இஸ்லாமையும் அதன் மூடநம்பிக்கைகளையும் டாக்டர் அம்பேத்கார் அம்பலப்படுத்துகிறார்

மணக்கால் அய்யம்பேட்டை | 1:40 PM | Best Blogger Tips

பாகம்-46
------------------
இந்துக்கள் தலைநிமிர்ந்து நடக்க தடைவிதிக்கப்பட்ட காலம்
---------------------
புனிதப்போரில் கைப்பற்றப்பட்ட இந்துக்களுக்கு அடிமைத்தனமே கதியாயிருந்ததது. போர் நிகழாத காலங்களிலும் இந்துக்களை இழிவுபடுத்தக் கையாளப்பட்ட கொடுமையான வழிகளும் கொஞ்சநஞ்சமல்ல.

அலாவுதீனின் ஆட்சிக்காலத்தில் 14-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், சில பகுதிகளில் இந்துக்கள் சுல்தானுக்கு மிகத்தொந்தரவு கொடுத்தனர். எனவே, இந்துக்களைக் கிளர்ச்சி செய்ய முனையுமளவுக்குத் தழைத்தெழவிடாத வகையில் வரிகளால் ஒடுக்க அவர் முனைந்தார்.
குதிரைகளையும் ஆயுதங்களையும் வைத்துக்கொள்ளவோ, உயர்ந்த துணிமணிகள் அணியவோ, உயர்தர வாழ்கை வசதிகளைத் துய்க்கவோ, இயலாதவாறு இந்துக்கள் சுரண்டப்பட்டனர்.

ஜிஸியா வரி
-----------------
“சுல்தான்கள், பேரரசர்கள், மன்னர்கள் எனப் பலவகைப்பட்ட ஆட்சிகளிலும், இந்துக்களிடம் ஜிஸியா வரி வசூலிக்கப்பட்டதில் மட்டும் மாற்றமில்லை. வரிவதிப்பு ஆளுவோர்களின் வசூல் திறமையைப் பொருத்து அமைந்தது.

இறுதியாக, அக்பரின் அறிவார்ந்த ஆட்சயில்தான் (கி.பி.1665) மொகலாயப் பேரரசு முழுவதிலும் (முஸ்லீம் ஆட்சியின் அடிப்படைக் கொள்கையாக எட்டு நூற்றாண்டுகளுக்கு மேல் நிலவிய) இவ்வரி நீக்கப்பட்டது.”

இவ்வரியைப் பற்றி லேன்பூலே கூறுவதாவது:
---------------------
“இந்துக்களுக்கு நிலத்தின் விளைச்சலில் பாதி வரியாக விதிக்கப்பட்டதுடன், அவர்களிடமிருந்து எருமைகள், ஆடுகள் கறவைகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே தீர்வைகள் விதிக்கப்பட்டன. ஏழை, செல்வர் வேறுபாடின்றி அனைவருக்கும் ஒரு ஏக்கர் நிலத்திற்கு இவ்வளவு, கால்நடை ஒன்றுக்கு இவ்வளவு என்று வரிவிதிக்கப்பட்டது.

வரிவசூல் அலுவலர்கள் கையூட்டு பெற்றுச் சலுகை காட்டினால், பணிநீக்கத்துடன், தடியடி, குறடு, கிடுக்கிச்சட்டம், தளையிடல், சிறை முதலான கடுமையான சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். புதிய விதிகள் மிகக் கடுமையாகச் செயல்படுத்தப்பட்டன, ஒரு அலுவலர், 20 இந்துக்களிடமிருந்து, கட்டிவைத்து அடித்தல் போன்ற முறைகளில் வரி வசூலிக்கப் பணிக்கப்பட்டார்.

இந்துக்களின் வீடுகளில் தங்கம், வெள்ளியேதும் வைத்துக்கொள்வதிற்கில்லை என்பதுடன், வெற்றிலை பாக்கு போன்ற மலிவான இன்பங்களுக்குக் கூட வழியில்லை. அரசின் உள்ளூர் (இந்து) அலுவலர்கள் வறுமையிலேயே வாழ்ந்தனர், அவர்களது மனைவியர் முஸ்லீம் வீடுகளில் பணிப்பெண்டிராகும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். அரசின் வருவாய்த்துறை அலுவலர்கள், பிளேக் என்னும் கொள்ளை நோயைவிடக் கடுமையாய்க் கருதப்பட்டனர். அரசுப்பணியாளராக நேர்வது மரணத்தைவிடக் கொடுமையான இழிவாய்க் கருப்பட்டது, அத்தகையோருக்கு இந்துக்கள் எவரும் பெண் கொடுக்க மாட்டார்கள்.


