புராணம் என்ற
சொல் தமிழ் இலக்கியத்தில் மணிமேகலையில் முதன்முதலில் வருகிறது. சமயக்
கணக்கர்தம் திறம் கேட்ட காதையில் வைணவவாதியைக் குறிப்பிடும் போது, காதல் கொண்டு கடல்வணன் புராணம் ஓதினான்
என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், புராணம் என்ற சொல், தமிழ் மொழியில்
மணிமேகலை தோன்றிய காலத்திலேயே வழங்கப் பெற்றுள்ளது என அறிய முடிகிறது.
"புராணவித், புராணி போன்ற சொற்கள் ரிக் வேதத்திலும் அதர்வன வேதத்திலும் காணப்படுகின்றன.
எனினும் இச் சொற்கள் புராணத்தைக் குறிக்கவில்லை. பழமையானவன், பழமையைப்
பரப்புகிறவன் என்ற பொருளிலேயே இச்சொற்கள் வழங்கியிருக்கின்றன."புராணம்
என்கிற வடசொல், புரா-நவ என்ற இருவேர்களில் இருந்து பிறந்தது. இதன் பொருள்
பழமைக்குப் பழமையாய்ப் புதுமைக்குப் புதுமையாய் உள்ளது
என்பர்.புராணத்திற்கு இணையாக ஆங்கிலத்தில் Myth என்ற சொல் வழங்கப்படுகிறது.
'Mythos' என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து இச்சொல் பிறந்துள்ளது. சைவப்
புராணங்களில் புராணக்கதைகளை முதலில் கூறியது சிவபெருமான் அல்லது முருகப்
பெருமான் என்றே குறிப்பிடப்பெற்றுள்ளது. பார்வதிதேவியோ அல்லது நந்தியோ
அக்கதைகளைக் கேட்டு கைலாயத்திலிருக்கும் சனக்குமாரர்களுக்குக்
கூறுகின்றனர். அவர்கள் அக்கதைகளை வேதவியாசருக்கு எடுத்து விரித்துக்
கூறுகின்றனர். வேதவியாசர் புராணக்கதைகளைப் பூமியிலே சூதமுனிவருக்குக்
கூறுகிறார். சூதமுனிவர் அவற்றைப் சவுனகமுனிவர்களுக்குக் கூறுகிறார். புராணங்கள்:இதிகாசங்கள்,வேதங்கள்
ஆகியவற்றில் உள்ள நுண்ணிய விஷயங்களையாவரும் புரிந்து கொள்ள கூடிய வகையில்
புராணங்கள் விவரிக்கின்றன.''புராணங்கள்'' என்ற சொல்லுக்கு 'மிகப்
பழமையானது' என்று பொருள்.சரித்திர காலத்திற்கு முன்பே புராணங்கள் இருந்து
வந்துள்ளன.மகா பாரதம், இராமாயணம் போன்ற புராணங்களில் நாம் வாழ்க்கையில்
அன்றாடம் கடைப் பிடிக்கத்தக்க விஷயங்கள் மலிந்து கிடக்கின்றன.ஆதி சங்கரர்,
பாணர் போன்றவர்கள் தங்கள் நூல்களில் புராணங்களைப் பற்றி
கூறுகின்றனர்.புராணங்களில் 18 சிறிய உபபுராணங்களும் இருப்பதாகக்
கூறுகின்றனர்.ஏழு சிரஞ்சீவிகள்:மகாபுராணங்கள்
அனைத்தையும் இயற்றியவர் வேதவியாசர் . வேதவியாசர் சிரஞ்சீவிகளுள் ஒருவர்
ஆவார். ஜீவித்தல் என்பதற்கு, உயிர்வாழ்தல் என்று பொருள். சிரஞ்சீவிகள்
என்றால் எப்போதும் இறப்பில்லாமல் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் என்று
பொருள்படும். "அஸ்வத்தாமர், வேதவியாசர், பரசுராமர், விபீசணர், அனுமார்,
மகாபெலி, மார்க்கண்டர் ஆகிய ஏழுபேரும் சிரஞ்சீவிகள் ஆவர்". அழிவின்றி
வாழ்பவர்கள் பட்டியிலில் இரண்டாவதாக வேதவியாசர் குறிப்பிடப்படுகிறார்.
