இஸ்லாம் - 110 கோடி இசுலாம் - இறைவன் ஒருவனே
அல்லா • ரசூல் (சல்)
மலக்குகள் • இறைதூதர்கள்
மறுமை • கலாகத்ர்
இறை நம்பிக்கை • தொழுகை நோன்பு • ஜக்காத்து • ஹஜ்ஜு இஸ்லாமிய வரலாறு • சஹாபா
குர்ஆன் • ஹதீஸ்
இசுலாம் அல்லது இஸ்லாம் ( الإسلام, அரபு: الإسلام; al-'islām, Islam) என்பது ஏழாம் நூற்றாண்டில் சவுதி அரேபியாவில் தோன்றிய சமயமாகும். இது கிறித்தவம், யூதம் போன்று ஒரு ஆபிரகாமிய சமயம் ஆகும். இச் சமயம் முகம்மது நபி என்பவரால் பரப்பப்பட்டது.இசுலாமின் மூலமான திருக்குர்ஆன் இவரை முதல் மனிதர் ஆதாம் தொடக்கம் அனுப்பப்பட்டு வந்த இறை தூதர்களில் இறுதியானவராக அடையாளப்படுத்துகிறது. உலகம் முழுவதும் 180 கோடி மக்கள் இச் சமயத்தைப் பின்பற்றுகிறார்கள். இசுலாம் கிறித்தவத்துக்கு அடுத்தபடியாக உலகில் இரண்டாவது பெரிய சமயமாகும்.
சொல்-வேர்: இஸ்லாம் , மூன்று வேர் கொண்ட ஸ்-ல்-ம் கொண்ட ஒரு வினை பெயர் சொல் . அது அராபிய வினைச் சொல் `அஸ்லாமா` விலிருந்து திரிபு ஆகிரது. அஸ்லாமா ஏற்றுக்கொள்ளுதல், சரணடைதல், கீழ்படிதல் முதலிய பொருள்களில் வரும். அதனால் இஸ்லாம் கடவுளை ஒத்துக் கொண்டு சரணடைதல் ஆகும்,; நம்பிக்கையாளர்கள் கடவுளை வணங்கி நம்பிக்கையை காட்டி, அவர் கட்டளைகளை நிறைவேற்றி, பலதெய்வ வணக்கத்தை ஒதுக்க வேண்டும். இஸ்லாம் என்ற சொல் குரானில் பல பொருள்களை கொடுக்கப் பட்டுள்ளது. சில செய்யுள்களில் (ஆயாத்துகள்), இஸ்லாம் உள் மனத்தின் திட நம்பிக்கையாக அழுத்தம் கொடுக்கப் பட்டுள்ளது. ”யாரை கடவுள் மார்கதர்சனம் காட்ட விரும்புகிறாரோ, அவர்களுக்கு கடவுள் தன் மனதை திறக்கிரார்”. மற்ற செய்யுள்கள் இஸ்லாத்தையும் மார்கத்தையும் ஒன்றாக்குகிரன,. “இன்று நான் உன் மார்கத்தை செம்மையாக்கிவிட்டேன்; உன் மீது என் ஆசியை முடிவுற்றேன், உனக்கு இஸ்லாத்தை மார்கமாக ஆக்கினேன்”. சொல்லளவில் மார்கத்தை வறுப்புருத்துவதர்கு மேலே போய், இன்னும் சில செய்யுள்கள் இஸ்லாத்தை கடவுள் பக்கம் திரும்புவதற்க்கு ஈடாக்குகிரன. இஸ்லாமிய சிந்தனையில், இஸ்லாம் இமான் (நம்பிக்கை), இஹ்சான் (செம்மை) உடன் மூன்றாவதாக சொல்லப் படுகிரது.அது இஸ்லாம் கடவுள் வணக்க செயல்கள் (இபாதாஹ்) மற்றும் இஸ்லாமிய நீதி (ஷரியா) இவற்றை காண்பிக்கிரது.
இசுலாமிய நம்பிக்கை இசுலாமின் நம்பிக்கையின்படி இந்த பிரபஞ்சத்திலுள்ளவைகள் அனைத்தும் இறைவனால் படைக்கப்பட்டதாகும். மேலும் அடிப்படையில் நம்பிக்கைக் கொள்ள வேண்டிய விடயங்கள் ஆறாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அவைகளாவன;
இறைவன் ஒருவனே அவனது தூதர் முஹம்மத் (சல்) அரபு மொழியில் "லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்" என கூறப்படும் "வணக்கத்துக்குரிய நாயன் ஏக ஒருவனைத் தவிர வேறு இல்லை; முஹம்மது (சல்) அவர்கள் இறைவனின் திருத்தூதர் ஆகும்" என்பதை உளப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதே இஸ்லாமியர் என்பதற்கான அடிப்படை தகுதியாகும்.இதை உறுதிபட ஏற்றுக்கொண்டவன் திருக்குர்ஆனிலுள்ள ஏனைய மறைவான விடயங்களை ஏற்றுக்கொள்வது கடமையாகிறது.
மலக்குகள். மனிதனது புலனுறுப்புகளால் புரிந்து கொள்ள முடியாத, இறைவனது கட்டளைகளை செயல்படுத்துவதற்காக மட்டும் ஒளியைக் கொண்டு படைக்கப்பட்ட சக்திகளை (திருகுர்ஆன் பிரயோகம்மலக்குகள்) நம்புவது.
முன்னைய வேதங்கள். முகம்மது (சல்) அவர்களுக்கு முன்னர் வாழ்ந்த இறைதூதர்களுக்கு வேதங்கள் கொடுக்கப்பட்டது உண்மையே என நம்புதல்.
முன்னைய இறைதூதர்கள். முன்னர் வாழ்ந்த இறைத்துதர்களை நம்புவது. திருக்குர் ஆன் பின்வருமாறு கூறுகிறது: அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் நம்முடைய தூதர் வராத எந்தச் சமுதாயத்தினரும் பூமியில் இருக்கவில்லை(திருக்குர்ஆன்: அல்-பாதிர்: 24)இவ்வாறு கூறப்பட்டவர்களில் 25 தூதர்களுடைய பெயர்கள் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளன.
இறப்பின் பின் வாழ்க்கை. இறப்பிற்கு பின்னுள்ள வாழ்க்கையை நம்புவது. திருக்குர் ஆன் பின்வருமாறு கூறுகிறது: இறந்தவர்களை அல்லாஹ் (உயிர்ப்பித்து) எழுப்ப மாட்டான் என்று அவர்கள் அல்லாஹ்வின் மீது பிரமாணமாகச் சத்தியம் செய்கிறார்கள். அப்படியல்ல! (உயிர் கொடுத்து எழுப்புவதான அல்லாஹ்வின்) வாக்கு மிக்க உறுதியானதாகும். எனினும் மக்களில் பெரும்பாலோர் இதை அறிந்து கொள்வதில்லை(திருக்குர்ஆன் 16:38.).
விதி. "கலாகத்ர்" என திருக்குர் ஆனில் கையாளப்பட்டுள்ள இச்சொல் தமிழில் "விதி" என மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. பிரபஞ்சத்திலுள்ள அனைத்தும் இறைவன் வகுத்த விதியின் அடிப்படையிலேயே செயல்படுகின்றன என இதற்கு விளக்கம் தரலாம். இவ்விதி குறித்து திருக்குர்ஆன் கூறும் போது "உனக்குக் கிடைக்கும் எந்த நன்மையும் அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கிறது (இது இறைவன் ஏற்படுத்தியுள்ள நியதி). இன்னும், உனக்கு ஏதாவது ஒரு தீங்கு ஏற்பட்டால் அது உன்னால் தான் வந்தது. (நபியே!) நாம் உம்மை மனிதர்களுக்கு (இவற்றை எடுத்துக் கூறுவதற்காகத்) தூதராகவே அனுப்பியுள்ளோம் - அல்லாஹ்வே போதுமான சாட்சியாக இருக்கின்றான்.(4:79)" என கூறுகிறது. இதன் விளக்கமானது காரணங்களிலாமல் காரியங்களில்லை என்பதாகும் ஆகும். உதாரணம் : ஒருவன் வீதியை கடக்க எத்தனிக்கிறான்; அந்நேரம் குறுக்கே ஒரு வாகனம் வருகிறது. அவன் சிந்தித்து நிதானித்து கடப்பானானால் அவனுக்கு காயம் ஏற்படாது என்பதே விதி. மாறாக, அவனது அறிவு குறைபாட்டினால் வாகனத்தின் முன் செல்வானானால் அவனுக்கு காயம் ஏற்படும் என்பதே விதி.
