சூரியன் விருச்சிக ராசியில் சஞ்சரிப்பதை யே கார்த்திகை மாதம் என்று
அழைக்கின்றோ ம். இந்த ராசியானது செவ்வாயின் ஆட்சி வீடு. இங்கு சந்திரன்
நீச்சம். ஆனால், நிழல் கிரகங்க ளாகிய இராகு, கேது இங்கு உச்சமடைவதாக சில
நூல்கள் கூறுகின்றன. சூரியனுக்கு இது நட்பு ராசி யாகும்.
தோற்றம் :
பெரும்பாலும் இந்த மாதத்தில் தோன்றியவர் கள் நடுத்தர உயரம் அல்லது சற்றுக்
குள்ளமான தோற்றம் உடையவர். இடுப்பின் மேற்புறம் தடித் தும் கை, கால்கள்
சிறுத்தும் காணப்படும். தலை யின் மேற்புறம் தட்டையாகவும், முகம் நீள் சதுர
மாகவும் தோற்றமளிக்கும். அடர்த்தியான ரோமங் கள், நீண்ட புருவங்கள், நெற்றி
சுருக்கம் கொண் டும் காணப்படும். கூரிய நீண்ட மூக்கும், உதடுகள் குவிந்தும்
காணப்படும். புஜங்கள் அகன்று, கழுத்து சிறுத்து, ஆனால், உறுதியாக
அமைந்திருக் கும். பற்கள் வெளிப்புறம் அதிகம் தோன்றாது. விரல்கள் தடித்து
சதுரமாகக் காணப்படும். எதை யும் உற்று நோக்கும் கூரிய கண்பார்வை உடைய வர்.
இவர் பலஹீனமுடையவராயினும் வெளித் தோற்றத்திற்கு பலசாலியாகத் தோன்றிடுவர்.
இவருடைய நடை, உடை, பாவனைகள் யாவும் இவரையே கவனிக்கும்படிச் செய்யும்.
குணபாவங்கள்
பஞ்ச தத்துவங்களில், விருச்சிகம் அல்லது கார்த்திகையானது நீர் அல்லது,
புனலைக் குறிப் பிடுகின்றது. அனல் ஆகாயத்தையும், புனல் பாதா ளத்தையும்
நாடும் என்பதுபோல், சித்திரையில் பிறந்தவர்கள் தம்மைவிட மேலானவர்களைத்
தேடிடுவர். அதற்கு மாறாகக் கார்த்திகையில் தோ ன்றியவர்கள் தம்மைவிடத்
தாழ்ந்தவர்களைத் தேடியடைந்திடுவர். இதில் நிறைந்துள்ள விசேஷ த்துவங்கள்
கவனத்திற்குரியன. கார்த்திகையில் பிறந்தவர்கள் அறிவில் சிறந்தவர்.
கல்வியில் உயர் ந்தவர். இளமையிலேயே உலக அனுபவம் உணர் ந்தவர். இளமையில்
முதுமை அடைந்தவர். இவர் கண்டதைவிடக் காணாதது சிறியது என்ற தெளிவு உடையவர்.
கடவுளை மட்டுமே பெரிதென மதிப் பர். மற்ற எல்லாவற்றையும் சமமாகக் கொள்பவர்.
ஆகையால், இவருடைய கொள்கையின்படி எல் லாவற்றையும் சமநோக்குடன் கண்டு இவரைவிட
உயர்ந்த கடவுளைக் காண, ஆவியாக மாறுதல டைந்து பிறகு மேல்நோக்கிச் சென்றிடு
வர். அதுவரை நீராகவே இருந்து சர்வ மும் சமம் என்று பாவித்திடுவர்.
கார்த்திகை யில் தோன்றிய வர்கள் விட்டுப் பிடிப்பவர்கள். அவசரத்தையும்,
ஆத்திரத்தையும் கைவிடுவர். சமயம் பார்த்துக் கொட்டுவர். கொள்கையை விட்டுக்
காரியத்தை சாதிக்க மாட்டார்கள். அழி வு வேலை இவருக்கு இழிவாகத் தோன்றாது.
கார்த்திகையில் தோன்றியவர்கள் வேஷ முடையவர்கள். எதிரிகளைத் தம் வசமாக்கிக்
கொள்வர். நயவஞ்சகர்களென்று பிறர் கூறினா லும் பதற்றமடையமாட்டார்கள்.
தம்மைப் பற்றி யார் என்ன நினைத்தாலும் தம்முடைய குறிக்கோளையும், நெறியையும்
கனவிலும் மாற்றிக் கொள்ளமாட்டார்கள். தாகத்தைத் தாங் கமாட்டார்கள்.
