இந்த சீஸனில் மாங்காய்கள் பலவிதமாகக் கிடைக்கும். சுலபமாக வெந்தியமாங்காய்
 தயாரித்தால் தயிர் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும். பிஞ்சு 
மாங்காயானால், அதாவது கொட்டை முற்றாமல், உள்ளே பருப்புடன் கூடியதாக 
இருந்தால், சாதாரணமாக உப்பு பிசறி கடுகு தாளித்துக் கொட்டினாலே போதும். 
ருசியாக இருக்கும். துளி இஞ்சியைத் தோல் சீவி, பொடியாய் நறுக்கிச் 
சேர்த்தாலும் ருசி அலாதி தான். அதே சற்று புளிப்புள்ளதாக இருந்தால்கூட ஒரு 
பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கி சேர்த்து கடுகு தாளித்துக் கொட்டினாலும் 
போதும். சற்றுக் கொட்டை முற்றிய, காயாய் இருந்தால் காயை நறுக்கி, உப்பு, 
மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி சேர்த்து, எண்ணெயில் கடுகு, பெருங்காயம், 
தாளித்துக் கொட்டினாலும், நன்றாக இருக்கும்.
 
 வெந்தயம் சேர்த்து 
செய்யும் மாங்காய் ஊறுகாய் தான் மெந்திய மாங்காய். இதை நாட்பட வைத்துக் 
கொள்ள வேண்டுமானால் சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
 
 ஆவக்காய் என்ற பெயரில் வழஙகும் மாங்காய் ஊறுகாய் பிரசித்தமானது. இது 
ஆந்திர மாவட்டத் தயாரிப்பு வகை. ஆவாலு என்றால் கடுகு. கடுகை முக்கியமாக 
வைத்துத் தயாரிக்கும் வகை யாதலால் ஆவகாயி என்று சொல்வது 
ஆவக்காய்ஆகிவிட்டது. முதலில் மெந்திய மாங்காய். அடுத்து ஆவக்காய் ஊறுகாய்.
 
 வேண்டியவைகள்:
 மிளகாய்ப்பொடி – இரண்டு டேபிள் ஸ்பூன்
 கொட்டை முற்றிய மாங்காய் – இரண்டு
 வெந்தயம் – ஒரு டீஸ்பூன்
 கடுகு – ஒரு டீஸ்பூன்
 மஞ்சள்பொடி – அரை டீஸ்பூன்
 பெருங்காயம் – விருப்பத்திற்கிணங்க
 நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்.
 உப்பு – ருசிக்கு
 
 செய்முறை:
 மாங்காயை நன்றாக அலம்பித் துடைத்து திட்டமான துண்டங்களாக நறுக்கிக் 
கொள்ளவும். வாணலியைச் சூடாக்கி வெந்தயத்தைச் சிகப்பாகவும், கடுகைப் 
படபடவென்று வெடிக்கும் அளவிற்கும். வறுத்து எடுத்து ஆறினவுடன் மெல்லியதாகப்
 பொடித்துக் கொள்ளவும். ஒரு கண்ணாடிப் பாத்திரத்திலோ, ஜாடியிலோ மாங்காய்த் 
துண்டங்களைப் போடவும். உப்புப் பொடி சேர்த்துக் கலக்கவும்.
 
 
எண்ணெயைக் காயவைத்து கீழிறக்கி சற்றுச் சூடு குறைந்தவுடன் மிளகாய்ப்பொடி, 
மஞ்சள் பொடியை அதில் சேர்க்கவும். நறுக்கிய மாங்காயின் மேல் எண்ணெயைச் 
சேர்த்து, பெருங்காய, வெந்திய, கடுகுப் பொடியைச் சேர்த்துக் கலக்கவும். 
போட்டவுடனேகூட தொட்டுக் கொள்ள ஆரம்பிக்கலாம். ஊறினவுடன் ஃப்ரிஜ்ட்ஜில் 
வைத்து உபயோகிக்கவும்..
 
 நறுக்கிய மாங்காயை உப்பு சேர்த்தவுடன் 
பாத்திரத்துடன் இரண்டு நாட்கள் வெயிலில் வைத்து எடுத்து, எண்ணெய், காரம் 
சேர்த்தால் அதிக நாட்கள் வரும். கெட்டுப் போகாது. கடுகு பொடி செய்து போட 
விரும்பாவிட்டால், தாளித்துக் கொட்டலாம். உப்பு, காரம், விருப்பத்திற்கு 
கூட்டிக் குறைக்கவும்.
 
 ஃப்ரிட்ஜ்ஜில் வைப்பது அதிகம் செலவாகாத குடும்பத்திற்கு நல்லது. தயிர் சாதத்திற்கு சரியான ஜோடி இந்த மெந்திய மாங்காய்!
 
 குறிப்பு : ஒரு பெரிய மாங்காய்க்கு சராசரி ஒரு டேபிள் ஸ்பூன் 
மிளகாய்ப்பொடி கணக்கு வைத்துக் கொள்வோம். நல்ல மிளகாய்ப்பொடியாக இருக்க 
வேண்டும்.
 