திருக்குர்ஆன் திருமறை - குரான்.திருக்குர்ஆன் என்பது முகம்மது நபிக்கு இறைவனால் அருளப்பட்ட வேதம் ஆகும். இதில் உள்ள அனைத்து வாக்கியங்களும், சொல்களும் இறைவனால் கூறப்பட்டவைகள் ஆகும். இதை இறைவன், மலக்குகள் தலைவன் சிப்ரயீல் (அலை) அவர்கள் மூலமாக முகம்மது நபிக்கு அறிவித்தான். குரானே உலகின் உள்ள அனைத்து புனிதங்களுள் புனிதமானது ஆகும். இசுலாமிய கடமைகள் கடமைகள் என பார்க்கும்பொழுது இஸ்லாம் பல கடமைகளை மக்களுக்கு கொடுத்துள்ளது. இவைகளின் மிக முக்கியமான ஐந்து கடமைகள் இஸ்லாத்தின் ஐந்து தூண்கள் என விளிக்கபடுகின்றன . மற்ற கடமைகள் பொதுவாக ஷரியத் சட்டங்கள் என அழைக்கப்படுகின்றன.
நம்பிக்கை (கலிமா) சவூதி அரேபியா நாட்டு கொடியில் பொறிக்கப்பட்டிருக்கும் இஸ்லாமின் அடிப்படை கலிமா "இறைவன் ஒருவனே. அவனே அல்லாஹ், முஹம்மது அவரது தூதர்." என மனதளவில் ஒவ்வொறு முஸ்லிமும் நம்பவேண்டும்.இது இறை நம்பிக்கை (ஈமான் ) என அழைக்கபடுகிறது. இதுவே இசுலாமின் முதல் மற்றும் மிக முக்கியமான கடமை ஆகும். இந்த நம்பிக்கை கொண்ட ஒருவனே இசுலாமியன் ஆகிறான்.
பிரார்த்தனை (தொழுகை) 1865ம் ஆண்டு ஓவியம் - எகிப்து தலைநகர் கெய்ரோவில் தொழுகை புரியும் இசுலாமியர்கள். ஒவ்வொரு முஸ்லிமும் தினமும் ஐந்து முறை தொழுகை நடத்த வேண்டும். மேலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் மற்றவர்களுடன் சேர்ந்து கூட்டமாக ஜும்மா தொழுகையை நிறைவேற்ற வேண்டும். நோயாளிகள் , எட்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், தீட்டு பட்ட பெண்கள் மற்றும் பிரயாணம் செய்பவர்கள் ஆகியோருக்கு மட்டுமே இந்த ஐந்து வேளை தொழுகையில் இருந்து விலக்கு அளிக்கப்படுகின்றது.
நோன்பு ஒவ்வொரு முஸ்லிமும் கண்டிப்பாக ரமலான் மாதத்தில் பகல் வேளையில் உண்ணா நோன்பு இருந்தும், இரவில் கண் விழித்து இறைவனை துதித்த வண்ணமும் இருக்க வேண்டும். நோயாளிகள் , எட்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், தீட்டு பட்ட பெண்கள் மற்றும் பிரயாணம் செய்பவர்கள் ஆகியோருக்கு மட்டுமே இந்த இருந்து விலக்கு அளிக்கப்படுகின்றது.
தானம் (ஜக்காத் - Jakkath) ஒவ்வொரு முஸ்லிமும் ஆண்டுக்கு ஒருமுறை தனது மொத்த செல்வத்தில் நாற்பதில் ஒரு பங்கை(௧௦௦ க்கு ௨.௫௫) ஏழை எளியோருக்கு தானம் செய்ய வேண்டும். மொத்த சொத்து 85 கிராம் தங்கத்திற்கும் அல்லது 595 கிராம் வெள்ளிக்கும் குறைவாக இருக்கும் ஒருவனுக்கு இந்த கட்டாய தானம் கடமை ஆகாது.
புனித பயணம் (ஹஜ்)
புனித காபா வசதி வாய்ப்பு படைத்த ஒவ்வொரு முஸ்லிமுக்கும், தனது வாழ்நாளில் ஒருமுறை உலகின் முதல் ஆலயமான சவுதி அரேபியாவின் மக்கா நகரில் உள்ள காபாவை தரிசிப்பது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மற்ற நான்கு கட்டாய கடமைகளில் இருந்து இதற்கு சற்று தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது. சாமானிய மற்றும் நோய்வாயப்பட்ட மக்களுக்கு இந்த கடமையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.பயணம் செய்ய உடல் தெம்பும் பொருளாதாரமும் உள்ளவர்களுக்கே இது கடமை.
இசுலாமிய மற்ற கடமைகள்
இறைவனை நினைவுகூர்தல் இசுலாம் தனது மக்களை, தமது வாழ்வில் அனைத்து நிலைகளிலும் இறைவனை நினைவு கூற வழியுருத்துகிறது.நம்மையும் அண்ட சராசரங்களையும்,மற்றும் அணைத்து உயிருள்ள,உயிரற்ற..அசையக்கூடிய,அசையாத படைப்புகளை படைத்து,உணவளித்து,பரிபாலனம் செய்து...வழி நடத்தும் வல்லமை வாய்ந்த இறைவனை நம்மால் பார்க்க முடியாவிட்டாலும்,அவன் சதாவும் நம்மை அவதானித்துக் கொண்டிருக்கிறான் என்ற சிந்தனையை..அதன் அச்சப்பாட்டை உள நிறுத்துவது!.. இது மக்களை பாவம் செய்வதில் இருந்து தடுப்பதாக இசுலாம் கூறுகின்றது. இதன்படி ஒவ்வொரு இசுலாமியரும் மற்ற இசுலாமியரை பார்க்கும்பொழுது அஸ்ஸலாமு அலைக்கும் ( உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்) என கூறவேண்டும். இவ்வாறே ஒருவர் சந்தோசமாக இருக்கும் பொழுது அல்லாஹு அக்பர் (இறைவன் மிகப்பெரியவன்) என்றும் துக்கமாக இருக்கும்பொழுது இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன் (நாம் இறைவனிடம் இருந்தே வந்தோம், மேலும் அவனிடமே திரும்பிசெல்பவர்களாக இருக்கிறோம்) என்றும் கூற வேண்டும். இவ்வாறு தும்மும்போதும், கொட்டாவி விடும் பொழுதும், பிறருக்கு உதவி செய்யும் பொழுதும், பிறருக்கு நன்றி சொல்லும் பொழுதும் என அனைத்து நிலைகளிலும் இறைவனை நினைக்க வேண்டும். மேலும் பொதுவாக எந்த செயலை செய்ய ஆரம்பிக்கும் பொழுதும் பிஸ்மில்லாஹ் (இறைவனின் திருப்பெயரால்) என கூறி ஆரம்பிக்கவேண்டும்.
