திருமணம்

மணக்கால் அய்யம்பேட்டை | 11:31 AM | Best Blogger Tips
திருமணம் ஒரு சமூக, சட்ட, உறவுமுறை அமைப்பு ஆகும். மணம் என்பது ஓர் ஆணும், ஒரு பெண்ணும் இணைந்து இல்லறம் மேற்கொள்ள நடத்தபெறும் ஒரு வாழ்க்கை ஒப்பந்தம். மனிதனால் மனித சமுதாயத்தின் நலன் கருதிப் படைத்துக் கொள்ளப்பட்டதோர் ஒழுக்க முறை. திருமணம் என்பது மனித இனத்தைப் பொறுத்தவரை ஒரு உலகளாவிய பொதுமையாக இருந்த போதிலும், வெவ்வேறு பண்பாட்டுக் குழுக்களிடையே திருமணம் தொடர்பில் வெவ்வேறு விதமான விதிகளும், நெறிமுறைகளும் காணப்படுகின்றன.திருமணம் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண், பெண் உறவு நிலையைக் குறிக்கிறது. அதோடு திருமணம் என்பது ஒரு புதிய சந்ததி தோன்றுவதற்குரிய ஒருவிதப் பிணைப்பு ஆகும். ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து ஒருவருக்கொருவர் கட்டுப்பட்டு, அவர்களது வாழ்க்கையைக் கூட்டுப்பொறுப்பில் நடத்துவதற்குப் பலர் அறியச் செய்துகொள்ளும் செயலே மணம் எனப்படும்.

மணமுறைகள் :

பொருள் கொடுத்தும், சேவை புரிந்தும் மணத்தல், திறமையை வெளிக்காட்டும் வகையில் வீரத்தின் காரணமாக மணத்தல், போர் நிகழ்த்தி மணத்தல் ,தன் காதல் மிகுதியைக் காட்டி மணத்தல் ஆகிய இவ்வகை மண்முறைகள் களவுநெறி, கற்புநெறி ஆகிய இருவகை மண முறைகளிலும் இருந்தது. உறவு முறைத்திருமணம், கலப்புமணம் ஆகிய வகைகளில் கூட களவு மணமும் இருந்தது என்பதனை இலக்கியங்கள் வாயிலாக அறியலாம்.
இதன் அடிப்படையில் சங்க இலக்கியங்கள் வாயிலாக தெரியவரும் தமிழரின் மணமாக :

*மரபு வழி மணம்
*சேவை மணம்
*போர் நிகழ்த்தி மணம்
*துணங்கையாடி மணம்
*பரிசம் கொடுத்து மணம்
*ஏறு தழுவி மணம்
*மடலேறி மணம்
ஆகிய மண முறைகளைக் காணலாம்.

தமிழரின் திருமண நிகழ்வுகள் :

காப்பியங்களில் காணப்படும் பண்டைத் தமிழரிடம் இடம் பெற்ற மண முறைகளைத் தவிர, நால்வகை வருணத்தவர் தம்குல முறைப்படியான மணவினைச் செயல்கள் இடம் பெற்ற நிலையும் காணப்படுகிறது. இது காப்பியங்களிலும் மரபாக இடம் பெற்றுள்ளது.

#பொருத்தம் பார்த்தல்
#மணநாள் குறித்தல்
#திருமண அழைப்பிதழ் அல்லது முரசு மூலமாக நகர #மக்கட்கு உணர்த்துதல்
#மணவினை நிகழும் இடத்தை அலங்கரித்தல்
#சிறப்பு இறைவழிபாடு செய்தல்
#மங்கல ஒலி எழச்செய்தல்
#மணமேடை ஒப்பனை
ஆகிய திருமண நிகழ்வுகள் காப்பியங்களில் இடம் பெற்றுள்ளது.

புதுமையாக இடம்பெற்ற சில பழக்கங்கள் :

பண்டைத்தமிழரின் மண மரபில் இடம் பெற்ற மணவினைச் செயல்கள் காப்பியங்களில் அமைந்து காணப்படினும் புதியவைகளும் காப்பியங்களில் இடம்பெற்றுள்ளன.

@காப்பு நூல் கட்டுதல்
@மங்கல நீர் கொண்டு வருதல்
@மண மக்கள் ஒப்பனை
@மணமகன் அழைப்பு
@வேள்வித்தீ
@அம்மி மிதித்தல்
@பாத பூசை செய்தல்
@அருந்ததி காட்டல்
@அறம் செய்தல்
@மங்கல அணி
இது போன்று புதியனவாக தமிழர்களின் திருமணத்தில் புதிதாக இடம் பெற்றன.

தமிழும் சித்தர்களும்