 - காமாட்சி
இந்த சீஸனில் மாங்காய்கள் பலவிதமாகக் கிடைக்கும். சுலபமாக வெந்தியமாங்காய் தயாரித்தால் தயிர் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும். பிஞ்சு மாங்காயானால், அதாவது கொட்டை முற்றாமல், உள்ளே பருப்புடன் கூடியதாக இருந்தால், சாதாரணமாக உப்பு பிசறி கடுகு தாளித்துக் கொட்டினாலே போதும். ருசியாக இருக்கும். துளி இஞ்சியைத் தோல் சீவி, பொடியாய் நறுக்கிச் சேர்த்தாலும் ருசி அலாதி தான். அதே சற்று புளிப்புள்ளதாக இருந்தால்கூட ஒரு பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கி சேர்த்து கடுகு தாளித்துக் கொட்டினாலும் போதும். சற்றுக் கொட்டை முற்றிய, காயாய் இருந்தால் காயை நறுக்கி, உப்பு, மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி சேர்த்து, எண்ணெயில் கடுகு, பெருங்காயம், தாளித்துக் கொட்டினாலும், நன்றாக இருக்கும்.
வெந்தயம் சேர்த்து செய்யும் மாங்காய் ஊறுகாய் தான் மெந்திய மாங்காய். இதை நாட்பட வைத்துக் கொள்ள வேண்டுமானால் சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
ஆவக்காய் என்ற பெயரில் வழஙகும் மாங்காய் ஊறுகாய் பிரசித்தமானது. இது ஆந்திர மாவட்டத் தயாரிப்பு வகை. ஆவாலு என்றால் கடுகு. கடுகை முக்கியமாக வைத்துத் தயாரிக்கும் வகை யாதலால் ஆவகாயி என்று சொல்வது ஆவக்காய்ஆகிவிட்டது. முதலில் மெந்திய மாங்காய். அடுத்து ஆவக்காய் ஊறுகாய்.
வேண்டியவைகள்:
மிளகாய்ப்பொடி – இரண்டு டேபிள் ஸ்பூன்
கொட்டை முற்றிய மாங்காய் – இரண்டு
வெந்தயம் – ஒரு டீஸ்பூன்
கடுகு – ஒரு டீஸ்பூன்
மஞ்சள்பொடி – அரை டீஸ்பூன்
பெருங்காயம் – விருப்பத்திற்கிணங்க
நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்.
உப்பு – ருசிக்கு
செய்முறை:
மாங்காயை நன்றாக அலம்பித் துடைத்து திட்டமான துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியைச் சூடாக்கி வெந்தயத்தைச் சிகப்பாகவும், கடுகைப் படபடவென்று வெடிக்கும் அளவிற்கும். வறுத்து எடுத்து ஆறினவுடன் மெல்லியதாகப் பொடித்துக் கொள்ளவும். ஒரு கண்ணாடிப் பாத்திரத்திலோ, ஜாடியிலோ மாங்காய்த் துண்டங்களைப் போடவும். உப்புப் பொடி சேர்த்துக் கலக்கவும்.
எண்ணெயைக் காயவைத்து கீழிறக்கி சற்றுச் சூடு குறைந்தவுடன் மிளகாய்ப்பொடி, மஞ்சள் பொடியை அதில் சேர்க்கவும். நறுக்கிய மாங்காயின் மேல் எண்ணெயைச் சேர்த்து, பெருங்காய, வெந்திய, கடுகுப் பொடியைச் சேர்த்துக் கலக்கவும். போட்டவுடனேகூட தொட்டுக் கொள்ள ஆரம்பிக்கலாம். ஊறினவுடன் ஃப்ரிஜ்ட்ஜில் வைத்து உபயோகிக்கவும்..
நறுக்கிய மாங்காயை உப்பு சேர்த்தவுடன் பாத்திரத்துடன் இரண்டு நாட்கள் வெயிலில் வைத்து எடுத்து, எண்ணெய், காரம் சேர்த்தால் அதிக நாட்கள் வரும். கெட்டுப் போகாது. கடுகு பொடி செய்து போட விரும்பாவிட்டால், தாளித்துக் கொட்டலாம். உப்பு, காரம், விருப்பத்திற்கு கூட்டிக் குறைக்கவும்.
ஃப்ரிட்ஜ்ஜில் வைப்பது அதிகம் செலவாகாத குடும்பத்திற்கு நல்லது. தயிர் சாதத்திற்கு சரியான ஜோடி இந்த மெந்திய மாங்காய்!
குறிப்பு : ஒரு பெரிய மாங்காய்க்கு சராசரி ஒரு டேபிள் ஸ்பூன் மிளகாய்ப்பொடி கணக்கு வைத்துக் கொள்வோம். நல்ல மிளகாய்ப்பொடியாக இருக்க வேண்டும்.
- காமாட்சி


 