குளிர்ந்த பானங்களை அருந்து வதில் அலாதிப் பிரியமுடையவர். இவர்க ளுக்குச்
சிறு வயதில் தாயாருடைய ஆதரவு குறையும். ஆகையால், தாயைப்போல் பேணி
வளர்ப்பவர் இவருடைய தகப்பனார் என்றால் மிகையாகாது.
மமதையுடையவர். எடுத்த பணியை வெற் றிகரமாக முடிக்காமல் உறக்கங்கொள்ளார்.
விஷராசியானதால் விஷமம் செய்வதில் சமர்த் தர். விஷம் போன்றது இவருடைய
விஷமம். தேளானது தன் பூரண பலத்தைக் கொண்டு, கொடுக்கினால் விஷத்தை ஊசி
முனையில் ஏற்றி, தன்னை மிதித்தவர்களை எவ்வாறு வதைக்கின்றதோ அவ்வாறே,
கார்த்திகையில் பிறந்தோரும் தம்மைப் பற்றிப் புறங்கூறுபவர் களையும்
தனக்குக் கேடு விளைவிக்க முயன்ற வர்களையும் படாதபாடு படுத்திவிடுவர்.
மற்றவர் களிடத்தில் உள்ள குற்றங்குறைகளை ஒளிவு மறை வின்றி
எத்தருணத்திலும், எந்த இடத்திலும், எடுத் துக் கூறிடுவர். இதற்காகவே
இவருடைய தொடர் பிலிருந்து ஒரு சிலர் அவ்வப்போது விலகிடுவர். கூட்டத்தில்
இவரைக் கண்டஞ்சி, வேறிடத்தில் தலைமறைவாக இருந்து சொல்லிக்கொள்ளாமல்
மறைந்திடுவர். ஆனால், நட்புடன் பழகுவதற்கு இவர் நல்ல தோழமையுடையவர்.
சிற்றின்பப் பிரியர். அதுபோலவே பற்றிய தைச் சட்டென மறந்து
பற்றற்றவர்களாகவும் விள ங்குவர். ஆன்மீகத் துறையில் கருத்தைச் செலுத்தி
ஞானிகளாக மாறி அருள் ஞானமுடையவர்களாக வும் விளங்குவர். மற்றவர்களுடைய
குறைகளைப் போக்குவதில் தன்னலமற்று ஈடுபடுவர். இந்த மாறு தலைக் கண்டு,
இவரோடு நெருங்கிப் பழகுபவர் களும் ஆச்சரியப்படுவர்.
சிறுவயதில் பல இன்னல்களுக்கும், சோர்வு களுக்கும் உள்ளாவர். சகிப்புத்
தன்மையால் உயர்ந்த அந்தஸ்தை எளிதில் எட்டிப் பிடிப்பர். மே லோர்
போற்றத்தக்க அறிவாளிகளாகவும் இவர் விளங்குவர். பொறுப்பான காரியங்களைச்
சாதித்து முடிப்பர். இரக்க குணமுடையவர். குற்றத்தை ஒப் புக்கொண்டால்
மன்னிக்கக் கூடிய மாண்புடைய வர். கண்ணியமானவர். உதார குணமுடையவர். நினைத்த
மாத்திரத்தில் எக்காரியத்தையும் உரிய வர்களைக் கொண்டு செய்து
முடிக்கக்கூடிய ஆற்ற லும் சாமர்த்தியமும் உடையவர். அதே தருணத் தில்
சுயநலமும் அகம்பாவமும் இணைபிரியாது இவரிடத்தில் தோற்றமளிக்கும். இவர்
அதிகமாக யாரிடத்திலும் பழகமாட்டார். உதார குணமிருப்பி னும் தன்
குறிக்கோள்களை விட்டுக்கொடுக்க மாட் டார்கள். இவரிடத்தில் ரகசியமென்பது
தங்குவதற் கிடமில்லை. ஆனால், இவர் நினைத்தால், காரியம் முடியும் வரை இவர்
கருத்தையும், அந்தரங்க ரகஸ் யத்தையும் வெளியிடமாட்டார்.
நோயும் - தீரும் வகையும்
தம்முடைய உணவுத் திட்டங்களில் அதிக அக் கறை செலுத்துபவர் அல்லர்.
எத்தருணத்தில் எது கிடைக்கின்றதோ அதை உணவாக ஏற்றுக்கொள் வர். உட்கொண்டவை
சரியான முறையில் ஜீரண மாவதற்கான சில அனுபானங்களையும், மருந்து வகைகளையும்
அனுசரிப்பர். ஆகவே, மலச்சிக்கல், மூலம், பௌத்திரம் போன்ற ஆச ன உறுப்புகளில்
உபாதைகளும், மறைவிட ஸ்தானங்களில் பிணி அயர்வுகளும் இவரை வாட் டிடும்.
