வீட்டில் வைத்து வழிபட கூடாத ஸ்வாமி படங்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 4:31 PM | Best Blogger Tips
Image may contain: 1 person, standing

வீட்டில் வைத்து வழிபட கூடாத ஸ்வாமி படங்கள் பற்றிய ஓரு பகிர்வு.

ஆலயம் என்பது ஆன்டவன் உறைவிடம். ஆலயத்திற்கு அடுத்தப்படியாக ஆன்டவனை தரிசிக்கும் இடம் தான் வீடு.

ஆனால் ஆலயத்தை தவிர வீட்டில் இறைவனை தரிசிக்க ஒரு சில விதிமுறைகள் உள்ளது. அவற்றில் ஒன்று தான் உருவ வழிபாடு.

பூஜை அறையில் எந்த சாமி படங்களை வைக்கவேண்டும் எந்த சாமி படங்களை வைக்கக்கூடாது என சில சாஸ்திரங்கள் உள்ளன

அதை முறைப்படி பின்பற்றினால் எப்போதும் நன்மையே நடக்கும்.

வீட்டின் பூஜை அறையில் சனீஸ்வர பகவானின் படங்களை வைத்து வழிபட கூடாது. மாறாக அவருடைய வாகனமான காகத்தின் படத்தை வைத்து வழிபடலாம். காரணம், சனியின் பார்வை நம் மீது நேரடியாக படக்கூடாது.

நவ கிரகங்களின் படங்களை பூஜை அறையில் வைத்து எப்போதும் பூஜை செய்யக் கூடாது.

நடராஜரின் உருவ படத்தை பூஜை அறையில் வைக்கக்கூடாது.

கடவுளின் உருவமானது மிகவும் ஏழ்மையாக இருந்தால் அதாவது மொட்டை அல்லது கோவணம் கட்டிய நிலையில் உள்ள முருக பெருமானின் படத்தை வீட்டு பூஜை அறையில் வைக்க கூடாது.

கோபமாக இருக்கக் கூடிய காளியின் படத்தை வீட்டில் வைத்து பூஜை செய்யக் கூடாது.

ருத்ர தாண்டவமாடும் உருவம், கொடூர பார்வை உள்ள சாமி படங்களை வீட்டில் வைத்து பூஜை செய்யக் கூடாது.

சிவபெருமான் மட்டும் தனியாக இருக்கும் உருவ படம் அல்லது அவர் தனியாக இருக்கும் முழு உருவப்படம் போன்றவை வீட்டில் இருக்கக் கூடாது.

மாறாக சிவன் சக்தியுடன் இருக்கும் படம் அல்லது சிவ குடும்ப படத்துடன் இடம் பெறலாம்.

வீட்டில் உடைந்த சிலைகள், சிதைந்த சாமி சிலைகள், கிழிந்த உருவ படங்கள் போன்றவற்றை வீட்டில் வைத்து பூஜை செய்யக் கூடாது.

அதுமட்டும் இல்லாமல் உக்ரமாக இருக்கக்கூடிய எந்த ஒரு கடவுள் படங்களும் வீட்டில் வைத்து வழிபட கூடாது.

மேலும் நீங்கள் வீட்டில் சிலை வைத்து வழிபடுபவராக இருந்தால் அச்சிலை உங்கள் கையின் ஒரு ஜானுக்கு குறைவாக இருக்க வேண்டும்.

காரணம் உருவ வழிபாட்டை விட சிலை வழிபாட்டுக்கு சக்தி அதிகம். ஆனால் முறையான பூஜை முறைகளை கடைப்பிடிப்பவர்கள் மட்டுமே சிலை வழிபாட்டை நடத்த வேண்டும்.

இவையனைத்தும் நமது சாஸ்த்ரங்கள் சொல்லும் விஷயங்களாகும்.


நன்றி இணையம்