கணப்பொருத்தம்
கணம் குணமென பொருள்படும். கணப்பொருத்தம், தம்பதிகளுக்குள் தாம்பத்ய திருப்தியையும், மனம் மற்றும் குண ஒற்றுமையையும் வழங்கும்.
தேவகணம் : அஸ்வினி, மிருக சீரிஷம், புனர்பூசம், பூசம், அஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், ரேவதி.
மனுஷ கணம் : பரணி, ரோகிணி, திருவாதிரை, பூரம், உத்திரம், பூராடம், உத்திராடம், பூரட்டாதி, உத்திரட்டாதி.
இராட்சஷ கணம் : கார்த்திகை, ஆயில்யம், மகம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம்.
ஆண் பெண் இருவருக்கும் ஒரே கணத்தில்அமைவது உத்தமம்.
பெண் தேவ கணத்திலும், ஆண் மனுஷ அல்லது ராட்சஷ கணத்தில் இருப்பது நல்லது.
பெண் மனுஷ கணத்திலும் ஆண் தேவகணத்திலும் இருப்பது நல்லது.
பெண் மனுஷ கணத்திலும் ஆண் இராட்சஷ கணத்திலும் இருப்பது தவறு.
பெண் ராட்சஷ கணத்திலும் ஆண் தேவ அல்லது மனுஷ கணத்திலும் இருப்பது தவறு.
விதி விலக்குகள் :
பெண் இராட்சஷ கணத்தில் இருந்தாலும் ஆண் நட்சத்திரத்திற்கு 14ம் நட்சத்திரத்திற்கு மேல் பெண் நட்சத்திரம் இருப்பதும் நல்லது.
கணப் பொருத்தம் இல்லாத நிலையிலும் ஆண், பெண் இருவரும் ஒரே இராசியில் பிறந்திருத்தல் இராசி அதிபதிகள் நட்பாக இருத்தல் அல்லது 7ம் பார்வையால் ஒருவரை ஒருவர் பார்த்தல் போன்ற அமைப்புகள் பரிகாரமாகும்.
மகேந்திர பொருத்தம்
மகேந்திர பொருத்தம் பொருள் வளத்தையும் குழந்தை பாக்கியத்தையும் குறிப்பதாகும். பெண் நட்சத்திரத்திற்கு 4, 7, 19, 13, 16, 19, 22, 25ம் நட்சத்திரமாக பெண் நட்சத்திரம் வரவேண்டும். 4, 7, 10ம் வீடுகளை கேந்திர வீடுகள் என அழைப்பது போல பெண் நட்சத்திரத்திற்கு 4, 7, 10ம் நட்சத்திரங்கள் கேந்திர நட்சத்திரங்களாக கருதப்படுகிறது. 1, 2, 3, 5, 6, 8, 9, 11, 12, 14, 15, 17, 18, 20, 21, 23, 24, 26, 27 ஆகிய நட்சத்திரங்களுக்கு மகேந்திரம் இல்லை.
ஸ்திரி தீர்கம் :
ஸ்திரி தீர்க்கம் பொருள் வளத்தையும் செல்வம் செல்வாக்கையும் வழங்குவது ஆகும். திருமண வாழ்க்கை நீண்ட காலம் நீடிக்க உதவுவது இந்த ஸ்திரீ தீர்க்க பொருத்தம் ஆகும். பெண் ந ட்சத்திரத்திற்கு 13ம் நட்சத்திரத்திற்கு மேல் ஆண் நட்சத்திரம் அமைவது உத்தமமாகும். 7க்கு மேல் மத்திமானது.