உங்கள் மீது அக்கறையோடு இருங்கள். வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரி இருக்காது. சிலநேரம் மற்றவர்களை நம்ப வேண்டி வரும்.
அந்த நேரத்தில் அவர்களை சார்ந்து இருக்க நினைப்போம்.
ஆனால் வாழ்நாள் முழுவதும் அவர்கள் நம்மோடு இருப்பார்களா? என்பதுதெரியாது. நம்மை பற்றி யோசிக்க வேண்டும்.
*வாழ்க்கையில் எது நடந்தாலும் முதலில் நமக்காக இருப்பது நாம் மட்டும்தான்*
நமது வாழ்க்கையில் *வெற்றியா?, தோல்வியா*?, *உயர்வா?,தாழ்வா?,இன்பமா?,துன்பமா? ,ஏற்றமா? இறக்கமா? புகழா?, அவமானமா*?
இவையெல்லாம் நம் கையில்தான் இருக்கிறது...
ஒரு அறிஞர் ஒரு ஊருக்கு வந்தார்.. அவர் ஒரு அறிவு ஜீவி.. நன்கு கற்றவர்..ஊர், ஊராக சென்று மக்களுக்கு நல்ல அறிவுரை வழங்கி வந்தார்...
அவரது புகழைப் பற்றிக் கேள்விப் பட்ட மக்கள், கூட்டம் கூட்டமாக அவரை பார்க்க வந்தார்கள்.
அந்த ஊரில் இருந்தஇளைஞன்அவரை நேரில் சந்திக்க வந்தான்.அவரின் அறிவுத் திறமையை சோதிக்க எண்ணினான்..
ஒரு பட்டாம் பூச்சியைத் தனது உள்ளங்கையில் வைத்து, கையை மூடி, தான் அணிந்திருந்த உடையில் உள்ள பாக்கெட்டில் வைத்து மறைத்துக் கொண்டான்.
அவரைப் பார்த்து, "நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். அதற்கு நீங்கள் பதில சொல்ல முடியுமா?" என்று கேட்டான்.
"சரி…. தம்பி உனது கேள்விதான் என்ன? கேள்" என்றார் அந்த பெரியவர்..
ஐயா, எனது கையில் ஒரு பூச்சி உள்ளது..அது உயிருடன் உள்ளதா? அல்லது செத்து விட்டதா? என்று உங்களால் சொல்ல முடியுமா?" என்று கேட்டான்.
உயிருடன் இருக்கிறது என்று சொன்னால் கையில் உள்ள பூச்சியை நசுக்கிக் கொன்று விடுவது, அல்லது செத்து விட்டது என்று சொன்னால் உயிருடன் காட்டுவது என்று நினைத்துத்தான் இந்த கேள்வியை கேட்கிறான் என்பதை அந்த அறிஞர் யூகித்துக் கொண்டார்..
அவரோ,, *அது உயிருடன் இருப்பதும்,,இல்லாததும் உன் கையில் இருக்கிறது* என்றார்.
ஆம்.,நண்பர்களே..
நம் வாழ்க்கை கூட அந்த வண்ணத்துப் பூச்சி நிலையில் தான் உள்ளது...
*நமக்கு நாமே நண்பன், நமக்கு நாமே எதிரி*."
*நமது வெற்றிக்கோ,, தோல்விக்கோ வேறு எவரும் காரணமாக இருக்க முடியாது*.
நாமே தான் காரணமாக இருக்க முடியும்..
ஒருவன் தன்னைத் தானே ஆள வேண்டும்.
தன்னைத் தானே அறிய முயல வேண்டும்.
தன்னைத் தானே காக்க வேண்டும்.
தன்னைத் தானே உயர்த்தவும் வேண்டும். ஆக நமக்கான செயல்களை நாம் மட்டுமே செய்து கொள்ள வேண்டும்.
தன்னைத் தானே காக்க வேண்டும்.
தன்னைத் தானே உயர்த்தவும் வேண்டும். ஆக நமக்கான செயல்களை நாம் மட்டுமே செய்து கொள்ள வேண்டும்.
*தீதும், நன்றும் பிறர் தர வாரா" என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்*
நன்றி இணையம்