திருப்பூவணப் புராணத்திலே
"கூனலம்பிறைமிலைச்சுகோடீரபாரத்தெந்தை
யூனமிலுமையாள்கேட்பவுரைத்தருளுபதேசத்தை
யானதோர்காலைதன்னிலாறுமாமுகங்கொடுற்ற
ஞானவானதனைக்கேட்டுநந்திபானவின்றான்மன்னோ" (பாடல் 688) என்ற பாடலிலே,
உமையாள் கேட்டுக்கொண்டதற்கு இசைய சிவபெருமான் புராணத்தைக் கூறியருளுகிறார். அதனைக் கேட்ட ஆறுமுகங்கொண்ட முருகப் பெருமான் நந்திக்கு எடுத்துரைக்கிறார்.
".... கந்தனிசைத்திடவந்நந்தி
தன்றனிச் சொல்சற்குமரன் கொடே
வென்றிவேதவியாதற்குரைக்கவளஃ
தன்றெனக்கவன் சொன்னதறைகுவேன்" (பாடல் 98) என்று சூதமுனிவர் கூறியதாகக் கூறப்பெற்றுள்ளது.புராணங்களை எடுத்துரைத்த இடம்வேதவியாசர் புராணக்கதைகளைக் கூறுகிறார். அவற்றைக் கேட்ட சூதமுனிவர் அக்கதைகளை சவுனக முனிவர்களுக்கு எடுத்துரைக்கிறார். புராணங்களை எடுத்துரைத்த இடம் நைமிசாரண்யம் ஆகும்.இத்தலம் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் (பத்துப் பாசுரங்கள்) செய்யப்பெற்றது. நைமி அல்லது நேமி என்றால் சக்கரம் என்றும், ஆரண்யம் என்றால் அடர்ந்தகாடு என்றும் பொருள். புராணங்கள் தோன்றிய காலம்புராணங்கள் எழுதப் பெற்ற காலத்தைக் கணக்கிட்டுக் கூறுவதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. எனவே புராணங்கள் கூறப்பட்ட காலத்தைக் துள்ளியமாகக் கணித்துக் கூறுவது இன்றளவும் இயலாததாகவே உள்ளது. இந்தியத் துணைக் கண்டத்தில் தோன்றிய நான்கு வேதங்களும் பதினெட்டுப் புராணங்களும் மிகவும் பழமையானவை. உலக அளவில் மிகவும் பழமையான நூல்களாக இவை கருதப் படுகின்றன. தொல்காப்பியத்தை எழுதிய புலவரும், திருக்குறளை இயற்றிய புலவரும் தங்களது பெயர், ஊர், வாழ்ந்த காலம், நூலை இயற்றிய ஆண்டு, ஆட்சி செய்த மன்னர் இவை எதையுமே குறிப்பிடவில்லை. இவர்களைப் போன்றே, புராணத்தை எழுதிய முனிகளும் தங்களது பெயர், வாழ்ந்த காலம், ஆட்சி செய்த மன்னன் இவைபற்றி எதையும் புராணங்களில் குறிப்பிடவில்லை. வேதவியாசர் வாழ்ந்த காலத்தைக் கருத்திற் கொண்டு, புராணங்களின் காலம் கி.மு.6 அல்லது கி.மு. 7-ஆம் நூற்றாண்டு என்று சமய நூல் விற்பன்னர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இந்து சமயத்தின் பொற்காலம் கி.பி. 300-600 காலகட்டங்களில் வடநாட்டை ஆண்ட குப்தர்கள் வடமொழியை நன்கு போற்றி வளர்த்துள்ளனர். இந்து சமயமும் வடமொழி இலக்கியமும் புராணங்களும் நன்கு வளர்ச்சி பெற்றன. இவர்கள் காலத்தில் வடமொழியிலுள்ள தொன்மையான புராணங்கள் ஒழுங்குபடுத்தித் தொகுக்கப் பெற்றன என்பர். அதனால் குப்தர்கள் காலத்தை இந்து சமயத்தின் பொற்காலம் என்று அழைக்கின்றனர். எனவே வடமொழியில் புராணங்கள் தோன்றிய காலம் கி.பி.300 க்கும் முற்பட்டதாகக் கருத இயலும். கலியுகம் தோன்றிய பின்னரே நளன் ஆட்சி செய்தான்
