மோடியும்.....துரோகிகளும்..

மணக்கால் அய்யம்பேட்டை | 3:12 PM | Best Blogger Tips
Image result for மோடியும்"



டில்லி போலீஸ் குற்றப் பிரிவின் துணை கமிஷனர், திரு.விக்ரம்,

மோடியைப் பற்றி சொல்லியிருப்பதைத் தமிழில் கொடுக்கிறேன்:

இன்று, நம் பிரதமர் நரேந்திர மோடி, அதிக அளவு வெறுப்பை சம்பாதித்துக் கொண்டிருப்பதன் காரணம் என்ன?

காரணங்களை எல்லாம் நான் நன்றாக அலசிப் பார்க்கும் போது, ஒவ்வோர் ஊழல் அரசியல்வாதியும், கறுப்புப்பணம் வைத்திருப்பவரும், தீவிரவாதியும், தேச விரோதியும், தேசப் பற்று கொண்டுள்ள நம் பிரதமரின் ஊழலற்ற கொள்கைகளால் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர் என அறிகிறேன்.

பண மதிப்பைக் குறைத்ததிலும் சரி, ஆதார் அட்டையை வங்கிக் கணக்குடன் அல்லது வருமான வரிப்பேன்அட்டையுடன் இணைத்ததிலும் சரி, அவர்கள் வெறுத்துப் போய் விட்டனர்.
Image result for மோடியும்"
ஆதார் எண்ணை இணைத்ததில், மஹாராஷ்ட்ராவில், ஏழைகள் என்று தங்களைச் சொல்லிக் கொண்ட 10 லட்சம் பேர் மாயமாக மறைந்து விட்டனர்.

3 கோடிக்கும் மேலான போலிஎல் பி ஜிஇணைப்புகள் முடிவுக்கு வந்து விட்டன.
மதரஸாக்களில் ஸ்காலர்ஷிப் வாங்கியதாகச் சொல்லப் பட்ட 195000 போலி குழந்தைகளைக் காணோம்.

15 லட்சம் போலி ரேஷன் அட்டைகள் காணாமல் போய் விட்டன.

ஏன் இவை மாயமாய் மறைகின்றன?

திருடர்களின் மொத்த கறுப்பு சந்தையும் வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கிறது. எனவே, எல்லாத் திருடர்களும் ஒன்றாகச் சேர்ந்து, உச்ச நீதி மன்றத்தில் , ஆதாரை இணைப்பது நம் அடிப்படை உரிமைக்கு எதிரானது என்று ஒரு மனுவைப் போட்டார்கள். இதற்கு சில முதலமைச்சர்களும் உடந்தை. திருடர்களுக்குத் தனி ரகசிய உரிமை என்று என்ன இருக்கிறது?
Image result for மோடியும்"
1. மோடி 3 லட்சம் போலி நிறுவனங்களை மூடி விட்டார்;

2. ரேஷன் வியாபாரிகள் கோபமாக இருக்கிறார்கள்;

3. சொத்து (ரியல் எஸ்டேட்) டீலர்கள் எரிச்சல் அடைந்துள்ளார்கள்;

4. ஆன்லைன் அமைப்பால் இடைத் தரகர்கள் எரிச்சல் அடைந்துள்ளார்கள்;

5. மூடப்பட்ட 40000 போலி நிறுவனங்களின் (ஏன் ஜி ) உரிமையாளர்கள் எரிச்சல் அடைந்துள்ளார்கள்;

6. கள்ளப் பணத்தைக் கொண்டு சொத்துக் கிரயம் செய்து வந்தவர்கள் கோபம் அடைந்துள்ளனர்;

7. ‘ டெண்டர்முறையால், சில ஒப்பந்ததாரர்களும் கோபம் கொண்டுள்ளனர்;
Image result for மோடியும்"
8. ‘கேஸ்நிறுவனங்கள் கோபத்தில் உள்ளன;

9. புதிதாக வருமான வரி வளையத்துக்குள் கொண்டு வரப் பட்ட 1 கோடியே 20 லட்சம் பேர் கோபமடைந்துள்ளனர்;

10. ‘ஜி எஸ் டிஎன்னும் புதிய வரி விதிப்பின்படி, தானியங்கி வரி செலுத்தும் முறையால், வியாபாரிகள் எரிச்சல் அடைந்துள்ளனர்;

11. கறுப்பை வெள்ளையாக்குவது சிரமமாகி விட்டது;

12. நேரத்தில் வேலைக்கு வர வேண்டி இருக்கும் சோம்பேறி அரசு ஊழியர்கள் கோபப்படுகிறார்கள்;

13. வேலையும் செய்யாமல், லஞ்சமும் பெற்று வந்த அவர்கள் எரிச்சல் அடைந்துள்ளனர்;

14. ‘டிஜிடல்பொருளாதாரத்தால் பாதிக்கப் பட்டுள்ள கள்ளப் பண டீலர்கள் எரிச்சல் அடைந்துள்ளனர்;

15. பயங்கரவாதிகளின் பணப் பரிமாற்றம் பெரிதும் பாதிக்கப் பட்டு விட்டது;

16. ரியல் எஸ்டேட் கும்பல், பணமாகப் பரிவர்த்தனை செய்து கொள்ள முடியாததால், கணக்கில் வராதப் பணத்தை எப்படி கணக்கில் ஏற்றுவது என்று விழித்துக் கொண்டுள்ளனர்.

17. கடந்த 4 ஆண்டுகளாக, ஒரு ஊழல் கூட கிடையாது. இதனால் பல அரசியல்வாதிகள் மோடி மீது வெறுப்பில் இருக்கிறார்கள். மோடி முந்தைய பிரதமர்களைப் போல, ஊழல் என்றால் தன் கண்களைப் பொத்திக் கொண்டு விடுவார் என எதிர் பார்த்தனர். எனவே, மோடியால் பாதிக்கப் பட்டுள்ள அனைத்து அரசியல்வாதிகளும் சேர்ந்து, ‘கிச்சடிக் கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டு, மோடி, இரண்டாம் முறையாகப் பதவிக்கு வந்து விடக் கூடாது என்று எல்லாப் பிரயத்தனங்களையும் செய்து வருகின்றனர்.
Image result for மோடியும்"
இப்போது, 125 கோடி இந்தியர்கள் முன்னுள்ளது, இந்த ஊழல்கிச்சடிக் கூட்டணியைஆதரிப்பதா, இல்லை இந்த நாட்டின் உண்மையான விசுவாசியான நம் பிரதமர் மோடியை ஆதரிப்பதா, என்பதே. பந்து உங்கள் பக்கம் தான் இருக்கிறது.

ஜெய் ஹிந்த்! ஜெய் பாரத்!”
Image may contain: 1 person, beard and close-up
எளியப் பாமர மக்களிடம் இந்த உண்மைகளை, நேரம் கிடைக்கும் போதெல்லாம் எடுத்துச் சொல்லுங்கள். சத்தியமே வெல்லும்.
நன்றி இணையம்