்தவர்கள் ஒரு சில அம் சங்களில் மாறுபட்டவர்களென்றே கூற வேண்டும்.

தோற்றம்

நடுத்தர உயரமுடையவர். ஒரு சிலர் அதிக உய ரமாகவும் காண்பர். பருத்த திரேகமுடையர். தலை உருண்டையாகவும், பெருத்தும் காணப்படும். தாடைகள் அகண்டு விரிந்திருக்கும். உரோ மம் மெல்லியதாகவும், சுருட்டை உடைய தாகவும் தென்படும். கண்கள் அகன்று இருந்த போதிலும் மேற் புருவங்கள் குவிந் திருப்பதால் கண்கள் திறந்திருந்தும். சிறிது மூடியது போல் தோற்றம் அளிக் கும். பேசும் போது கண்ணை மூடிக் கொண்டு பேசுவர். கை, கால்கள் திரண்டு சக் தி வாய்ந்தனவாக விளங்கும்.
திரண்ட மார் பையும், உருண் டை புஜங்களை யும், கம்பீரமான சரீரத் தோற்றத் தையும் உடைய வர். கண்கள் தேன் நிறமுடையவை. எனினும் கூர்மை யானவை. பார் வையில் அபயம், சாந்தம், அமைதி இம்மூன்று அம்சங்களும் பிரதிபலிக்கும்.

குணபாவங்கள்

ஆடு, மாடுகள் இரை தேடப் பசுமையான இடங்களைத் தேடிச் செல்ல வேண்டும். அது போன்று சித்திரை, வைகாசியில் தோன்றியவர்கள் ஜீவனோபாயத்திற்குப் பல்வேறு இடங்களை ஏகித் தமக்கு வேண்டிய வழிகளைத் தாமாகவே ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். ஆனால், ஆவணி யில் தோன்றியவர்களுடைய ராசியே வேறு. காட் டு ராஜாவாகிய சிங்கமானது தன் இருப்பிடத்திலி ருந்துகொண்டே பசி நேரத்தில் தன் வயப்படும் மிருக ஜந்துக்களை வேட்டையாடி, தன் பசியாற் றிக்கொள்வது போல் ஆவணி மாதத்தில் பிறந்த வர்களும் தம்முடைய காரியங்களைத் தம்முடைய இருப்பிடத்தில் இருந்து கொண்டே சாதித்துக் கொள்வர். பலர் இவரைத் தேடித் தம்முடைய காரியங்களைச் சாதித்துக் கொள்வதும் இதனால் இவருடைய தேவையும் பூர்த்தியாகும் என்பதைக் கண்கூடாகக் காணலாம். எதையும் இவர் ஒரு பொருட்டாகக் கருதமாட் டார். இயற்கை வழியே இறைவன் வழியென்று இவர் கருதிடுவார்.

அவசரக்காரர்களல்லர். எதையும் ஆழ்ந்து சிந் தித்துச் சீர்தூக்கிப் பார்த்தபின் செயலில் ஈடுபடு வர். மற்றவர்கள் என்ன நினைத்துக் கொள்வார் களோ என்ற அச்சம் இவருக்கு என்றும் எத் தருணத்திலும் ஏற்படுவது அரிதாம். மற்றவர் களுக்குத் தாம் வழிகாட்டிகளாக இருக்க வேண்டு மென்ற உயர்ந்த நோக்கமுடையவர். எதை விரும் பினும், எதைச் செய்யினும், எதைப் பற்றித் தம் கருத்தை வெளிப்படுத்திடினும் அது உயர்ந்து நிக ரற்றதாக இருக்கவேண்டுமென்பதே இவருடைய லட்சியமாம்! பிடிவாத குணமுடையவர் என்றபோ திலும் ஆடி மாதத்தில் தோன்றியவர்களைப்போல் "தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்" என்று சாதிக்க மாட்டார்கள். ஆனால் எதிரியினிடத்தில் உண்மையிருக்குமாயின் கண்ணியமாக ஏற்றுக் கொள்வர். பிறரிடத்தில் உள்ள உயரிய குணங்க ளைப் போற்றிப் புகழ்ந்திடுவர். தாமும் அவற் றைப் பின்பற்றுவதற்குத் தயாராகுவர்.