திருப்பூவணப் புராணத்தில்,
சுச்சோதி தீர்த்த யாத்திரைச் சருக்கம்,
சுச்சோதி பிதிர்களை முத்தியடைவித்த சருக்கம்,
மற்றும் நளன் கலிமோசனச் சருக்கம் ஆகிய சருக்கங்கள் பாடப்பெற்றுள்ளன. இதனால், திருப்பூவணப் புராணம் அடங்கிய பிரமகைவர்த்த புராணம் எழுதப்பட்ட காலம், சுச்சோதி மற்றும் நளன் காலத்திற்குப் பிற்பட்ட காலம் என்பது உறுதி. திருப்பூவணப் புராணத்தில் நளன்கலிமோசனச் சருக்கத்திலே, "மேவுமந்தமிகுந்திரையாயுக மோவில்பல்புகழோங்குநளன்றனக் கியாவுநல்கியிருங் கலி தீர்த்தருள் பூவணேசன்பொற்கோயில்புகுந்தனன்" (பாடல் 1325) என்று கூறப்பட்டுள்ளது. எனவே கலியுகம் தோன்றிய பின்னரே நளன் ஆட்சி செய்தான் என்பதும், அவனது ஆட்சிக்காலத்திற்குப் பிறகே பிரமகைவர்த்த புராணக்கதைகள் கூறப்பட்டுள்ளன என்பதும் உறுதி. கலியுகம் தோன்றி 5108 ஆண்டுகள் ஆகின்றன. எனவே பிரமகைவர்த்த புராணம் எழுதப் பெற்ற காலம் (கலி5108 - கி.மு.2008 - 3100) கி.மு.3100க்குப் பிற்பட்டகாலம் எனத் திருப்பூவணப் புராணத்தின் வழியாக அறியமுடிகிறது. இந்நூல் பல்வேறு வகைகளில் கம்ப இராமாயணத்துடன் ஒப்பு நோக்கிப் பார்க்கப்படுகிறது. இறைவன் குறித்த புராணங்கள் நைமிசாரண்யத்தில் சூதர் சொன்ன கதைகளை வியாசர் புராணங்களாகத் தொகுத்தார் என்பது ஐதீகம்.
வியாசரால் தொகுக்கப்பட்ட புராணங்கள் பதினெட்டு. அந்தப் பதினெண் புராணங்களும், சத்துவம், ராஜஸம், தாமசம் ஆகிய முக்குணங்களுக்கு உரியவையாகத் தொகுக்கப்பட்டுள்ளன. சத்துவ குணப் புராணங்கள் விஷ்ணுவைப் புகழ்கின்றன அவற்றுள் சத்துவ குணப் புராணங்கள் விஷ்ணுவைப் புகழ்கின்றன. அவையாவன: விஷ்ணுபுராணம், பாகவத புராணம், நாரதீய புராணம், கருட புராணம், பதமபுராணம், வராக புராணம். ராஜஸ குண புராணங்கள் பிரம்மாவைப் புகழ்கின்றன. அவையாவன: பிரம்ம புராணம், பிரமாண்ட புராணம், பிரம்ம வைவர்த்த புராணம், பவிஷ்ய புராணம், வாமன புராணம். தாமஸ குண புராணங்கள் சிவனைப் போற்றுகின்றன தாமஸ குண புராணங்கள் சிவனைப் போற்றுகின்றன. அவையாவன: சிவபுராணம், லிங்கபுராணம், ஸ்கந்த புராணம், மார்க்கண்டேய புராணம், அக்கினி புராணம், மத்சய புராணம், கூர்ம புராணம் முதலியன.
சத்வகுண புராணங்கள் விஷ்ணு சம்பந்தமானவை அவை நற்குண புராணங்கள் 1 பாகவதபுராணம்
2. விஷ்ணுபுராணம் :இவை புராணங்களளில் முக்கிய பங்கைப் பிடிக்கின்றன.ஆறு அம்சங்களைக் கொண்ட ஐந்து முக்கிய பிரிவுகளைக் கொண்டவை. முதலாவது அல்லது இரண்டாவது நூற்றாண்டைச் சேர்ந்த விஷ்ணு புராணம் மிகவும் பழையானது.பராசர மகஷிரி, மைத்ரேயருக்கு கற்றுக் கொடுத்ததே கற்றுக் கொடுத்ததே விஷ்ணு புராணமாகும்.