உணவு மற்றும் உடை உணவுகளில் விலக்கப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். இவை ஹராம் என வழங்கப்படுகின்றன. பன்றி இறைச்சி, குருதி, மாமிசந்தின்னிப் பறவைகளின் இறைச்சி, சாராயம் போன்றவை ஹராமான உணவுகள் ஆகும். பொதுவாக அனைத்து சைவ உணவுகளும், தாவர உண்ணிப் பறவைகளின் இறைச்சியும், மீன் வகைகளும் ஹலால் என அழைக்கப்படுகின்றன. இதற்கு 'அங்கீகரீக்கப்பட்டவை' எனப் பொருளாகும். உடைகளைப் பொருத்தவரை ஆண்கள் எளிமையான மற்றும் வெண்மையான ஆடைகளை அணிய அறிவுறுத்தப்பட்டனர். மேலும் கைகளில் மணிக்கட்டு வரையும் கால்களில் கணுக்கால் வரையிலும் ஆடை அணிய அறிவுறுத்தப்பட்டனர். பட்டாடைகள் அணிவது ஆண்களுக்கு தடைசெய்யப்பட்டுள்ளது. பெண்களைப் பொருத்த வரையில் அவர்கள் உடல் முழுவதையும் மறைக்கும் படி ஆடை அணிய அறிவுறுத்தப்பட்டனர். ஆனால் முகத்தை மறைப்பது கட்டாயமாக்கப்படவில்லை.
இசுலாமிய வரலாறு இசுலாமிய வரலாற்றைப் பொருத்தமட்டில், அது முகம்மது நபியால் அறிவிக்கப்பட்ட நாள் முதல் வளர்ச்சியையே கண்டுள்ளது. முகம்மது நபியின் வாழ்நாளிலேயே அது அரேபிய தீபகற்ப்பம் முழுவதும் பரவியது. அவ்வாறு பரவிய அனைத்து இடங்களும் முகம்மது நபியின் ஆட்சியின் கீழ் வந்தது. இது தவிர மற்ற பகுதிகளிலும் இசுலாம் பரவ தொடங்கியது. முகம்மது நபிக்கு பிறகு வந்த ரசூத்தீன் கலிபாக்கள், உமய்யா கலிபாக்கள், அப்பாசிய கலிபாக்கள், ஒட்டாமன் பேரரசு மற்றும் பல இசுலாமிய பேரரசுகளின் காரணமாக இசுலாம் உலகின் அனைத்து பகுதிகளிலும் பரவியது. இந்த இடைப்பட்ட காலங்களில் இசுலாம் தனது புகழ்நுனியை அடைந்தது. இதன் பிறகு ஐரோப்பிய காலணி ஆதிக்கங்களின் காரணமாக ஒட்டாமன் பேரரசு மற்றும் மொகலாய பேரரசுகல் வீழ்ச்சியை சந்தித்தன. இது இசுலாமிய வளர்ச்சியில் ஒரு தேக்கத்தை ஏற்படுத்தியது. இதன் பிறகும் 20ம் நூற்றாண்டில் இசுலாம் தனக்கான தனித்தன்மையோடு தொடருகின்றது.
குடும்பமுறை குடும்பங்களை பொருத்தமட்டில் கணவனே குடும்ப தலைவன் ஆவான். குடும்பத்தின் பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்வது அவனது கடமை ஆகும். மனைவி அவனது உரிமையில் நிகரானவலாக இருக்கிறாள். ஒரு ஆண் அதிகப்பட்சம் நான்கு மனைவிகளை திருமணம் செய்யலாம். ஆனால் அதர்க்கு முன்பு அவன் நான்கு பெண்களையும் மனதளவிலும், பொருளாதார அளவிலும் சமமாக நடத்தும் பக்குவமும், வசதியும் பெற்றிருக்கவேண்டியது கடமையாகின்றது. ஆனால் பெண் ஒரு நேரத்தில் ஒரே கணவனுடன் வாழ மட்டுமே அனுமதி உள்ளது. மேலும் விதவை மறுமணமும் அங்கீகரீக்கப்பட்டுள்ளது .
இசுலாமிய விமர்சனங்கள் விமர்சனங்கள் என்று பார்க்கும்பொழுது பொதுவாக எல்லோராலும் சில செயல்கள், நிகழ்வுகள் முன்வைக்கப்படுகின்றன. அவற்றில் முக்கியமானவை தீவிரவாதம், பெண்ணடிமைவாதம் ஆகியவை ஆகும். பொதுவாக மேலோட்டமாக பார்க்கும் பொழுது, இசுலாம் மேற்கூறிய இந்த செயல்களை ஆதரிப்பது போல் தோன்றும். ஆனால் எல்லா மதங்களை போலவே இசுலாமும் இவற்றை தீவிரமாக எதிர்க்கிறது. தீவிரவாதத்தை பொருத்தவரை, அது சில இக்கட்டான சூழ்நிலைகளில் எகாதிபத்திய சக்திகளை எதிர்த்து தோன்றியது. எடுத்துக்காட்டு இசுரேல்-பாலசுத்தீனம் சிக்கல். ஆனால் இந்த போராட்டங்கள், சில பழமைவாதிகளின் தலைமையின் கீழ் செல்ல ஆரம்பித்த பொழுது அது தீவிரவாதமாக மாறியது. பொதுவாக ஆப்கானிசுத்தான், பாக்கிசுத்தான், இந்தியா போன்ற நாடுகளில் வசிக்கும் இசுலாமியர்களின் வறுமையும், அறியாமையும் அவர்களை தீவிரவாதத்தின் பக்கம் செலுத்துகின்றன. பாபர் மசூதி இடிப்பு, அமெரிக்காவின் இராக்கிய மற்றும் ஆப்கானிய ஆக்கிரமிப்பு, இசுரேல் சிக்கல் போன்றவையும் இந்த மக்கள் தீவிரவாதத்தின் பக்கம் சாய காரணங்களாக ஆகின. ஆனால் இசுலாம் இதை போன்ற தீவிரவாத செயல்களை, குறிப்பாக வெடிகுண்டு வைத்து அப்பாவிகளை கொள்ளுதல், தற்கொலைப்படை தாக்குதல் ஆகியவற்றை வன்மையாக எதிர்க்கிறது. இதற்கு எடுத்துக்காட்டாக, இசுலாமின் முதல் போரானா பத்ரு போரை கூறலாம். இந்த போரில் தாங்கள் தோற்றால் இசுலாம் மதமே அழிந்துவிடும் என்ற இக்கட்டான நிலையிலும், முகம்மது நபி தங்கள் படை வீரர்களுக்கு (அதுவரை மிகவும் கொடூரமாக போர் புரிந்துவந்தவர்களுக்கு) கீழ்க்கண்ட முக்கியமான கட்டளைகளை பிறப்பித்தார்கள்.
பெண்கள், குழந்தைகளை வயதானவர்களை எந்த இக்கட்டான நிலையிலும் கொல்லக்கூடாது.
மரங்களை வெட்டக்கூடாது
நீர்நிலைகளை நாசப்படுத்த கூடாது.
