🙏🏽 *தினம் ஒரு திருக்கோவில்:*🙏🏽
*சோமாசிமாற
நாயனார் அவதரித்த தலம் ; பார்வதி தேவி காளியாக உருமாறி அசுரர்களை அழித்த ஸ்தலம் ; யாகத்தின் அவிர்பாகத்தை சிவபெருமானே நேரில் வந்து பெற்ற சிறப்புமிக்க சிவஸ்தலம்*
*அருள்மிகு
பிரமபுரீசுவரர் திருக்கோயில், அம்பல் அஞ்சல், பூந்தோட்டம் வழி, நன்னிலம் - திருவாரூர்.*
*போன்:
+91 4366 238 973*
மூலவர்: *பிரம்மபுரீஸ்வரர், அம்பரீசர், மாரபுரீசுவரர் *
அம்மன்: *சுகந்த குந்தளாம்பிகை, பூங்குழலம்மை, வண்டமர் பூங்குழலி, வம்பவனப் பூங்குழலி*
தல விருட்சம்: *புன்னை*
தீர்த்தம்: *பிரமதீர்த்தம், இந்திர தீர்த்தம், அன்னமாம் பொய்கை, சூலதீர்த்தம்*
பழமை: *1000-2000 வருடங்களுக்கு முன்*
புராண பெயர்: *அம்பர் பெருந்திருக்கோயில், பிரமபுரி, புன்னாகவனம்*
ஊர்: *அம்பர், அம்பல்*
மாவட்டம்: *திருவாரூர்*
பாடியவர்கள்: *திருஞானசம்பந்தர்*
🅱 *தேவாரப்பதிகம்:*🅱
*எரிதர
அனல்கையில் ஏந்தி யெல்லியில் நரிதிரி கானிடை நட்ட மாடுவர் அரிசிலம் பொருபுனல் அம்பர் மாநகர்க் குரிசில் செங்கண்ணவன் கோயில் சேர்வரே.* -
திருஞானசம்பந்தர்.
திருஞானசம்பந்தர்.
🌼 *தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் இது 54வது தலம்.*
🅱 *திருவிழா:*🅱
🍁 மாசி
மகம், மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, ஐப்பசி அன்னாபிஷேகம்.
🅱 *தல
சிறப்பு:*🅱
👉🏽 இங்கு
பிரம்மபுரீஸ்வரர் சுயம்புமூர்த்தியாக காட்சி தருகிறார்.
👉🏽 கர்ப்ப
கிரகத்தில் சுயம்புமூர்த்தியாக விளங்கும் பிரம்மபுரீசுவரருக்குப் பின்னால் சோமாஸ்கந்த மூர்த்தியை தரிசிக்கலாம்.
👉🏽 இக்கோயில்
சோழர்களால் கட்டப்பட்டது.
👉🏽 சோமாசிமாற
நாயனார் அவதரித்த தலம்.
👉🏽 வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் இத் தலத்திற்குப் புராணம் பாடியுள்ளார்.
👉🏽 திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய பதிகம் 3-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.
👉🏽 கோச்செங்கட் சோழனால் கட்டப்பட்ட ஆலயம் இது என்பதை தனது பதிகத்தில் இவர் குறிப்படுகிறார். எழுபது மாடக்கோயில்களைக் கட்டிய கோச்செங்கட் சோழனின் கடைசித் திருப்பணி எனக் கூறப்படும் திருக்கோயில் இதுவாகும்.
👉🏽 சிவனின்
தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 117 வது தேவாரத்தலம் ஆகும்.
🅱 *திறக்கும்
நேரம்:*🅱
🔑 *காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4.30 மணி
முதல் இரவு 8.30 மணி
வரை திறந்திருக்கும். *🔑
🅱 *பொது
தகவல்:*🅱
🌺 இக்கோவிலில் 4 கல்வெட்டுக்கள் உள்ளன.
🌺 இராசராசன்,
மூன்றாம் குலோத்துங்கன் காலத்தியவை.