விஷ்ணு புராணத்தை ஆவணி மாதம் பவுர்ணமி அன்று அன்பளிப்பாகத் தாரை வார்த்துக் கொடுத்தால் அவர் விஷ்ணு பதத்தை அடையலாம் என்பது ஐதீகம். விஷ்ணுவின் அவதாரங்கள் பற்றி கூறும் பிரசித்தி பெற்ற பாகவத புராணம் 12 ஸ்கந்தர்களாகப் பிரிக்கப்பட்டு 18000 ஆயிரம் சுலோகங்களைக் கொண்டிருக்கின்றது.
3. நாரதபுராணம் :இது 25000 ஆயிரம் சுலோங்களளை உள்ளடக்கியது. நாரத மகரிஷி சனத்குமாரருக்கு உபதேசித்ததே நார தீய புராணமாகும்.இந்த புத்தகத்தை ஐப்பசி மாதம்,பவுர்ணமி அன்று அன்பளிப்பாகக் கொடுத்தால்,செழிப்பாக வாழலாம் என்பது ஐதீகம்.
4. கருடபுராணம் :விஷ்ணு கருடனுக்கு கூறுவதே கருட புராணமாகும். மருத்துவம்,இலக்கணம்,வான் ஆராய்ச்சி போன்றவற்றை விவரிக்கிறது.மரனத்திற்குப் பின்னர் மனிதன் அடையும் நிலையைப் பற்றியும் கூறுகிறது.8000 ஆயிரம் சுலோகங்களை உள்ளடக்கிய இப்புராணத்தை ஒரு தங்க அன்னப்பட்சியுடன் கொடுத்தால்,செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.
5. பத்மபுராணம் :55000 ஆயிரம் சுலோங்களைக் கொண்டு ஆறு காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.பிரம்மனின் பத்ம ஆசனத்தைப்பற்றியும் விரிவாகக் கூறுகிறது. இந்தப் புராணத்தை சித்திரை மாதம் ஒரு பசுவுடன் அன்பளிப்பாகக் கொடுத்தால் செழிப்பாக இருக்கலாம் என்பது நம்பிக்கை.
6. வராஹபுராணம் :விஷ்ணுவின் அவதாரத்தையும் வராகத்தின் கதையையும் விவரிக்கின்றது.14000 ஆயிரம் சுலோங்களைக் கொண்டஇப்புரணத்தை சித்திரை மாதம் ஒரு பசுவுடன் அன்பளிப்பாகக் கொடுத்தால் செழிப்பாக இருக்கலாம் என்பது நம்பிக்கை.
ராஜஸகுண புராணங்கள் பிரம்மா சம்பந்தமானவை அவை அசுரகுண புராணங்கள்
1. ப்ரஹ்மாண்ட புராணம் :பிரபஞ்சம் ஒரு தங்கமயமான முட்டையில் இருந்து தோன்றியதாக பிரபஞ்சத்தின் வரலாற்றை கூறுகிறது.இந்நூல் 12000 ஆயிரம் சுலோங்களைக் கொண்ட இந்நூலை ஒரு பிராமணருக்கு அன்பளிப்பாகக் கொடுத்தால் மிகவும் நல்லது என்று கூறுகிறது.
2. ப்ரஹ்ம வைவர்த்த புராணம் : பிரும்ம காண்டம்,பிரக்ருதி காண்டம்,கணேச காண்டம்,கிருஷ்ண ஜன்ம காண்டம் ஆகியவற்றைக் கொண்டது.18000 சுலோங்களை கொண்ட இப்புராணத்தை இலையுதிர் காலத்தில் அன்பளிப்பாக கொடுப்பது புனிதமானது.
3. மார்க்கண்டேய புராணம் :மிகப் பழமையானது. 'தேவி மகாத்மியம்' என்ற பகுதியைக் கொண்டது. கார்த்திகை மாதம்,அமாவாசை அன்று ஒரு பிராமணனுக்கு இந்நூலை அன்பளிப்பாகக் கொடுத்தால், உத்தமம் என்று நமப்படுகிறது.
