ஐந்து நாட்களுக்கு முன் 1912-ல் இங்கிலாந்தின் சவுத் ஹாம்ப்ட்டன்
நகரிலிருந்து அமெரிக்க நியூயார்க் நகரத்துக்கு தனது பயணத்தை துவக்கிய
உலகின் பிரம்மாண்ட டைட்டானிக் கப்பலுக்கு இதுவே தனது இறுதி பயணம் எனத்
தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இஸ்மே எனும் அதன் ஓனரும் கூட பயணம்
வந்தார். மதியம் கிளம்புவதாக இருந்த கப்பல் ஒநியூயார்க் எனும் கப்பல்
அலைகள் வேகமாக எழும்பியதால் நான்கடி அளவுக்கு அருகே வந்ததால் ரு மணிநேரம்
தாமதமாக செல்ல வேண்டி நேரிட்டது. மொத்தம் 2223 பயணிகள். பூலோக சொர்க்கம்
மிதந்து நகர்ந்து கொண்டிருந்தது. அமெரிக்கா எனும் கப்பலில் இருந்து
பனிப்பாறைகள் இருப்பதற்கான எச்சரிக்கைகள் வந்த பொழுதும் அது கப்பலை
சென்றடையவில்லை .
ஏப்ரல்
பதினான்கு முடிந்து பதினைந்து துவங்கும் நள்ளிரவு நேரத்தில் பனிபாறைகள்
இருப்பது தெரிந்தும் கப்பலின் வேகத்தை குறைக்காமல் செலுத்திய மாலுமி
அதற்கான விலையை கொடுக்க வேண்டி வந்தது. கப்பல் சரிய ஆரம்பித்தது. வெள்ளம்
உள்ளே புகுந்தது இரண்டே கால் ஆண்டு உழைப்பில் வார்க்கப்பட்ட அசைக்கவே
முடியாது என புகழப்பட்ட கப்பல் மூழ்கி கொண்டிருந்தது.
கப்பலின்
முதலாளி இஸ்மே தப்பித்தால்போதும் என கிளம்பி விட்டார். கேப்டன் ஸ்மித் தான்
நிஜ கேப்டன் என நிரூபித்தார். கையருகே மரணம் என்கிற சூழலில்கூட என்று
கப்பல் ஊழியர்கள் கவலைப்படாமல் பயணிகளைக் காப்பாற்ற முயற்சி செய்தார்கள்.
மொத்த 888 ஊழியர்களில் 696 ஊழியர்கள் உயிரிழந்தார்கள்.
காப்புப்
பணிகளைக் கடைசிவரை தலைமையேற்ற கேப்டன் ஸ்மித் கப்பலோடு மூழ்கினார்.
முப்பத்தி இரண்டு லைப் போட்கள் இருக்க வேண்டிய சூழலில் பன்னிரண்டு குறைவாக
கொண்டு வந்திருந்தார்கள், தள்ளுமுள்ளுவில் இன்னமும் இழப்பு அதிகமானது 1357
ஆண்கள், 106 பெண்கள், 53 குழந்தைகள் உயிரிழந்தனர். இஸ்மே மக்களின்
வெறுப்புக்கு ஆளானார்.
ஸ்மித் கொண்டாடப்பட்டிருக்க வேண்டிய
கேப்டன். டைட்டானிக் கப்பல் விபத்தின் பின்னணியில் மெல்லிய காதல் கதையை
கேமரூன் வடித்து அது ஆஸ்கர்களை அள்ளியது ஞாபகம் இருக்கலாம்.
- பூ.கொ.சரவணன்
ஐந்து நாட்களுக்கு முன் 1912-ல் இங்கிலாந்தின் சவுத் ஹாம்ப்ட்டன் நகரிலிருந்து அமெரிக்க நியூயார்க் நகரத்துக்கு தனது பயணத்தை துவக்கிய உலகின் பிரம்மாண்ட டைட்டானிக் கப்பலுக்கு இதுவே தனது இறுதி பயணம் எனத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இஸ்மே எனும் அதன் ஓனரும் கூட பயணம் வந்தார். மதியம் கிளம்புவதாக இருந்த கப்பல் ஒநியூயார்க் எனும் கப்பல் அலைகள் வேகமாக எழும்பியதால் நான்கடி அளவுக்கு அருகே வந்ததால் ரு மணிநேரம் தாமதமாக செல்ல வேண்டி நேரிட்டது. மொத்தம் 2223 பயணிகள். பூலோக சொர்க்கம் மிதந்து நகர்ந்து கொண்டிருந்தது. அமெரிக்கா எனும் கப்பலில் இருந்து பனிப்பாறைகள் இருப்பதற்கான எச்சரிக்கைகள் வந்த பொழுதும் அது கப்பலை சென்றடையவில்லை .
ஏப்ரல் பதினான்கு முடிந்து பதினைந்து துவங்கும் நள்ளிரவு நேரத்தில் பனிபாறைகள் இருப்பது தெரிந்தும் கப்பலின் வேகத்தை குறைக்காமல் செலுத்திய மாலுமி அதற்கான விலையை கொடுக்க வேண்டி வந்தது. கப்பல் சரிய ஆரம்பித்தது. வெள்ளம் உள்ளே புகுந்தது இரண்டே கால் ஆண்டு உழைப்பில் வார்க்கப்பட்ட அசைக்கவே முடியாது என புகழப்பட்ட கப்பல் மூழ்கி கொண்டிருந்தது.
கப்பலின் முதலாளி இஸ்மே தப்பித்தால்போதும் என கிளம்பி விட்டார். கேப்டன் ஸ்மித் தான் நிஜ கேப்டன் என நிரூபித்தார். கையருகே மரணம் என்கிற சூழலில்கூட என்று கப்பல் ஊழியர்கள் கவலைப்படாமல் பயணிகளைக் காப்பாற்ற முயற்சி செய்தார்கள். மொத்த 888 ஊழியர்களில் 696 ஊழியர்கள் உயிரிழந்தார்கள்.
காப்புப் பணிகளைக் கடைசிவரை தலைமையேற்ற கேப்டன் ஸ்மித் கப்பலோடு மூழ்கினார். முப்பத்தி இரண்டு லைப் போட்கள் இருக்க வேண்டிய சூழலில் பன்னிரண்டு குறைவாக கொண்டு வந்திருந்தார்கள், தள்ளுமுள்ளுவில் இன்னமும் இழப்பு அதிகமானது 1357 ஆண்கள், 106 பெண்கள், 53 குழந்தைகள் உயிரிழந்தனர். இஸ்மே மக்களின் வெறுப்புக்கு ஆளானார்.
ஸ்மித் கொண்டாடப்பட்டிருக்க வேண்டிய கேப்டன். டைட்டானிக் கப்பல் விபத்தின் பின்னணியில் மெல்லிய காதல் கதையை கேமரூன் வடித்து அது ஆஸ்கர்களை அள்ளியது ஞாபகம் இருக்கலாம்.
- பூ.கொ.சரவணன்