🦆 *கல்வெட்டு:*🦆
🌺 இத்திருக்கோயிலில் நான்கு கல்வெட்டுக்கள் இருக்கின்றன. அவற்றுள் சோமாஸ்கந்தர் கோயிலில் இருக்கும் இராஜராஜ தேவரின் பத்தாமாண்டுக் கல்வெட்டு நீங்கலாக ஏனையவை துண்டு துண்டான கற்களில் வெட்டப்பெற்றனவாகும். மேற்குறித்த இராஜராஜ தேவரின் கல்வெட்டு உய்யக்கொண்டார் வளநாட்டு, அம்பர் நாட்டு வைகாவூராகிய எதிரிலிச் சோழநெற்குன்றத்தில் எழுந்தருளியிருக்கும் எதிரிலிச்சோழீச்சர முடையார்க்கு அம்பர் என்னும் இவ்வூரிலுள்ள ஒரு வணிகன் இரண்டு விளக்குகள் கொடுத்ததைத் தெரிவிக்கின்றது.
🌺 ஏனைய
துண்டுக் கல்வெட்டுக்கள் இராஜராஜ தேவரின் ஐந்து, ஒன்பது இராச்சிய ஆண்டுகளில் நிலங்கள் ஏலத்திற்கு விடப்பட்டதையும், மூன்றாங்குலோத்துங்க சோழன். மதுரையும், ஈழமும், கருவூரும், பாண்டியன் முடித்தலையும் கொண்டதையும், அம்பர் நாட்டில், மேலூராகிய அரித்துவநெற்குன்றம் என்னும் ஊர் உள்ளதையும் தெரிவிக்கின்றன.
🅱 *பிரார்த்தனை:*🅱
🌿 வேண்டும்
வரம் கிடைக்க இத்தல அம்பிகையிடம் பிரார்த்தனை செய்துகொள்கின்றனர்.
🅱 *நேர்த்திக்கடன்:*🅱
☀ பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும் புது வஸ்திரம் சாத்தி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
🅱 *தலபெருமை:*🅱
🌸 சோமாசிமாற
நாயனார் அவதரித்த தலம்.
🌸 பெருந்திருக்கோவில் என்பது யானையேறாதவாறு படிக்கட்டுகள் அமைத்துக் குன்றுபோல் செய்யப்பட்ட மாடக்கோவில் என்பதாகும்.
🌸 கோச்செங்கட் சோழ மன்னரால் திருப்பணி செய்யப் பெற்ற மாடக்கோவில்களில் இதுவும் ஒன்றாகும்.
🍁 *கோவில் அமைப்பு:*🍁
🍄 அரிசிலாற்றின் வடகரையில் அமைந்துள்ள இவ்வாலயத்தின் ராஜகோபுரம் மூன்று நிலைகளையுடையது.
🍄 கோவிலின்
பெயர் அம்பர் பெருந் திருக்கோவில்.( யானை ஏறமுடியாதவாறு படிக்கட்டுகள் அமைத்துச் சிறு குன்று போல் கோவில் அமைந்துள்ளதால் இக்கோவிலுக்கு பெருந்திருக்கோவில் என்ற பெயர் ஏற்பட்டது.)
🍄 கோவில்
கிழக்கு நோக்கியுள்ளது. இறைவன் சந்நிதிக்குச் செல்லும் படிக்கட்டுகள் தெற்கு நோக்கயவாறு அமைந்துள்ளன.
🌸 இராஜகோபுரம் வழியாக உள்ளே சென்றால் விசாலமான முற்றம் உள்ளது.சுதையாலான பெரிய நந்தி இங்குள்ளதைக் காணலாம்.
🍄 இடப்பக்கத்தில் உள்ள கிணறு *"அன்னமாம்
பொய்கை"* என்று
வழங்குகிறது.
🌸 பக்கத்தில் சிவலிங்க மூர்த்தம் உள்ளது. பிரமன் இக்கிணற்றுத் தீர்த்தத்தில் நீராடி, பக்கத்தில் உள்ள சிவலிங்கமூர்த்தியை வழிபட்டு அன்ன வடிவம் பெற்ற சாபம் நீங்கப்பெற்றார் என்பது தலவரலாறு.
🌸 படிக்காசு
விநாயகர் சன்னதியில் அடுத்தடுத்து மூன்றுசிறிய விநாயக மூர்த்தங்கள் உள்ளன.
🌸 பிரகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், மகாலட்சுமி, ஜம்புகேஸ்வரர், சன்னதிகள் உள்ளன.
