அதிகபட்சம் உங்களால்
என்ன செய்ய முடியும்?
கேலி செய்து நகைக்கமுடியும்-
°°°

அவன் நெஞ்சம் நிமிர்த்தி நிற்கிறான்
நீங்கள் முதுகில் ஒளிந்து
குத்திக் கொண்டிருக்கிறீர்கள்-
°°°


உனது ஈனபுத்திக்கு மகிழ்ச்சியென்றால்
இன்னும் ஓராயிரம்முறை
சொல்லிக்கொள் ஆடு-
°°°

போரிட்டு கூட வேண்டாம்
அவனை வாதிட்டு வெல்ல, ஒத்த ஆண்?
நினது கூட்டத்தில் உண்டோ?
°°°


பட்டத்து அரியணை பிறப்பல்ல
ஆடு, மாடு மேய்த்தவன்தான்
தொட்டுத்தான் பாரேன்-
°°°

இப்படியோர் வீரம் உமக்கு அரிது
அவன் தமிழனல்லவா
காணீர், இப்படிதான் இருக்கும்-
°°°


அவமானங்கள் பின்னால் நிற்பது
உமக்கு அழகென்றால்,
ஆண்மகன் பின்னால் நிற்பதே
அறிவுக்கு அழகு-
°°°

அந்த முண்டாசுக்காரனின் ரெளத்திரம்
நூறாண்டுகள் கழித்தல்லவா
அவனிடத்தே பார்க்க நேர்ந்தது-
°°°

மயிர்க்கூச்செறியும் நிகழ்வொன்று
சொல்கிறேன், அவன் கத்தினால்
மனிதக் காடே ஆடி அடங்குகிறது-
°°°


இவன் துணிவு
இந்த நூற்றாண்டின் தேவை
இனி மெல்ல உயிர்கள் செழிக்கும்-