சரணடைந்தவர்களை கொல்லவோ, துன்புறுத்தவோ கூடாது
மேற்கூறிய இந்த கட்டளைகளை பத்ரு போரில் மட்டும் அல்லாது அதன் பிறகு நடந்த அனைத்து போர்களிலும் முகம்மது நபி அவர்கள் கடைப்பிடித்தனர். மேலும் இவற்றையே இசுலாமின் போர் சட்டங்களாகவும் அறிவித்தார். இது ஒன்றே இன்றைய தீவிரவாதத்திர்க்கும், இசுலாமுக்கும் இடையே உள்ள பெரிய இடைவெளியை காட்டுகின்றது. மேலும் தற்கொலை செய்வதும் இசுலாமில் மிகப்பெரிய பாவமாக சொல்லப்பட்டுள்ளது. எந்த அளவுக்கு என்றால் இறைவனுக்கு இணை வைக்கும் அளவுக்கு சமமான மன்னிப்பே இல்லாத பாவமாக கூறப்பட்டுள்ளது. ஒரு போரில் மிகவும் காயம் பட்டு, வலி தாங்கமுடியாமல் தற்கொலை செய்து கொண்ட ஒருவரின் இறுதி பிரார்த்தனையில் கலந்துகொள்ள மறுத்த முகம்மது நபி 'அவர் நரகத்திர்க்கே செல்வார்' என்றும் கூறினார். பெண்ணடிமை என்பதும், சில பழமைவாதிகளால் பரப்பப்பட்டதே ஆகும். இசுலாம் ஆணுக்கு நிகரான உரிமையை பெண்ணுக்கும் கொடுத்துள்ளது. பெண்கள் உடல் மறையும்படி ஆடை உடுத்துவது, ஒரு கணவன் ஒரே நேரத்தில் நான்கு பெண்களை மணப்பது ஆகியவற்றைத் தவித்த அநேக பழக்கங்கள் (பெண்கல்வி மறுப்பு, முத்தலாக் முறை) இசுலாம் ஆதரிக்காத விசயங்களே ஆகும்.

இசுலாமியப் பிரிவுகள்.
இசுலாமியப் பிரிவுகள். இசுலாம் மதம் பொதுவாக சன்னி மற்றும் சியா என்ற இரண்டு பெரும் பிரிவாக உள்ளார்கள். இதை தவிர சுஃபி போன்ற சில பிரிவுகளும் உள்ளன.
சன்னி இசுலாம்சன்னி இசுலாம், இசுலாமிய பிரிவுகளில் உள்ள மிகப்பெரிய உட்பிரிவு ஆகும். இது மொத்த இசுலாமிய மக்கள் தொகையில் 85 சதவிகிதத்தை கொண்டுள்ளது. சன்னி என்பதற்கு அராபிய மொழியில் 'முகம்மதை பின்பற்றுதல்' என்று அர்த்தமாகும்.இராக் மற்றும் இரான் ஆகிய நாடுகளை தவிர்த்து மற்ற அனைத்து இசுலாமியர்கள் வாழ் நாடுகளிலும் சன்னி இசுலாம் பெரும்பான்மையாக உள்ளது. இந்த பிரிவு தன்னகத்தே மேலும் நான்கு உட்பிரிவுகளை கொண்டுள்ளது. ஃஅனபி, சாபி, மாலிக்கி மற்றும் ஃஅம்பிலி என்ற இவைகள் மத்ஃகப்புகள் என அழைக்கப்படுகின்றன. மற்ற பிரிவுகளைவிட சன்னி இசுலாமே, தீவிரமாக இசுலாமிய கொள்கைகளை பின்பற்றுகின்றது.
சன்னி இஸ்லாம்(Sunni Islam) என்பது இஸ்லாமிய பிரிவுகளில் ஒரு முக்கியமான உட்பிரிவாகும். இதுவே மிகப் பெரிய பிரிவும் ஆகும். சுன்னி என்ற வார்த்தை சுன்னா என்ற அரபு வார்த்தையில் இருந்து வந்ததாகும். இதற்கு முகம்மது நபியின் வழிமுறை என்பது அர்த்தமாகும். இஸ்லாம் மதத்தை மக்களிடையே பரப்பிய முகம்மது நபி (ஸல்) அவர்கள், அதன் பொருட்டு இன்றைய சவூதி அரேபியாவில் உள்ள மதீனா நகரை தலைநகராக கொண்டு ஒரு இஸ்லாமிய பேரரசை நிறுவினார்கள். அந்த பேரரசை மிக திறம்பட ஆட்சி செய்த அவர்கள் 632-ம் ஆண்டு காலமானர்கள். அதன் பிறகு அந்த அரசை யார் நிர்வகிப்பது என்ற கேள்வி எழுந்தது. அப்போது அபூபக்கர் (ரலி) அவர்கள், மற்ற முஸ்லிம்களால் முழுமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இவர் முகம்மது நபிக்கு மிகவும் பிரியமான நண்பரும், பெண் கொடுத்த மாமனாரும் ஆவார். மேலும் முகம்மது நபியின் வாழ்நாளிலேயே, அனைத்து இடங்களிலும் அவருக்கு அடுத்த அதிகாரத்தில் இருந்தது இவரே ஆகும். இவரே முஸ்லிம்களின் முதல் கலீபா ஆவார். இவருக்கு பிறகு உமர் (ரலி) என்பவர் இரண்டாவது கலீபாவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். கலீபாக்களின் கீழ் இஸ்லாமிய பேரரசு முகம்மது நபியின் கீழ் பேரரசு, 622-632 ராஷிதீன் கலீபாக்கள் கீழ் பேரரசு, 632-661 உமய்யா கலீபாக்கள் கீழ் பேரரசு , 661-750 634-ம் ஆண்டு கலீபாவாக தேர்ந்தெடுக்கப்பட்ட உமர் (ரலி) அவர்கள், ஒன்பது ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்த நிலையில் 644-ம் ஆண்டு ஆபு லுலுவா என்ற பாரசீகனால் கொல்லப்பட்டார். இதற்கு இடைப்பட்ட அவரது ஆட்சி காலத்தில், அவர் கடைப்பிடித்த கடுமையான சட்டங்களால் அதிருப்தி அடைந்த ஒரு கூட்டத்தினர் இவருக்கு பிறகு அலீ (ரலி) என்பவர் ஆட்சிக்கு வரவேண்டும் என்று விரும்பினர். இவர்கள் ஷீஆ அல்-அலி கூட்டத்தார் என அழைக்கப்படுகின்றனர். ஆனால் அலி (ரலி) அவர்களை விட மூத்தவரான உதுமான் (ரலி) என்பவர் அடுத்த கலீபாவாக வரவேண்டும் என்று பெரும்பன்மயான முஸ்லிம்கள் விரும்பினர். இதன் பேரில் சிலர் கூடி அலி (ரலி) அவர்களின் சம்மதத்தோடு உதுமான் (ரலி) அவர்கள் மூன்றாவது கலிபாவாக தேர்ந்தெடுத்தனர். பின்பு கடைசியாக உஸ்மான் (ரலி) அவர்களின் மறைவுக்கு பிறகு அலி (ரலி) அவர்கள் நான்காவது கலீபாவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது ஆட்சி காலத்தில் இவருக்கு எதிராக மிகப்பெரிய அதிருப்திக் கூட்டம் ஒன்று உருவாகியது. இவர்கள் காரிஜிய்யா கூட்டத்தார் என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் உஸ்மான் (ரலி) அவர்கள் முகம்மது நபி (ஸல்) அவர்களுக்கு எதிரானவர் என்ற தோற்றத்தை மக்களிடையே பரப்பினார். மேலும் முகம்மது நபி (ஸல்) அவர்களை மிகவும் அதிகமாக உயர்த்தி இறைவனுக்கு சமமானவர் என்றும் கூறத்தொடங்கினர். இதனால் அதிருப்தி அடைந்த ஷீஆ அல்-அலி கூட்டத்தார் பதிலுக்கு அலி (ரலி) அவர்களை மிகவும் அதிகமாக உயர்த்தி இறைவனுக்கு சமமானவர் என்றும் கூறத்தொடங்கினர். மேலும் முகம்மது நபி (ஸல்) அவர்களை திட்டவும் தொடங்கினர். இதனால் கோபமுற்ற மற்ற, காரிஜிய்யா கூட்டத்தார் அல்லாதவர்களும் ஷீஆ அல்-அலி கூட்டத்ததாரை வெறுக்க தொடங்கினர். இவர்கள் தங்களை காரிஜிய்யா மற்றும் ஷீஆ அல்-அலி கூட்டத்தாரிடம் இருந்து வேறுபடுத்தி உதாரண நபிவழி கூட்டம் என பொருள்படும்படி சன்னி முஸ்லிம் என அழைத்துக்கொண்டனர். இவ்வாறே சன்னி இஸ்லாம் பிரிவு தொடங்கியது.
