தை மாதத்தில் பிறந்தவர்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 5:09 PM | Best Blogger Tips
தமிழ் மாதப் பலன்கள்
தை மாதத்தில் பிறந்தவர்கள்

சூரியன் மகர ராசியில் சஞ்சரிக்கும் காலத்தை தை மாதம் என்கிறோம். இந்த ராசியானது சனி பக வானின் ஆட்சி வீடுகளில் ஒன்றாகும். சூரியனுக்கு இது பகைவீடாகும். குருவுக்கு இது நீச ராசியாக வும் ஆற்றல் மிக்க செவ்வாய்க்கு உச்ச ராசியாக வும் விளங்குகின்றது. இது சுக்கிரனுக்கு நட்பு வீடாகும். ஐம்பூதத் தத்துவங்களில் பூமி அல்லது மண்ணை இந்த ராசி குறிக்கின்றது. அகண்ட ஆகாயத்தில் காற்று வீசும். அனல் பரவும். நீர் ஆவியாக வும் மாறும். கட்டியாகவும் உறையும். ஆனால், மண்ணா னது அசைவற்று நிற்கும். "அவனின்றி ஓரணுவும் அசை யாது" என்ற திடமான சங்கல் பமுடையது மண். பார்ப்பவர் களுக்கு மண்ணாகவும் எடுத்து உபயோகப்படுத்துபவர்களுக் குப் பொன்னாகவும் விளங் கும். விளையும் பொருட்க ளுக்கெல்லாம் மண்ணே ஆதா ரம். தோன்றும் உயிரினங்க ளுக்கெல்லாம் மண்ணே ஆதா ரம். பார்ப்பதற்கு ஜடப்பொரு ளாகத் தோன்றினாலும் அஸ சக்தி நிறைந்தது. கிரியா சக்தி யின் இருப்பிடம், மாயையின் சேஷ்டைக்கு மறை விடம். எதையும் கிரகிக்கும் தன்மையுடையது.
சூரியனின் ஜீவாதார சக்தியையும், சந்திரனின் ஜீவாமிர்த சக்தியையும் கிரகித்து, வித்தான பொருட்களுக்கெல்லாம் சத்தான பொருட்களை ஈட்டித் தருவதும் மண்ணே. வேண்டியவர்களுக்கு விரும்பியதை வாரிவழங்குவதும் மண்ணே.

கண்ணுக்குத் தெரியாமல் மண்ணுக்குள் மறைந் திருப்பவை விண்ணில் தோன்றிய வினோதங் களைவிட விபரீதமென்று சோதிடரீதியாக விளக் கும் ஏடுகள் எண்ணிலடங்கா. இத்தகைய மண் ணைப் போன்றவர்களாம் தை மாதத்தில் தோன்றிய வித்தகர்கள்.

தோற்றம்

பெரும்பாலும் நடுத்தர உயரத்திற்கும் குறை வான உயரம் உடையவர். எலும்பு கள், முட்டிப் பாகங்கள் எடுப்பாகத் தோற் றம் அளிக்கும். எனினும் அழகு வாய்ந்தவை. உண்மையான வயதைவிட அதிக வயது உடை யவராகக் காட்சியளித்திடுவார். நீண்ட கழுத்தும், நீண்ட தலையும் உடையவர். நெற்றி விரிந்தும் உயர்ந்தும் காணப்படும். அதில் ஆழ்ந்த கோடுகள் உடைய சுருக்க முடைய சரும பாகம் காணப் படும். புருவங்கள் உயர்ந்தும் வளைந்தும் காணப்படும்.
கண்கள் ஆழமாகப் பதிந்து சிறுத்துக் காணப்படும். நீண்ட நாசியும் ஒரு சிலருக்கு வளைந் தும் காணப்படும். தாடைகளில் சுருக்கம் அல்லது பள்ளம் தென் படும். செவிகள் விரிந்து நீண்டு காணப்படும். தோள்கள் விரிந் திருக்கும். பாதங்கள் அகன்றி ருக்கும். கீழ்ப்பார்வை உடை யவர். முகத்தில் கவலைக் குறி யும் ஆழ்ந்த யோசனையில் ஈடுபட்டது போன்ற பாவனை யும் வெளிப்புறத் தோற்றமாகக் காட்சியளித்திடும்.

அழுத்தந்திருத்தமாகப் பேசுவார். பேச்சில் உறுதி தொனிக்கும். நிதானமாகவும் பரபரப்பின்றியும் பேசுவார். கபடமற்ற உள்ளமும், ஆடம் பரமற்ற தோற்றமும் உடையவர். ஜனசஞ்சாரம் உடைய கூட்டங்களில் இவர் பின்ன ணியில் நிற்பார். பிறருடைய கவனத்தை ஈர்த்திடா வண்ணம் நடந்துகொள்வார்.