4. பவிஷ்ய புராணம் :பிற்கால நிகழ்வுகளைப் பற்றி மனுவுக்கு சூரியன் கூறியது.தலங்களைப் பற்றியும் யாத்ரீகர்களின் உரிமைகளைப் பற்றியும் கூறும் இந்நூலை பங்குனி மாத பவுர்ண்மி அன்று பிராமணனுக்கு கொடுத்தால் மிகவும் நல்லது என்று கூறப்படுகிறது.
5. வாமன புராணம் :விஷ்ணுவின் அனைத்து அவதாரங்களைப் பற்றியும் பார்வதி, பரமேஸ்வரனின் திருமணக் காட்சிகளைப் பற்றியும் விரிவாகக் கூறுகிறது.10,000 சுலோங்களைக் கொண்ட இந்நூலை இலையுதிர் காலத்தில் அன்பளிப்பாக கொடுத்தால் உத்தமம்.
6. ப்ரஹ்ம புராணம் : 25000 ஆயிரம் சுலோங்களைகளைக் கொண்டது.பிரம்மன் தட்சனுக்குக் கூறியது. வைகாசி மாத பவுர்ணமி அன்று இப்புராணத்தை அன்பளிப்பாக கொடுத்தால் சொர்க்கலோக பதவி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
தாமஸகுண புராணங்கள் சிவன் சம்பந்தமானவை அவை அறியாமைகுண புராணங்கள்
1. மத்ஸ்ய புராணம் :மனுவுக்கு விஷ்ணுவின் அவதாரமான மத்ஸ்யம் கூறுவது இந்நூல்.ஜைனம்,பவுத்தம்,நாட்டியம்,ஆந்திராஜ வம்சங்கள்ஆகியவற்றை விரிவாக்கிறது. 13000 சுலோகங்கள் கொண்ட இந்நூலை தங்கத்தில் செய்த மீன் உருவத்துடன் அன்பளிப்பாகக் கொடுக்க வேண்டும்.
2. கூர்ம புராணம் :ஆமை வடிவமெடுத்து விஷ்ணு,இந்தரயும்ன்னின் சரித்திரத்தைக் கூறும் விதமாக இந்நூல் அமைகிறது.ஏழு தீவுகள்,ஏழு கடல்கள் ஆகியவை சூழ்ந்த ஜபூத்வீயம் என்ற பரத்தைப் பற்றி விவரிக்கிறது.இந்நூல் 8000 ஆயிரம் சுலோங்கள் கொண்ட இந்நூலை,ஒரு தங்க ஆமை உருவத்துடன் அன்பளிப்பாகக் கொடுத்தால் மிகவும் நல்லது
3. லிங்க புராணம் :28 விதமான சிவனின் உருவங்களைப் பற்றி கூறுகிறது. 12000 சுலோகங்கள் கொண்ட இந்நூலை பங்குனி மாதம் பவுர்ணமி அன்று பிராமணன் ஒருவனுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தால் சிவ சாயுச்சியத்தைப் பெறலாம்.
4. சிவ புராணம் :
5.ஸ்கந்த புராணம் :காளிதாசர் இயற்றிய குமார சம்பவம் என்ற நூலுக்கும் அசுரனை வதம் செய்த கந்தனால் கூறப்படும் இந்த புராணத்துக்கும் ப்ல ஒற்றுமைகள் உள்ளன.
6. அக்னி புராணம் :அக்னிதேவன் வசிஷ்டருக்கு உபதேசித்தது.சிவலிங்கம் துர்க்கை,இராமர்,கிருஷ்ணர் ஆகிய அவதாரங்களைப்பற்றி கூறுகிறது.12000 ஆயிரம் சுலோங்களைக் கொண்ட இந்நூல் நாடகம்,சோதிடம்,சிற்பம் போன்ற நுண்கலைகளைப்பற்றியும் கூறுகிறது.
வாயு புராணம்:-கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பாணபட்ட என்பவரைப் பற்றியும் 4 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குப்த அரசர்களைப் பற்றியும் விரிவாகக் கூறுகிறது. 14000 சுலோகங்களைக் கொண்ட இந்நூலை ஆவணி மாதம் அன்பளிப்பாகக் கொடுத்தால் உத்தமம்.
