*திரும்பிப் பார்க்கிறேன்...!*
*இல்வாழ்வில் அடியெடுத்து வைத்து, நம் குடும்பம் என ஒன்று உருவாகி குழந்தைகள் பிறந்து, அவர்களும் வேகமாக வளர்ந்து பள்ளி, கல்லூரி என அவர்களுக்குப் பிடித்த கல்வியைக் கற்று, அவர்களது எதிர்காலத்தை அவர்களே தீர்மானிக்கும் நிலைக்கும் வந்துவிட்டார்கள்.*
*நாம் எல்லோரும் கொஞ்சம் கொஞ்சமாக முதுமையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். வயதுக்கேற்ற சின்னச் சின்ன உடல் உபாதைகள் நமக்கு இருந்தபோதும், ஆரோக்கியத்தை காத்துக்கொண்டு நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறோம்.*
*வாழ்வினை திரும்பிப் பார்க்கும்போது, மலைப்பாக இருக்கிறது ! எத்தனையோ சந்தோசங்கள், சிரிப்புகள், துக்கங்கள், கண்ணீர் துளிகள், ஏமாற்றங்கள், கோபங்கள் எல்லாவற்றையும் கடந்து வந்துவிட்டோம் !*
*நம் மீது அன்பைப் பொழிந்தவர்கள், நாம் அன்பு செலுத்திய நிறைய பேர் இன்று நம்மிடையே இல்லை.*
*இயற்கைச் சீற்றங்கள், பேரழிவுகள், விபத்துக்கள், கொடிய மற்றும் கொள்ளை நோய்கள், பஞ்சங்கள், போர்கள், தீவிரவாதம் ஆகியவற்றிலிருந்து இதுவரை தப்பித்துக் கொண்டோம்.*
*நாம் ஆசையாய் நினைத்த சில விசயங்கள் கைகூடாததாலும், நாம் கொஞ்சமும் நினைத்தே பார்த்திராத சில விசயங்கள் நடந்தேறியதாலும், மனம், வாக்கு, செயல் என அனைத்திலும் மாற்றங்கள் கண்டோம்.*
*பெரியவர்கள் பலரின் ஆசீர்வாதங்கள், சில சமயங்களில் காயப்படுத்திய சொற்கள் இரண்டையும் ஏற்றுக் கொண்டோம்.*
*யாரெல்லாம் நம்மை உண்மையாய் நேசிப்பவர்கள், யாரெல்லாம் உள்ளொன்று வைத்து வெளியில் ஒன்று பேசுபவர்கள், யாரெல்லாம் பாசமாய் இருப்பது போல நடிப்பவர்கள் என்பதை சற்று தாமதமாக என்றாலும், கண்டுகொண்டோம்.*
*சில நண்பர்கள், சில உறவுகள் பிரிந்து போனதையும், சில நண்பர்கள், சில உறவுகள் நம்மை மறந்து போனதையும் வேறு வழியின்றி இயல்பாய் எடுத்துக் கொண்டோம்.*
*புதுப்புது இடங்களைச் சுற்றிப்பார்த்தும், விதவிதமான உணவுகளை ருசித்துப் பார்த்தும் மகிழ்ந்த தருணங்களை நினைவில் பதியவைத்துக் கொண்டோம்.*
*வாழ்வின் இக்கட்டான நேரங்களில், ஆத்மார்த்தமான நண்பன் அல்லது தோழியிடமிருந்து ஆலோசனைகளைப் பெற்று அதிலிருந்து மீண்டு வந்தோம்.*
*வேறு வேறு இடங்களில், வேறு வேறு மனிதர்களுடன், வேறு வேறு சூழ்நிலைகளில் பழகி, நிறைய அனுபவங்களை சேகரித்துக் கொண்டோம்.*
*பிறந்தநாள், திருமண நாள், சுப நிகழ்வுகள், விழாக்கள், புதுவருடம் போன்ற விசேஷ தினங்கள் மற்றும் பண்டிகை நாட்களில் கூடி மகிழ்ந்தோம்.*
*பணம் மட்டுமே வாழ்க்கையில்லை என அறிந்து கொண்டோம்.*
*பணம், பட்டம், பதவி, புகழ், வீடு, தோட்டம், நகை, கார், சொத்து, சுகம், உறவுகள் என எதுவும் நம்முடன் கடைசிவரை வரப்போவதில்லை எனப் புரிந்து கொண்டோம்.*
*நிம்மதியை வெளியில் தேடிப் பயனில்லை. அது நமக்குள்ளே தான் இருக்கிறது என்று தெரிந்து கொண்டோம்.*
*எல்லாவற்றையும் மன்னித்துவிடவும், சிலவற்றையாவது மறந்துவிடவும் கற்றுக்கொண்டோம்.*
*எல்லாமும் கடந்துபோகும் எனவும், எதுவும் நிரந்தரமில்லை எனவும் புரிந்து கொண்டோம்.*
*புத்தகங்களை வாசிப்பதும், இயற்கையை ரசிப்பதும், இனிய இசை கேட்பதும், இறைவனிடம் பிரார்த்திப்பதும் மனதுக்கு ஆறுதலான விசயங்கள்.*
*காலம் எல்லாக் காயங்களையும் ஆற்றும் ! எனவே, இக்கணத்தில் வாழ்வோம் !*
*வாழ்க்கையே திருவிழாதான் !நாளும் இயல்பாய் அதைக் கொண்டாடுவோம்
நன்றி இணையம்