காய்கறி சாப்பிட அடம் பிடிக்குதா குழந்தை? குழந்தையின் அம்மா தான் அதற்கு
காரணம்! கோஸ், கீரை, அவரைக்காய், பீன்ஸ் என்று பச்சை காய்கறிகளை குழந்தைகள்
சாப்பிடாமல், உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு என்று சாப்பிடுவது ஏன் என்று
கண்டறிய அமெரிக்காவில் பிலடெல்பியாவில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின்
முடிவில், தாயின் வயிற்றில் குழந்தை இருந்தபோது தாய் என்னவெல்லாம்
விரும்பிச் சாப்பிடுகிறாளோ, அது தான் குழந்தைக்குப் பிடிக்கிறது என்று
தெரிய வந்துள்ளது. இந்தியாவில் இதுகுறித்து தொன்றுதொட்டே சொல்லப்பட்டு
வந்தாலும், இப்போது அமெரிக்க ஆராய்ச்சியும் உறுதி செய்துள்ளது.
இப்போது தான் கடைகளில் பச்சை காலிபிளவர் போன்று "புரோகோலி"யைப்
பார்க்கிறோம். முன்பெல்லாம் இது குறித்து இந்தியாவில் யாரும்
அறிந்திருக்கவில்லை. ஆனால், கோஸ், காலி பிளவர், புரோகோலி ஆகியவற்றை வேக
வைக்கும்போது துர்நாற்றம் ஏற்படும். இதை நீக்க பல வழிமுறைகள் உள்ளன
என்றாலும், குழந்தைகளுக்கு இந்த வாசனையை முகர்ந்ததுமே, இந்த காய்கறிகளை
ஒதுக்கி விடத் தோன்றுகிறது. ஆனால், குழந்தையை வயிற்றில் சுமந்திருக்கும்போது,
இதுபோன்ற காய்கறிகளைச் சாப்பிட்டாலும், குழந்தை பிறந்த பிறகு தாய்ப்பால்
ஊட்டும் பருவ காலத்தில் சாப்பிட்டாலும் குழந்தைகளும் அதே காய்கறிகளை
விரும்பிச் சாப்பிடுவர். உங்கள் குழந்தைக்கு பாகற்காய் பிடிக்காமல்
போவதற்கு காரணம் யார் தெரிகிறதா இப்போது?
ஒரு நாளைக்கு நான்கு கேரட் சாப்பிட்டால், ஞாபக சக்தி, "சூப்பராக" இருக்கும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
அமெரிக்க நிபுணர்கள் இதுகுறித்து ஆராய்ச்சிகள் நடத்தி வருகின்றனர். கடந்த
சில ஆண்டுகளில், "பீடா கரோடின்" சத்துள்ள மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டு
வந்த 4,500 பேரிடம், ஆன்லைனில் சர்வே செய்யப்பட்டது.
அவர்கள் இதை
சாப்பிட்டு வருவதால், என்ன பலன் கிடைத்துள்ளது என்று கேட்டதற்கு,
நினைவாற்றல் துல்லியமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். குறிப்பாக, பெண்களை
விட, ஆண்களுக்கு, "பீடா கரோடின்" சத்துக்களால், வயதான காலத்தில் மறதி நோய்
வருவதில்லை என்று, நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். இரண்டு நாளுக்கு ஒரு
முறை, 50 மில்லிகிராம் "பீடா கரோடின்" அல்லது, ஒரு நாளைக்கு நான்கு கேரட்டை
அப்படியே சாப்பிட்டு வந்தாலே, நினைவாற்றல் சூப்பராக இருக்குமாம்.
காய்கறி சாப்பிட அடம் பிடிக்குதா குழந்தை? குழந்தையின் அம்மா தான் அதற்கு காரணம்! கோஸ், கீரை, அவரைக்காய், பீன்ஸ் என்று பச்சை காய்கறிகளை குழந்தைகள் சாப்பிடாமல், உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு என்று சாப்பிடுவது ஏன் என்று கண்டறிய அமெரிக்காவில் பிலடெல்பியாவில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில், தாயின் வயிற்றில் குழந்தை இருந்தபோது தாய் என்னவெல்லாம் விரும்பிச் சாப்பிடுகிறாளோ, அது தான் குழந்தைக்குப் பிடிக்கிறது என்று தெரிய வந்துள்ளது. இந்தியாவில் இதுகுறித்து தொன்றுதொட்டே சொல்லப்பட்டு வந்தாலும், இப்போது அமெரிக்க ஆராய்ச்சியும் உறுதி செய்துள்ளது.
இப்போது தான் கடைகளில் பச்சை காலிபிளவர் போன்று "புரோகோலி"யைப் பார்க்கிறோம். முன்பெல்லாம் இது குறித்து இந்தியாவில் யாரும் அறிந்திருக்கவில்லை. ஆனால், கோஸ், காலி பிளவர், புரோகோலி ஆகியவற்றை வேக வைக்கும்போது துர்நாற்றம் ஏற்படும். இதை நீக்க பல வழிமுறைகள் உள்ளன என்றாலும், குழந்தைகளுக்கு இந்த வாசனையை முகர்ந்ததுமே, இந்த காய்கறிகளை ஒதுக்கி விடத் தோன்றுகிறது. ஆனால், குழந்தையை வயிற்றில் சுமந்திருக்கும்போது, இதுபோன்ற காய்கறிகளைச் சாப்பிட்டாலும், குழந்தை பிறந்த பிறகு தாய்ப்பால் ஊட்டும் பருவ காலத்தில் சாப்பிட்டாலும் குழந்தைகளும் அதே காய்கறிகளை விரும்பிச் சாப்பிடுவர். உங்கள் குழந்தைக்கு பாகற்காய் பிடிக்காமல் போவதற்கு காரணம் யார் தெரிகிறதா இப்போது?
ஒரு நாளைக்கு நான்கு கேரட் சாப்பிட்டால், ஞாபக சக்தி, "சூப்பராக" இருக்கும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
அமெரிக்க நிபுணர்கள் இதுகுறித்து ஆராய்ச்சிகள் நடத்தி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளில், "பீடா கரோடின்" சத்துள்ள மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டு வந்த 4,500 பேரிடம், ஆன்லைனில் சர்வே செய்யப்பட்டது.
அவர்கள் இதை சாப்பிட்டு வருவதால், என்ன பலன் கிடைத்துள்ளது என்று கேட்டதற்கு, நினைவாற்றல் துல்லியமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். குறிப்பாக, பெண்களை விட, ஆண்களுக்கு, "பீடா கரோடின்" சத்துக்களால், வயதான காலத்தில் மறதி நோய் வருவதில்லை என்று, நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். இரண்டு நாளுக்கு ஒரு முறை, 50 மில்லிகிராம் "பீடா கரோடின்" அல்லது, ஒரு நாளைக்கு நான்கு கேரட்டை அப்படியே சாப்பிட்டு வந்தாலே, நினைவாற்றல் சூப்பராக இருக்குமாம்.