வாழுங்கள் உங்கள் வாழ்க்கையை ஒவ்வொரு நொடியும்!!!

மணக்கால் அய்யம்பேட்டை | 10:30 AM | Best Blogger Tips
*வாழ்க்கைப் பந்தயம்
💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢⚾ஷ💢




வாழ்க்கை பந்தயத்தில் ஓட முற்பட்டேன்தடுமாறி விழுந்தேன்.

கை கொட்டிச் சிரித்தது இந்தச் சமூகம்
தூக்கி விட கை கேட்டேன்.

கை கொடுத்துத் தூக்கி ,
தரையில் தள்ளிச் சிரித்தது
இந்தச் சமூகம்..,,

இம்முறை என் கை ஊன்றி
நானே எழுந்தேன்,

ஓட ஆரம்பித்தேன்,
முன்னால் ஓடும் பல பேர் பார்த்தேன்
மலைப்பாய் இருந்தது.

ஜெயிப்பது கடினம்
மனது சொன்னது,

யாரை ஜெயிக்க இந்தப் போட்டி ஒரு குரல் கேட்டது,

வாழ்க்கையை ஜெயிக்க
என் மனம் சொன்னது,

வாழ்க்கையை ஜெயித்தால் என்ன கிடைக்கும்,
அக்குரல் மீண்டும் கேட்டது,

*
பணமும், பொருளும் நிறையக் கிடைக்கும்*
என் மனம் சொன்னது,

பணமும், பொருளும் என்ன தரும்
அக்குரல் மீண்டும் கேட்டது,

வேண்டிய எல்லாம் பணம் தரும்
என் மனம்..., சொன்னது.

ஓட்டத்தை தொடர்ந்தேன்....

முன்னால் ஓடிய சில பேர் நின்றனர்,
சில பேர் மறைந்தனர்,

பின்னால் வந்தவர் முந்திச் சென்றனர்..,
வெற்றிக் கோட்டை நானும் தொட்டேன்..

பணமும், பொருளும் என்னிடம் சேர்ந்தது.
பழைய குரல் மீண்டும் கேட்டது
நண்பா நலமா?
Image result for வாழுங்கள் உங்கள் வாழ்க்கையை ஒவ்வொரு நொடியும்!!!"
பணத்துடன், பொருளுடன் நலமே
என்றது என் மனம்.,

என்ன ஜெயித்தாய்

என்றது அக்குரல்
சொல்ல ஆரம்பித்தது,, என் மனம்

பணமுண்டு

புகழுண்டு

பொன்னுண்டு

பொருளுண்டு

வீடுண்டு

சீருந்துண்டு

சேவகர் பலவுண்டு..

தோற்றதை அறிவாயா நீ

என்றது அதே குரல்..,

தோல்வி தான் தோற்றது
என்றது என் மனம்.,

சத்தம் போட்டுச் சிரித்தது அக்குரல்.....

சொல்லத் தொடங்கியது அக்குரல்...
மனைவியின் முகத்தை ரசித்ததுண்டா!

உணவை ருசித்து உண்டதுண்டா!

குழந்தையை கொஞ்சி மகிழ்ந்ததுண்டா!

மழலை குரலை கேட்டதுண்டா!

குயிலின் பாடல் கேட்டதுண்டா!

மயிலின் ஆட்டம் ரசித்ததுண்டா!

தூறல் மழையில் நனைந்ததுண்டா!

நெல்லின் வாசம் உணர்ந்ததுண்டா!

புல்லின் வெளியில் படுத்ததுண்டா!

பாரதி கவிதை படித்ததுண்டா!

நண்பருடன் கூடி மகிழ்ந்ததுண்டா!

சந்தன வாசம் நுகர்ந்ததுண்டா!

திருவாசகம் சொன்னதுண்டா!

கூட்டாஞ்சோறு ருசித்ததுண்டா!

பூக்கள் நடுவில் நின்றதுண்டா!

பகிர்ந்துண்டு வாழ்ந்ததுண்டா!

மௌனத்தில் ஆழ்ந்து திளைத்ததுண்டா!

மூச்சை உணர்ந்து பார்த்ததுண்டா!

பூக்கள் பேச்சை கேட்டதுண்டா!

மேலும் தொலைத்ததை சொல்வேன்

கேட்பாய் என்றது அக்குரல்....

வயதை தொலைத்தாய்!

இளமை தொலைத்தாய்!

மகிழ்ச்சியை தொலைத்தாய்!

உறவைத் தொலைத்தாய்!

நட்பைத் தொலைத்தாய்!

ஆரோக்கியம் தொலைத்தாய்!

நிறைவை தொலைத்தாய்!

நிம்மதி தொலைத்தாய்!

ஆயுள் தொலைத்தாய்!

என் மனதுக்குப் புரிந்தது

அக்குரலை நான் கேட்டேன்

தொலைத்தை தருவாயா..,,

விலையென்ன வேண்டும்..??

மௌனமே பதிலாய் கிடைத்தது ..
வாழ்க்கையும், காலமும்

போனால் வாராது..

வாழ்க்கை வாழ்வதற்கே..

ஓடுங்கள் உங்கள் பாதையில்...,

யாரும் போட்டியில்லை!
வாழுங்கள் உங்கள் வாழ்க்கையை

ஒவ்வொரு நொடியும்!!!
💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢

நன்றி இணையம்