ஒருவரது ஜாதகத்தில் ராகு&கேது இடையில் அனைத்து கிரகங்களும் இருந்தால் அது கால சர்ப்ப தோசமாகும்.அதாவது
ஒரு ஜாதகத்தில் ராகு & கேது இருக்கும் இடங்களுக்
குள் உள்ள ஏழு
ராசிகளுக்குள் மற்ற ஏழு கிரகங்களும் இருந்து மீதி ஐந்து ராசிகள் காலியாக இருக்கும் நிலைதான் கால சர்ப்ப தோஷம் ஆகும்.
இத யோகமாகவும் கருதலாம் இந்த தோசம் இருக்கிறவர்களுக்கு முன் பகுதி வாழ்வு மிகவும் வறுமையாகவும்,சிரமமாகவும் அமையும்.பின்பகுதி வாழ்க்கை மிக சிறப்பாக இருக்கும்.ஏகப்பட்ட செல்வங்களும்,புகழும் கிடைக்கும்.இந்த தோசத்தில் பிறந்தவர்கள் நல்ல பண்பாளர்களாகவும்,பக்குவமானவர்களாகவும் இருப்பார்கள்.
சர்ப்பதோசம்;
லக்கினத்தில் ராகுவோ,கேதுவோ இருந்தால் அது ச்ர்ப்ப தோசமாகும்,லக்கினத்தில் கேது இருந்தால் 7-ல் ராகு இருக்கும்,ராகு இருந்தால் 7-ல் கேது இருக்கும் இது களத்திர தோசத்தையும் கொடுக்கும்.இந்த அமைப்பு ஆணுக்கோ,பெண்ணுக்கொ இருந்தால் இதே அமைப்புள்ள் ஆணையோ பெண்ணையோ சேர்க்கவேண்டும் இல்லையென்றால் திருமண வாழ்வு சரியாக இருக்காது.
இந்த தோசம் உள்ளவர்களுக்கு முகத்தில் கவர்ச்சி இருக்கும்,கண்களில் எதிராளியை ஈர்க்கும் சக்தி இருக்கும்.தன்னுடைய வாழ்வை நிலைநிறுத்திகொள்ள மிகுந்து போராடவேண்டிருக்கும்.கடைசியில் தடைகளை உடைத்தெரிந்து வாழ்வில் வெற்றி பெற்று அனைத்து செல்வங்களையும் பெறுவார்கள்.
அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.