🌸 அம்பாள்
சன்னதி தனியே உள்ளது. நின்றதிருமேனி. சன்னதிக்கு வெளியில் இருபுறமும் ஆடிப்பூர அம்மன் சன்னதியும் பள்ளியறையும் உள்ளன.
🌸 வலம்
முடித்துப் படிகளேறி மேலே சென்றால் சோமாஸ்கந்தர் சன்னதியும் மறுபுறம் விநாயகர், கோச்செங்கட் சோழன், சரஸ்வதி, ஞானசம்பந்தர், அப்பர் ஆகிய மூலத்திருமேனிகளும் உள்ளன.
🌸 துவாரபாலகர்களையும் விநாயகரையும் வணங்கிச் சென்று சிறியவாயில் வழியாக உள்ளிருக்கும் மூலவரைத் தரிசிக்கலாம்.
🌸 மூலவரின்
பின்னால் சோமாஸ்கந்தர் காட்சியளிக்கின்றார்.
🌸 வலப்பால்
நடராசசபை.
🌸 இக்கோயிலில் அம்பலவாணர் மூர்த்தங்கள் மூன்று உள்ளன.
🌸 கோஷ்ட
மூர்த்தங்களாக விநாயகர், தெட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா உள்ளனர்.
🌸 உற்சவமூர்த்தங்களுள் 1) பிரம்மாவுக்குக் காட்சி தந்த சுவாமி, நந்தியுடன் நின்றிருக்கும் பெரிய மூர்த்தம் 2) பிரம்மா 3) நால்வர் ஆகியவை தரிசிக்கத்தக்கன.
⚜ *சோமாசிமாற
நாயனார் :*⚜
🔥 63 நாயன்மார்களில் ஒருவரான சோமாசிமாற நாயனார் அவதரித்த தலம் இதுவே. இவருக்கு சோமயாகம் செய்ய வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. யாகத்தின் அவிர்பாகத்தை சிவபெருமானே நேரில் வந்து பெறவேண்டும் என விரும்பினார்.
🌤 இறைவனை
நேரடியாக அழைக்க வேண்டுமானால், அவரது நண்பர் சுந்தரரின் நட்பை முதலில் பெற வேண்டும் என்று நினைத்தார். இந்நிலையில் சுந்தரருக்கு தூதுவளை கீரை மிகவும் பிடிக்கும் என்பதை அறிந்த சோமாசிமாறர் அவருக்கு தினமும் தூதுவளை கீரை கொடுத்து அனுப்பினார். இதைக் கொடுத்து அனுப்புவது யாரென்பது சுந்தரருக்குத் தெரியாது. ஆனால், மனைவி சங்கிலி அம்மையாருக்கு கீரை கொடுத்தனுப்புவது யார் என்று தெரியும்.
🌤 கீரையைக்
கொடுத்தனுப்பியவரை பார்க்க வந்தார் சுந்தரர். அப்போது சோமாசி மாறனார், தான் நடத்தும் யாகத்திற்கு இறைவனை அழைத்து வரும்படி சுந்தரரிடம் வேண்டினார். சுந்தரரும் அதற்கு சம்மதித்து இறைவனிடம் வேண்ட, இறைவனும், வைகாசி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் நடக்கும் யாகத்திற்கு வருவதாக வாக்களித்தார்.
🍁 இறைவனே
நேரடியாக வருவதால் நாட்டில் பல பகுதியிலிருந்தும் வேத விற்பன்னர்கள், முனிவர்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள் சூழ யாகம் சிறப்பாக நடந்தது. நான்கு வேதங்களை நான்கு நாய்களாக மாற்றி, இறந்த ஒரு கன்றினை சுமந்தபடி நீசனைப் போல் உருமாறி வந்தார் சிவன். அவருடன் பார்வதி தேவி தலையில் மதுக்குடத்துடன் வந்தாள். கீழ்சாதிப் பிள்ளகள் போல் உருமாறிய பிள்ளையாரும், முருகனும் அவர்களுடன் வந்தனர். இவர்களை அடையாளம் தெரியாததால், யாகத்தில் ஏதோ தவறு நடந்து விட்டதாகக் கருதி வேதியர்கள் ஓடிவிட்டனர்.
