தலைமைப்பண்பு .....

மணக்கால் அய்யம்பேட்டை | 3:06 PM | Best Blogger Tips


ஒரு ஊரில் ஒரு மன்னன் இருந்தான் . வயோதிகம் காரணமாக நோய் வயப்பட்டிருந்தான். அவனது மகன் இளவரசனுக்கு மன்னனாக முடிசூடிக்கொள்ளும் ஆர்வம் இல்லை.

மருத்துவத்தொழில் பார்த்து மக்கள் சேவை செய்ய விரும்புவதாகவும், மன்னனாகும் ஆசை தனக்கு இல்லை என்று உறுதிபட கூறிவிட்டான்.

நாட்டிற்கு ஒரு மன்னனை தேடும் நிலையில் நாடு இருந்தது.

Image may contain: 5 people
யாரை மன்னனாக நியமிப்பது ? அரண்மனையிலும் நாடெங்கிலும் இக்கவலை தொற்றிக்கொண்டது.
அப்போது மந்திரி மன்னனை பார்க்க வந்தார்.

மன்னா .... எப்படி இருக்கிறீர்கள் ? என்றார்.
மன்னன் மனம் விட்டு பேசினான். இளவரசர் பிறக்கும்போது அவனது ஜாதகத்தை கணித்த ஜோதிடர்கள் அனைவரும் ..... இவன் தலைசிறந்த மருத்துவனாவான் என்றார்களே ஒழிய யாரும் இவன் மன்னனாவான் என்று சொல்லவில்லை.

நான் காலம் கடத்தியது தவறு. உங்களுக்கு நினைவிருக்கிறதா மந்திரியாரே ......

மகாராணி இவனை பிரசவிக்கும்போது மருத்துவப்பெண் சொன்னது நினைவிருக்கிறதா ?

அவரது மறுமகளும் நிறைமாத கர்பிணியாக இருப்பதால் அரண்மனை வந்து மகாராணிக்கு பிரசவம் பார்க்க இயலாது. வேண்டுமானால் ராணியை என் வீட்டுக்கு அனுப்பி வையுங்கள் என்றாரே நினைவிருக்கிறதா ?

இவன் அரண்மனையில் பிறக்காததால் இவனுக்கு ராஜ்ஜிய பரிபாலணம் செய்யும் ஆசை இல்லாமல் போனதோ ? என்றார்.

மூளையில் ஏதோ பொறிதட்டிய மந்திரி .. சற்று பொறுங்கள் மன்னா .... ஓரிரு நாளில் உங்களை சந்திக்கிறேன் என கூறிவிட்டு சென்றார்.

மந்திரி நினைத்ததுபோலவே நிகழ்வும் நடந்திருந்தது.
மருத்துவ பெண்வீட்டில் .... தன் வாரிசு நாடாளவேண்டும் என்ற பேராசையால் இளவரசன் பிறந்தபோதே பிள்ளையை மாற்றிய கதை வெளிவந்தது.

மன்னரை இரண்டுநாள் கழித்து ஒரு வாலிபனுடன் சந்தித்தார் மந்திரி.

மன்னா .... கண்திறந்து பாருங்கள். இளவரசர் வந்திருக்கிறார் என்றார் மந்திரி.

மன்னரிடம் நடந்ததை கூறி இளைஞனை மன்னராக்கினார் மன்னர்.

அதுபோல் .... குயிலும் காகமும் ஒரே கூட்டில் பிறந்தாலும் காகம் பாடுவதில்லை ....

இந்தியன் என்று பொய்யாக தனக்குத்தானே தம்பட்டம் அடித்துக்கொள்பவனெல்லாம் இந்தியனாகிவிடுவதில்லை ....

மீசை வைத்தவனெல்லாம் கட்டபொம்மனாகிவிடுவதில்லை ....

பார் டான்சரின் மகன் பார் டான்சர்தான் ....

பாரதத்தாயின் மகன் மகத்துவமானவன் தான் ....

நேற்றும் .... இன்றும் ... நாளையும் என்றுமே மோடி ஆட்சி ....

அதில் ஏதும் மாற்றம் வரப்போவதில்லை .....


நன்றி இணையம்