குணபாவங்கள்

வந்தவர்களுக்கு விருந்தளிப்பதும், நொந்தவர் களுக்கு மருந்தளிப்பதும் இவர் கடமைகளில் ஒரு சிலவாம். சரண் புகுந்தவர்களுக்குக் கருணை காட்டுவதும், பயந்து தம்மையடைந்தவர்களுக்கு அபயமளிப்பதும் இவருடைய இயல்பாம்.

நண்பரானாலும் பகைவரானாலும் விருப்பு, வெறுப்பு கொள்ளாதவர். எதையும் எளிதில் கிரகிக் கும் சக்தியுடையவர். கிரகித்ததைப் பிறருக்குப் பாத்திரமறிந்து அனுக்கிரகம் செய்யும் ஆவலுடை யவர். பிரதிபலன் கருதாது உழைத்திடுவார்.

உழைப்பால் உயர்ந்திடுவார். கடவுளைக் காட் டிலும் கடமையைப் பெரிதென மதிக்கும் லட்சிய வாதி. பிடித்ததை விடார். ஆனால் வீண் பிடிவாதக் காரரல்லர்.

வீண் வார்த்தைகளை வெளியிடார். பிறர் வெளி யிட்டாலும் பொருட்படுத்தார். மனம் வெகுளார். விடாமுயற்சியே இவருடைய மூச்சு. நீதி வழு வாமை இவருடைய பக்தியாகும்.

தை மாதத்தில் பிறந்தவர் எவ்வளவு கொடிய சோதனைகள் வந்தாலும் வேதனையடைய மாட் டார். தம் முடைய குறிக்கோள் நிறைவேறும் வரை சாதனையிலேயே ஈடுபடுவார். நிபந்தனைகள் பலவாக இருப்பினும் உண்மையான போதனை களைக் கைவிடமாட்டார். மற்றவர்களிடத்தில் காண முடியாத அதிசயம் இவரிடத்தில் உண்டு. அதுவென்னவென்றால், ஒரு காரியத்தில் ஈடு படும்போது குறைந்தபட்சம் இரண்டு விதமான நன்மைகளை ஏற்படுத்திக் கொள்வார். தரம் பார்த்துச் செலவு புரிந்திடுவார். சிக்கனத்தில் உலோபிகளையும் இவர் தோற்கடிப்பார்.

தாராள மனப்பான்மையிலும் உதார குணத்திலும் கொடை வள்ளல்களும் இவரைக் கண்டு நெஞ்சஞ்சுவர். எதை, எந்த நேரத்தில், எப்படிச் செய்ய வேண்டுமோ, அதை அந்த நேரத் தில் அதன்படியே செய்து முடிப்பார். இந்த நெறியே இவருக்கு உறுதுணையாக நின்று எளி தில் அரும் பயனைத் தேடியளித்திடும்.

பணத்தைக் கொண்டும், செல்வாக்கைக் கொண் டும், மற்றவர்கள் சாதிக்க முடியாததை இவர் செலவின்றி, சிபாரிசு இல்லாது நொடிப்பொழுதில் சாதித்திடுவார். சிக்கல் நிறைந்த வாழ்க்கையெனி னும் சிக்கலிலிருந்து இவர் தன்னை விடுவித்துக் கொள்வார். இவரை நம்பி எந்தக் காரியத்தையும் ஒப்படைக்கலாம். ஆனால், இவரை நம்பி எந்தக் காரியத்திலும் பிறர் பிரவேசிக்கலாகாது. `வைத் தால் குடுமி, சிரைத்தால் மொட்டை' என்பது போல், இவர் நினைத்தால் ஆண்டியையும் அரச னாகக் கருதுவார். நினைத்தால், அரசனைத் துரும் பாகவும் மதியார். `ஆம்' என்பவர்களுக்கு ஆத்திக னாகவும், `இல்லை' என்பவர்களுக்கு நாத்திகனா கவும் தோற்றமளிப்பார்.
ஆச்சாரங்களை அனுஷ்டிப்பது ஒழுக்கமென வும் கருதுவார். அதேபோல், அனாச்சாரத்தை இழுக்கெனக் கருதவும் மாட்டார். ஒளிவுமறைவு என்பதை இவரிடத்தில் காண்பது அரிது. பிறர் புலனுக்குக் கடுமையாகத் தோற்றமளிப்பார். ஆனால், உள்ளம் கனிந்தவர். செய்வதைத் திருந் தச் செய்வார். மிதமாகவே எதையும் உபயோ கிப்பார். ஆக்கசக்தியுடையவர். அழிவதைத் தடுக்க வல்லவர். அழிந்ததை மீட்கக் கூடியவர். இருப்பதைப் பெருக்கிடும் ஆற்றலுடையவர். தன்னை உணர்ந்தவர். தனிமையில் இனிமையைக் காண்பவர். தன்னம்பிக்கையுடையவர். குஷிப் பேர்வழி. சுபிட்சமான எதிர்காலத்தை நிர்மாணித் திடப் பல திட்டங்களைத் தீட்டிடுவார். ஆனந்த பர வசமுடையவர்.