நம்பிக்கைகள் மற்றும் கொள்கைகள். உலகின் மிக பழமையானதாக கருதப்படும் திருமறை - உதுமான் (ரலி) காலத்தது சுன்னி முஸ்லிம்கள் திருமறை மற்றும் முகம்மது நபியின் வழியை மட்டும் பின்பற்றுகின்றனர். திருமறையில் அல்லாஹ் கூறிய வாழ்க்கை, வழிபாட்டு, சட்ட முறைகள் மற்றும் முகம்மது நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் ஆகியவற்றை மற்றும் தங்கள் வாழ்க்கையில் மேற்கொள்கின்றனர். இவர்களின் நம்பிக்கைப் படி முகம்மது (ஸல்) அவர்களே இறுதி நபி. அலி (ரலி) அவர்கள் ஒரு ஸஹாபி (நபி தோழர்) மட்டுமே அன்றி வேறு எந்த தெய்வ சக்தியும் கொண்டவர் அல்லர். மேலும் முகம்மது நபி குடும்பத்தாருக்கும் தெய்வ சக்தி கிடையாது.
சட்ட தொகுப்புகள். இச்சட்ட தொகுப்புகளை இயற்றியவர்கள் எட்டாம் நூற்றாண்டில் கிட்டத்தட்ட சமகாலத்தில் வாழ்ந்த மார்க்க அறிஞர்களாகும். இவர்கள் வாழ்ந்த காலத்தில் இஸ்லாம் பரவலாக வியாபித்திருந்ததாலும், நேரடியாக சமய சட்டங்களைப் பெறுவதில் அக்காலத்தைய தூர பிரதேச மக்கள் சிக்கல்களை எதிர்கொண்டதாலும் அவ்வப் பிரதேசங்களில் வாழ்ந்த மார்க்கம் கற்றறிந்த அறிஞர்கள் திருக்குர்ஆன் மற்றும் முகம்மது நபி (சல்) அவர்களின் வழிகாட்டல்களிலிருந்தும் சட்டங்களை தொகுத்து வழங்கும் தன்னலம் கருதாத சேவைகளை செய்தனர். எனினும் இவர்கள் தொகுத்தளித்த சட்டங்களின் மூலங்கள் பிற்காலத்தில் பெரிதும் பாதுகாக்கப்படவில்லை என்பதாலும், இச்சட்டங்களை தொகுத்தளித்தவர்களது அனுமதியினாலும் தொகுக்கப்பட்டுள்ள சட்டங்களை திருக்குர்ஆன், மற்றும் முகம்மத் நபி (ஸல்) அவர்களுடைய வழிகாட்டல்களுடன் ஒப்பிட்டு உறுதிப்படுத்த வேண்டியது கடமையாக முஸ்லிம்களால் நோக்கப்படுகிறது. இவ்வாறான சட்ட தொகுப்பாளர்கள் நால்வர் இன்றும் அனைத்து முஸ்லிம்களாலும் மதிக்க கூடியவர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுடைய சட்டத்தொகுப்புகளாவன; ஹனபி, ஷாபி, மாலிக்கி மற்றும் ஹம்பலி என்பனவைகளாகும். இச்சட்டத் தொகுப்புகள் அரபியில் மத்ஃகப்(المذاهب) என அழைக்கப்டுகின்றன.
ஹனபி மத்ஹப் இச்சட்டத்தொகுப்பு இவர் 702-ல் இராக்கில் பிறந்த "இமாம் அபூ ஹனிபா" என்பவரால் தொகுக்கப்பட்டது. தாம் தொகுத்த சட்டம் பற்றி இவர்கள் கூறியுள்ளதாவது. "எந்த ஆதாரத்தின் அடிப்படையில் நாம் முடிவு செய்தோம் என்பதை அறியாமல் எங்கள் சொல்லை எடுத்து நடப்பது எவருக்கும் ஆகுமானது (ஹலால்) இல்லை.". அல்லாஹ்வுடைய வேதத்துக்கும் (குர்ஆனுக்கும்) நபி(ஸல்) அவர்களின் சொல்லுக்கும் மாற்றமான ஒன்றை நான் சொன்னால், என் சொல்லை விட்டு விடுங்கள்!. இந்த மத்ஹப் இந்தியா, பாகிஸ்தான், பங்காளதேஷ், ஆப்கானிஸ்தான், துருக்கி, இராக், ரஷ்யா, மத்திய ஆசிய மற்றும் பால்கன் பகுதிகளிலும் உள்ள முஸ்லிம்களால் பின்பற்றப்படுகின்றது.
ஷாபி மத்ஹப் இச்சட்டத்தொகுப்பு "முகம்மது இப்னு இத்ரிஸ் அஸ்-ஷாபி" என்பவரால் தொகுக்கப்பட்டது. தாம் தொகுத்த சட்டம் பற்றி இவர்கள் கூறியுள்ளதாவது. எவராக இருந்தாலும் அவரை விட்டும் ரஸூல்(ஸல்) அவர்களின் வழிமுறைகளில் ஏதேனும் (சில) தவறி விடத்தான் செய்யும். நான் ஏதேனும் ஒரு சொல்லைச் சொல்லும் போது, அல்லது ஏதேனும் ஒரு அடிப்படையை வகுத்துத் தரும்போது, அல்லாஹ்வின் திருத்தூதருடைய கூற்றுக்கு மாற்றமாக அது இருந்தால், ரஸூல்(ஸல்) அவர்கள் கூற்றை ஏற்பதே எனது கொள்கையுமாகும். ரஸூல்(ஸல்) அவர்களின் வழிமுறை எவருக்குத் தெரிகின்றதோ, அதை எவருடைய கருத்துக்காகவும் விடுவது ஹலால் இல்லை” என்று முஸ்லிம்கள் அனைவரும் ஏற்றுள்ளனர். இது இந்தோணேசியா, கீழை எகிப்து, மலேசியா, சிங்கப்பூர், சோமாலியா, ஜோர்டன், லெபனான், சிரியா, பாலஸ்தீனம் மற்றும் ஏமன் ஆகிய நாட்டில் உள்ள முஸ்லிம்களால் பின்பற்றப்படுகின்றது. மேலும் இந்த மத்ஹப் திருமறையில் உள்ள ஷரியத் முறையை மிகவும் நுணுக்கமாக கடைபிடிக்கிறது.
மாலிக்கி மத்ஹப் இச்சட்டத்தொகுப்பு "மாலிக் இப்னு அனஸ்" என்பவரால் தொகுக்கப்பட்டது. இவர் முகம்மது நபி (சல்) அவர்களின் இறுதி காலத்தில் அவர்களோடு இருந்த தோழர்கள் அறிவித்தவைகளைக் கொண்டு "முவத்தா" என்ற நூலை தொகுத்தார். இத்தொகுப்பு இஸ்லாத்தின் மிக பழமையான ஒன்றாகும். இதில் இருந்தே இவர் மாலிக்கி மத்ஃகபை தொகுத்தார். இவ்வாறு தொகுத்த தமது சட்டம் பற்றி இவர்கள் கூறியுள்ளதாவது. "நான் (சில நேரங்களில்) சரியாகவும், (சில நேரங்களில்) தவறாகவும் முடிவெடுக்கக் கூடிய ஒரு மனிதன் தான், எனது முடிவுகளை நீங்களும் ஆராயுங்கள். குர்ஆனுக்கும், நபி வழிக்கும் பொருத்தமானவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்! குர்ஆனுக்கும், நபி வழிக்கும் பொருத்தமில்லாதவைகளை விட்டு விடுங்கள்." இந்த மத்ஹப் கீழை எகிப்து மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளை தவிர மற்ற அனைத்து ஆபிரிக்க நாடுகளில் உள்ள முஸ்லிம்களாலும் பின்பின்பற்றப்படுகிறது.
