எங்கள் கோசாலையை காப்பாற்றிய மஹா பெரியவா!

மணக்கால் அய்யம்பேட்டை | 2:15 PM | Best Blogger Tips
Image result for மஹா பெரியவாImage result for மஹா பெரியவா
முக்தியான பிறகும் அவர்களுடைய சமீபத்திய லீலை!!
சிரிக்கும் தெய்வமும்!!! சிரிக்க வைத்த தெய்வமும்!!!
வாழும் தெய்வமும்!!! வாழ வைக்கும் தெய்வமும்!!!
இது ஒரு உண்மை கதை 
உரைப்பவன் ரமேஷ் () ஜி.பி.ராமன் 
பிறப்பு:உத்தமதானபுரம்தாய் கோகிலாம்பாள்தந்தை கணேசய்யர்--- வளர்ப்புபெரியம்மா ஜானகி-பெரியப்பா துரைராஜய்யர்.
படிப்பு: தஞ்சாவூர்
மனைவி --செல்லா-வழுத்தூர் திரு. ராமன்-ஜானகி புத்திரி.
பிழைப்பு ஹைதாரபாத்.
குடும்பம் : குழந்தைகள் இல்லை.
வளர்ப்பு குணம் பெரியப்பா துரைராஜய்யரிடம் இருந்து ரத்ததில் வந்தது - நேர்மையாக உழைத்து முன்னேற வேண்டும்.
பிறருக்கு உதவவேண்டும்,மாடு வளர்க்க வேண்டும், பால் குழந்தைக்களுக்கு தானம் செய்தல், படிப்பு, கல்யாணம் போன்றவைக்கு உதவ வேண்டும். கடவுளை பக்க பலமாக கொண்டு என் காரியங்களை செயய வேண்டும். அவன் மீது முழு பாரத்தையும் போட்டு குதிரை ஓட்டக்கூடாது.உழைக்க வேணடும்.
மனைவியின் விருப்பத்தை பூர்த்தி செய்ய ஒரு பசு மாடு வாங்கினோம். இந்த கிராமத்து ஆசையை, நகரத்தில் நடத்த முயற்சி.
கோ பூஜை ஆரம்பம் ஆனது. குழந்தைகள் இல்லாதது பசுவின் மீது பாசத்தயும், அரவணைப்பையும் அதிகரித்தது.SPONGE, ரப்பர் ஷீட், போட்டு பசு அனுபவிக்கும் சுகத்தில் எங்கள் மனம் மகிழ்ச்சி அடைந்தது. உபயோகம் போக மீதி பால் தானமாக மாறி, குழந்தைக்களுக்கும் கேன்சர் நோயளிகளுக்கு,கர்ப்ப பெண்மணிகளுக்கும் ஆகாரமாகியது.
மனைவியின் கிராம வளர்ப்பு இதற்கு உறுதுணையாக இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சியை பெருக்கியது.
வீட்டில் கோ பூஜை, பசு கன்றுகளின் ஆட்டம், மாதம் ஒரு பசு டெலிவரி, பெயர் வைத்தல், பிறந்த நாள் கொண்டாடுவது, பால் கொடுத்தல், எல்லாம் மகிழ்ச்சியின் உச்ச கட்டததில் போய்க்கொண்டு இருந்தது.
பக்க துணையாக பெரியவர் சிரித்து கொண்டே இருந்தார்!
வருடங்கள் ஓடியது, கோமாதாக்களின் எண்ணிக்கை கூடியது, பால் தானம் பெறுபவரின் எண்ணிக்கை 400 எட்டியது. செலவு வருமானத்தை முழுங்க ஆரம்பித்தது.
இதில் உபகார சிந்தனை தலை தூக்கியது. கால் உடைந்த பசுக்கள், உடல் நலமற்ற பசுக்கள் வீட்டில் கொண்டுவந்தது,என் சகோதரன் சபேசன் கொடுத்த மருத்துவ செல்வத்தால் அதை குணபடுத்தி அதன் மகிழ்ச்சியில், எங்கள் மனம் மகிழ்ச்சி அடைந்தது.
சிகிச்சை தொடங்கும் போது பெரியவரை குணமாக வேண்டும் என்று வேண்டிக்கொண்டு தொடங்குவோம். வெற்றி பெற்றால் ஒரு நன்றி சொல்வேன், இல்லை என்றால் அவரிடம் ஏன் எனக்கு துணை நிற்க்கவில்லை, என்று கத்துவேன் .என்னை மற்றவர்கள் பைத்தியக்காரன் என்பார்கள்.
