------------------------------------
சக்கரம் என்பது வட்டத்தின் அடிப்படையில் அமைந்தது.கோளத்தின் சுருக்கமே வட்டம்.இந்த பிரபஞ்சத்தின் சூட்சும ரகசியமே வட்டத்தின் அடிப்படிடையிலேயே அமைந்துள்ளது.
ஸ்ரீமகாவிஷ்ணுவின் கையில் அமைந்துள்ள சுதர்சன் சக்கரமும் இந்த தத்துவத்தையே நமக்கு உணர்த்துகிறது.தர்ஷன் என்றால் மங்களகரமானது என்று பொருள் `சக்ரா' என்றால் எப்பொழுதும் செயல்பாட்டில் இருப்பது என்று அர்த்தம். எல்லா ஆயுதங்களைக் காட்டிலும் இது ஒன்றே எப்பொழுதும் சுழன்று கொண்டிருக்கிறது.
அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலநாட்டுவதே சுதர்சன சக்கரமாகும்.வாழ்க்கை ஒரு வட்டம் என்பார்கள் அதாவது நாம் செய்யும் நன்மையும்,தீமையும் நமக்கே திருமப வரும் அதுதான் சூட்சுமத்தின் ரகசியம்.
இந்த உலகமும் ,உலகத்தின் உள்ள பொருட்களும் சுழற்சியின் அடிப்படையிலேயே இயங்குகிறது.உயர்ந்தவன் தாழ்வதும்,தாழ்ந்தவன் உயர்வதும் இயற்கையின் விதியாகும்.உயந்தவர் கீழே விழாமல் இருக்க தன்னம்பிகையுடன் கூடிய உழைப்பும்,பணிவும்,நிதானமும் தேவை.கீழே இருப்பவர் மேலே வர விடமுயற்சியும்,தன்னம்பிகையும் இருந்து நல்ல விதியும் இருந்தால் போதும்.வாழ்வில் முன்னேற்றமே.
அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.