சர்வ மங்கள யோகம் கிடைத்திட, சுகப் பிரசவம் நிகழ்ந்திட - எளிய பூஜை முறைகள் !

மணக்கால் அய்யம்பேட்டை | 5:46 PM | Best Blogger Tips


திருஞானசம்பந்தர் திருச்சி மலைக்கோட்டையில் குடிகொண்டருளும் தாயுமான சுவாமிகளை குறித்து பாடிய இப் பாடல்களை கர்ப்பிணிப் பெண்கள் தினந்தோறும் மனமுருக பாடினால், பிரசவம் இனிதே நடைபெறும்.

நன்றுடையானைத் தீயதிலானை நரை வெள்ளேறு
ஒன்றுடையானை உமையொரு பாகம் உடையானைச்
சென்றுடையாத திருவுடையானைச் சிராப்பள்ளி
குன்றுடையானைக் கூற என்னுள்ளம் குளிரும்மே.
 
கைம்மகவேந்தி கடுவனொடு ஊடிக்கழைபாய் வான்
செம்முக மந்தி கருவரையேறு சிராப்பள்ளி
வெம்முகவேழத்து ஈருரி போர்த்த விகிர்தா நீ
பைம்முக நாகம் மதியுடன் வைத்தல் பழியன்றே
மந்தம் முழவம் மழலை ததும்ப வரை நீழல்
செந்தண் புனமுஞ் சுனையுஞ் சூழ்ந்த சிராபபள்ளிச்
சந்தம் மலர்கள் சடைமேலுடையார் விடையூரும்
எந்தம் அடிகள் அடியார்க்கு அல்லல் இல்லையே

துறை மல்கு சாரற் சுனை மல்கு நீலத்திடை வைகிச்
சிறை மகு வண்டுந்தும்பியும் பாடுஞ் சிராப்பள்ளிக்
கறைமல்கு கண்டன் கனலெரியாடுங்க் கடவுள் எம்
பிறை மல்கு சென்னி உடையவன் எங்கள் பெருமானே

மேலும் சில மகத்தான சக்தி தரும் பூஜை முறைகள் : 

பௌர்ணமி தினங்களில் சிவ சக்தியை வழிபட வாழ்வில் இருள் நீங்கி ஒளி பிறக்கும். மாங்கல்ய பலம் கிடைக்கும். மகப்பேறு பெறலாம். படிப்பினில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் அபிவிருத்தி அடையும். நினத்தவை நடக்கும். எடுத்த காரியம் வெற்றி பெறும். நோய்கள் தீரும். சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். மறு பிறப்பு எடுக்கா வண்ணம் நற்கதி அடையலாம். 

பஞ்சு திரியில் நெய், விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகிய ஐந்தையும் கலந்து 48 நாட்கள் தொடர்ந்து ஏற்றி திருவிளக்கு பூஜை செய்தால் தேவியின் பரிபூரண அருள் கிட்டும். சகல விதமான சௌபாக்கியங்களும் கிடைக்கும். சந்திர சக்தி அடைவர். அதிகாலை 3 மணி முதல் 5 மணிக்குள் தீபம் ஏற்றி வழிபட்டால் சர்வ மங்கள யோகம் கிடைக்கும். 
Via livingextra