என் அம்மா மூட்டு மற்றும் முதுகு வலியினால் ரொம்பவே சிரமப்பட்டார். சின்ன
வயதில் எனக்கு அம்மா சொல்லித் தந்திருந்த முடக்கத்தான் கீரை தோசையை
வாரத்தில் இரண்டு நாட்கள் அவருக்குச் செய்து தர ஆரம்பித்தேன். வலி குறைந்து
இப்போதுஅம்மாவின் உடலில் நல்ல
முன்னேற்றம். குழந்தைகளும் இதை 'க்ரீன் தோசை' என்று விரும்பிச்
சாப்பிடுகிறார்கள். மருத்துவக் குணமும் சுவையும் நிறைந்த இந்தத் தோசையை
வாரம் ஒரு முறை-யாவது சமையலில் சேர்த்துக்-கொண்டால் வீட்டில் இருக்கும்
பெரியவர்களுக்கு நல்லது.
முடக்கத்தான் தோசை செய்முறை:
தேவையான பொருட்கள்: புழுங்கல் அரிசி - அரை கிலோ, உளுந்து & 100 கிராம், வெந்தயம் & 2 ஸ்பூன், முடக்கத்தான் கீரை & 4 கப்.
முதல் நாளே அரிசி, உளுந்து, வெந்தயம் மூன்றையும் ஊற வைத்து தோசைமாவுக்கு அரைப்பதுபோல மைய அரைத்து வைக்கவும். நன்றாகக் கழுவி, சுத்தம் செய்த முடக்கத்தான் கீரையை மிக்ஸியில் கூழாக அரைக்கவும். அதை ஏற்கெனவே அரைத்து வைத்த மாவில் கலக்-கவும். பிறகு உப்பு சேர்த்துக் கரைக்-கவும். மறுநாள் தோசையாக ஊற்றி எடுக்க வேண்டும். கீரை கூடுதலாகச் சேர்த்தால் மிகவும் நல்லது.
இதற்கு தொட்டு சாப்பிட கொத்தமல்லிச் சட்னி நன்றாக இருக்கும்.
கொத்தமல்லிச் சட்னி செய்முறை:
மிளகாய் 8, ஒரு கைப்பிடி கொத்தமல்லி, உரித்த பூண்டு நான்கைந்து ஆகியவற்றைத் தனித்தனியாக வறுத்த பின், உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். சூடான தோசையில் இந்தச் சட்னியை வைத்து அதன் மீது நல்லெண்ணெ ஊற்றிச் சாப்பிட்டால் சுவை சொக்கவைக்கும்; சத்துக்களும் உடலில் சேரும்.
- நாகலக்ஷ்மி லோகநாதன், வேளச்சேரி
சித்த மருத்துவர் ஆர்.கண்ணன்:

கை, கால்கள் முடங்கிப் போய்விடாமல், இந்தக் கீரை தடுப்பதால், இதற்கு 'முடக்கு + அற்றான்' என்று பெயர். இது மருத்துவக் குணங்கள் நிறைந்த, ஓர் அரியவகைக் கீரை. தொடர்ந்து உண்டு வந்தால் முடக்கு வாதம், நரம்புத் தளர்ச்சி போன்ற வியாதிகள் நெருங்காது. முதியோர்கள் இதை உணவில் சேர்த்துக் கொண்டால், மூட்டு வலி குறையும்.