கண் இமை நோய்களில் இருந்து விடுதலை பெற!

மணக்கால் அய்யம்பேட்டை | 11:52 AM | Best Blogger Tips
*கண் இமை நோய்களைத் தவிர்க்க கடைபிடிக்க வேண்டிய உணவு முறை குறித்து டயட்டீசியன் சங்கீதா கூறியதாவது: கண் மிக மெல்லிய தோலால் ஆனது. கண் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ளும்படியான அமைப்பில் உள்ளது. கண்ணில் நீர் வடிதல், கண் சிவத்தல், கண் இமைகளில் கட்டி, கண்கள் வீங்குதல் மற்றும் கண்நோய் போன்ற பிரச்னைகள் வரும். இமை வீக்கத்துக்கு கிருமித் தொற்று முக்கிய காரணம். இதனால் கண்களில் அரிப்பு ஏற்படும். வைரஸ், பாக்டீரியா தொற்றின் காரணமாகவும் இது போன்ற பிரச்னைகள் வரலாம்.

*கண்ணில் பயன்படுத்தப்படும் மேக்கப் சாதன அலர்ஜியால் பிரச்னை வரலாம். இதற்கு கண்களை மூடிக் கொண்டு லேசாக வெப்ப ஒத்தடம் மற்றும் மசாஜ் செய்தால் போதும். வெளியில் சென்று வந்த பின்னர் சுத்தமான தண்ணீரால் கண்களைக் கழுவ வேண்டியதும் அவசியம். பொதுவாக குழந்தைகள், கம்ப்யூட்டர் திரை பார்த்தபடி வேலை பார்ப்பவர்கள், அதிக வெளிச்சம் மற்றும் அழகுக்கலைஞராக இருப்பவர்களுக்கும் இமை வீக்கம் உள்ளிட்ட நோய்கள் வரும்வாய்ப்புகள் உள்ளன. இது போன்ற பாதிப்புகளைத் தடுப்பதற்கான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

*இது போன்ற பிரச்னைகளைத் தவிர்க்க சரிவிகித சத்துணவை பின்பற்ற வேண்டும். அதிகளவில் பழங்கள் சாப்பிட வேண்டும். இதன் மூலம் கண்களின் ஆரோக்கியத்துக்கு தேவையான வைட்டமின் மற்றும் மினரல் சத்துகள் கிடைக்கும். தினமும் ஒரு கீரை சேர்த்துக் கொள்ள வேண்டும். குளிர்ச்சியான உணவுகள் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். மோர், தயிர் தினமும் சேர்க்கவும். அதிக புரதம் உள்ள உணவுகளும் தினமும் அவசியம். சமையலில் அஜினோமோட்டோ பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். பதப்படுத்தப்பட்ட மற்றும் துரித உணவுகளை கட்டாயம் தவிர்க்கவும்.
 

Via FB Aatika Ashreen