ஆனால் பெரியவர் சிரித்து கொண்டே இருப்பார்!
வருமானத்தை ஈடு கட்ட கோவில் பூஜை,அபிக்ஷேகம் ,ஹோமம் நிறுத்தப்பட்ட்து. கார் உபயோகம் குறைக்கபட்டது.
ஆடம்பர ஆடைகள் தவிர்க்கபட்டது. ஏசி இரயில் பயணம், விமான பயணங்கள் குறைக்கபட்டது.உழைப்பை அதிகரித்தேன்.
பஞ்சகவ்ய முறையில் 26 பொருள்களை செய்தேன்.கொஞ்சம் வருமானம் கூடியது.
12
வருடங்கள் ஓடியது. பசுக்களின் எண்ணிக்கை 60தை தாண்டியது. பசுக்களின் வயது முதிர்ந்தது. பசு பால் கொடுப்பது குறைந்தது. ஆனால் பால் தானம் வாங்கும் மக்களின் எண்ணிக்கை 400 தாண்டியது. கேன்சர் பேஷன்ட் மற்றும் பேறு கால மகளிர் எண்ணிக்கை கூடியது.
எனக்கும் என் மனைவிக்கும் எங்களை அறியாமல், செயின் ஸ்மோக்கர் எப்படி ஒரு சிகெரட்டில் ஆரம்பித்து தொடர்ந்து சிகெரட் குடித்து, நிறுத்த முடியாமல் தவிக்கின்றார்களோ ,அது போல் எங்கள் இரத்தத்தில் கலந்து இந்த சேவ மனப்பான்மையை நிறுத்த முடியாமால் தவித்தோம். 
ஆனால் பெரியவர் சிரித்து கொண்டே இருந்தார்!
பால் தானம் 3,60,000 லிட்டரை எட்டியது. வாழ்க்கையில் 5 இலட்சம் லிட்டரை எட்ட ஆசை.
பசு பால் கொடுப்பது குறைந்ததால் தினம் 30 லிட்டர் பால் வாங்கும் நிலை. பால் இல்லை என்று சொல்ல மனம் இல்லை. பணத்தட்டுபாடு அதிகமானது. கடன் சுமை ஏறியது. பசு உணவு கடையில் கடன் ரு.2,50,000/- எட்டியது.புல் காரனிடம் கடன் ரு.60,000/- தொட்டது.
பொருள்களை விற்று பசு உணவிற்க்கும் பேங்க் வட்டிக்கும் கொடுத்தோம். ரு.18 இலட்சம் நகைகள் பேங்கில் குடியேறியது. வீட்டு பத்திரங்கள் பேங்கில் இடம் பிடித்தது.
ஆனால் பால் கொடுப்பது நிறுத்தப்படவில்லை. முழு பைத்தியக்காரன் பெயர் பரவியது.
ஆனால் பெரியவர் சிரித்து கொண்டே இருந்தார்!
பால் வாங்க முடியாமல் திணறினோம். பெரியவரிடம் ஏன் இந்த சோதனை என்றேன்.
ஆந்திரா தெலுங்கானா பிரிவு வந்தது. பால் வாங்க முடியவில்லை. கையில் இருந்த பணத்தில் பாலை வாங்கி கொண்டு பாதி பேருக்கு இல்லை என்று சொல்ல வேண்டுமே என்று தலையை தொங்கப் போட்டு கொண்டு பால் கொடுக்க போனேன். அங்கு 40 பேர் மட்டுமே இருந்தர்கள். ஆந்திரா மக்கள் ஆந்திராவிற்க்கு போய்விட்டார்கள். பால் இல்லை என்று சொல்லாமல் கையில் 10 லிட்டர் பாலுடன் வீடு திரும்பினேன். 
பெரியவரிடம் "ஏன் இந்த சோதனை"என்றேன் ஆனால் பெரியவர் சிரித்து கொண்டே இருந்தார்!!
வாசலில் ஒரு வேன் வந்தது 30 மணி நேரம் கூட ஆகாத 2 குழந்தை கன்று குட்டிகளை இறக்கினார்கள். ஒன்று கால் உடைந்து துடித்து கொண்டு இருந்தது .அதற்க்கு தொப்புள் கொடியில் முழுவதும் புழு. மற்றது இறக்கும் நிலை.
