★ நம்முடைய ஊரில் உள்ள கோவில்களில் அமாவாசை அன்று சிறப்பாக பு+ஜை செய்யக் காரணம், அன்று தெய்வங்கள் மற்ற நாட்களில் சக்தியுடன் இருப்பதை காட்டிலும் அதிக சக்தியுடன் அமானுஷ்ய விஷயங்களிருந்து ஊரை காக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அன்று சிறப்பாக பு+ஜை செய்யப்படுகிறது.
அமாவாசை அன்று வழிபடக் கூடிய தெய்வங்கள் :
★ விநாயகர், குலதெய்வம், காளி, பிரத்தியங்கரா தேவி, ஸ்ரீவாராஹி அம்மன், நரசிம்மர், ஆஞ்சநேயர், ஆற்றங்கரையில் வீற்றிருக்கின்ற சிவன் ஆலயங்கள் மற்றும் மாசணியம்மன், அங்காளபரமேஸ்வரி.
★ அமாவாசையன்று சர்வகோடி லோகங்களிலுள்ள மகரிஷிகள் உள்பட அனைத்து தேவதைகளும், ஜீவன்களும், காலச்சென்ற நம்முடைய முன்னோர்களும் பு+லோகத்திற்கு வந்து புண்ணிய நதிக்கரைகளிலும், கடலோரங்களிலும் காசி ராமேஸ்வரம், கயை போன்ற புண்ணிய தலங்களிலும் தர்ப்பண பு+ஜையை ஏற்றுக் கொள்கின்றனர் என்பது சாஸ்திரங்கள் நமக்கு உரைத்திடும் உண்மைகள்.
★ சில சடங்குகளுக்கும் சில வழிமுறைகளுக்கும் அமாவாசை அன்று சிறந்தது. அதில் ஒன்று தான் பித்ரு தர்ப்பணம். முன்னோர்களில் மூன்று தலைமுறையினரையாவது நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
★ நமது முன்னோர்களும், பெற்றோர்களும் ஏற்கனவே இறைவனடி சேர்ந்திருந்தால் அவர்கள் அனைவரின் ஆன்மாக்களும் நம்மை எங்கிருந்தோ ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தொடர்ந்து இந்துக்களால் நம்பப்பட்டு வரும் ஐதீகம். நமது முன்னோர்களின் ஆன்மாக்கள் நம்மைச் சுற்றி எங்கும் வியாபித்துக் கொண்டிருக்கிறது. அமாவாசை அன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால், அவர்களின் அருளாசியால் எண்ணற்ற நன்மைகள் ஏற்படும். அமாவாசை திதி வழிபாடு செய்து கடவுளின் அருளையும், முன்னோர்களின் ஆசிர்வாதமும் பரிபூர்ணமாக பெற்றுக்கொள்ளுங்கள்.
★ அன்றைய நாளில் ஒருவருக்காவது அன்னதானமும், முடிந்தால் வஸ்திர தானமும் செய்யலாம்.
★ துஷ்டசக்திகளை விரட்டும் ஆற்றல் ஆத்மாவுக்கு உண்டு. துஷ்டசக்திகள், பித்ருபூஜையை தடையில்லாமல் செய்பவர்களை நெருங்காது. இதன் பிறகுதான் நாம் வணங்கும் குலதெய்வமும், இஷ்டதெய்வமும் நமக்கு நல்வாழ்க்கை தருகிறது.
என்றும் இறைப்பணியில் என்றும் உங்கள் அன்புள்ள
🚩🕉S.Krishna Kumar 🕉🚩
பாரத் மாதா கீ ஜெய்🚩🕉
என்றும் இறைப்பணியில் என்றும் உங்கள் அன்புள்ள
🚩🕉S.Krishna Kumar 🕉🚩
பாரத் மாதா கீ ஜெய்🚩🕉