சனிப் பெயர்ச்சி! & குருப் பெயர்ச்சி

மணக்கால் அய்யம்பேட்டை | 11:31 AM | Best Blogger Tips
Image result for சனிப் பெயர்ச்சி! & குருப் பெயர்ச்சி


சனிப் பெயர்ச்சி பலன் போடப்போறேன்னு நினைச்சுக்காதீங்க.

இது வேற...

சனி & குருப் பெயர்ச்சி படிச்சு பயந்து போயிருக்கவங்க மட்டும் படிங்க..

குரு, சனி, ராகு, கேதுப் பெயர்ச்சியெல்லாம் காலம் காலமா நடந்துகிட்டு தான் இருக்கு.

ஆனா அப்போல்லாம் இவ்ளோ யாருக்கும் தெரியாது.

*_நல்லதோ.. கெட்டதோ.. சாமி மேல பாரத்தைப் போட்டு போயிடுவாங்க._*

"நல்லதே நினைங்க.. நல்லது நடக்கும்..

காரணமில்லாம எதுவும் நடக்கலை..

நடப்பது நாராயணன் செயல்..

அவனன்றி ஓர் அணுவும் அசையாது..
Image result for சனிப் பெயர்ச்சி! & குருப் பெயர்ச்சி
கர்மா....

எல்லாம் நன்மைக்கே..

இதுவும் கடந்து போகும்..

மேடு பள்ளம் உள்ளது தான் வாழ்க்கை..."

இப்படி சமாதானம் சொல்லி ஈஸியா கடந்து போயிடுவாங்க....

எதைப் பத்தியும் ரொம்ப தெரிஞ்சுக்காம இருக்கறது கூட நல்லது தான்..

இப்போ நிலைமை மாறிப் போச்சு...

எல்லாருக்கும் எல்லாம் சொல்றாங்க...

நாம கேக்கறமோ இல்லியோ.. தேடிப் போறோமோ இல்லியோ... நம்மைத் தேடி விஷயங்கள் வருது.

அதில.. கொஞ்சத்துக்கு கொஞ்சம் மட்டும் தான் உண்மை...
எல்லாத்தையும் போலவே... இதுலயும் பாதி மிகைப் படுத்தல்... வியாபாரம்.... பணம் பண்றது எல்லாம் கலந்திருக்கு...

ஆன்மீகமும் இப்போ வியாபாரமாயிடுச்சு.
ஜனங்களோட பயத்தை பணம் பண்றாங்க.

பக்தியோட இல்லை... இப்பல்லாம் பாதி பேர் பயத்தோட தான் கோவிலுக்குப் போறாங்க...

அந்த அர்ச்சனை.. இந்த அர்ச்சனை.. பரிகார பூஜை... அந்தக் கோவில்.. இந்தக் கோவில்னு..

கண்ல பட்டது.. காதுல கேட்டது... படிச்சது... பக்கத்து வீட்டு பார்வதி ஆச்சி சொன்னது எதிர் வீட்டு ஏகம்மை ஆச்சி சொன்னதுன்னு...

பைத்தியம் பிடிக்காத குறையா மக்கள் அலையறாங்க...
பரிதாபமா இருக்கு பார்க்க...

கோவிலுக்குப் போங்க... கட்டாயம் போங்க.. அவசியம் போகணும்...

அர்ச்சனை பண்ணுங்க.. பூஜை பண்ணுங்க. அபிஷேகம் பண்ணுங்க.. ஒரு தப்பும் இல்லை...

ஆனா.. இதெல்லாம் *_பயத்தில பண்ணக் கூடாது. பக்தியோட பண்ணனும்... நம்பிக்கையோட போகணும்._*

கோள்கள் சுழற்சியில வாழ்க்கைல ஏற்றத் தாழ்வுகள் வரலாம்... சோதனைகள் வரலாம்.

ஆனா... இப்படி ஆளாளுக்கு கிளப்பி விடறதை படிச்சுட்டு பயந்துடாதீங்கன்னு சொல்ல வர்றேன்.

சினிமா விமர்சனம் மாதிரி...

"Bad, Very bad, Very very bad, Good, Fair
னு போடறது.. கடக ராசிக்கு நூற்றுக்கு தொண்ணூறு மார்க்காம்.......

பரீட்சைல மார்க் போடற மாதிரி, பாஸ்/ ஃபெயில்/ டிஸ்ட்டின்க்ஷன்னு மார்க் போடறது...

நீ தொலைஞ்ச.. செத்த .. எல்லாம் போச்சுனு சொல்றது...
தெய்வமே....!!!