ஹம்பலி மத்ஹப் இச்சட்டத்தொகுப்பு "அஹம்மது இப்னு ஹம்பல்" என்பவரால் தொகுக்கப்பட்டது. தாம் தொகுத்த சட்டம் பற்றி இவர்கள் கூறியுள்ளதாவது. "என்னையோ, மாலிக், ஷாபீஈ, அவ்ஸாயீ, ஸவ்ரீ போன்ற (இமாம்களையோ) பின்பற்றாதே! அவர்கள் எதிலிருந்து புரிந்து கொண்டார்களோ (அந்தக் குர்ஆன், ஹதீஸ்களிலிருந்து ) நீயும் புரிந்து கொள்!"இது அரேபிய தீபகற்பத்தில் உள்ள அநேக நாடுகளில் உள்ள முஸ்லிம்களால் பின்பற்றப்படுகின்றது. மேற்கண்டவாறு சுன்னி இஸ்லாம் நான்கு சட்டத்தொகுப்புகளைப் பிரபல்யமாக கொண்டிருந்த போதிலும், இவைகளின் அடிப்படை கொள்கைகள் ஒன்றே ஆகும். இவை திருக்குர்ஆனிலிருந்தும் முகம்மத் நபி (ஸல்) அவர்களின் சுன்னாவிலிருந்தும் மட்டுமே எடுக்கப்படுகின்றன. இவைகளுக்கிடையே வணக்க வழிபாட்டு முறைகளின் கிளை விடயங்களில் மட்டுமே மிக அரிதான வித்தியாசங்கள் உள்ளன. எனினும் உலகில் பரவலாக பெரும்பாலான சுன்னி முஸ்லிம்களால் நேரடியாகவே திருக்குர்ஆனிலிருந்தும் சுன்னாவிலிருந்தும் மட்டுமே சட்டங்களைப் பெறுகின்றனர். இன்றைய இசுலாமிய மார்க்க அறிஞர்கள் அனைவரும் இதையே வலியுறுத்துகிறனர்.
மக்கள்தொகை மக்கள்தொகையை பொறுத்தவரை சுன்னி இஸ்லாம், மற்ற இஸ்லாமிய பிரிவுகளை விட பெரும்பான்மையாக உள்ளது. இது மொத்த இஸ்லாமிய பரவலில் 80-85% யை கொண்டுள்ளது. மேலும் ஈரான், இராக், லெபனான், கட்டார், பஹ்ரைன் ஆகிய நாடுகளை தவிர்த்து மற்ற அனைத்து இஸ்லாமியர் வாழ் நாடுகளிலும் பெரும்பான்மையாக உள்ளது.
சியா இசுலாம் சியா இசுலாம், இசுலாமிய பிரிவுகளில் உள்ள இரண்டாவது மிகப்பெரிய உட்பிரிவு ஆகும். இது மொத்த இசுலாமிய மக்கள் தொகையில் 2% சதவிகிதத்தை கொண்டுள்ளது. இராக், இரான் ஆகிய நாடுகளில் பெரும்பான்மையாக இருக்கும் இந்த பிரிவு, மற்ற இசுலாமிய நாடுகளிலும் கணிசமான அளவில் இருக்கின்றது. சியா இசுலாம் தன்னகத்தே அனேக உட்பிரிவுகளை கொண்டுள்ளது. இதில் 'பன்னிருவர் பிரிவு' முதன்மையாக உள்ளது. இதை தவிர இசுமாலி, செய்யதி போன்ற பிரிவுகளும் கணிசமான அளவில் உள்ளன. பன்னிருவர் பிரிவின் அனேக நடைமுறைகள் சன்னி இசுலாம் முறையுடன் ஒத்துப்போகின்றன.
சுஃபியிசம் சுஃபியிசம் என்பது மத்திய காலத்தில் ஏற்பட்ட ஒரு பிரிவு ஆகும். மற்ற பிரிவுகளில் இருந்து மாறுபட்டு மிகவும் மாறுபட்ட சுதந்திர உணர்வை கொண்டவர்கள் இவர்கள். தனியே தங்களுக்கான சட்டங்கள், பிரார்த்தனை முறைகள் ஆகியவற்றை கொண்டிராத இவர்கள், பொதுவாக சன்னி மற்றும் சியா இசுலாம் முறைகளையே பின்பற்றுகின்றனர். சூபிசம் அல்லது தசவுஃப் என்பது இறைவனை அடையும் வழியைக் கூறும் இசுலாத்தின் உள்ளார்ந்த பரிமாணம் எனச் சொல்லப்படுகிறது. இந்த மரபைப் பின்பற்றுபவர்கள் சூபிகள் என அழைக்கப்படுகின்றனர். எனினும் இம் மரபைச் சார்ந்த சிலர், இம் மரபின் நோக்கங்களை அடைந்தவர்களை மட்டுமே சூபிகள் எனவும் அந்நோக்கங்களை அடைய முயல்பவர்களை டெர்விசுகள் எனவும் அழைக்கின்றனர். பழையகாலத்துச் சூபி அறிஞர்கள், சூபிசம் என்பதை, இறைவனைத் தவிர மற்ற எல்லாவற்றிலிருந்தும் விலகுவதற்கு மனதைத் தயார்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு அறிவியல் என வரையறுத்துள்ளனர். தர்காவி சூபி ஆசிரியரான அகமது இபின் அசிபா என்பவர், சூபிசம் என்பது, இறைவனை அடையும் வழியைத் தெரிந்து கொள்வதற்கும், ஒருவர் தவது உள்ளத்தைத் தூய்மைப்படுத்திக் கொள்வதற்கும், அதனைப் போற்றத்தக்க பண்புகளால் அழகுபடுத்துவதற்குமான ஒரு அறிவியல் என்கிறார். சூபிசத்தின் தொடக்க காலகட்டங்களில் சூபிகள், இறைவனை எப்போதும் நினைவில் கொள்ளுவதற்கான செயல்பாடுகளில் ஈடுபடுபவர்களாகவும், துறவு நிலையை மேற்கொண்டவர்களாகவும் இருந்தனர். உமய்யாத் கலீபகக் காலத்தின் உலகியல் சார்ந்த போக்குக்கு எதிராகவே முசுலிம்கள் நடுவே சூபிசம் உருவாகியது. சூபி இயக்கம் ஆயிரம் ஆண்டுகளாக உலகின் பல கண்டங்களுக்கும் பரவியது. முதலில் அரபு மொழி மூலமும், பின்னர் பாரசீக மொழி, துருக்கிய மொழி மூலமாகவும் பின்னர் பல்வேறு மொழிகளூடாகவும் பரவியது.

இசுலாமியர்களின் புனித ஸ்தலங்கள்.
மக்கா (அரபு மொழி: مكّة المكرمة) சவூதி அரேபியாவின் மக்கா மாகாணத்தில் வரலாற்றுப் பழைமை வாய்ந்த ஹிஜாஸ் பகுதியில் அமைந்துள்ள இசுலாமியர்களது புனித நகரமாகும். இந்நகரம் ஜித்தா நகரில் இருந்து நாட்டுக்குள் 73 கிலோமீட்டர் (45 மைல்) தொலைவிலும், செங்கடலில் இருந்து 80 கி.மீ (50 மைல்) தொலைவிலும் குறுக்கமான பள்ளத்தாக்கு ஒன்றில் கடல் மட்டத்தில் இருந்து 277 மீட்டர் 910 அடி உயரத்தில் அமைந்துள்ளது. வரலாற்றில் இந்நகரம் பெக்கா எனவும் அழைக்கப்பட்டு வந்துள்ளது.இந்நகரில் இசுலாமியரது மிகப்புனிதத் தலமான மஸ்ஜித் அல் ஹராம் (புனிதப் பள்ளிவாசல்) அமைந்துள்ளது. அரபு மாதங்களில் ஒன்றான துல்ஹஜ் மாதத்தின் போது இந்நகருக்கு புனிதப் பயணம் மேற்கொள்வது இசுலாமியரது ஐந்து கடமைகளில் ஒன்றாகும். வேற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் இந்நகருக்குள் உள்நுழைவது தடைச் செய்யப்பட்டுள்ளது.