இவ்வாணை பற்றி அக்கால வரலாற்றாசிரியர் கூறுகிறார்:

“சட்டங்கள் மிகக் கடுமையாகப் பின்பற்றப்பட்டன. சௌக்கிதார்கள், குத்கள், முகாதிம்கள் போன்ற பணியாளர்கள் குதிரையில் செல்லவோ, ஆயுதம் தரிக்கவோ, வெற்றிலை போடவோ, நல்ல துணியணியவோ இயலா நிலையிலிருந்தனர்… இந்துக்கள் தலைநிமிர்ந்து நடக்கவும் அனுமதிக்கப்படவில்லை… அடியுதைகள், தளைகள், கிடுக்கிச் சட்டங்களில் பிணித்தல் போன்ற முறைகளில் வரிவசூல் செய்யப்பட்டது.,
இக்கொடுமைகளெல்லாம் பேராசை, பிறழ்ந்த அறநெறியுணர்வு காரணமாகச் செய்யப்பட்டன என்பதற்கில்லை.

மாறாக, இஸ்லாமிய ஆட்சியின் அடிப்படை வழிமுறைகளாக இவை நிலவிவந்தன. சுல்தான் அலாவுதீன் ஒருமுறை, முஸ்லீம் சட்டநெறிகளின் கீழ், இந்துக்களின் நிலையென்னவெனத் தெளிவுறுத்துமாறு கேட்டபோது, காஜி விடுத்த பதில் இதனையுணர்த்துகிறது. காஜியின் விளக்கமாவது, அவர்கள் திறை செலுத்தக்கடமைப்பட்டவர்கள், வரி வசூல் அலுவலர் வெள்ளி வேண்டுமெனக் கேட்டால், மறுபேச்சின்றி பணிவும், மரியாதையும் காட்டித் தங்கம் கொடுக்க வேண்டியது இவர்கள் கடமை.

அலுவலர்கள் அவர்களது வாயில் குப்பையைப் போடவிரும்பினால் மறு பேச்சின்றி வாயைத் திற்ந்து அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும். அவர்கள் செலுத்தும் திறையைப் பணிந்து உவந்து செலுத்துகின்றனர் என்பதற்கு அடையாளமாக இக்குப்பையை வாயில் ஏற்றுக்கொள்ள வேண்டும். இஸ்லாத்தின் புகழை உயர்த்தலே கடமையென்றும், அதையெதிர்க்க முனைவதில் பயனில்லையென்றும் அவர்கள் உணரவேண்டும்.

அவர்களை இழிவானவர்கள் எனக்கூறி அவர்களை அடிமைத்தனத்திலேயே வைத்திருங்கள் எனக் கடவுளே கட்டளையிடுகிறார். இந்துக்களை இழிநிலையில் நடத்துதல் நமது சமயக் கடமை, ஏனெனில் இறைத்தூதருக்கு அவர்கள் உறுதியான எதிரிகள், அவர்களைக் கொலை செய்யவும், கொள்ளையடிக்வும் அடிமைப்படுத்தவும் தூதர் கட்டளையிட்டுள்ளார்.

அவர்களை இஸ்லாத்துக்கு மாற்றுங்கள்; மறுத்தால் கொலை செய்தோ, அடிமைப்படுத்தியோ, அவர்களது செல்வங்களையும் சொத்துக்களையும் கவர்ந்து கொள்ளுங்கள் எனத் தூதர் கூறியுள்ளார். இந்துக்கள் மீது ஜிஸியா வரி விதிப்பதற்கு இஸ்லாமியச் சட்ட வல்லுநர்களில் பேரரறிஞரான ஹனிபாவே அனுமதியளித்துள்ளார். மற்ற சட்ட நெறியாளர்களோ, இஸ்லாமா, சாலா என்ற இரண்டிலொன்றுதான் இந்துக்களுக்கான தேர்வாகமுடியும் என்று கூறியுள்ளனர்.

கஜினி முகமதுவின் படையெடுப்புக்கும் அகமதுஷா அப்தலியின் படையெடுப்புக்கும் இடைப்பட்ட 762 ஆண்டுக்கால நிலை இதுதான்.’’



-----தொடரும்...