🍁 சோமாசிமாற
நாயனார் இறைவன் வருவார் என்று எதிர்பார்த்து இருந்த நேரத்தில் இவ்வாறு நீசன் ஒருவன் குடும்பத்தோடு வந்திருக்கிறானே என்று வருத்தப்பட்டார். உடனே விநாயகர் தன் சுயரூபத்தில் சோமாசிமாறருக்கும், அவர் மனைவிக்கும் காட்சி தந்து, வந்திருப்பது சிவன் என்பதை உணர்த்தினார். மகிழ்ந்த சோமாசிமாறர் சிவனாகிய தியாகராஜருக்கு அவிர்பாகம் கொடுத்து சிறப்பு செய்தார்.
🍁 தியாகராஜரும் நீசக்கோலம் நீங்கி, பார்வதி சமேதராக சோமசிமாறருக்கு காட்சி கொடுத்து அவரை நாயன்மார்களில் ஒருவராக்கினார். சோமாசிமாறர் யாகம் செய்த இடம் அம்பர் பெருந்திருக்கோவிலில் இருந்து அம்பர் மாகாளம் செல்லூம் சாலை வழியில் சாலையோரத்தில் உள்ளது.
🅱 *தல
வரலாறு:*🅱
🌤 *பிரமன்
வழிபட்டது :*🌤
🔥 திருமால்,
பிரமன் ஆகிய இருவருமே தாமே பிரமம் என தம்முள் மாறுபட்டபோது இருவரிடையே அழல் உருவாய் ஓங்கி நின்றான் இறைவன்.
🔥 இவ்வனற்பிழம்பின் அடியையோ, முடியையோ காண்பவரே உலகின் முழுமுதல்வர் என்று கூறிய இறைவனது உரையின்படி திருமால் பன்றி உருவம் கொண்டு அடியைக் காண புறப்பட்டு தேடி, தன் இயலாமையை இறைவனிடம் தெரிவித்து நின்றார். பிரம்மன் அன்னமாய் பறந்துசென்று முடியைக் காணாமலே கண்டதாகப் பொய்யுரை கூறி நின்றார். பெருமன் பிரமனை அன்னமாகும்படி சபித்தார். பிரமன் பிழைபொறுக்க இறைவனை வேண்டினான். பெருமான் புன்னாகவனம் என்னும் இத்தலத்தை அடைந்து தவம் செய்யுமாறு கூறினார்.
🔥 பிரமனும்
அவ்வாறே இத்தலத்தை அடைந்து பொய்கை ஒன்றை உண்டாக்கி அதன் நீரால் இறைவனுக்கு அபிஷேகம் செய்து பல ஆண்டுகள் வழிபட்டு அன்ன உருவம் நீங்கி பழைய உருவம் பெற்று, படைப்புத் தொழிலை மேற்கொண்டார். பிரம்மனுக்கு இறைவன் காட்சி வழங்கிய ஐதீக விழா ஆண்டுதோறும் மாசி மகத்தன்று நடக்கிறது.
🌤 *அம்பராம்பரர்களை அழித்தது:*🌤
🔥 துர்வாச
முனிவருக்கு மதலோலா என்ற தேவகன்னிகையால் தோன்றிய அம்பரன், ஆம்பரன் ஆகிய இருவரும் தாங்கள் பெற்ற தவவலிமையால் உலகிற்கு இடையூறு விளைவித்து வந்தனர். பெருமான் கட்டளைப்படி அம்பிகை காளியை நோக்கினாள். காளி கன்னி உருவோடு வந்தாள். இருவரும் அம்மையை சாதாரண பெண் எனக்கருதி அவரை அடைய சண்டையிட்டனர். மூத்தவன் இறந்தான். இளையவனைக் காளி கொன்றாள். காளி அம்பரனைக் கொன்ற இடமே அம்பகரத்தூர் ஆகும். கொலைப்பழி தீரக் காளி திருமாகாளத்தில் இறைவனைப் பூஜித்து அருள்பெற்றார்.
🌤 *சம்காரசீலனை அழித்தது:*🌤
🔥 சம்காரசீலன் ஒரு அரக்கன். தேவர்கள் இந்தஅரக்கனுக்கு பயந்து பிரம்மன் கட்டளைப்படி இத்தலத்தில் குடியேறினர். இறைவன் தேவர்களைக் காக்க கால பைரவரை ஏவி அவனைக்கொன்று அமரர்கட்கு அருள்புரிந்தார்.