வந்தவர், "சார் , தாய் பசுக்கள் இறந்துவிட்டன . முடிந்தால் காப்பாற்றுங்கள்"என்று சொல்லி விட்டு போய்விட்டார்கள்!.
இது என்ன சோதனை. கையில் இருந்த பாலில் கால்சியம் சேர்த்து ஃபீடீங்க் பாட்டில் ஊற்றி கொடுத்தேன். நன்றாக குடித்தது. காலில் சிறு கட்டயை கட்டி PAIN RELIEF ஆயிலை ஊற்றினேன். தொப்புள் கொடியில் பெட்ரொலை ஊற்றி 65 புழுக்களை வெளியே எடுத்தேன். குழந்தை முகம் தெளிந்தது!
நானும் சிரிதேன். பெரியவரும் சிரித்தார்!!
கடைசியாக அம்மாவின் நகையை, ஒரு பக்கம் கஜ லட்சுக்ஷ்மியும் மறு பக்கம் தாமரை பூ வும் உள்ள கோல்ட் காயின்களாக மாற்றி கோ பூஜைக்காக வந்தவர்களிடம் அதை கொடுத்து அதன் மூலம் பூஜை செய்து, மகிழ்சி அடைந்தோம். அது மட்டும் தான் கையில் இருந்தது. இரண்டு இலட்ச ரூபாய் ஆட்டோவை 40,000/- ரூபாய் க்கு விற்றது பசுவின் ஆகார கடனை அடைத்தது.
கடைசியாக லக்ஷ்மி காயின் பேங்கில் குடியேறிய பொழுது என் மனைவியின் கண்கள் சிறிது கலங்கியது. கோ மாதாவுக்கு உணவுக்கு வேண்டும் என்றால் மானத்தை காக்கும் புடவை தவிர எல்லாவற்ரையும் கொடுக்க கூடிய நடமாடும் தெய்வம் அவள்! அந்த தொகை இரண்டு மாதத்தை ஓட்டியது.
ஒரு நாள் லயன் மேன் வந்தான் "இரண்டு மாத பில் கட்ட வேண்டும் ,அரசாங்க உத்தரவு."! நான் பத்து நாள் டயம் கேட்டேன். அவன் "என் கையில் இல்லை "என்றான். நான் "சரி "என்று சொல்லி விட்டேன்.
பெரியவா இது என்ன சோதனை? இது நகரம். கிணறு கிடையது. BORE தான் உள்ளது. 60 பசுகள் குடிக்க குளிக்க தண்ணீர் வேண்டும். ஒரு மணி நேரம் என்ன செய்யவது என்று புரியாமல் தவித்தேன்.
திடீர் என்று மோட்டர் ஓடும் சத்தம் கேட்டது. லயன் மேனை கேட்டேன்.! “சார் ,FUSE எடுத்ததாக பேப்பரில் எழுதிவிட்டேன் ஆனால் எடுக்கவில்லை. கொஞ்சம் சீக்கிரம் கட்டிவிடுங்கள் "என்றான்!
அப்போது பெரியாவாளை ஓர கண்ணால் பார்தேன் அவர் சிரித்து கொண்டு இருந்தார்!
சரி என்று ஒரு முடிவுக்கு வந்தேன். பூஜையை முடித்தேன் இன்னும் 3 நாள்கள் தான் உணவு இருந்தது. அதற்கு மேல் உணவு வாங்க எந்த வழியும் இல்லை.
நானும் என் மனைவியும் பெரியவா போட்டோ முன்னால் உட்கார்ந்தோம். கையை தூக்கி கொண்டு "ஆண்டவனே, நான் தோற்று விட்டேன். இனி என்னால் பசுக்களை காப்பாற்ற முடியாது . பசுக்களை கட்டி போட்டு உணவு போடாமல் இருந்தால் அது எனக்கு பெரிய பாவம்.
அதனால் உன் போட்டோவை வாசலில் உள்ள கோவில் அரச மரத்தடியில் வைத்து என் பசு குழந்தைகளை, ஒவ்வொன்றாக கூட்டி வந்து, அதன் பெயரை சொல்லி, உன்னிடம் ஒப்படைத்து விடுகிறோம். தினமும் என் வருமானத்தில் எந்த அளவிற்கு உணவு வாங்க முடியுமோ அதை வாங்கி உன் முன் வைத்து விடுகிறேன். அதை எல்லா பசுவிற்கும் கொடுத்து எப்படி அவைகளின் வயிறை ரொப்புவாயோ எனக்கு தெரியாது. அதன் பிறகு உன் பொறுப்பு "என்று வேண்டி கொண்டோம்!
