*இறைவன்
மட்டுமே நிரப்பவல்ல வெறுமைநிலை*
இந்திய சாத்திரங்கள், பக்தர்கள் இரண்டு வகையானவர்கள் என்று கூறுகின்றன. அவை ஓர் அழகான உதாரணத்தில் விவரிக்கப்பட்டுள்ளன.
முதல்வகை பக்தன், தாய் குரங்கு ஒரு மரத்திலிருந்து இன்னொரு மரத்திற்கு தாவும் பொழுது தாயை விடாமல் கெட்டியாக பிடித்துக் கொள்ளும் குரங்கு குட்டியை போன்றவன்; அது அவ்வளவு கெட்டியாக பிடித்துக் கொள்வதால் விழவே விழாது.
மற்றொரு வகை பக்தன் தாய் பூனையினால் வாயில் கவ்விக் கொள்ளப்பட்டு ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லப்படும் பூனை குட்டியை போன்றவன்; அந்த பூனை குட்டி இறுக்கமோ அல்லது பயமோ இன்றி முற்றிலும் தளர்ந்து, தாய் அதை எங்கு கொண்டு சென்றாலும் அல்லது வைத்தாலும் முழுமையான நம்பிக்கையுடன் இருக்கும். நாம் இந்த இரண்டு விதமாகவும் இருக்க வேண்டும். சோதனைக் காலங்களில் நாம் இங்குமங்குமாக அலைக்கழிக்கப்படுவது போல் தோன்றினால் குரங்கைப்போல் தெய்வ அன்னையை விடாமல் பிடித்துக் கொள்ள வேண்டும் .
மற்ற வேளைகளில் நாம் பூனைக்குட்டியை போன்று இருக்க வேண்டும் ; பூரண திருப்தியுடன் தன்னை மறந்து, முழு நம்பிக்கையுடன் ஆண்டவனை சார்ந்து இருத்தல். அம்மாதிரியான பக்தனுக்கு நிஜமான அமைதி என்றால் என்னவென்று தெரியும்.
----- ஸ்ரீ ஸ்ரீ தயா மாதா
அன்பு மட்டுமே
அன்பு மட்டுமே