🌤 *விமலன்
அருள் பெற்றது:*🌤
🔥 விமலன்
என்ற அந்தணன் தீர்த்தயாத்திரை செய்து கொண்டே இத்தலத்தில் வந்து தங்கி பல்லாண்டுகள் வழிபட்டான். காசிக்கங்கையை இறைவன் இங்கு வரச்செய்து வேண்டும் வரங்கள் அருளினான்.
🌤 *மன்மதன்
சாபம் நீங்கியது:*🌤
🔥 மன்மதபாணம் பலிக்காமல் போகக்கூடாது என்று கூறிய விசுவாமித்திரரின் சாபம் நீங்க மன்மதன் இத்தலத்தை அடைந்து வழிபட்டு சாபநீக்கம் பெற்றான்.
🌤 *நந்தராசன்
பிரமகத்தி நீங்கியது:*🌤
🔥 நந்தகூபன்
என்னும் அரசன் புலித்தோல் உடுத்த முனிவரை புலியெனக்கருதி அம்புவிடுத்த குற்றத்தினால் பிரமகத்தி தொடரப்பட்டு இத்தலத்தை அடைந்து இறைவனை வழிபட்டு பிரமகத்தி நீங்கப்பெற்றான். இத்தலத் திருக்கோயிலைத் திருப்பணி செய்தும் விழாக்கள் நடத்தியும் மகிழ்ந்தான்.
🌤 *கோச்செங்கட்சோழ நாயனார் :*🌤
🔥 திருவானைக்காவில் வெண்ணாவல் மரத்தின் கீழ்இருந்து ஜம்புகேஸ்வரரை முற்பிறப்பில் சிலந்தியாய் இருந்து வழிபட்ட பெரும்பேற்றால் கோச்செங்கட்சோழ மன்னராகப் பிறந்து யானை ஏறாத எழுபது மாடக்கோயில்களைக் கட்டியவர். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். அம்மன்னர் செய்த கோயிலே இது. ஜம்புகேஸ்வரர் ஆலயமும் இக்கோயிலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
🅱 *சிறப்பம்சம்:*🅱
🌿 *அதிசயத்தின் அடிப்படையில்:*
👉🏽 இங்கு
பிரம்மபுரீஸ்வரர் சுயம்புமூர்த்தியாக காட்சி தருகிறார்.
👉🏽 இது
சோமாசி மாற நாயனார் அவதரித்த திருப்பதி.
👉🏽 இத்தலத்தை
ஞானசம்பந்தர் மாத்திரமே பாடியிருக்கின்றனர். அவருடைய பதிகமும் ஒன்று மட்டுமே.(அரசிலாறு)
👉🏽 அரிசிலம்
பொருபுனல் அம்பர்` (அரிசில் - அரிசிலாறு) *`அறைபுனல் நிறைவயல் அம்பர்"அங்கணி
விழவமர் அம்பர்" பைம்பொழில் நிழல்வளர் நெடுநகர்`* என்னும் ஞானசம்பந்தரது திருப்பதிக அடிகளால் இவ்வூரின் சிறப்பு நன்கு விளங்கும்.
👉🏽 வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் இத் தலத்திற்குப் புராணம் பாடியுள்ளார்.
🅱 *இருப்பிடம்:*🅱
🚗 பூந்தோட்டம் தொடர் நிலையத்திற்குக் கிழக்கே 5 கி.மீ. தூரத்திலிருக்கும் அம்பர் மாகாளத்திற்குக் கிழக்கே, 1 கி.மீ. தூரத்திலிருக்கிறது.
🚗 பூந்தோட்டத்திலிருந்து பேருந்து வசதி உள்ளது.
❃
❃ ❃
❃ ❃
❃ ❃
❃ ❃
❃ ❃
❃ ❃
❃ ❃
❃ ❃
🌿 *தி ரு ச் சி ற் ற ம் ப ல ம்*🌿
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
⛱ இ றை ய ன் பி ல் ⛱
🌿 *தி ரு ச் சி ற் ற ம் ப ல ம்*🌿
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
⛱ இ றை ய ன் பி ல் ⛱
•┈┈• ❀❀
•┈┈• ❀❀
•┈┈• ❀❀
•┈┈•