1962 வருடம் தென் இந்தியாவில் பெரிய தொழிற்சாலை ஒன்றை,செக்கசுலோவாக்கியா நாட்டு உதவியுடன் அமைக்க மத்திய அரசு தீர்மானித்தது.அதற்க்கான இடத்தை தேர்வு செய்ய “செக்”நாட்டு குழுவினர் தமிழகம் வந்தனர்.
சென்னை மற்றும் பல இடங்களில் ஆய்வு செய்த குழுவினர்,ஆலை அமைக்க கடினமான மண் தரை கொண்ட இடமும்,நீர் வசதியும் வேண்டும் அதற்கு தகுதியான இடம் இல்லை என்றனர்.காமரஜரும் தமிழக அதிகாரிகளை அதற்கான இடம் இருக்கிறதா என கேட்டார் அவர்களும் கைவிரித்தனர்.உடனே காமராஜர் அப்போதைய அமைச்சர் ராமையாவை அழைத்து திருச்சிக்கு பக்கத்தில்,கடினமான தரையுள்ள நிலம் நிறைய உள்ளது,தண்ணீரும் தாரளமாக கிடைக்கும் நிபுணர் குழுவை அங்கே அழைத்து செல்லுங்கள் என்றார்.
திருச்சியை அடுத்த,திருவெறும்பூரில் ஏரளமான நிலம் காடுபோல் கிடந்தது.அந்த இடத்தின் மண் வளத்தையும்,தண்னீர் வசதியையும் பரிசோதித்த நிபுணர்கள்,”தொழிற்சாலை அமைக்க இந்த இடம் பிரமாதமாக உள்ளது”என அறிவித்தனர்.
மேலும் படித்த அதிகாரிகளுக்கே கண்டுபிடிக்கமுடியாத இடத்தை,படிப்பறிவு இல்லவிட்டாலும்,தன் அனுபவத்தாலும்,எளிமையாலும் தமிழக தலைவராக இருக்கும் ஒரு முதல்வர் சரியாக சொன்னது தமிழக அதிகாரிகளை மட்டுமல்ல , வெளிநாட்டு குழுவினரை மிகுந்த ஆச்சரிய படுத்தியது.
அதுதான் இப்போது திருச்சியில் அமைந்துள்ள”BHEL(பெல்)”தொழிற்சாலை ஆகும்.இன்று கல்வி கடவுள் “கர்மவீரர் காமராஜர்”பிறந்தநாளாகும்.
அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்