2019 - 2020 வருமான வரி

மணக்கால் அய்யம்பேட்டை | 4:27 PM | Best Blogger Tips
Image result for 2019 - 2020 வருமான வரி"

*2019 - 2020 வருமான வரி படிவம் பூர்த்தி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை...*

4 வது பக்கத்தில் மாத சம்பளத்துடன் நிலுவை ஊதியம் பெற்று இருப்பின் அதையும் காண்பிக்க வேண்டும். [DA Arrear -2, Bonus, surrender, pay fix arrear if any]

நிலையான கழிவு (Standard deduction) ₹50,000/- மொத்த வருமானத்தில் அனைவரும் கழித்துக் கொள்ளலாம்.
Image result for 2019 - 2020 வருமான வரி"
housing loan பிடித்தம் செய்பவர்கள் HRA கழிக்கக் கூடாது.

மாற்றுத்திறன் ஆசிரியர்கள் தொழில்வரி செலுத்தத் தேவையில்லை. மேலும் சம்பளத்தில் பெறக்கூடிய போக்குவரத்து பயணப்படியை Entertainment Allowance ல் கழித்துக் கொள்ளலாம்.

housing loan - வட்டி அதிகபட்சமாக ₹2,00,000/- வரை கழித்துக் கொள்ளலாம்

housing loan - அசல் தொகையை Under chapter -VI ல் கழித்துக் கொள்ளலாம்.

housing loan - அசல் மற்றும் வட்டி கழிப்பவர்கள் 12c படிவம் வைக்க வேண்டும்.

CPS திட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் Under chapter -VI ல் சேமிப்பு 1,50,000 க்கு மேல் இருந்தால், செலுத்திய CPS தொகையில் அதிகபட்சமாக ₹50,000/- வரை 80CCD(1B) ல் கழித்துக் கொள்ளலாம்.

School fees - குழந்தைகளின் tuition fee மட்டும் கழிக்க வேண்டும். Other fees ஏதும் கழிக்கக் கூடாது. (அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மட்டும்)

LIC & PLI : பிரீமியம் தொகை மட்டும் கழிக்க வேண்டும். Late fee கழிக்கக் கூடாது. (LIC Statement பெற்று, படிவத்துடன் இணைக்கவும்).

80DDB - Medical Treatment - ₹80,000/- வரை காண்பிப்பவர்
10 - I
படிவத்தில் மருத்துவரிடம் சான்று பெற்று இணைக்க வேண்டும்.

[Citizens - ₹40,000,
Senior Citizens - ₹60,000,
Super Senior Citizens - ₹80,000]

மாற்றுத் திறன் ஆசிரியர்கள் ஆண்டு முழுவதும் Medical treatment க்காக ₹75,000/- 80DD ல் கழித்துக் கொள்ளலாம்.(₹1,25,000 - In case of severe disability)

மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் NHIS தொகையை 80D ல் கழித்துக் கொள்ளலாம்.

கல்விக் கடனுக்காக இந்த நிதியாண்டில் (2019-2020) செலுத்திய வட்டியை முழுவதும் 80E ல் கழித்துக் கொள்ளலாம்.

நன்கொடை மற்றும் முதலமைச்சர் நிவாரண நிதி ஏதேனும் வழங்கியிருந்தால், அத்தொகையை 80G ல் கழித்துக் கொள்ளலாம்.

வரி விபரம்....

2,50,000
வரை - இல்லை
2,50,001 - 5,00,000 : 5%
5,00,001 - 10,00,000 : 20%
Above 10,00,000 : 30%

வருமான வரியில் ஆரோக்கியம் மற்றும் கல்வி வரி 4% பிடித்தம் செய்ய வேண்டும்.

Taxable income ₹5,00,000-க்கு குறைவாக இருந்தால் மட்டும், மொத்த வரியில் ₹12,500/- வரை 87A ல் கழித்துக் கொள்ளலாம்.

Taxable Income மட்டும் அருகாமையில் உள்ள ரூ.10 க்கு முழுமையாக்க வேண்டும். வரியில் ரூ.10 க்கு முழுமையாக்க வேண்டாம்


நன்றி இணையம்