மருத்துவ நிபுணரிடத்தில் இவர் பரிசோதித் துக் கொள்வதற்கும் மனமில்லாதவராய்
நோய்தீர வகை தேடிடாமல், கஷ்டத்தை அனுபவித்து நோய் களை வளர்ச்சியடையச்
செய்திடுவர். இவர்கள் ஆகார நேரங்களைத் தவிர இவர் எதையும் உட் கொள்ளலாகாது.
இவருக்கு பெருத்த தாகம் ஏற்படு வதால் எவ்வளவு வேண்டுமானாலும் தண்ணீரை
அருந்தலாமேயன்றி மற்ற எதையும் கொள்ளலா காது. காரத்தையும், புளிப்பையும்
குறைத்துக் கொள்வது நல்லது, கீரை, கருணைக்கிழங்கு, தக்கா ளி முதலியவை
இவருக்கு உகந்தவை. நரம்புத் தளர்ச்சி, தீராத வலி, பாரிசவாயு போன்ற அசதி
களும் இவரை நாளடைவில் வாட்டிடும். உடனுக் குடன் இவற்றை நிவர்த்தி செய்து
கொள்வது சிறந்ததாகும்.
குறையும் - நிறையும்
பிறரை கிண்டலும், கேலியுமாகப் பேசுவதே இவருடைய இயற்கை சுபாவம்.
காரியவாதிகள். கொள்கையை விட்டுக் கொடுப்பதுபோல் தளர்த்தி
இறுக்கிப்பிடிப்பர். குடும்ப வாழ்வில் பற்றற்றவர் போல் விளங்குவர். ஆனால்,
இவர் கடமையுணர்ச் சியிலிருந்தும், பொறுப்பிலிருந்தும், பந்த பாசங்க
ளிலிருந்தும் விடுபடார். சுயகாரியங்களை விடப் பிறர் காரியங்களில் அதிகம்
பிரவேசிப்பர். அத்து மீறியும் நடந்துகொள்வர். சட்டதிட்டங்களை மீறு வதே
இவருடைய விளையாட்டாகும். பிடிபடும் தருணத்தில் தந்திரமாகத்
தப்பித்துக்கொள்வர். சமய சந்தர்ப்பங்களில் பணிந்தவர்போல் காட்சி
அளித்திடுவர். வெகுளியாகவும், ஏமாளியாகவும் தோற்றமளித்திடுவர். ஆனால்,
காரியத்தில் கண் ணும் கருத்துமாய் இருந்து விடாப்பிடியாகச் சாதித் துக்
கொள்வர். இவர், பிறர் புரிந்து கொள்ளாத விஷயங்களிலும் இரகசியமான
காரியங்களிலும் ஈடுபடுவதில் மிகச் சமர்த்தர். மந்திரம், தந்திரம், யட்சிணி
போன்ற இந்திர ஜாலங்களில் ஈடுபடுவர்.
வாழ்க்கைத் துணைவி
சித்திரை, வைகாசி, ஆடி, பங்குனி மாதங்க ளில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்
துணைவியா கவோ, கூட்டாளியாகவோ அமைந்தால் இவருக்கு எல்லா வசதியும் அமைதியான
வாழ்க்கையும் ஏற் படும். ஆனி, ஐப்பசி, மாசி மாதங்களில் தோன்றிய வர்களின்
தொடர்பு இவர்க்கு ஏமாற்றத்தைத் தரும்.
தொழில்
மனோதத்துவ நிபுணராகவும், துப்பறியும் துறையில் வல்லவராகவும், இரசாயன
ஆராய்ச்சி யில் பிரசித்தராகவும், நடிப்புக்கலையில் நிகரற்ற வராகவும்,
பேச்சாளராகவும், மேதைகளாகவும், உபதேசகராகவும் விளங்குவர். கிரக நிலை
தாழ்ந்து காணப்படின், மருந்து வியாபாரம், சமையல் வேலை, வர்ண வேலை, கசாப்பு
வேலை, ஆஸ் பத்திரிப் பணியாளர், பல் வைத்தியர், கட்டு வைத் தியம், ஓடு,
பானை, பாண்டங்கள், செங்கல் தயாரிப்பு, மண்ணெண்ணெய், இயந்திர சாதனங் கள்
விற்பனை போன்ற துறைகளில் விளங்குவர். இவர் எத்துறையிலிருப்பினும் அரசு
இவரைத் தேடிக்கண்டெடுத்து அரச சேவைக்கும், மந்திரா லோசனைக் குழுவில்
அங்கத்தினராகவும், அமைத் துக்கொள்ளும். கௌரவ அரியாசனங்களிலும் இவர்
அமர்த்தப்படுவர்.
அதிர்ஷ்ட எண்
இவர்களுக்கு அதிர்ஷ்ட எண் 9 ஆகும்.
நலம் தரும் நிறம்
இவருக்குச் சிவப்பு நிறம் நலம் தரும் நிறமாகும்.
Via Pookal
Kp