மதீனா (Medina, அரபு மொழி: المدينة المنورة), சவுதி அரேபியாவில் அமைந்துள்ள உலகின் பழைமை வாய்ந்த நகரங்களில் ஒன்றாகும். மதீனா முஸ்லிம்களின் புனித நகராக விளங்குகிறது. முகம்மது நபியால் கட்டப்பட்டதாக முஸ்லிம்கள் நம்பும் உலகத்தின் முதல் இஸ்லாமியப் பள்ளிவாசல் மஸ்ஜிதுந் நபவி மதீனா நகரில் அமைந்துள்ளது. அதற்கு உடனடுத்ததாக முஹம்மது நபியவர்களின் வீடு அமைந்துள்ளது. இஸ்லாமிய உலகின் நினைவுச் சின்னங்களான புராதனமான அவ்வீடும் முஹம்மது நபியவர்களின் பிரசங்க மேடையும் இன்றும் அதே வடிவிலேயே பாதுகாக்கப்படுகின்றன. மேலும், மதீனா நகரில்தான் உலகப் புகழ்பெற்ற இஸ்லாமியப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.
உமய்யா மசூதி (அரபி: جامع بني أمية الكبير , ஆங்கிலம்: Umayyad Mosque)அல்லது டமாசுக்கசு பெரிய மசூதியானது உலகின் மிகப்பழமையான மற்றும் பெரிய மசூதிகளில் ஒன்றாகும். இது சிரியா நாட்டின் தலைநகரான டமாசுக்கசு நகரில் உள்ளது. இசுலாமிய இறைதூதர்களில் ஒருவரான யகியா எனவரின் சமாதி இங்கு உள்ளது. இவரே கிறித்தவர்களால் யோவான் என அழைக்கப்படுகின்றார். மேலும் இசுலாமிய பேரரசரான சலாத்தீனின் சமாதியும் இங்கேயே உள்ளது. இது சன்னி முசுலிம்களின் வழிபாட்டுத்தலமாக உள்ள பொழுதும் சியா முசுலிம்களுக்கும் முக்கிய வரலாற்று தலமாக உள்ளது. கர்பலா போரில் உமய்யா கலிபாவான முதலாம் யாசித் என்பவரால் முறியடிக்கப்பட்ட சியா முசுலிம்களின் மூன்றாவது இமாமான உசைனின் (முகம்மது நபியின் பேரன்) தலை இங்குதான் காட்சிக்கு வைக்கப்பட்டது.2001ம் ஆண்டு இந்த மசூதிக்கு வருகை தந்த பாப்பரசர் இரண்டாம் ஜான் பால் இயேசுவிற்கு திருமுழுக்கு செய்வித்த யோவானின் (யகியா) சமாதியை பார்வையிட்டார். இதுவே இவரின் முதலாவது மசூதி தரிசனம் ஆகும்.[1].பின் அங்கேயே தங்கி வியாபாரத்தில் ஈடுபட்ட அந்த குழுவினர், தங்கள் வழிபாட்டுக்காக, ஒரு மசூதியை கட்டினர். இதுவே கடற்கரை பள்ளி என அழைக்கப்படுகின்றது. இது இரண்டாவது கலீபாவான உமர் (ரலி) அவர்கள் காலத்தில் கட்டப்பட்டது.
புனித காபா அல்லது அல்-மசிச்சிது அல்-ஃஅராம் (Al-Masjid al-Ḥarām (المسجد الحرامIPA: [ʔælˈmæsʤɪd ælħɑˈrɑːm]பொருள்: "புனித கோயில்") என்னும் பள்ளிவாசல் சவூதி அரேபியாவில் உள்ள மக்கா மாநகரில் அமைந்துள்ளது. இது காஃபத்துல்லா எனவும் அழைக்கப்படும். உலக இசுலாமியர்களின் முதன்மையான இறை வணக்கத்தலம் ஆகும். உலக இசுலாமியர்கள் அனைவரும் இந்த பள்ளிவாசலை நோக்கியே, இறைவனுக்காக தொழுவது என்பது மரபு. உலகில் முதன் முதலாக இசுலாமியர்களால் இறைவனுக்காக கட்டப்பட்ட ஆலயம் என்ற பெருமை இதற்கு உண்டு இந்த பள்ளிவாசல் காபாஷரிப் எனவும் அழைக்கப்படுகின்றது.
சேக் சயத் மசூதி, ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரமான அபுதாபியில் அமைந்துள்ளது. இது அந் நாட்டின் மிகப்பெரிய மசூதியும், உலகிலுள்ள மசூதிகளில் ஆறாவது பெரியதும் ஆகும். ஐக்கிய அரபு அமீரகத்தின் நிறுவனர்களில் ஒருவரும், அதன் முன்னாள் சனாதிபதியுமான சேக் சயத் பின் சுல்தான் அல் நகியானின் பெயர் இம் மசூதிக்கு இடப்பட்டது. இவ்விடத்திலேயே சேக் சயத்தின் உடலும் அடக்கம் செய்யப்பட்டது. இது 2007 ஆம் ஆண்டின் இசுலாமிய ரமழான் மாதத்தில் திறந்து வைக்கப்பட்டது.
சமார்ராவின் பெரிய மசூதி மத்திய ஈராக்கிலுள்ள சாமரா என்னும் நகரில் அமைந்துள்ளது. இந்நகரம் அப்பாசிட் வம்ச ஆட்சியின் போது தலைநகரமாக விளங்கியது. கி.பி 847 க்கும், 861 க்கும் இடையில் ஆட்சி புரிந்த அப்பாசிட் கலீபாவானஅல் முத்தவாக்கில் என்பவரால் இம் மசூதி கட்டுவிக்கப்பட்டது.240 மீட்டர் நீளத்தையும், 160 மீட்டர் அகலத்தையும் கொண்ட இது அக்காலத்தில் உலகிலேயே பெரிய மசூதியாக விளங்கியது. இதன் மினார் அதிகம் வழக்கத்தில் இல்லாத வடிவ அமைப்பைக் கொண்டது. பெரிய கூம்பு வடிவ அமைப்புடன் விளங்கும் இதன் வெளிப்புறத்தைச் சுற்றி சுருள் வடிவிலான சாய்தள அமைப்பு உள்ளது. 52 மீட்டர் உயரமும், அடிப் பகுதியில் 32 மீட்டர் அகலத்தையும் கொண்ட இக் கோபுர அமைப்பு சுட்ட செங்கற்களால் ஆனது.இந்தியாவில் இசுலாமியர்களின் புனித ஸ்தலங்கள்கடற்கரை பள்ளி அல்லது கடற்கரை மசூதி (kadarkarai Palli or Kadarkarai Masudhi) என அழைக்கப்படுவது, தமிழ்நாட்டின் காயல்பட்டினம் நகரில் அமைந்துள்ள ஒரு பழமையான இஸ்லாமிய மசூதி ஆகும். இதுவே தமிழ்நாட்டின் முதல் மசூதியும், இந்தியாவின் இரண்டாவது மசூதியும் ஆகும்.இஸ்லாமியர்களின் இறுதி நபியான முகம்மது நபி (ஸல்) அவர்களின் மறைவுக்குப்பின் முதல் கலிபாவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அபூபக்கர் (ரலி) என்பவராவார். இவரது ஆட்சிக்காலத்தில் ஒரு வியாபார குழு 633ம் ஆண்டு சுமார் 224 ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் முதன்முதலாக காயல்பட்டினம் நகரில் வந்து தங்கியது. முகம்மது கல்ஜி என்பவர் அந்த குழுவுக்கு தலைமை ஏற்று வந்தார். அந்த சமயத்தில் அந்த பகுதியை ஆண்ட பாண்டிய மன்னனான அபிராம ராஜா அதிராஜ ராஜா ஜயவீர ராஜுக்கர் என்பவர் அவர்களை வரவேற்று, அவர்கள் தங்குவதற்க்கும் வழிசெய்தார்.ஆயிரம்விளக்கு மசூதி, இந்தியாவில் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் அண்ணாசாலையில் அமைந்துள்ள ஓர் அழகான பல மாடங்களைக் கொண்ட மசூதியாகும். இது நாட்டில் உள்ள மிகப்பெரும் மசூதிகளில் ஒன்றாகும். இங்கு தமிழக சியா முசுலிம்களின் தலைமையகம் இயங்குகிறது. இதனை 1810ஆம் ஆண்டு நவாப் உம்தத்-உல்-உம்ரா கட்டியதாகத் தெரிகிறது.