இரண்டு நாள் ஒடிவிட்டது இன்னும் ஒரு நாள் தான் உள்ளது. இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை. மறு நாள் காலை 2 பேர் வந்தார்கள். உள்ளே நுழைந்ததும் பெரியவாளை கும்பிட்டார்கள். "உங்கள் பசுக்களை பார்க்க வந்து இருக்கிறோம். நாங்கள் பெரியவரின் பக்தர்கள்" என்றார்கள்.
நான் என் மனதில் சிரித்து கொண்டேன் என் மனது கூறியது! ஆம் நீங்கள் பெரியவரின் பக்தர்கள். மாதம் ஒரு முறை கூடுவீர்கள். அவர் பாதத்தை வைத்து பூஜை செய்வீற்கள். அவர் நாமத்தை நன்றாக ஒலிப்பீர்கள். பிறகு அனைவரும் உணவு அருந்துவீர்கள்.
அதற்க்கு ஒரு பெரிய தொகை நிச்சயம் செலவாகும். அத்துடன் அந்த தினத்தில் எல்லோரும் ஒரு சின்ன காரியத்ததை சேர்த்து கொண்டால் நிச்சயம் பெரியவர் சந்தோஷப்படுவார்.
அந்த தினத்தன்று ஒரு சிறு தொகையை பசுக்களுக்கு உணவிற்க்கும், ஊனமுற்ற குழந்தைகளுக்கு பகிர்ந்து கொண்டால் நிச்சயம் நம் பெரியவர் இன்னும் ஆனந்த பட்டு போவார் என்று என் மனம் கூறியது.
நம்மிடையே இன்றும் நடமாடும் தெய்வமாகிய மஹா பெரியவா தம் வாழ் நாளில் பெரும் பகுதியை பசு மாட்டு க்கொட்டிலில்தான் இருந்திருக்கிரார்கள்.. Camp செல்லும்பொழுது கூட பசுமாடுகள் கொட்டடில் இருக்கும் இடம் வந்தால் உடன் தம் plan மாற்றி அங்கு அன்றைய பூஜையை வைத்துக்கொள்வார்கள்! . கோஸம்ரக்ஷணம் அவர்களது உயிர் நாடி.
அவர்கள் "பெரியவர் பக்கத்தில் உக்கார்ந்து பேசி இருக்கிறோம்".ஒருவர் சொன்னார் "நான் பெரியவரிடம் சொல்லுவேன், எனக்கு பூஜை,அபிஷேகம் இதில் அவ்வளவு ஈடுபாடு இல்லை. நான் நேரிடையாகவே வேண்டிய உதவியை வேண்டியவற்கு செய்வதில் தான் என் மனம் ஈடுபடுகிறது" என்றேன். பெரியவர் "சந்தோஷம் நீ மனதில் பட்ட படியே செய், நன்றாக இருப்பாய்" என்று சொன்னார்கள்.
எனக்கு தூக்கிவாரி ப்போட்டது ,என் மனதையே அவர் படிப்பது போல் தோன்றியது நிமிர்ந்து உட்கார்தேன்.
கோசாலை முழுவதும் சுற்றி காண்பித்தேன். ஊனமுற்ற பசுக்களுக்கு சிகிக்சை அளித்ததை காண்பித்தேன். சந்தோஷத்தில் ஆழ்ந்து போனார்கள்.
என்னுடைய இயலாமையை அவர்களிடம் சொல்ல என் ஈகோ மறுத்துவிட்ட்து.
அப்போது புல் கட்டுகாரன் வந்தான். கொஞ்சம் கடுமையாக பணம் கேட்டான். எனக்கு அசடு வழிந்தது. அவர்கள் என் நிலைமையை தானாகவே புரிந்து கொண்டார்கள்.அவனிடம் "ஒரு நாள் எவ்வளவு புல் போடுகிறாய் "என்று கேட்டார்கள். அவன் "ஒரு நாளைக்கு ரு.1200க்கு வாங்கிகொண்டு இருந்தார்கள் இப்பொழுது ரு.800/ க்கு வாங்குகிறார்கள் . அதையும் கொடுக்கமுடியாமல் திண்டாடுகிறார்கள் "என்றான்.
