தன்னம்பிக்கை .....

மணக்கால் அய்யம்பேட்டை | 3:13 PM | Best Blogger Tips
Image result for தன்னம்பிக்கை
உங்கள் தன்னம்பிக்கையே உங்கள் சொத்து. தன்னம்பிக்கை குறைந்தவர்களால் எதையும் சாதிக்க முடியாது..
உங்கள் தன்னம்பிக்கையை அதிகப்படுத்திக் கொள்ள சில எளிதான் வழிகள்:
1 . உங்களிடம் நீங்களே தனிமையில் பேசுங்கள்... நீ சாதிக்க பிறந்தவன் என.
2.
நேர்த்தியாக ஆடை அணியுங்கள். விலை குறைந்ததோ, அதிகமானதோ கவலை இல்லை... இருப்பதை நேர்த்தியாக அணியுங்கள்.
3 .
எதிர்மறையான பயங்களை தவிர்த்து, நேர்மறையாக சிந்திக்க பழகுங்கள்.
4 .
வாழ்க்கை விளையாட்டு என்பதை மனதில் நிறுத்தி, எதையும் எதிர்கொள்ளும் வலிமையை மனதிற்கு கொடுங்கள்.
5 .
நிமிர்ந்து நிற்கவும், நடக்கவும், அமரவும் பழகுங்கள்.. தன்னம்பிக்கை தானே அதிகரிக்கும்.
6 .
உள்ளம் எப்படியும் இருக்கட்டும்... முகத்தில் மட்டும் சிறு புன்னைகையுடன் இருக்க பழக்குங்கள்.
7 .
சின்ன இலக்குகளை தினமும் நிர்ணயியுங்கள்.. அதை சாதித்து விட்டு உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்.. 
8 .
தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்.. மூச்சை அடிக்கடி இழுத்து, நுறையீரலில் புதுக்காற்றை நிரப்பிக் கொள்ளுங்கள்.
9 .
இவை எல்லாவையும் விட மிக முக்கியமாக.. உங்களுக்கு நடந்த நல்லவைகளை அடிக்கடி பட்டியலிட்டு பார்த்துக் கொள்ளுங்கள்..
நிச்சயம் தன்னம்பிக்கை வளரும்..
வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!