கிண்ணத்தப்பம்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:18 PM | Best Blogger Tips
Photo: கிண்ணத்தப்பம்

தேவையான பொருட்கள் :

பச்சரிசி - 1/2 கிலோ
சீனி - 600 கிராம்
முட்டை - 2
தேங்காய் - 2
உப்பு - 1 சிட்டிகை
ஏலக்காய் - 4
சீரகம் - 1/2 தேக்கரண்டி

செய்முறை :

பச்சரிசியை  ஊற  வைத்து  நைசாக நன்றாக அரைத்துக்  கொள்ளவும்.

தேங்காயைத் துருவி, துருவலை மிக்ஸி அல்லது  கிரைண்டரில் நன்றாக அரைத்து பால் எடுத்து வைத்து கொள்ளவும்.

முட்டையையும் மிக்ஸியில் அடித்து கொள்ளவும்.

அரைத்த மாவில் தேங்காய்ப் பால், முட்டை, சீனி, ஏலக்காய், சீரகம் ஆகியவற்றுடன் உப்பையும் சேர்த்து கலக்கவும்.

மாவு மிகவும் கெட்டியான நிலையில் இல்லாமல்  கலக்கி, அந்த மாவை வடி கட்டவும்.  பின்பு  அந்த வடி கட்டப்பட்ட மாவை வட்ட வடிவமான எவர்சில்வர் அல்லது அலுமினிய பாத்திரத்தில்   ஊற்றி குக்கரில் வைத்து  ஏழு   விசில் வரும் வரை வேக விடவும்.

ஏழு விசில் வந்ததும்   அடுப்பை அணைத்து விடவும். குக்கரில் இருந்து வட்டிலை  வெளியில் எடுத்து அதன் மீது இருக்கும் நீரை வடித்து விட்டு ஆற வைத்து  பின்பு வெட்டிப் பரிமாறவும்.

குறிப்பு : கஞ்சிக்கரிசியைப்  பயன்படுத்துவது  நல்லது. பச்சரிசியைப் பயன்படுத்துவதாக இருந்தால்   சூடு நீரில் ஊற வைக்கவும்.

Via FB ஆரோக்கியமான வாழ்வு