ஏழரை சனி .. அஷ்டமத்து சனி ..

மணக்கால் அய்யம்பேட்டை | 4:31 PM | Best Blogger Tips



நமது ராசியில் இருந்து 12 , 1 , 2 ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் காலத்தை தான் ஏழரை சனி என்கிறோம் . இந்த ஏழரை ஆண்டுகள் எல்லோருமே சிற்சில சங்கடங்களை அடைவதை கண்கூடாகக் காண்கின்றோம் . உண்மையில் ஏழரை சனி நடை பெரும் காலத்தில் ஒருவரது வாழ்கைப் பாதையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழும் .

ஒருவரது ஜென்ம ராசிக்கு 12 சஞ்சரிக்கும்2 1/2 ஆண்டு காலமும் துன்பங்கள் தொடர்வதை போன்ற உணர்வு ஏற்பட்டுவிடும் .பொருள் விரயமாவது , தொழில் வழியில் முடக்கம் , அல்லது புதிய தொழில் முதலீடு செய்ய வேண்டிய கட்டாயம் . போட்ட முதலுக்கேற்ப வருமானம் இருக்காது . இட மாற்றங்கள் , குடும்ப உறுபினர்களை பிரித்து வாழ்வது . வீடு கட்டுதல் , திருமணம் போன்ற சுபகாரியம் செய்தல் .பெரும்பாலும் வீண் அலைச்சல் , கஷ்ட நஷ்டம் , உடல் உழைப்பு மிகுந்து காணப்படும்.

ஒருவரது ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் 2 1/2 ஆண்டுகள் வீண் வம்பு - வழக்கு விவகாரம் தோன்றும் .சிறு விபத்துகள் நேரும் . எக்காரியமும் நினைத்தபடி நடக்காது. முக பொலிவு குறைந்து காணப்படும் . செய்தொழில் முடக்கம் ஏற்படும் . எதிலும் எப்போதும் ஏதேனும் கவலை இருந்து வரும் . மன உளைச்சல் ஏற்படும் .

ஒருவரது ஜென்ம ராசிக்கு 2 சஞ்சரிக்கும் 2 1/2 ஆண்டு காலம் குடும்ப கவலை அடைவர் . பணம் கிடைத்தாலும் தங்காது . எவ்வளவு வரவு ஏற்பட்டாலும் செலவுகள் ஏற்பட்டு கரைந்துவிடும் . வீண் பயம் குடிகொள்ளும் . முன்னுக்குப் பின் முரணாக பேசுவர் , கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகும்.
 
 

அஷ்டமத்து சனி ...........



ஒருவரது ஜென்ம ராசிக்கு கோட்சார ரீதியாக 8 ஆம் வீட்டில் சனி வரும் காலமே அஷ்டமத்து சனி எனப்படும் .இக்காலத்தில் ஒருவர் பல்வேறு தடங்கல்களையும் இடையுறுகளையும் சந்திக்க கூடும் .முயற்சிகள் எளிதில் வெற்றி அளிக்காது .உடல் நலம் பாதிப்படையும் . பொருள் இழப்புகள் ஏற்படும் . கெட்ட தசா புக்திகள் நடப்பில் இருந்தால் கஷ்ட நஷ்டங்கள் ஏற்படும் .
 

அர்த்தாஷ்டம சனி ...



ஒருவரது ஜென்ம ராசியில் இருந்து கோட்சார ரீதியாக 4 ஆம் இடத்தில் சனி பகவான் வரும் காலத்தை அர்த்தாஷ்டம சனி என்கிறோம்.ஜென்ம ராசிக்கு நான்காம் வீட்டில் சஞ்சரிக்கும் காலத்தில் குடும்பத்தில் பல்வேறு சிக்கல்களை அடைவார் .உறவினர் மத்தியில் கருத்து வேறுபாடு ஏற்படும் .தொழில் அல்லது வியாபார துறையில் இழுபறி நிலை நீடிக்கும் .ஜாதகர் சுகக்கேட்டை அடைவார். குடும்ப சுமைகள் கூடும் . சுருக்கமாக கூறுவதென்றால் அஷ்டம சனி நடப்பதை போன்று தோன்றும் . ரிஷப ராசிக்காரர்களுக்கு தற்பொழுது அர்த்தாஷ்டம சனி நடப்பில் உள்ளது .