இதில் நற்குண புராணங்களே சாஸ்த்திரத்திற்கு உட்பட்டவை மற்றும் மோக்ஷத்தை கொடுக்கும் ராஜஸகுண புராணங்கள் சொர்கத்தையூம் தாமஸகுண புராணங்கள் நரகத்தையும் கொடுக்கும் என சிவன் பார்வதியிடம் கூறினார். மேலே கூறிய விசயங்கள் வேதங்களில் என்ன கூறியுள்ளதோ அதை அப்படியே உள்ளது சத்வ குணபுராணங்களில் மட்டுமே. ராஜஸகுண புராணங்கள் தாமஸகுண புராணங்களில் சில இடங்களில் கிருஷ்ணரே முழுமுதற்கடவுள் என கூறியுள்ளது ஆனாலும் அதில் கூறியபடி நடந்தால் அது பாவத்தையே உண்டாக்கும்.
புராணங்கள் பத்மபுராணத்தில (பூனா ஆநந்தாஸ்ரமபதிப்பில் உத்தரகண்டம் 263ம் அத்தியாயத்தில் உள்ளபடி)பார்வதி தேவி சிவப்பிரானைப் பார்த்து பாஷண்டர்கள் என்பது நாஸ்திகர் என்றீர். அவர்களுடன் பேசவே கூடாதென்று நீர் சென்னீர். அப்பாஷண்டர்களின் லக்ஷணம் என்ன என்று கேட்டாள். அதற்கு சிவப்பிரான் சென்னார். நாராயணனைக் காட்டிலும் வேறான ஒரு தேவனைப் பரமாத்மாவாக யார் கூறுகிறார்களோ, அவருக்கு சமமாக ப்ரஹ்மருத்ராதியான பிரம்மா சிவன் போன்ற தேவர்களை யார் கூறுகிறார்களோ, கபாலம், பஸ்மம் என்ற சாம்பல் எலும்பு முதலிய அவைதிகமான என்னும் சாஸ்த்திரத்திற்கு எதிரான அடையாளங்களை யார் தரிக்கிறார்களோ ஸந்யாஸ ஆஸ்ரமத்திற்குத் தகுதியில்லாமலே சடை,மரவுரிகளை யார் தரிக்கிறார்களோ சாஸ்த்திரத்திற்கு எதிரான பல செயல்களை யார் செய்கிறார்களோ அவர்கள் நாஸ்திகர்கள் என்று விரிவாக கூறுகினார். இதை கேட்ட பார்வதி இதுவே நாஸ்திகார்கள் லக்ஷணம் எனில் நீர் ஏன் கபாலம். பஸ்மம் எலும்பு முதலிய் சாஸ்த்திரத்திற்கு எதிரான அடையாளங்களை ஏன் தாரிக்கிறீர் என்று கேட்க, இதற்கு முக்கட்பிரான் ஒருவருமில்லாத இடத்திற்கு பார்வதியை அழைத்துச்சென்று நீ இதை எவரிடமும் சொல்லாதே என்று ஆணையிட்டு, முற்காலத்தில் நமுசி முதலான அஸூர்கள் வேததர்ம நிஷ்டர்களாய் விஷ்ணு பக்தர்களாய் இருந்தமையாலே வெல்லவரிய பலம் வீரங்களை பெற்றிருந்தனர். அவர்களால் அடக்கப்பெற்ற தேவர்கள் பரமபுருஷரான விஷ்ணுவிடம் முறையிட்டனர். விஷ்ணு என்னைப்பார்த்து தேவ த்வேஷிகள் என்னும் கிருஷ்ணரை நிந்தனை செய்பவர் சாஸ்த்திரத்திற்கு எதிரானவர்களாகவும் என்னிடம் பக்தியற்றவர்களாகி பலங்குறைந்தவர்கள் ஆவதற்காக நீ நேரேயும் பல அந்தணர்களை ஆவேசித்து நின்றும் பல பாஷண்ட சாஸ்த்திரங்களை அவர்களுக்கு உபதேசிப்பாயாக என்று நியமிக்க இதனால் எனக்குப் பெரும் பாவம் வந்து சேருமே என்று நான் நடுங்க தேவதைகளின் நலத்துக்கும் பாவிகளான