சிறிய விடயங்களிலும் பெரிய பிரயாசை கொள்வார். தன் வழிக்கு இசையாததைக் கண்டு வருந்துவார். ஆனால், மற்றவர்க ளைப் போல் நீண்ட நேரத்தைச் சிந்தனையில் செல விட மாட்டார். பிடிக்காத விஷயமென்றால் திரும் பியும் பார்க்க மாட்டார். வாழ்க்கையில் ஏற்படும் அரிய வாய்ப்பை நழுவ விட மாட்டார். இவருக்கு அதிக நண்பர்கள் இருக்கமாட்டார்கள். காரிய தம்பிரான் என்றால் அது இவர்தான்.

பிணியும் மருந்தும்

உணவில் அக்கறையின்றி சலிக்காமல் செய லாற்றுவார். இதனால் ஜீரண கோஷத்தில் கோளாறு கள் தோன்றி வாட்டிடும். பல் வலியும், சரும வியா தியும், வழுக்கை விழுதல், மனச்சோர்வு போன்றன சாதாரணமாக இவர்களுக்கு ஏற்படும். வாய்ப்புக் கிடைக்கும்போது உல்லாசப் பிரயாணங்களில் ஈடு படுவதாலும், புதிய இயற்கை வனப்பைக் கண்டு களிப்பதாலும், மன ஆறுதல் அளிக்கும் கண்காட்சி களைக் கண்டு களிப்பதாலும் அசதிகளைத் தடுக் கலாம். எந்த நேரத்திலும், எது கிடைத்தாலும் ருசி அறியாது உட்கொள்ளக் கூடியவர். இந்தப் பழக் கத்தை மாற்றிக்கொண்டு, பசி நேரத்தில் பக்குவ மான உணவுகளை உட்கொண்டால் எவ்விதக் கோளாறுமின்றி இவர் நோயற்ற வாழ்க்கை வாழலாம்.

குறையும் நிறையும்

இவர் அதிகாரத்திற்கு வளைந்துகொடுப்பவர் அல்லர். பிறருடைய அபிப்பிராயங்களுக்குச் செவி சாய்ப்பவரல்லர். துதிபாடுவது இவருக்குப் பிடிக்காது. இன வேட்கை அதிகம். சொல்லுக்கு இணங்காதவர்களை வேருடன் களைந்து அகற்றி டுவார். இவரைப் புரிந்துகொள்வது கடினம்.

வாழ்க்கைத் துணை

வைகாசி, ஆடி, புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் பிறந்தவர்கள் கூட்டாளியாகவோ, வாழ்க்கைத் துணையாகவோ அமையப்பெற்றால் நன்மைகள் ஓங்கிடும். ஏனைய மாதங்களில் பிறந்தவர்களால் அமைதியின்மையும் சங்கடமுமே உண்டாகும்.

தொழில்

தை மாதத்தில் பிறந்தவர். பயிர்த் தொழிலில் சிறப்பார். கடமை தவறாதவர். வைத்தியரானால் தனிச்சிறப்புடன் விளங்குவார். இவர் கை பட்ட தும் நோய் விலகும். தொழிற்சாலைகளை நிறுவி பல்லாயிரக்கணக்கானோருக்கு தொழில் வழங்கிடு வார். பொறியியல், கட்டிட வேலை, ஆராய்ச்சி போன்ற துறைகளிலும் மிளிருவார். சொந்த முயற் சியால் எழுத்தாளராகவும், பதிப்பாசிரியராகவும் ஞானியாகவும் விளங்குவார். படிப்படியாக லட்சி யத்தை அடைவார்.

கஷ்ட ஜீவியாய் வாழ்க்கையை ஆரம்பித்து சுக போகங்களை அடைவார்.

அதிர்ஷ்ட எண் 8 ஆகும்.

நீலம் அல்லது கருப்பு இவருக்கு நலந்தரும் நிறங்களாகும்.