சேரமான் ஜும்மா மசூதி (Cheraman Juma Masjid) இந்திய மாநிலமான கேரளாவில் உள்ள கொடுங்களூர் என்ற ஊரில் உள்ளது. இது கி.பி 612-ம் ஆண்டு மாலிக் பின் தீனார் என்பவரால் கட்டப்பட்டது. இது இந்தியாவின் முதல் பள்ளிவாசல் மற்றும் உலகின் இரண்டாவது ஜும்மா பள்ளிவாசல் ஆகும். இதன் பழைய தோற்றம் மற்ற உலக பள்ளிவாசல்கள் போல் அல்லாமல் கிழக்கு நோக்கி அமைந்து உள்ளது.சேரமான் பெருமாள் பாஸ்கர ரவி வர்மா என்ற சேர மன்னர் கி.பி எட்டாம் நூற்றாண்டில் சேர நாட்டை ஆண்டு வந்தார். அவர் ஒரு நாள் இரவு வானில் நிலவு இரண்டாக பிளந்து மறுபடியும் ஒன்று சேர்வதை கண்டார். இதை பற்றி விசாரிக்கும் பொழுது அங்கு வியாபார நோக்கமாக வந்த அராபியர் கூட்டம் மூலம் முகம்மது நபி (ஸல்) அவர்களை பற்றியும், இஸ்லாம் மதத்தை பற்றியும் கேள்விப்பட்டனர். மேலும் அவர்கள் கூறிய செய்திகளிலால் ஈர்க்கப்பட்ட சேரமான் பெருமாள் அவர்கள் அந்த அரபியார் கூட்டத்துடனேயே மெக்காவிற்கு சென்று முகம்மது நபி (ஸல்) அவர்களை சந்தித்தார். அதன் பிறகு இஸ்லாம் மதத்தை ஏற்ற சேரமான் பெருமாள் அவர்கள் தாஜுதீன் எனவும் பெயர் மாற்றம் பெற்றார்.பின் இந்தியாவில் இஸ்லாம் மதத்தை பரப்பும் பொருட்டு நபி தோழர்களில் ஒருவரான மாலிக் பின் தீனார் (ரலி) என்பவரின் தலைமையில் பல போதகர்களை அழைத்துக்கொண்டு நாடு திரும்பினார். ஆனால் திரும்பும் வழியிலேயே ஏமன் நாட்டில் உள்ள ஜாபர் துறைமுகத்தில் (Port of Zabar, Yeman) நோய் வாயப்பட்டு இறந்தார். அவருடைய உடல் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது.ஆனாலும் அதன் பிறகும் தங்கள் பயணத்தை தொடர்ந்த மாலிக் பின் தீனார் (ரலி) அவர்களின் குழு சேர நாட்டை அடைந்தது. அங்கு மன்னர் குடும்பத்தை சந்தித்த அவர்கள் சேரமான் பெருமாள் அவர்கள் இறப்பதற்கு முன்பு எழுதி இருந்த கடிதத்தை கொடுத்தனர். அதில் சேரமான் பெருமாள் அவர்கள் தங்கள் குடும்பத்தார்களுக்கு இஸ்லாம் மதத்தை பரப்புவதற்கு மாலிக் பின் தீனார் (ரலி) அவர்களுக்கு உதவுமாறும் அதற்காக பல மசுதிகளை காட்டுமாறும் பனித்திருந்தனர். அதை ஏற்று மன்னர் குடும்பமும் இஸ்லாம் மதத்தை பரப்புவதற்கும் மசுதிகளை காட்டுவதற்கும் மாலிக் பின் தீனார் (ரலி) அவர்களுக்கு உதவியது. அதன் பேரில் மாலிக் பின் தீனார் (ரலி) அவர்கள் கி.பி 612-ல் கொடுங்கலூரில் முதல் மசூதியை கட்டினார்.ஜாமா பள்ளி, தில்லி மஸ்ஜித் இ ஜஹான்-நுஃமா (பாரசீகம்: مسجد جھان نما, "உலக பள்ளிவாசல்களின் பிரதிபலிப்பு") என்கிற பெயர் கொண்ட இப்பள்ளிவாசல் ஜாமா மஸ்ஜித் என்று பொதுவாக அழைக்கப்படுகிறது. இந்தியாவில் இருக்கும் பள்ளிவாசல்களில் மிகப்பெரியதாக உள்ளது. தாஜ்மஹாலை கட்டிய முகலாயப் பேரரசர் ஷாஜகானால் கிபி 1656 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இப்பள்ளி பழைய தில்லியில் உள்ள சட்னி சவுக்கின் பிரதான மத்திய வீதியில் அமைந்துள்ளது.இப்பள்ளியில் ஒரே நேரத்தில் 25000 பேர் நின்று தொழக்கூடிய வசதி உள்ளது. இப்பள்ளியின் வடக்குதிசை வாசலுக்கு அருகில் குர்ஆன் ஆயத்துகள் எழுதப்பட்ட பழங்கால மான் தோல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.பாபர் மசூதி (Babri Mosque, உருது: بابری مسجد, இந்தி: बाबरी मस्जिद), முதலாவது முகலாய மன்னரான பாபர் என்பவரின் கட்டளையின் பேரில் 16ம் நூற்றாண்டில் இந்தியாவின் அயோத்தி நகரில் எழுப்பப்பட்ட ஒரு மசூதி ஆகும். 1940களுக்கு முன்னர் இது பிறந்த இடத்தின் மசூதி (Masjid-i Janmasthan) என அழைக்கப்பட்டது.இம்மசூதி "ராமாவின் கோட்டை" எனப்படும் குன்றில் அமைந்துள்ளது. இது கிட்டத்தட்ட 150,000 இந்துக்களால் டிசம்பர் 6, 1992 இல் இந்திய மேல்நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி முற்றாக உடைத்து நொறுக்கப்பட்டது.பாபர் மன்னனின் தளபதியான மீர் பக்கி என்பவன் இந்துக்களின் கடவுளான விஷ்ணுவின் ஓர் அவதாரமாகக் கருதப்பட்டவரும் அயோத்தி மன்னருமான ராமனின் கோயில் ஒன்றை உடைத்து அது இருந்த இடத்தில் மசூதியைக் கட்டியதாகவும் இந்துக்கள் நம்புகின்றனர். இம்மசூதியூம் ராமர் கோயிலும் ஒரே சுவரால் பிரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இம்மசூதியே மிகப் பெரியதாகும்.