அஸூரர்களை அழிவதற்கும் நீ இப்படி செய்தே தீரவேண்டும். ஆயினும் இதற்கு ப்ராயச்சித்தமாக என்னை நெஞ்சில் தியானித்து என்னுடைய தாரக மந்திரத்தை ஜபித்துக் கொண்டேயிருந்தால் உன்னிடம் பாபம் ஒட்டாது என்று விஷ்ணு கூறியதாக சிவன் பார்வதியிடம் கூறினார். இதை கேட்ட பார்வதி குற்றமற்ற தேவர் தலைவனே பகவத்பக்தியற்ற அந்தணர்களாலே சொல்லப்பெற்ற தாமஸ சாஸ்த்திரங்களை வரிசையாய் கூறுவிராக. அதற்கு சிவப்பிரான் தேவியே தாமஸ சாஸ்த்திரங்களை கூறுகிறேன் கேளாய். இந்தத் தாமஸ சாஸ்த்திரங்களை நினைத்தால்கூட அறிவாளிகளுக்கும் பதிதத்தன்மை ஆவான் அதாவது பாவியாக ஆவான். முதன்முதலில் பாசுபதம் முதலான சைவாகமங்கள் என்னும் சிவபூஜை பஸ்மம் பூசுதல் என்னால் நேரே சொல்லப்பட்டன. என் சக்தியால் ஆவேசிக்கப்பட்ட அந்தணர்கள் தாமஸ சாஸ்த்திரங்களை உபதேசிக்கப் பட்டவைகளை இனி கேள். வைஸேஷிகம் என்னும் பெரிய ஸாஸ்திரம் கணாதராலே கூறப்பட்டது. கௌதமராலே ந்யாயஸாஸ்திரம் கூறப்பட்டது. இவ்விரண்டும் பரமாணுவை ஜகத்காரணமாகச் சொல்கின்றன. கபிலரால் மூலப்ரக்ருதி ஜகத்காரணமாகச் சொல்லும் ஸாங்க்ய ஸாஸ்திரம் செய்யப்பட்டது. தேவகுருவான பிருஹஸ்பதியால் மிகத் தாழ்ந்ததான சார்வாக ஸாஸ்திரம் இயற்றப்பட்டது. திரிபுராசுரர்களை அழிப்பதற்காக புத்தாவதாரம் எடுத்த விஷ்ணுவாலே நக்னம் நீலபடம் முதலான பிரிவுகளை உடைய பௌத்தம் என்னும் தீயஸாஸ்திரம் உபதேசிக்கப்பட்டது. மாயாவாதம் என்னும் தீயஸாஸ்திரம் மறைந்து நிற்கும் பௌத்தமதம் எனப்படுகிறது. கலியுகத்தில் (ஆதிசங்கராக) அந்தணவுருக் கொண்ட என்னாலேயே அது சொல்லப்பட்டது. வேதவாக்யங்களுக்கு அனைவரும் இகழத்தக்க அவப்பொருள்களை அந்த மாயாவாதம் காட்டும். அந்த மதத்தில் கர்மத்திற்கு ஸ்வரூபத்யாமமே சொல்லப்படும். அதில் எல்லாக் கர்மங்களினின்றும் நீங்கிய ஸந்யாஸமே சொல்லப்படும். அதில் ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் என்னால் ஸ்வரூபைக்யம் என்னும் ஒரே தன்மையும் பரமாத்மாவுடன் ஒன்றாகிவிடுதல் கூறப்படுகிறது. ப்ரஹ்மத்திற்கு நிர்குணஸ்வரூபம் என்ற குணமும் உருவமும் இல்லை என்று சொல்லப்பட்டது. கலியுகத்தில் தீயவர்கள் அனைவரும் மயங்குவதற்காக சாஸ்த்திரத்திற்கு எதிரான இந்தப் பெரிய ஸாஸ்திரம் வேதார்த்தம் போலே என்னால் வஞ்சனையால் அவர்களை அழிப்பதற்காக ரக்ஷக்கப்படப்போகிறது. நைமிநி என்னும் அந்தணராலே பூர்வபாகமாகிற பெரிய ஸாஸ்திரம் நிரீஸ்வரவாதம் செய்யப்பெற்று அவப்பொருளுடையதாகச் செய்யப்பட்டது.