குடும்பத்தில் சிறியவரெனினும் இவருடைய கருத்துக்கு மதிப்புண்டு. இவரைக் கலந்தாலோசித் துப் பெரியவர்கள் செயலில் ஈடுபடுவர். சரித்திர சான்றுகளை உதாரணமாக எந்த விவகாரத்திற்கும் பயன்படுத்திக் கொள்வர். நன்றி மறவார். செய்த நன்றிக்குப் பிரதி உபகாரம் செய்வதே இவருக்கு முதற்கடமையாம்! இரக்க குணமுடையவர். தம் மால் உதவி செய்ய முடியாவிட்டாலும் உதவி பெறக் கூடிய உயர்ந்த இடத்தை அடைய வழி காட்டுவார். பழைய சம்பிரதாயங்களைக் கடைப் பிடிப்பதிலும் இவர் நூதன முறையைக் கையாள் வார். கடன் வாங்குவது இவருடைய கொள்கை க்கு விரோதமானது. ஆனால், இவர் உதவியை நாடுபவர்களுக்குக் கடன் இல்லை யென்று சொல் லுவதற்குப் பதில், கையில் கிடைத்ததை அந்தக் கணமே கொடுத்து இதற்கு மேல் என்னிடம் எதிர் பார்ப்பதில் பயனில்லையென்று முற்றுப்புள்ளி வைத்திடுவர்.
யாவரையும் தன்வசமாக்கிக்கொள்ளும் அற் புத சக்தியுடையவர். அன்பும், தயவும் தர்ம சிந்த னையுமுடையவர். தளரா ஊக்கமுடையவர். தம் காரியத்திலேயே கண்ணும் கருத்துமாய், உறுதி யான நெறியுடன் ஈடுபடுவர். தோல்வியைக் கண்டு இவர் மனத்தளர்ச்சியடையார். முன்னிருந் ததை விட அதிக உற்சாகத்துடன் விளங்குவார். எப் பொருள் எத்தன்மையுடையதெனினும், யார் வாயிலாகக் கேட்பினும் உண்மையை அறிய முயன்று, அறிந்த பின்பு அமைதி கொள்வார். ஆனால், இளகிய உள்ளம் படைத்தவராகையால், கபட நெஞ்சமுடையவர்கள், இவரை எளிதில் ஏமாற்றி, இவருடைய பணத்தையும், பொரு ளையும் தட்டி பறித்திடுவர்.

மேஷம், சிம்மம், தனுசு இம்மூன்று ராசிகளை யும், ராசி அல்லது லக்கினமாக உடையவர்கள், எவ்வாறு சனியின் நவாம்ச ஆதிக்கத்திலிருந்து தப் பியவர்களோ, அதேபோன்று இந்த ஆவணி மாதத்தில் பிறந்தவர்களும் சனியின் நவாம்ச ஆதிக்கத்திற்குள் சூரியனைப் பெறாதவர்களாகை யால் எந்தக் காரியத்திற்கும் பிறர் உதவியை நாடா தவர்கள் என்றும், சுயநம்பிக்கையுடையவர்கள் என்றும், தன் கையே தனக்குதவியென்ற திட சித்தம் உடையவர்கள் என்றும் திட்டவட்டமாகக் கூற இடமேற்படுகிறது. வாழ்க்கையும் அவ்வாறே அமையும். வசதியும், வாய்ப்பும் தமக்கேற்றவாறு அமைந்து, படிப்படியாக முன்னேற்றமளித்து உயர்ந்த பீடத்தை தம் சுயமுயற்சியால் அடையச் செய்திடும்.

ஆவணி மாதத்தில் பிறந்தவர்கள் திறந்த உள் ளம் படைத்தவர். நண்பர்களிடத்திலும், அதிகப் பற்றுதல் உடையவர். பிறருடைய கஷ்டத்தையும் கவலையையும் தம்முடையதாகப் பாவித்திடுவர்.

