அன்பு குழந்தையே...
கிடைக்கும் கிடைக்காத, நடக்கும் நடக்காத விஷயங்களுக்கு நடுவில் தான் உன் வாழ்வின் தேடல் எதிர்நோக்கி இருக்கும்.
நீ ஆசைப்பட்டு விரும்பிய விஷயங்கள் கிடைத்த நடந்த எல்லாம் உனக்கு திருப்தி கொடுக்கும் மகிழ்ச்சியை தரும்.
கிடைக்காத நடக்காத விஷயங்ஙள் உனக்கு கஷ்டத்தை கொடுக்கலாம்.
அவைகள் தரும் பாடங்களும், பகுத்தறிவும், நடப்பதை அறிவு திறனோடு ஏற்றுக் கொள்ளுதல் என எல்லா வகையான முன்னேற்றத்துக்கான வழிகளை வகுக்கும்.
உன்னிடம் ஒன்று இருக்குமானால் அதை பெற நீ சிறிதாகவோ பெரிதாகவோ ஒன்றை இழந்து இருப்பாய்.
ஒன்றை இழந்தால் தான் இன்னொரு விஷயம் கிடைக்கும். இரண்டும் கிடைப்பதோ அல்லது ஒன்றை இழக்காமல் இன்னொரு விஷயம் கிடைப்பது சாத்தியம் அன்று.
ஒரு பூ பூக்கிறது என்றால் மறுநாள் அது காயந்து போகும், அந்த இடத்தில் வேறு ஒரு மொட்டு முளைக்காமலா போகும் ,மூளைக்கும் அல்லவா.
அதை போலவே தான் வாழ்க்கையில் இழந்தவை என ஒன்று இருந்தால் பெறுபவை என ஒரு காலமும் வரும் அதற்கு பொறுமை காத்து இரு.
உனக்கு எல்லாம் கிடைக்கும் நேரத்தில் இது ஒரு காலகட்டம் கிடைகிறது இதுவே கிடைக்காமல் போகும் காலகட்டம் வந்தால்,
அப்போது உன் மனம் எதையும் ஏற்கும் பக்குவத்திற்கு வந்துவிடும். கிடைப்பது அதிசயம் அல்ல,
ஆது கிடைக்காத போது, நீ எப்படி எதிர்நோக்கி சமாளிக்கிறாய் என்பதை பொறுத்தே உனக்கு கிடைக்கும் விஷயங்கள் அதிசயமாகும்.
அதனால் நீ எதற்கும் பயப்படாதே கலங்காதே உன்னில் நிச்சயம் வெற்றி என்ற தீபத்தை நான் ஏற்றுவேன்.
நீ ஜெயமாக நல்ல ஆரோக்கியத்துடன் எல்லா செல்வ வளங்களைப் பெற்று மகிழ்ச்சியான வாழ்க்கையை பெறுவாய்.
ஓம் ஸ்ரீ சாய் ராம்...
நன்றி இணையம்