மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:00 | Best Blogger Tips



ஒபாமா மோடி சந்திப்பு 2015 நடந்த போது மோடி அவர்கள் அணிந்து இருந்த கோட் பத்து லட்சம், இருபது லட்சம், என்று ஏகப்பட்ட விமர்சனங்கள் இன்று வரை வருகிறது அந்த கோட் விலை 4.5 கோடி என்பது தெரியுமி மயக்கம் வருகிறதா? எப்படி?

அதற்கு முன் 

மன்மோகன் சிங் 10 வருடங்கள் பிரதமராக இருந்தார். பதவியில் இருந்து மக்கள் அவரை (காங்கிரஸ் கட்சியை) தூக்கி எறிந்த பிறகு அவர் தனக்கு அந்த 10 வருடங்களில் பல நாட்டு தலைவர் கொடுத்த பரிசு பொருட்களில் இருந்து 101 பரிசு பொருட்களை தன்னுடன் எடுத்து சென்று விட்டாராம். நமது நாட்டின் விதிப்படி 5000 ரூபாய் மதிப்பிற்கு கீழே உள்ள பரிசைதான் எடுத்து செல்லலாம் என்று இருக்கிறது.
 Image may contain: 1 person, smilingImage may contain: 2 people, people smiling, people standing and suit

மீதமுள்ளவற்றிற்கான விலையை கொடுத்துவிட வேண்டுமாம் .


சென்ற காங்கிரஸ் அரசு இந்த பரிசு பொருட்களின் விலையை ஆய்வு செய்து வெளியிட்டு இருக்கிறது.


அதில் உள்ள பெண்கள் அணியும் தங்கமுலாம் பூசப்பட்ட பிஜியேட் வாட்சின் விலையை 35 ஆயிரம் என்று கூறி இருக்கிறது, ஆனால் அந்த கம்பெனியின் இணையத்தளத்தில் அதே போன்ற வாட்ச் 4 லட்சரூபாய். 1.5 லட்ச ரூபாய்க்கு கம்மியா அந்த கம்பெனில வாச்சே இல்ல ..!

 Image may contain: 2 people, people smiling, people standing, suit and beard
அவர் எடுத்துச்சென்ற போஸ் ம்யூசிக் சிஸ்டத்தின் உண்மையான விலை 39000 ருபாய்..!


மனுஷன் டீ செட்டை கூட விட்டு வைக்கவில்லை. இதன் உண்மையான விலையோ 20000 ருபாய்..!


எவ்வளவு மதிப்பு வைத்திருந்தோம் இவரின் மீது? எவ்ளோ கீழ்தரமா நடந்து இருக்காரு ...!


ஆனால் இவருக்கு நேர் மாறாக
மோதிஜி 12 வருடம் முதல்வராக இருந்தபோது அவருக்கு அளித்த பரிசுகளை 2014 ல் ஏலம்விட்டு அதில் வந்த 19 கோடி ரூபாய்களை கன்யா கேளவாணி என்கிற குஜராத் அரசின் பெண்கள் கல்விக்கான திட்டத்திற்கு அளித்தார்.


2014 ல் இருந்து 2015 வரை தன்னுடைய பிரதமர் என்ற பதவிக்கு வந்த பரிசுகளை எலாம் விட்டு கிட்டத்தட்ட 8.3 கோடி ரூபாய்களை கங்கையை சுத்தம் செய்யும் திட்டத்திற்கு அளித்தார். இதில் தான் அவருக்கு பரிசாக வந்த அவர் பெயர் பாதிக்கப்பட்ட கோட்டும் அடங்கும். அது மட்டுமே கிட்டத்தட்ட 4.5 கோடி ரூபாய்க்கு எலாம் போனது.


ஆம்

அமெரிக்க அதிபர் ஒபாமா உடனான சந்திப்பின்போது பிரதமர் மோடி அணிந்திருந்த ஆடை 20-2-2015 அன்று ரூ.4.31 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.


குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன், ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மோடி, வயலட்நிற பந்த்கலா கோட் என்ற உயர்ரக கோட், சூட் ஆடை அணிந்திருந்தார்.


அந்த கோட்டில், தங்க நிறத்தில் நரேந்திர தாமோதர்தாஸ் மோடி என்று அனைத்து லைனிலும் அவரது பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. பிரதமர் மோடி அணிந்து இருந்த ஆடையின் மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன.


காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியும், டெல்லியில் பிரசாரம் செய்தபோது கடுமையாக விமர்சனம் செய்தார்.


இந்நிலையில், பிரதமர் மோடி அணிந்திருந்த ஆடை மற்றும் கடந்த 9 மாதங்களில் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட 455 அன்பளிப்புகள் சூரத்தில் ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டது.


அதன்படி, ஏலம் தொடங்கியது. மோடியின் ஆடை முதலில் ஏலம் அறிவிக்கப்பட்டபோது, ராஜுபாய் அகர்வால் என்பவர் அதனை 51 லட்சம் ரூபாய்க்கு ஏலம் கேட்டார். அதனைத் தொடர்ந்து சுரேஷ் அகர்வால் என்பவர் 1 கோடி ரூபாய்க்கு ஏலம் கேட்டார். அவரைத் தொடர்ந்து குஜராத்தை சேர்ந்த வெளிநாட்டு இந்தியர் விரால் சவுக்சி என்பவர் 1.11 கோடி ரூபாய்க்கு ஏலம் கேட்டார். பின்னர், ராஜேஷ் ஜுனேஜா என்ற தொழிலதிபர் 1.21 கோடி ரூபாய்க்கு ஏலம் கேட்டார்.


தொடர்ந்து இரண்டாவது நாளாக நடந்த ஏலம் ரூ.1.25 கோடியுடன் தொடங்கியது. முதலில் முகேஷ் படேல் என்பவர் ரூ. 1.39 கோடிக்கு கேட்டார்.

இதனையடுத்து கோமால்காந்த் சர்மா என்பவர் ரூ. 1.41 கோடிக்கு ஏலம் கேட்டார். அத்துடன் நேற்றைய ஏலம் முடிவடைந்தது.


இந்நிலையில் மூன்றாவது நாளில் இறுதிக்கட்ட ஏலம் விடப்பட்டது. அப்போது, குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி லால்ஜிபாய் பட்டேல் ரூ.4.31 கோடிக்கு ஏலம் கேட்டார். அதைத் தொடர்ந்த மோடியின் உடை அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.


இந்த ஏலத்திலிருந்து வசூலான ரூ.4.31 கோடி ரூபாயும், கங்கா நதி தூய்மை திட்டத்துக்காக தரப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
2015 ல் இருந்து இன்று வரை அவருக்கு வந்த பரிசு பொருட்களை காட்சிக்காக வைத்திருக்கிறார்கள். இதுவும் ஏலம் விடப்படும். அந்த தொகை ஏதாவது அரசின் திட்டத்திற்கு வழங்கப்படும்.


எதன்மீதும் ஆசையில்லாமல் நாடு , நாட்டு மக்கள் என்று ஒரு தவ வாழ்க்கை வாழும் இவர் மீது தான் புழுதியை வீச முற்படுகிறார்கள் தேச துரோக காங்கிரஸ் மற்றும் திராவிட கட்சியினர்.

 Image may contain: 1 person, sunglasses and outdoor
நன்றி Facebook : Siva Paramasivam