அவர் தனது செக் புக்கை எடுத்து ரூ.36000/- எழுதி அவன் கையில் கொடுத்தார் "இதை அட்வான்ஸாக வைத்து கொள். இனி ஒரு நாளைக்கு ரூ.1200/- புல் கட்டு போடு. உன்னுடைய மீதியை ஒரு வாரத்தில் கொடுத்துவிடுகிறேன். சந்தோஷமாக பசுவிற்க்கு நல்ல புல்லாக போடு" என்றார்.
எனக்கு ஓன்றும் புரியவில்லை. பெரியவர் சிரித்து கொண்டே இருந்தார்!
என்னை பார்த்து நீங்கள் நல்ல காரியம் செய்து இருக்கிறீர்கள். இப்பொழுது "உங்களால் முடியவில்லை. எங்கள் மனதில் பெரியவா தோன்றி எங்களை அனுப்பிவைத்தார். வெட்க படாமல் உங்கள் மொத்த கஷ்டத்தையும் எங்களிடம் சொல்லுங்கள் "என்றார்.
நான் பசு உணவு ,கடை கடன்,புல் கட்டு கடன்,நகை கடன்,வீடு பத்திரம் எல்லாம் சொன்னேன்.
என் செய்கையை பார்த்து அவர்கள் ஆச்சரியம் அடைந்தார்கள். பெரியவர் போட்டோ முன் சென்று "சரியான இடதில் என்னை அனுப்பி வைத்தீர்கள். நான் நிச்சயம் முடிந்த வரை உதவியை செய்கிறேன் "என்றார்
பிறகு என்னை பார்த்து "இன்றிலிருந்து பசுக்களுக்கு ஆகும் மொத்த செலவையும் நாங்கள் ஏற்று கொள்கிறோம்.
நீங்கள் பசுக்களை சந்தோஷமாகவும் கொழு கொழு என்று வைத்து கொள்வது உங்கள் பொறுப்பு "என்றார்." ரூ.1,00,000/- எனது உதவியாளர் இன்னும் 2 மணி நேரத்தில் கொண்டு வந்து கொடுப்பார். ரூ.50,000/ பேங்க்கில் உங்கள் கணக்கில் வரவாகும்" என்றார். "இந்த ரூபாயை வைத்து கொண்டு உங்கள் கடன் தொல்லை செய்பவர்களூக்கு கொடுத்து விட்டு சந்தோஷமாக பசுவிற்க்கு சேவை செய்யுங்கள் "என கூறி சென்று விட்டார்கள்.
நான் பெரியவரின் போட்டோ முன் நின்று அவரை உற்று பார்த்தேன். என் கண்ணில் நீர் பெருகியது. என் உடல் முழுவதும் தூய்மையானது போல் ஒரு உணர்வு வந்தது. என் முன்னே ஒரு சிறிய உருவம் தலை
குனிந்தபடியே போய் கொண்டு இருந்தது. அதில் என் ஆணவம் "நான்தான் செய்கிறேன்!" என்ற எண்ணமும் சேர்ந்து ஆன உருவம் என்று புரிந்தது கொண்டேன்!
கையை கூப்பினேன். "பெரியவரே புரிந்து கொண்டேன். இத்தனை ஆட்டமும் உன் திருவிளையாடல்தானே?!உன் பொறுப்பில் விட்டுவிட்டேன். நான் உன் காலடியில் கிடக்கிறேன். இனி நீ கட்டளை இடு ,நான் அதை செய்கிறேன் "என்று கூறி அவர் பாதம் பணிந்தேன்.
குறிப்பு:- 
என் குழந்தைகளை என்னிடம் இருந்து பிரிக்காமல் அவைகளை சந்தோஷமாகவும் கொழு கொழு என வைத்து கொள், செலவுகள் மட்டும் எங்களது .பெரியவரை தவிர இதை வேறு யாராலும் செய்ய முடியாது. அல்வா பிடித்தவனுக்கு அல்வா திங்க கஷ்டமா?
ஹைதராபாத்தில் இருப்பவர்களும், இந்த ஊருக்கு வருபவர்களும் அவசியம் எங்கள் கோசாலைக்கு வந்து எங்களை ஆசீர்வதிக்க வேண்டுகிறோம்
இப்படிக்கு
ஜீ,பி,ராமன் --- செல்லா.