ஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசம்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:47 | Best Blogger Tips

 ஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசம்

வியாபாரதில் மட்டுமல்ல வாழ்க்கையிலும்...


கோபத்தைவாங்கினால்

இரத்தக் கொதிப்பு இலவசம்!


பொறாமையை வாங்கினால்

தலைவலி இலவசம்!



வெறுப்பை வாங்கினால், வேண்டாத பகை இலவசம்!



கவலையை வாங்கினால்,

கண்ணீர் இலவசம்!


மாறாக....


நம்பிக்கையை வாங்கினால், நண்பர்கள் இலவசம்!



உடற்பயிற்சியை வாங்கினால், ஆரோக்கியம் இலவசம்!


அமைதியை வாங்கினால், ஆனந்தம் இலவசம்!


நேர்மையை வாங்கினால், நித்திரை இலவசம்!




அன்பை வாங்கினால்.....

அனைத்து நன்மைகளும் இலவசம்.

 


நன்றி இணையம்