நோயும்-தீரும் வகையும்

ஆவணி மாதத்தில் பிறந்தவர்கள் ஓயாது உழைப்பர். சக்திக்கு மீறி காரியங்களையும், அலுப்பு சலிப்பின்றிச் செய்திடுவர். செய்யும் காரி யங்களில் எதிர்ப்புகளும், முட்டுக்கட்டைகளும் தோன்றுவது இவர் வாழ்க்கையில் சர்வசாதாரண மாயினும் இவர் மிகவும் அதிர்ச்சி அடைந்திடுவர். இதன் விளைவாக இருதயக் கோளாறுகள், மார்பு வலி இதனால் தலைவலியும் ஏற்படும். அடுத்த படியாக வயிற்றுக் கோளாறு, நரம்புத்தளர்ச்சி, வாதம் போன்ற அசதிகளும் அவரை அடிக்கடி வாட்டிடும். இரத்த ஓட்டத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும். இரத்தக்குழாய்கள், கொழுப்பின் அழுத் தத்தால் சிறுத்து விடுவதால், இருதயத்திலிருந்து அழுத்தப்படும் இரத்த வெள்ளத்தைத் தாங்கிச் செல்ல இயலாததால் இருதயத்திற்குத் தாக்குதல் ஏற்படும். இதனால் இருதயத்தின் ஒரு பகுதி வீங்கி விடும். இரத்தக் குழாய்த் தடுப்பினால் ஏற்படும் இருதய நோயை இவரால் சில தருணங்களில் தாங்க முடியாமல் தவிப்பார். இவர் அதிக பாரத் தைத் தூக்கவோ, படிக்கட்டுகளில் ஏறவோ, கஷ்ட மான வேலைகளைச் செய்யவோ கூடாது.
அதிக மூச்சு வாங்கினால், இருதயம் தாங்கா மல் வெடித்து விடவும் நேரிடும். இவர் வேலை களைக் குறைத்துக்கொள்வதாலும், தண்ணீர் அதிக மாக அருந்துவதாலும், தக்காளிப்பழத்தை அதிக மாகச் சேர்த்துக் கொள்வதாலும் இருதயக் கோளாறு ஏற்படாவண்ணம் தகுந்த முறையில் பாதுகாத்துத்திட ஆரோக்கியத்துடன் நூறாண்டுக்கு மேல் சுகமாக வாழ்ந்திடலாம்.

அதிக சக்தி வாய்ந்த மருந்து வகைகளை உட்கொள்ளவோ, ஊசியின் மூலம் மருந்து ஏற்றிக் கொள்ளவோ கூடாது. பத்தியமான ஆகாரத்தி னாலும், உழைப்புக் குறைவினாலும், ஓய்வு மிகுதி யினாலும் உற்ற பிணியை இயற்கையாகவே போக்கிக் கொள்ளலாம்.

குறையும்-நிறையும்

ஸ்திர புத்தியுடையவர், பிடித்ததை விடார். எதையும் கற்கும் வல்லமையுடையவர். அரிய பெரிய தத்துவங்களை எளிதில் கிரகித்துக் கொள் ளும் மெய்ஞ்ஞான உணர்வுடையவர். நிலப் பரப்பு அதிகமிருப்பினும் ஒரு சிலவற்றைத் தம் முடைய ஆதிக்கத்தில் வைத்துக்கொள்வர். துரித காலத்தில் அதிக லாபத்தைச் சம்பாதிக்க வேண்டு மென்ற பேராவலுடையவர். வாழ்க்கையில் வாய்ப்புகளை அவ்வாறே ஏற்படுத்திக் கொள்வர். எதிரிகளின் தொல்லை அதிகமிருப்பினும் பொருட்படுத்தார். எதிர்த்தவர்களைத் தகர்த்திடும் சாமர்த்தியமுடையவர். தைரியசாலி. புதிய கருத் துகளுக்கும், ஆராய்ச்சிகளுக்கும் ஊக்கமளிப்பர். உறவினர்களிடத்தில் வாஞ்சையுடையவர். இருப் பது சிறிதெனினும் சுயமாகத் தேடுவது அதைவிட பன்மடங்காகும். துண்டித்த விவகாரங்களை மீண் டும் சரிப்படுத்துபவர். நற்குணமுடையவரெனி னும் சீற்றமுடையவர். ஒழுக்கமற்றவர்களைக் கண்டித்துப் பேசுவர். குற்றங்குறைகளை வன்மை யாகக் கண்டிப்பர். யாரையும் எளிதில் நம்பார்.

நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களைக் கைவிடார். இவரும் சுயநலவாதி என்றாலும் தம்மையடுத்தவர்களுக்கு நல்ல பாதுகாப்பளித்தி டுவர். உதாரகுணமுடையவர். தர்மசிந்தையுடைய வர். ஆனால் அதே தருணத்தில் சிறிய மனப்பான் மையுடைவயர்களிடத்தில் இவர் மனம் இரங்காது. தீர்க்கதரிசி. ஆத்திரத்தில் எதை வேண்டுமானா லும் செய்யத் துணிந்தவர். தொழில் ஸ்தாபனங் களுக்கு இவர்களை நிர்வாகிகளாகவும் அவைத் தலைவராகவும் போஷகராகவும், நடுவராகவும் நியமித்தால், நேர்மையாகவும், நெறியாகவும், நீதி வழுவாமலும் செயலாற்றிடுவர்.

வாழ்க்கைத் துணை

மார்கழி, சித்திரை மாதத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத் துணைவியாகவோ, கூட்டாளியா கவோ அமைவது சிறந்ததாகும். தை, மாசி மாதங் களில் பிறந்தவர்களும், ஆடி மாதத்தில் தோன்றி யவர்களும் இவர்களுக்கு கஷ்டத்தையும், வம்பு வழக்குகளையும் உண்டாக்கிடுவர்.

தொழில்

முன்னணியில் நிற்கக்கூடிய பிரதான ஸ்தானங்களைத் திறமையுடன் ஏற்று வகிப்பர். நல்ல சங்கீத வித்துவான்களாகவும், கவிஞரா கவும், ஓவியராகவும், பொன்மகுட ஆபரணங் களைத் தயாரிப்பவர்களாகவும் விளங்குவர். உள்ளத்தை உருக்கும்படியான கருத்துக்களைச் சித்தரிப்பதிலும், இசையமைப்பதிலும் இவருக்கு நிகர் இவரே.
இவர் அடிமைத் தொழிலைத் துச்சமாக மதிப் பவர். பிறருக்கு அஞ்சி, நடுங்கி ஒடுங்கி செயல் புரிவது இவருக்குப் பிடிக்காத விஷயங்கள். "கடனில்லாத சோறு கால் வயிறு போதும்" என்ற உறுதியான லட்சிய வாழ்க்கையில் மோகங் கொண்டவர்.

ஆன்மீகத் துறையில் ஈடுபட்டு உண்மையைக் காண அரும்பாடுபடுவர். சிம்ம லக்கினத்தில் தோன்றியவர்கள், எவ்வாறு மெய்ஞ்ஞானத்தில் சித்தி பெற்று, நிரந்தரமான ஆனந்த வெள்ளத்தில், ஆழ்ந்திட வேண்டுமென்று, ஞானயோக முத்திரை யில் நித்திரையை நிலை நிறுத்திடுவரோ அதே போல், இந்த ஆவணி மாதத்தில் பிறந்தவர்களும் உண்மையை நாடிடுவர்.

அதிர்ஷ்ட எண்

இம்மாதத்தில் பிறந்தவர்களுக்கு 1,4 அதிர்ஷ்ட எண் ஆகும்.

நலந்தரும் நிறம்

சிவப்பு

ஆவணி மாதத்தில் பிறந்தவர்கள்:

பில் கிளிண்டன்,
மைக்கேல் ஜாக்சன்
மாவீரன் நெப்போலியன்,
யுவன்சங்கர் ராஜா