அந்த சனி பகவானே இறங்கி வந்து,

"நான் இப்படியெல்லாம் செய்வேன்னு உங்கள்ட்ட சொன்னனாடா..?? ராஸ்கல்!!" னு

ஆளுக்கு ரெண்டு அறை விட்டு போயிடுவார்...
அப்படி பீதிய கிளப்புறாங்க!?!?!!!

நல்ல ஜோசியர்கள் நாசூக்கா சொல்வாங்க...

நீங்க ஜாதகம் பார்க்க போனாலே அது தெரியும்... படால்.. தடால்னு சொல்ல மாட்டாங்க...

இதுல அரை குறை அறிவோட பேசறவங்க வேற...
மொத்தத்தில ஜனங்கள் panic ஆகி..

"
ஐயோ இனி நான் அவ்ளோ தான்"னு உடைஞ்சு சுக்கு நூறாகி விடுவாங்க..

இந்த அரை வேக்காட்டு பலன்லாம் படிச்சா..
வாழ்க்கையில உள்ள கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போயிடும்...

அதனால தான் நம்ப முன்னோர்கள் எல்லாத்தையும் இலை மறை காய் மறையாவே வைச்சிருந்தாங்க...

"எல்லாம் சரியாகிடும் போ"னு தைரியம் சொல்வாங்க...
இதெல்லாம் நம்பறவங்களுக்கு கடவுள் நம்பிக்கையும் கண்டிப்பா இருக்கணும்...

அப்போ ஸ்ட்ராங்கா இது மனசுல வைச்சுக்கணும்...

இறை சக்தியை விட பெரிய சக்தி எதுவும் இல்லை...

கோள்கள் அனைத்தும் எம்பெருமான் என்னப்பன் என் ஈசன் கட்டுப் பாட்டில் இருக்கு...

இதெல்லாம் ஒரு எச்சரிக்கை மாதிரி வைச்சுக்கணும்...
வண்டியோட்றப்போ ஹெல்மெட் போடுன்ற மாதிரி...
ஒரு எச்சரிக்கை... பீ கேர்ஃபுல்னு... caution..
மத்தபடி..

"ஜாமீன் கையெழுத்து போடாத..

அளவா பேசு...

சாமான், காசு, பணம், நகை, நட்டு பத்திரமா பாத்துக்க...
வாகனத்துல போறப்போ எச்சரிக்கையா இரு..

புது பிஸினஸ்ல பாத்து இறங்கு..

பாஸ்கிட்ட வம்பிழுத்துக்காத..

சொந்தக்காரங்கள பகைச்சுக்காத..

யாரையும் நூறு பர்சன்ட் நம்பாத.."

இதெல்லாம் சனி வந்து சொல்லணும்னு குரு வந்து சொல்லணும் னு அவசியம் இல்லை...

எல்லாக் காலத்துலயும் எல்லாரும் ஃபாலோ பண்ண வேண்டியது தான்...

அதனால... பயந்துக்க வேணாம்...

உலகத்துல இருக்கற அத்தனை பேரும் இந்த பன்னிரண்டு ராசில அடங்கிருவாங்க...

அத்தனை பேருக்கும் ஒரே மாதிரி நடந்தா உலகம் தாங்குமா...

அப்படியா நடக்குது...

அவங்கவங்க ஜாதகம்.. கர்ம பலன்.. பிற கிரகங்கள் இருப்பு... கூட வாழறவங்களோட பலன்... இப்ப செய்ற காரியங்களோட பலன்...

எல்லாத்துக்கும் மேல நாம் வணங்கும் கடவுள் எம்பெருமான் ஈசன். எல்லாம் இருக்கு....

பயப்படாம சாமி மேல பாரத்தைப் போட்டு நம்ம வேலை பார்த்துட்டு இருந்தாலே போதும்....

நம்ம மனசு நல்லாயிருந்தா... அவன் கூடவே தான் இருப்பான்...

கிரகங்கள் ஆட்டி வைக்கிற படி தான் நம்ம வாழ்க்கைன்னா.. சாமிக்கு என்ன மரியாதை...

அதனால.... நம்ம பெரியவங்க சொன்ன மாதிரி..

இது ஒரு caution/ முன்னெச்சரிக்கைனு வைச்சுக்கிட்டு..

கடவுளை நம்பி நாம பாட்டு நம்ம வேலை செய்யலாம்...

எப்பவும் மனசு விடாம தைரியமா இருக்கணும்...

எல்லாம் அவன் பார்த்துப்பான்...

அவனன்றி ஓர் அணுவும் அசையாது..

சர்வம் சிவார்ப்பணம்

எண்ணம் போல் வாழ்வு.


நன்றி இணையம்