மகாலெஷ்மியின் அம்சமே சங்கு.சங்குகளில் இரண்டு வகைகள் உண்டு. இடப்பக்கம் சுழிந்து செல்லும் சங்கு உலகில் எளிதாகக் கிடைக்கும். வலது பக்கம் சுழியுடைய வலம்புரிச் சங்குகள் அபூர்வமாகவே கிடைக்கும்.வலம்புரி சங்கு மிக உயர்வானதாக கருதப்படுகிறது.
எந்த வீட்டின் பூஜை அறையில் வலம்புரி சங்கு இருந்தாலும் அங்கு திருமகள் வாசம் செய்வதாக நம்பிக்கையாகும்.அந்த இல்லம் லெஷ்மிகடாச்சம் பெற்று சிறந்த இல்லமாக விளங்கும்.சங்கு ஊதினால் அபசகுனம் என்று தற்போது நம் மக்களை நம்ப வைத்துள்ளனர் ஆனால் சங்கின் மகத்துவம் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் .
சங்கை ஏன் வீட்டு வாசலில் பதித்தார்கள் தெரியுமா ?சங்கின் குணம் நுண் கிருமிகளை அளிப்பது .அதனால் தான் நமது முன்னோர்கள் வீட்டு வாசலில் சங்கை பாதி பூமிக்கு அடியிலும் மீதி மேலே தெரியும் படியும் பதித்திருப்பார்கள் .இதனால் வெளியில் இருந்து வரும் காற்று சங்கின் ஊது துவாரம் வளியாக உள்ளே சென்று சங்கு உள்ளே கிரிமிகள் அழிக்கப்பட்டு .சுத்தமான காற்றாக வீட்டுக்குள்ளே வருகிறது.
இதனால் தான் இன்று வரை சங்கை வீட்டுவாசலில் கட்டி தொங்க விடுகின்றனர் . வெண்மை நிற பால் சங்கை உரைத்து சாப்பிட்டால் உடலில் உள்ள கிரிமிகள் அழிக்கப்படுவதோடு பல விதமான நோய்களும் குணமாகிறது .
சங்கு ஊதுவதன் மூலம் மூலாதார சக்கரம் நன்றாக செயலாக்கம் பெறுகிறது.மேலும் ஊதுவதினால் மூச்சு சீராகவும் நுரையீரல் செயல்பாட்டிற்க்கும் பெரிதும் உதவுகிறது.சங்கு ஊதும் போது நாதமானது மூலதரத்தில் இருந்து எழுகிறது. சங்கு ஊதுவதினால் நம்மை சுற்றி உள்ள கிரிமிகள் அளிக்கபடுகிறது. நம் உள்ளமும்,உடலும் தூய்மையாகிறது.
அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.