மணக்கால் அய்யம்பேட்டை | 12:22 PM | Best Blogger Tips
Image may contain: 1 person


மத்திய அரசு மீது 56% இந்தியர்களுக்கு திருப்தி - கருத்துக்கணிப்பில் தகவல்!

2019 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் Inshorts என்ற தனியார் செய்தி நிறுவனம் 'pulse of the nation' என்ற தலைப்பில் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது.

நாட்டு மக்களின் எண்ண ஓட்டங்களை வெளிப்படுத்தும் வண்ணம், டிசம்பர் முதல் வாரத்தில், ஆன்லைனில் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில் 56% இந்தியர்களுக்கு தற்போதைய மத்திய அரசு (பா..) மீது திருப்தி உள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த கருத்துக்கணிப்பில் பல்வேறு சுவாரஸ்ய தகவல்களும் தெரியவந்துள்ளது.

இதன்படி, 51% வரி செலுத்துவோர் தாங்கள் செலுத்திய வரிப்பணத்தை அரசு நிர்வாகம் சரியான முறையில் பயன்படுத்தியுள்ளதாக கூறியுள்ளனர்.
கருப்புப்பண விவகாரம் சரியான முறையில் கையாளப்படவில்லை என்று 55% பேர் தெரிவித்துள்ளனர்.

கார்பரேட் மோசடிகள் மற்றும் ஊழல்கள் குறைந்துள்ளதாக 51% பேரும், எந்த மாற்றமும் இல்லை என 20% பேரும் தெரிவித்துள்ளனர்.
அதேநேரத்தில் கடந்த 4.5 ஆண்டுகளில் சுகாதாரம் மற்றும் துப்புரவு நிலைமைகள் மேம்பட்டுள்ளதாக 62% பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Inshorts-ன் CEO மற்றும் நிறுவனர்களில் ஒருவரான அசார் இக்பால் இதுதொடர்பாக கூறும் போது, இந்த கருத்துக்கணிப்பானது இந்தியாவின் கிராமப்புற, நகர்ப்புற, நடுத்தர நகரங்களைச் சேர்ந்த இளம் வாக்காளர்களின் மனநிலையை எடுத்துரைப்பதாக உள்ளது.

கடந்த 4.5 ஆண்டுகளில் தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துள்ள முயற்சிகள் குறித்த, இளைஞர்களின் எண்ண ஓட்டங்களைய வெளிப்படுத்தும் ஒரு முயற்சியாக இது அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Image may contain: Senthil Kumar, smiling, closeup 

நன்றி இணையம்